வடிவேலு விவேக் காமடி இப்ப படங்களிலை சரியா வறதில்லை என்று பொதுவா இலங்கைத் தமிழ் ரசிகர்களிடம் பெரிய கவலை ஒன்று உண்டு. நல்ல கொமடி பாக்க வேணும் எண்டால் ஒண்டில் ஜிரிவி ல வாற அரசியல் ஆய்வு நிகழ்ச்சிகளைப் பாக்கலாம். விழுந்து விழுந்து சிரிக்கவேணும் எண்டால் நாடு கடந்த தமிழீழத்தின்ரை பிரதமரின் அறிக்கைகளiயும் கொள்கை விளக்கங்களையும் வாசிக்கலாம். அல்லது வழக்குப் போட எங்களிட்டை காசில்லை எண்டு சொன்னதைக் கொஞ்சம் நினைச்சு பாத்துச் சிரிக்கலாம். வெறுமனே வடிவேலுவை எவ்வளவு காலத்துக்த்தான் நம்பியிருக்கிறது சொல்லுங்கோ?
அந்த வரிசையிலை அண்மையில் மின் அஞ்சல் ஊடாக ஒரு காமடி.
சிரிச்சா சக்கரை வியாதிக்கு நல்லது எண்டு ஆரோ சொன்ன கதையை கேட்டு நானும் மின்னஞ்சலில் வந்த கொமடியைத் திறந்து பாத்தா கொமெடி சத்தியமா 2010லிலை நம்பர் வண். நான் எந்தக் கோயிலிலை வேணும் எண்டாலும் கிடாய் வெட்டி
சாராயம் ஊத்தி சத்தியம் பண்ணிச் சொல்லத் தயார். விசயம் வெரி சிம்பிள். ஆ ந்த மின்னஞ்சலில் வந்த காமடி வேறை ஒன்னுமில்லிங்கோ. தழிழீழத்திக்கான தேசிய கீதத்தை ஈஎன்டிஎலஎவ ;என்ற அமைப்பு எழுதி மெட்டுப் போட்டு பாடினதுமல்லாமல் அதுக்கு காணொளி வேறை செய்து அனுப்பியிருந்தாங்கள்.
சரி காமடி கீதத்தை கொஞ்சம் புறம்பா வைச்சிட்டு பின்னணியைக் கொஞ்சம் பாப்பம். பின்னணி இதுதான். மகிந்த லண்டன் வருகிறார். ஏன் வந்தார். ஓக்ஸ்போட் பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசுவதற்கு. இங்கே வந்திறங்கிய போது நடந்ததும் ஜயா கோபப் பட்டுக் கொண்டு கிளம்பினதும் கிளம்பின கையோடை மந்திரி சபையைக் கூட்டினதும் கூட்டின கையோட தேசிய கீத்ததை இனி தமிழில் பாடக் கூடாது என்று அறிவித்ததும் எல்லாருக்கும் தெரியும்.
ஒரு நாடு என்று ஜநாவிலை சொல்லுறாய். வெண்டது பிரபாகரனைத்தான் தழிழர்களை இல்லை எண்டு ரிவியிலை கதைக்கிறாய். மூண்டு மொழியிலையும் சகோதரய எண்டு சொன்ன மகிந்த மாத்தயா நாட்டுக்குத் திரும்பிப் போன போக்கிலை; சிவப்புச் சால்வையை கழட்டி வைக்க முன்னம தழிழிலை தேசிய கீதம் பாடக்கூடாது என்று அறிவிப்பு. தழிழர்கள் இலங்கையின் குடிமக்கள் என்ற எண்ணம் சிவப்புச் சால்வையிலை எங்காவது ஒட்டியிருந்திருக்குமானால் இனவாதம் சன்னதம் கொண்டாடும் ஒரு தேசத்தின் தலைவன் அந்த இனவாதம் இன்னொரு படி மேலெழுகிற எந்தக் காரியத்தையும் செய்யத் துணிந்திருக்க மாட்டான்.
