எதுவித அரசியலுமின்றி குறித்த அடையாளங்களை மட்டுமே பயன்படுத்தி மக்கள் எழுச்சிகளை ஏற்படுத்தி அவற்றை அதிகாரவர்க்கத்தின் சார்பாக மாற்றுவதும் அழிப்பதும் ஒரு வியாபாரம். உலகில் கொடிகட்டிப் பறக்கும் இந்த வியாபாரம் தமிழர்கள் மத்தியில் மட்டும் நடப்பதல்ல. உலகின் ஒவ்வொரு மூலையிலும் நிறுவனமயமாக முளைத்துள்ளது. மில்லியன் கணக்கில் பணத்தைச் சுருட்டிக்கொள்ளும் இந்த வியாபாரம் மக்களின் இரத்தத்தின் மீதும் பிணங்களின் மீதும் நடத்தப்படுகிறது, அமெரிக்க உளவுத்துறை உட்பட உலகின் பல நாடுகளின் உளவு நிறுவனங்கள் புரட்சி வியாபாரத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைப்புக்களின் பின்னணியில் செயற்படுகின்றன. பயனற்ற வெற்றுச் சுலோகங்களையும் உணர்ச்சிவயப்படுத்தும் அடையளாங்களையும் வைத்துச் செயற்படும் அமைப்புக்கள் பொதுவாக புரட்சி வியாபாரத்தை நடத்துவதற்காக ஏகாதிபத்திய உளவு அமைப்புக்களிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்கின்றன.
அண்மையில் உக்ரேயினில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களுக்கு ஒட்போர் பயன்படுத்தப்பட்டமை ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. குளோபல்ரிசேர்ச் என்ற ஊடகம் இதனை வெளிப்படுத்தியுள்ளது.
ஐரோப்ப்பாவை இராணுவமயமாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு உக்ரேயினைப் போர்க்களமாக மாற்றிய அமெரிக்க ஐரோப்பியக் நாடுகள் உக்ரேயினில் தலையிட ஒட்போர் அமைப்பே துணை சென்றிருக்கிறது.
அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகவர் நிலையம் வழங்கும் பணத்திற்கு ஏற்ப நாடுகளில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி பணத்திற்கு ஏற்ப வேலையை முடித்துக்கொடுப்பதே தங்கள் பணி என ஒட்போர் நிறுவனத்தவர்கள் கூறுகிறார்கள்.
ஆரம்பத்தில் யூகோஸ்லாவியாவின் சர்வாதிகாரி சிலபொடன் மிலோசவிச்சை பதவியிறக்கப் பயன்படுத்தப்பட்ட ஒட்போர் யூகோஸ்லாவியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
விரல்களை மடக்கி அழுத்திப்பிடிக்கும் இந்தச் சின்னத்தை எங்காவது பார்த்த நினைவுகள் உண்டா? அவ்வப்போது பார்த்த மாத்திரத்தில் மறந்து விடுகிறோம். முன்னை நாள் வெனிசூலா அதிபர் ஹூகோ சாவேஸ் அதனை அமரிக்க நிதியில் இயங்கும் எதிர்ப்புரட்சிகர அமைப்பின் சின்னம் என்கிறார். அரபு நாடுகள் முழுவதும் துனீசியாவில் ஆரம்பித்து ‘புரட்சி’ நடைபெற்றது. அவையெல்லாம் அமரிக்கா தனது கைப்பொம்மைகளை ஆட்சியில் அதிகாரத்தில் அமர்த்துவதற்கு பெரும் பணச்செலவில் நடத்திய எழுச்சிகள்.
கணனி ஆலோசகர்கள், நிதி ஆலோசகர்கள், ஏன் பாதுகாப்பு ஆலோசகர்களைக் கூடப் பார்த்திருக்கிறோம். ஆனால் புரட்சி ஆலோசகர்கள் உலகம் முழுவதும் சுற்றிவரும் மில்லியனேர்களாகத் திகழ்கிறார்கள். ஸ்கைப்பில் கூட புரட்சிப் பயிற்சி வகுப்புக்களை நடத்துகிறார்கள். மக்களைத் தட்டியெழுப்பி ‘அமரிக்க ஆதரவுப் புரட்சி செய்வது’ எவ்வாறு என்பதை அவர்கள் பயிற்சி வகுப்புக்களாக நடத்துகிறார்கள். அமரிக்க அரசு மில்லியன்களை இவர்களுக்கு உதவியாக வழங்குகிறது.
இந்தப் புரட்சி வியாபாரிகள படு பிஸியாக இருப்பதாக அவர்களே சொல்கிறார்கள். ஒரு ஆலோசகர் ஒரு டசின் நாடுகளைக் கையில் வைத்திருப்பதாகச் சொல்கிறார். கீழ்வரும் காணொளியில் புரட்சி வியாபாரிகள் யார்யாரை தமது ஏஜண்டுகளாக உள் நாடுகளில் நியமித்துக்கொள்கிறார்கள் என்பது தெளிவில்லை. பிரபலமற்ற துணைகரமான புரட்சி பேசும் பலர் தேவைக்கேற்ப அணுகப்படுகிறார்கள். புரட்சியை உருவாக்க, அமரிக்க எதிர்ப்புப் புரட்சியானால் அதனை அழிக்க என்ற பல்வேறு குழுக்கள் புரட்சிகர முகத்தோடு உலா வருகின்றன.