தமிழ் நாட்டில் ஒரு வேளை உணவிற்குக்கூட உயிரிழந்து உழைக்க வேண்டிய நிலையிலுள்ள தமிழ் நாட்டு ஏழைகளின் எச்சசொச்சங்களையும் கொள்ளையடித்த ஜெயலலிதாவிற்குப் பிணை மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க அடியாள் படைகளைப் போலவே தமிழ்த் தேசிய வியாபாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு விடுதலை கிடைத்து மீண்டும் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்க வழிசெய்ய வேண்டும் என்று கடந்த வாரம் லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியில் பிரார்த்தனை செய்தவர்கள் உட்பட ஊடக ஊதுகுழல்கள் வரை மனமுடைந்து வருந்தினர். அனல்பறக்கும் ஆய்வுகளை நடத்தி ஈழத் தாயைப் பிடித்ததால் இனிமேல் இலையும் மலராது ஈழமும் மலராது என முக நூல் பக்கங்களில் அழுமூஞ்சியாக உலாவந்த உணர்வற்ற உணர்வாளர்களும் மனமுடைந்து போயினர்.
ரஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அனுதாப அலையாக மாற்றி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவிற்கு சோனியா காந்தி உதவிசெய்ய முன்வந்ததுள்ளார். சில வேளை ஜெயலலிதாவிடம் ரஜீவ் கொலைக்குப் பணம் பரிமாறியவர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இருக்கலாமோ என்ற உயர்மட்ட சந்தெகங்கள் நிலவுகின்றன.
தமிழ் நாட்டு சினிமா வியாபாரிகளுக்கு ஈழ வியாபாரம் மந்தமாக உள்ள நிலையில் ஜெயலலிதா வியாபாரத்தை கையிலெடுத்துக்கொண்டுள்ளனர். சொந்த முகங்களையும் இழந்து அன்னிய முகங்களும் பொருந்தாமல் சினிமா முகத்தை மாட்டிக்கொண்டு அலையும் புலம்பெயர் தேசியப் பிழைப்பு வாதிகள் அவர்களின் பின்னால் டூயட் பாட ஆரம்பித்துவிட்டனர். ஜெயலலிதா வெற்றிபெற்ற போது வாழ்த்து செய்தி அனுப்பிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், ஜெயலிதாவிற்கு ஈழத்தாய் வேடம் போட்டு நடிக்கவைத்த இயக்குனர் சீமான் போன்ற இன்னோரன்ன பலரும் ஈழத்திற்காகப் போராடுவதை மறந்து கொள்ளையடிப்பவரைக் காப்பாற்றப் போராடுகின்றனர்.
உலகத்திலேயே பிரமாண்டமான திருமணம் நடத்திக்காட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஜெயலலிதா தற்செயலாக விடுதலையானால் ஈழத்திற்குப் பதிலாக ஏதாவது வியாபார டீல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.
தமிழ் நாட்டு மக்களதும், ஒடுக்கப்படும் மக்களதும் நேரடி எதிரியான ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது குறித்து நாடுகடந்த நகைச்சுவை – பிரதமர் உருத்திரகுமாரனின் அறிக்கை:
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதித்து அளித்துள்ள தீர்ப்பின் பிரகாரம் அவர் முதல்வர் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
இந்த நெருக்கடியான நிலையைச் சட்டரீதியாக எதிர் கொண்டு மீண்டும் தமது அரசியல் வாழ்வில் அவர் வெற்றி பெறுவார் என நாம் உறுதியாக நம்புகிறோம்’ இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அதிமுகவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான நமது எம்ஜஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
செல்வி ஜெயலலிதா அவர்கள் 2011 ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக நான்காவது தடவை பதவியேற்ற பின்னர் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான, உறுதியான, துணிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து வந்தவர். ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களைத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றக் காரணமாக இருந்தவர்.
சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கும் தமிழீழத் தாயக மக்களால் தமக்கான ஒரு பாதுகாப்புக் கவசமாக உணரப்பட்டவர். தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களின் வளமான எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு நல்லபல திட்டங்களை நிறைவேற்றி வந்தவர்.