இதிலை இன்னொரு காமடி என்ன தெரியுமொ? விமல் வீரவன்ச என்டு ஒரு சிங்கள வெறிபிடிச்ச காமடி அமைச்சர். அவர் சொல்லுறார். இந்தியாவிலை கிந்தியிலைதானை பாடுறாங்கள் இலங்கையிலை சிங்களத்திலை பாடினா என்ன எண்டு. இந்நியாவிலை எந்த மொழியிலை பாடுறாங்கள் எண்டதும் தெரியாது. சரி கோதாரி விழ இன்ரநெற்றிலை ஒருக்காத் தட்டிப் பாப்பம் எண்டு கூட யோசிக்காம அறிக்கை விடுறாங்கள்.
சரி இந்தியாவிலை ஒரு மொழியிலை பாடினா இலங்கையிலையும் ஒரு மொழிலைதான் பாடவேணுமோ? சவுதியிலை ஆறு கலியாணம் கட்டிறாங்களாம். விமல் ஜயே! அதைப் பத்தி உங்கடை அபிப்பிராயம் ஏதாவது? வெளியிட்டிங்கள் எண்டா பெடியளுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்.
இந்த கடுப்பிலை பிறந்தது தான் ஈஎன் டி எல்எவ் இன் நாட்டுப் பண். சரி நீ தழிழன் என்று எதிரி கத்தினால் ஆம் என்று உரக்கச் சொல்வதில் நாம் ஏன் தயக்கம் காட்டவேண்டும். அந்தவகையில் ஈஎன்டிஎல்எவ் பதிலடி கொடுத்திருக்கிறது என்று சந்தோசப்பட்டு பாட்டை போட்டா…. மகிந்த பரவாயில்லை என்று சொல்லுமளவுக்குப் போகுது வரிகள்.
யாழ்ப்பாண நகரோடு
பெரும்கல்வியும் – எம்மை
வாழ்விக்க உணவூட்டும்
திருவன்னியும்..
யாழ்ப்பாணத்துக்கு பெருங்கல்வியைக் குடுத்திட்டு வன்னியார் வயலை விதையுங்கோ எண்டு சொல்லுது பாட்டு. சாப்பாடு போடுற வேலையை செய்யுங்கோ வன்னி மாடுகளே நாங்கள் படிக்pறதையும் உங்களை மேய்க்கிறதையும் ; கச்சிதமாச் செய்வோம் என்று தொடங்கினா சிரிக்காம என்ன செய்ய. அதிலை பாருங்கோ ஒரு காணொளி ஒன்றும் இருந்தது. அது எப்பிடித் தெரியுமொ தொடங்குது. மழைக்கு தாழ்வாரத்துப் பக்கம் கூட தாழ்த்தப்பட்டோர் ஒதுங்க்க கூடாது என்று சொன்ன சாதிவெறியன் ஆறுமுகநாவலரின் படத்தோடு தொடங்கு கிறது காணொளி.
தழிழீழத்தின் தேசிய கீதம் சொன்ன சேதி இதுதான். மேல்ச்சாதி ஆளும். வுன்னிமக்கள் உழுவினம். மட்டக்களப்பார் மீன் பிடிப்பினம். யுhழில் மக்கள் படிப்பினம். அதைக் கொண்டுவந்து மற்ற எல்லா இடமும் திணிப்பினம்.
இந்தப் பண் விளங்கிற மாதிரி திருப்பி எழுதினா இப்பிடி வருமொ எண்டு யோசிக்கிறன் .நீங்களும் பாத்து ஏதேனும் திருத்தங்கள் இருந்தா எழுதி அனுப்புங்கோ.
காட்டோடு பாழ்பட்ட
வன்னியானும் -அங்கே
பாய் ஒட்டவைப்பார்
மட்டக்கிளப்பாங்களும்
ஆட்டோடு மாடு மேய்க்க
மன்னார்க்காரனும்- பலா முருங்கைக்காய்
மூட்டை முடிச்செல்லாம் கட்டித்தர
முல்லைத்தீவானும்
அடிபட்டுத் தினம் சாக
அம்பாறையானும்
தினம் வெடி பட்டு தொலைகின்ற
திருமலையானும்
எல்லாரும் உணவூட்ட
நாம் வாழுவோம்
யாழ்ப்பாணத்தான் நாம் என்று
பறைசாற்றுவோம்
வாழ்க தழிழீழம்
வாழ்க வெள்ளாளம்.
