தமிழீழ விடுதலைப் புலிகள் முனெடுத்த ஆயுதம் தாங்கிய இராணுவப் போராட்டம் தோல்வியடைந்ததை முன்வைத்து உலகம் முழுவதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகளிலும், தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும் ஒரு பொது புத்தியாக ஆயுதப் போராட்டம் என்பது சாத்தியமற்றது என்ற கருத்துக் கட்டமைக்கப்படுகின்றது. முன்னை நாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியில் ஆரம்பித்து பிரித்தானியாவில் புலிகளின் புலம்பெயர் பிரதிநிதியாகக் கருதப்பட்ட சுரேன் சுரேந்தர் வரைக்கும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் மந்திரம் போன்று “ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது” என்ற கருத்துக் கட்டமைக்கப்படுகின்றது.
சரவதேசம், மக்கள் போராட்டம் போன்றவற்றின் உள்ளர்த்தம் எவ்வாறு தவறாகப் புனையப்பட்டதோ அவ்வாறே ஆயுதப் போராட்டம் என்பதன் உள்ளர்தம் கூட தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது.
80 களில் ஆரம்பித்து அமரிக்க ஐரோப்பிய உளவு நிறுவனங்களாலும், தெற்காசியாவில் இந்திய உளவு நிறுவனத்தாலும் ஆயுதப் போராட்டம் என்பது மக்களின் ஆதரவுடனான ஆயுதம் தாங்கிய கெரில்லா யுத்தம் அல்லது அரச படைகளுக்கு எதிரான தனிமைப்படுத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் என்ற கருத்து திட்டமிட்டு உருவமைக்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டில் ஆரம்பித்து மக்கள் ஆதரவு பெற்ற புரட்சியாளர்களால் நிறுவப்பட்ட நிக்காரகுவா அரசிற்கு எதிராக ரொனால்ட் ரீகன் நிர்வகித்த அமரிக்க அரசு பயங்கரவாத யுத்தம் ஒன்றை ஆரம்பித்தது. கொன்ராஸ் கெரில்லாக்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதம் மற்றும் பணபலத்தை அமரிக்க அரசு வழங்கியது.
அந்த வேளையில் அமரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ கொன்ராஸ் என்று அழைக்கப்பட்ட கெரில்லாக்களின் ஆயுதப் போராட்டத்தை மக்கள்-அரசிற்கு எதிராக வழி நடத்த ஆவணம் ஒன்றை வெளியிட்டது. கெரில்லா யுத்ததில் உளவியல் ரீதியான செயற்பாடுகள் (Psychological Operations in Guerrilla Warfare) என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆவணம் போரில் ஈடுபட்ட கொன்ராட்ஸ் கெரில்லாக் குழுக்களுகு வழங்கப்பட்டது.
கெரில்லாப் போராட்டத்தை மக்கள் ஆதரவு எவ்வாறு நகர்த்திச் செல்வது என்பதும் அரசைப் பலவீனப்படுத்துவது எவ்வாறு என்பதும் 90 பக்கங்களைக் கொண்ட அந்த ஆவணத்தின் சாரம்சமாக அமைந்திருந்தது. புதிய தந்திரோபாயங்களும், யுத்த முறைகளும் மட்டுமல்ல எதிரிகளையும், சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டோரையும் கோரமாகக் கொலைசெய்யும் வழி முறைகளும் கூட அந்த ஆவணத்தில் குறிப்பிடப்படிருந்தது.
1984 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் அமரிக்க உளவு நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணம் கெரில்லாப் போராட்ட வழி முறை ஊடான அழிவு அரசியலை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது.
ஆயுதப் போராட்டம் என்ற பெயரில் அமரிக்க உளவு நிறுவனம் தமது ஐந்தாம் படைகளைப் பயிற்றுவித்த அந்த நிகழ்வு இரண்டு பிரதான பாடங்களை உலகிற்குக் கற்றுத் தந்தது.