இத்தகையதொரு நிலையில் ஜெயலலிதா அவர்கள் தண்டனைக்குள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருவதாக உள்ளது.
1996ம் ஆண்டில் இருந்து 18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா அவர்கள் மேலான வழக்கின் மீது வழங்கப் பட்டுள்ள தீர்ப்பு கடுமையானதெனப் பலரும் கருதுகின்றனர்.
நீதிபதி சட்டத்தின் எல்லையைத் தாண்டி இத் தண்டனையை வழங்கியுள்ளதாக இந்தியாவின் புகழ் பெற்ற மூத்த பெரும் வழக்குரைஞரான ராம் ஜெத்மலானி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இந்தத் தீர்ப்பினை ஜெயலலிதாவினது அரசியல் எதிரிகள் வரவேற்கக்கூடும். ஆனால் சட்ட அறிஞரான தன்னால் ஏற்க முடியாதுள்ளது’ எனவும் அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் தீர்ப்பின் தருணமும் கடுமையும் இதன் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாமோ என்ற ஐயப்பாட்டையும் சில மட்டங்களில் தோற்றுவித்துள்ளன. செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்தத் தீர்ப்பின் மீது உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய நீதித்துறை இவ் வழக்கு விடயத்தில் பொறுப்பானதும் நியாயமானதுமான முறையில் செயற்படும் என்பதே எமது நம்பிக்கையாகும்
இங்கு சுட்டிக் கட்டப்பட்டுள்ள கோமாளிக் கூத்துக்களால் மறைக்கப்படுவது இந்தியாவை மேலும் ஆட்டத் தொடங்கியுள்ள புது யுக ஊழல்.
ஜெயலலிதாவின் களவு கேலிக்கிடமானது. ஆனால் ஒப்பீட்டலவில் எள்ளளவானது என்பதையும் நாம் நோக்க வேண்டும்.
‘த ஹிந்து’ போன்ற நாழிதள்கள் முழு இந்தியாவையும் கவருமாறு முன்னால் தமிழக முதல்வரை மையப்படுத்தி தமிழினம் நன்கறிந்த சுதாரன் கல்யாணச் செலவுக் களவு முதல் போயஸ் தோட்டத்தை மையப்படுத்தியதும் தமிழகம் முழுக்கப் பரந்ததுமான நில அபகரிப்பு வியாபார வித்தைகள் என தொடர் கதை எழுதி திசைதிருப்புவது என்னவென்ற நாம் நோக்கவேண்டும். மோடி அணி அடிப்படை சுகாதாரவசதிகளுருவாக்கம் எனத் தொடங்கி இந்தியாவையே மாசறச் செய்வோம் எனப் பல்தேசிய நிறுவனங்களுடன் பூச்சாண்டி காட்ட ஜெயலலிதா கதை உதவி போவதாகிறது.
பல்தேசிய நிறுவனங்களின் அமைப்பியல் முறையான களவு/சுரண்டல் என்பது தமிழக போயஸ் தோட்டக் களவு/கோமாளிக்கூத்து -உடன் ஒப்பிட முடியாததொன்று. அனால் ஜெயலலிதாவின் கதி பல்தேசிய நிறுவங்கள் இந்தியாவினுள் உட்புகுந்து அத்துமீறிய வீறுநடை போடத் துணை போவதை நாம் கவனிக்க வேண்டும்.
மோடி அணி ஒருகிழமை ஐ.நா வைச் சாட்டி அமெரிக்காவில் தங்கியிருந்து செய்த இரகசிய வியாபார ஒப்ப்பந்தங்களை மறைக்க உதவிய [இம்முறை] ஜெயலலிதா ‘தண்டிப்பு’ இப்போ தமிழகத்தின் அரசியற் பற்றாக்குறைகளினால் மாபெருங் குற்றவாளிகளான பல்தேசிய நிறுவனங்கள் ஒருவராலும் கேட்பாரற்ற நிலையில் ஒரு புதுயுகத் தாண்டவமாடத் தொடங்கிவிட்ட நிலையில் தமிழ் அரசியலின் செயலற்றதன்மைகளையும் சுட்டிக்காட்டியும் நிற்கின்றது . ஜெயலலிதாவின் மடமையிலேயோ துர்ப்பாக்கியத்திலேயோ வீண் நேரஞ் செலவிடுவதற்குத் தருணம் இதுவல்ல.