இது கொமடி எண்டால்.. கொமடி இல்லாமல் நீங்க உருப்படியா ஏதாவது சொல்லுங்க பார்க்கலாம்!
யாழ்ப்பாண மேலாதிக்கவாதம் தொடர்பான குத்திக்காட்டும் நகைச்சுவையான கட்டுரை. ஈ.என்டி.எல்.எப் ராஜன் இன்னுமொரு பிரபாகரன். ஆறு வித்தியாசம் இல்லை, ஒரே ஒரு வித்தியாசம்: ராஜன் என்ற மேலாதிக்க வாதி போராடவில்லை, பிரபாகரன் போராடினார். மனதளவில் இரண்டு மனிதர்களும் ஒரே மாதிரி தான்.
சத்தியமாய் சொல்லுகின்றேன் இவர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .
கீழே உருப்படியாக ஒரு பாட்டெழுதி விட்டிருக்கிறேர் தானே? இது கூடத் தெரியாதோ கோதாரி விழ..
பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, காட்சிகளும் மனதை வலிக்க வைக்கிறது. ஒவ்வொரு விடயமும் நாம் என்ன கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைந்திருக்கும்.
யாழ்ப்பாணத்து மக்கள் கல்வியை தமது மூலதனமாகக் கொள்ள வேண்டியதற்கான உண்மைக் காரணம் அந்த மண் ஒரு வறண்ட பிரதேசம், யாழ்ப்பாணத்திற்கு வெளியில் இருந்து வரும் வருமானத்திலேயே பெரும்பாலான குடும்பங்கள் சீவிகின்றன, இனப்பிரச்சனைக்கு முன்பே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஏனைய இடங்களுக்கும் சென்று வேலை பார்த்திருக்கின்றனர், மட்டுக்களப்பையோ, திருகோணமலையையோ போல பல இயற்கை வளங்களைக் கொண்ட பிரதேசமல்ல அது.
சாதிக்கான அடக்குமுறையை நாம் எல்லா விடயங்களுக்குள் கொண்டு போய் முடிச்சுப் போட முடியாது. திருகோணமலையில் சாதிப் பிரவினை இல்லையென்றோ, மட்டக்களப்பிலோ இது இல்லை என்று கூற முடியாது. அதே போல யாழ்ப்பாணத்து மக்கள் தொடர்பாக திருகோணமலையும், மட்டக்களப்பிலும் பல தப்பெண்ணங்கள் இருக்கவே இருக்கின்றன.
யாழ்ப்பாணத்தான் எங்களை அடக்கிப் போடுவான் என்ற கூச்சலும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பாணத்தாரை நியமிக்க கூடாது என்ற போர்குரல் இப்போதும் ஒலிப்பது கேட்கிறது. (மட்டக்களப்பில் கல்விமான்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடம் கொடுப்பது முக்கியம்)
மீன்பிடிக்கும் தொழிலைக் கொண்ட மக்கள் இப்போது தலைநிமிர்ந்து தம்மை அறிமுகம் செய்யும் போது நான் மீனவ சமூகத்தை சேர்ந்தவர் என கைகுலுக்கிறார்கள், அத்துடன் நாங்கள் வெள்ளாரைப் போல யாரையும் நம்பி பிழைப்பவர்கள் அல்ல எமக்கு சுய தொழில் உண்டு என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறுபவர்கள். கொஞ்சம் பார்வையை விரிவாக்குங்கள்.
யாழ்ப்பாண அடக்குமுறை இவ்வளவு அழிவை ஏற்படுத்திய பின்புமா இப்படி ஒரு நியாயம், கட்டுரையாளர் பாணியில் “என்ன கோதாரி இது”
eelap pannile malayaka thamilarai aniyayamaka puram thalli vitachchee. een avarkal manitharkal illaiya allathu thamilakal aaka ninaipathe kidaiyatha? melum munnukku pinnuttam eluthi irukkira athe theva ithu alla