முள்ளி வாய்க்கால் அழிவுகள் வரை இலங்கை அரச சார்பு நிலையைக் கொண்டிருந்த கட்சிகளான புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. புலிகள் சார்புக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை இக் கட்சிகளைத் துரோகக் குழுக்கள் எனக் குறிப்பிடுவந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.
ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையின் கீழ் ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புளொட், ஈ.பீ.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது நல்லது மக்கள் நலன் பற்றி ஒன்றிணைந்து சிநிதிப்பார்கள்
நல்லதை நாடு கேட் கும்.
நல்ல முயற்சி. முயன்றுதான் பார்க்கட்டுமே.
good move and hope it will continue ..
செய்தித் தலைப்பு “ஈ.பி.ஆர்.எல்.எப், புளட் ஆகியவற்றுடன் இணையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” என்பது தவறு. சரியான தலைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆகியவற்றுடன் இணையும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளட் என இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஈ.பி.ஆர்.எல்.எப், புளட் என இருக்க வேண்டும்.
குறைந்தபட்ச நிபந்தனைக்ள் அல்லது நிபந்தனைகள் அற்ற இணைவுகள் வரவேற்கதக்கவை. எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பது போகத்தெரியும்.
கட்சியை காப்பாற்ற ஒன்றிணைகிறார்களோ? அல்லாது மக்களை காப்பாற்ற கூடுகிறார்களோ? அதுசரி மின்னையெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் துரோகி எண்டெல்லோ சொன்னவை? இப்ப எப்பிடி ஒற்றுமையானவை, நல்லது நடந்தால் சந்தோசம் ஆனால் இதுகள் எங்கை நல்லதை சிந்திக்கப்பொகுதுகள்,