முதலில் ஆயுதப் போராட்டம் எல்லாம் மக்கள் சார்ந்தவை அல்ல. இரண்டாவதாக அழிக்கப்பட கூடிய வகையில் ஆயுதப்போராட்ட்ங்களை உருவாக்கலாம்.
பின்னதாக பல்வேறு பரிணாமங்களில் பல்வேறு அரசியல் தளங்களில் இந்த ஆயுதப் போராட்டங்கள் உருவக்கப்பட்டன. அரச எதிர்ப்புக் குழுக்களிடையே மோதலை ஏற்படுத்துவதற்காகவும், மக்கள் போராட்டங்களின் இயல்பான வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும் உளவு நிறுவனங்கள் ஊடாக ஆயுதப் போராட்டங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன.
அரசுகளே தமக்கெதிரான ஆயுதக் குழுக்களை உருவாக்கி பின்னர் அழிவுக்கு உள்ளாக்கிய நிகழ்வுகளைக் கண்டிருக்கிறோம். இந்தியாவில் சீக்கியர்களின் அரசிற்கு எதிரான போராட்டத்தை அரசே வழி நடத்தியதைக் கண்டிருக்கிறோம். அல்பேனியர்களின் போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நிகழ்வைக் கண்டிருக்கிறோம்.உகண்டாவில் லோர்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி என்ற ஆயுதக் குழுவை சீ.ஐ.ஏ வழி நடத்துவதை உலகம் அறிந்து வைத்திருக்கிறது.
பெரும்பாலான சந்தர்பங்களில் தாம் அழிக்கப்படுவதற்காகவே உருவாக்கபடுகிறோம் என்று தெரியாமலேயே உணர்வுபூர்வமான போராளிகள் பலியாகிப் போகின்றனர்.
தாம் உருவாக்கிய போராட்ட அமைப்புக்களை ஏக போக அரசுகள் அழித்த பின்னர், பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டது என மார்த்தட்டிக் கொள்கின்றன.
அழிவுகளை நடத்திமுடித்ததும் பயங்கரவாத அரசுகள் தமது உளவியல் யுத்ததை ஆரம்பிக்கின்றன. உளவியல் யுத்தம் பல முனைகளிலிருந்து ஆரம்பமாகிறது. முதலில் அழிவுகளையும் அவலங்களையும் வெறும் மனித உரிமைக் கோசங்களாக மாற்றியமைக்கிறது. பின்னதாக இந்த மனித உரிமை குறித்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்ற ஏகாதிபத்தியக் கூறுகள் தமது கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகின்றன. இதன் ஊடாக அனைத்து ஊடகங்களையும் சமூகத்தின் பிரசார மையங்களையும் தம்மைச் சுற்றி இயங்க வைக்கின்றன.
இவ்வாறான இயக்கத்தை உருவாக்கி, குறித்த கால இடைவெளியில் ஆயுதப் போராட்டம் என்று அவர்கள் உருவாக்கிய கருத்தமைவு இப்போது அழிவுகளும் அவலங்களும் நிறைந்தவை என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிடுகின்றன.
இந்த நிகழ்ச்சி நிரலை தன்னார்வ நிறுவனங்களும், நேரடியான ஏகாதிபத்தியக் கூறுகளும், அரச முகவர்களும், அழிவுகளோடு இணைந்து உருவாகும் புதிய அரசியல் முகவர்களும் நடைமுறைக்கு உட்படுத்துகின்றனர்.
சமூகத்தின் நிலைமைக்கு ஏற்ப நடைமுறைக்கு உட்படும் முறமை(process) மாறுபடுகின்றது.