இந்தியப் பல்தேசிய நிறுவனங்கள் ஒருபுறமிருக்க அமெரிக்காவிலிருந்து நவதாராளமயத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு அபாயகரமான வியாபாரக் கொள்கைப் படையெடுப்பே நிகழ்கிறது.
‘அம்மா’ வெளியிலிருந்திருந்தால் சென்னைக்கு இப்புது முதலீட்டுக் களவுகளில் தனக்கு என்ன பங்கு எனக் குழப்பியுமிருக்கலாம் … அது இயலாமற் போய்விட்டதே என்று அழுவோர் சிலரும் சென்னையிலே இருப்பதை நாம் உணர வேண்டும்.
மைக்ரோஸொப்ட் [microsoft] நிறுவனம் ஈழத்தமிழர் இனப்படுகொலை மறைப்புக்கு உடந்தையான காலத்திலிருந்து எப்படி நகர்கிறது என்பதை நோக்குவோம்:
2005-இல் மார்கழி மாத்ம் பில் கேட்ஸ் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னையயே தான் முதலீட்டுக்கு முதலிடமாகக் கருதுவதாக கூறினான்.
இப்போ சென்னையின் கதி அதற்கு நேர்மறை. மைக்ரோஸொப்ட் நொக்கியா [Nokia] -வை தன்னகப் படுத்தி..
‘ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நோக்கியா செல்போன் உற்பத்தி நிறுத்தம்’
http://www.dailythanthi.com/News/India/2014/10/07191457/Nokia-to-shut-down-Chennai-plant-on-November-1.vpf
மோடியின் ‘கழிவறை சுத்தமாக்கல்’ சுத்துமாத்துக்களின் அடித்தலத்திலேயே மைக்ரோஸ்ப்ட்:
(வேறு வழியில்லாமல் ‘த ஹிந்து’ -விற்கு இணைத்ததற்கு மன்னிக்கவும் ..)
http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article6478345.ece?homepage=true
இந்தியாவிற்கு பல்தேசிய நிறுவனங்களின் நுழைவாயில் ஸ்ரீலங்கா / சிலோன் என்று வகுத்தது பிரித்தானிய சாணக்கியம் … ஐந்து வரிடங்களுக்கு முன் அதைக் காட்டி நின்றதும் அதே மைக்ரோஸொப்ட்:
https://inioru.com/?p=38276
We had Hindu ,Christian & Muslim religious places in the North. With the exception of few all prayed their Gods with the hope of victory, unfortunately our Gods failed to response.
உண்ணாமிருந்தவர்கள் தீமுட்டி தற்கொலைசெய்யவில்லை. இதிலிருந்து
இவர்கள் தமிழகத்தை ஏமாற்ரி வாழ்வோமே தவிர எங்களை யாராலும்
ஏமாற்ரமுடியாதென்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.
உண்ணாவிரதமிருப்பவர்கள் எல்லோரும் தீமூட்டி தற்கொலை செய்ய வேண்டுமா ?
என்ன ஒருநல்ல எண்ணம் ?
அப்படியானால் மகாத்மா காந்தி என்றோ தற்கொலை செய்திருக்க வேண்டும் .
கோட்சே கொல்லும் வரை ஏன் காத்திருந்தார் ?
உண்ணாவிரதம் என்பது அகிமசை போராட்டம் என்பதைக்கூட அறியாத அறிவிலீயாக இருக்கிறார்..
மேலும் அவர்கள் பிரார்த்தனை நடத்தியதாகத்தான் செய்தி கூறுகிறது .
ஆனால் இவர் உண்ணாவிரதம் இருந்ததாக அடித்து விட்டுள்ளார் .
முதல்ல பத்தியை ஒழுங்காக படியுங்கள் ..அதுக்கு பிறகு தீமூட்டி தற்கொலை செய்வதைப்பற்றி அறிவுரை கூறலாம்..