80களின் பின்னர் உணர்வுபூர்வமான போராட்ட உணர்வுடைய இளைஞர்களின் ஈழப் போராட்டத்தை இந்தியா உட்பட உலகின் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து உளவு நிறுவனங்களும் உள்வாங்கிக் கொண்டன. பல சந்தர்பங்களில் இது அவர்களை அறியாமலேயே நடந்திருக்கின்றது. பின்னதாக தேவைக்கு ஏற்ப போராட்ட அமைப்புக்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டன. இறுதியாக முள்ளிவாய்க்காலில் முழுப் போராட்டமும் அழிக்கப்பட்டது.
அழிவின் பின்னதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் மனித உரிமைக் கோசத்தை முன்வைத்தன.
‘தமிழ் தேசிய வியாபார ஊடகங்கள்’ அமரிக்க ஐரோப்பிய அரசுகளினதும் இந்திய அரசினதும், தன்னார்வ நிறுவனங்களதும் முழுமையான நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவரப்பட்டன. அவற்றைச் சுற்றிய இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இறுதியாக ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது அவலங்கள் நிறைந்தது. அழிவு மட்டுமே இறுதியானது என்ற கருத்து விதைக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஆயுதப் போராட்டத்தின் புரட்சிகர உள்ளர்த்தம் என்ன என்பது புதிய கேள்வியாக எமக்கு முன்னே எழுகின்றது.
திட்டமிட்டு அழிப்பதற்கு என்றே பயிற்றுவிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்தை அதே முறையில் போராட்டக் குழுக்களோ அல்லது புரட்சிகர அமைப்புக்களோ பயிற்றுவிக்க முடியாது. அவ்வாறான பயிற்சி வெற்றிக்குப் பதிலாக அழிக்கப்படக் கூடிய இராணுவ அமைப்புக்களையே உருவாக்கும்.
இரண்டாம் உலகப் போரை வெற்றிக்கொள்வதற்குப் பிரதான காரணியாகக் அமரிக்க அரசால் கூறப்பட்ட டக்ளஸ் மக் ஆர்தர் என்ற இராணுவத் தளபதி உலகத்தி தலை சிறந்த இராணுவத் தளபதி என அமரிக்க அரசால் போற்றப்பட்டவர்.
அவர் உலகப் போரை முடித்துக்கொண்டு அமரிக்கா திரும்பிய போது அவரை வரவேற்பதற்கு அமரிக்க அமரிக்காவிம் பல பாகங்களிலிருந்தும் மக்கள் திரண்டிருந்தனர். அதே மக் ஆர்தர் கொரியாவிற்கு எதிராக அமரிக்கா நடத்திய யுத்ததில் தோற்றுபொன போது அமரிக்க அரசு அவரைப் பதவி நீக்கம் செய்தது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னதாக அமரிக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது குடும்பத்தினரைத் தவிர யாரும் காத்திருக்கவில்லை.
தோல்வி குறித்து அவர் வழங்கிய நேர்காணலில் “நான் யுத்தக் கப்பல்களோடும், விமானங்களோடும், பாரிய இராணுவத் தளப்பாடங்களோடும் யுத்தம் புரியத் தயார். ஆனால் காட்டுமிராண்டிகளோடு யுத்தம் புரிய முடியாது” என்றார்.
காட்டுமிராண்டி யுத்தம் என அவர் குறிப்பிட்டது தான் மக்கள் யுத்தம்.
முதலில் தற்காப்பு மக்கள் யுத்தம் என்ற அரசியல் இராணுவ தந்திரோபாயம் சீனப் புரட்சியின் போதே உருவாக்கப்பட்டது.
அதற்கான அரசியல் தலைமை, அதன் உள்ளமைப்புக்கள், மக்கள் திரள் அமைப்புக்கள் போன்றனவும் முதலில் சீனப் புரட்சியுன் போதே முன்வைக்கப்பட்டது. மக்கள் யுத்தம் என்பதை அவர்கள் தற்காப்புக்கான மக்கள் யுத்தம் என்றே அழைத்தார்கள்.
இது உளவு நிறுவனங்களின் சிக்கலான கெரில்லா தந்திரோபாயம் போலன்றி மிக இலகுவான சமன்பாடு. ஒடுக்குமுறைக்கு எதிராக தமது வாழ்வாதாரத்திற்காக மக்கள் போராடுவார்கள். மக்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதும் அதனை வலுப்படுத்துவதும் கட்சியின் கடமை. மக்களின் போராட்டம் முன்னோக்கிச் செல்கின்ற போது, அரச படைகள் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையைப் பிரயோகிக்கும். அப்போது மக்களைப் பாதுகாப்பதற்கான ஆயுதப் போராட்டம் உருவாகும். அதனைக் கட்சி வழி நடத்தும். மக்களின் போராட்டம் பாதுகாக்கப்படும். மக்கள் மேலும் போராடுவார்கள். அரசு நிலைகுலைந்து மக்களின் அதிகாரம் உருவாகும்.
இங்கு ஆயுதப் போராட்டம் ஏன் தேவையான ஒன்று என்பதை மக்கள் சார்ந்த நோக்கிலிருந்து காணலாம். மக்கள் போராடுவதும், அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதும், அது ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமாக பரிணாமம் பெறுவதும் போராட்டம் ஒன்றின் இயல்பான வளார்ச்சிப்போக்காகும்.
இன்று ஈழத்தில் மக்கள் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம் பல்வேறு அரசியல் தளங்களில் நடைபெறுகின்றது. மக்கள் போராட்டத்தை இலங்கை அரசு ஒடுக்க முயல்கின்றது. மக்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்கவும், அவர்களின் தற்காப்பு யுத்ததை முன்னெடுக்கவும் அதனை ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்கவும் இலங்கையில் அரசியல் தலைமை கிடையாது.
அவ்வாறான அரசியல் தலைமை ஒன்று தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்ச்சிப் போக்காகும். அதனைத் தடைசெய்யும் ஏகாதிபத்திய அழிவு சக்திகளில் குரலே ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என்று ஒலிக்கின்றது.
அதுவும் குறுகிய புலம்பெயர் தேசியவாதிகளின் தொண்டைக்குள் இருந்து போராடும் மக்களின் முகங்களில் காறி உமிழப்படுவதைக் காண்கிறோம். இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் திரள் அமைப்புகள் உருவாக வேண்டும். அவற்றின் உறுதிமிக்க போராட்டங்கள் மக்கள் யுத்தமாக பரிணாமம் பெறவேண்டும். அதற்கான சர்வதேச அரசியல் பொறிமுறையையும் ஆதரவையும் வளர்த்துக்கொள்வதற்கான பங்களிப்பை புலம்பெயர் மக்களும் இந்தியாவில் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் வழங்குவதற்கு நிறையவே இடைவெளிகள் உண்டு. ஐந்தம் படையாகச் செயற்படும் அழிவுசக்திகளை இனம் காண்பதும் போராடும் மக்கள் சார்ந்த அரசியல் உருவாக்கப்படுவதும் இன்று எமக்கு முன்னால் உள்ள வரலாற்றுக் கடமை.
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே
நவம்பர் 27
(மாவீரர் நாள்)
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
இன்று வணக்கத்துக்குரிய நாள்.
சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத்தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.
இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.
(2005)
மாவீரர்கள் அபூர்வ மனிதர்கள்
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இழப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்கு சக்தியாக அமைந்துவிட்டது.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள். சுதந்திரச் சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்காக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமானது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்¬. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சியத் தீ என்றுமே அணைந்து
விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பி விடுகிறது.
(1990)
தமிழன்னையின் கருவூலத்தில் மாவீரர்கள்
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.
தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது, முற்றுப்பெறுகிறது. ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்
கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.
(2006)
மாவீரர்கள் வணங்கா மன்னர்கள்
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நிற்கின்றனர்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.
(2007)
சிங்களத்தின் கனவு நிச்சயம் கலையும்
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.
இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக, கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளிகொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாளச் சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது. தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன.
ஆசையின் பிடியிலிருந்து மீட்சிபெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபடமுடியாது. மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.
(2008)
அடிபணிவு என்ற பேச்சுக்கு இடமில்லை
இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை சிங்கள அரசு இன்னும் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற ஆதிக்க வெறி இன்னும் சிங்கள ஆளும் வர்க்கத்திடமிருந்து அகன்று போனதாகத் தெரியவில்லை.
இராணுவ ஆதிக்கத்திற்கும், அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக்கொடுத்ததேயில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை. எமது இயக்கத்தின் இந்த உறுதிப்பாட்டை உலகத்தின் மிகப்பெரிய இராணுவமே பரீட்சித்துப் பார்த்து தோல்வி கண்டது. சிங்கள இராணுவமும் இந்த வரலாற்றுத் தவறை சந்திக்கத்தான் நேரிடும்.
(1991)
நாம் போர்வெறியர்கள் அல்ல
இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சியவல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம்.
அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.
இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.
சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமைகொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண். பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழவிரும்புகிறோம். ஆங்கிலேயக் காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிவருகிறோம்.
சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது.
ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்
முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.
சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு
செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது.
நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம் நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுக்களிற் பங்குபற்றிவந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டபோதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவவழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.
(2008)
வல்லரசுகளின் எதிர்மறையான தலையீடு
எமது பிராந்தியத்திலே உலகப் பெருவல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம்.
இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது.
சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.
(2007)
குறிவைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள்
இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.
எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன. எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற் சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.
(2007)
முடிவில்லாத துன்பியல் நாடகம்
முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.
தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடி
இதனை வாசித்தவர் தானே கோ அணிந்து இரானுவத்திடம் குப்பியை வீசி விட்டு சர்ணடைந்தவர்
ஈழத்தில் ஆயுத போராட்டம் சாத்தியமே, ஆனால் என்ன மிகுதி இருக்கும் தமிழர்களும் பரலோகம் போக வேண்டி வரும், 30 வருடம் பட்ட பாட்டுக்கு பின்பும் இந்த் கேள்வி தேவையா
ஏகாதிபத்தியங்களின் நீகழ்ச்சி நிரலில் இருந்து விலகி அவா்கள் முகத்திரையை கிளித்தெறிய வேண்டுமானால் ஆயுதம் மறுபடியும் அவசியம் அது நிச்சயமாக நமது முப்பது வருடகால மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் அன்னியப்பட்ட இயக்கங்கள் வழித்தோன்றாது சாதாரண மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலையை உருவாக்க தலைவா்கள் தேவை,கட்சிகள் தேவை.
நன்றி நாவலன் அவா்களே.
எப்போ இலங்கைக்கு போய் போராட போக்கின்றீர்,
நான் போய் போராடும் போது எஞ்சியுள்ள உங்கள் உறவுகளையும் அழைத்து அகதி தஞ்சம் கோரிவிட லாம் என்று எண்ணுகின்றீா்களா?
அழிந்து போய்விடுவோம் ஆதலால் அடிமைகளாக இருந்துவிட்டுப்போவோம் என்கின்ற அடிமை மனோபாவம் உங்களது சொந்தப்புத்தியல்ல உங்கள் எயமானவா்கள் அப்படி பயிற்றுவித்துள்ளார்கள் என்பதையே மேலுள்ள கட்டுரை கூறுகிறது.
உம்மமை போன்ற உசுப்பேத்திகளைநம்ப்பி தான் பிரபாகரன் வீனாய் போனார், தமிழர்களும் அழிந்தார்கள், மிகுதி இருப்பவர்களையும் பரலோகம் அனுப்ப கிள்ம்பிடாய்ங்கயா……வாழ்த்துக்கள், சென்று வா மகனே தோற்று வா, ஆனால் இங்கே போராட்டம் என்றால்நல்ல வருமானம் தானே,
வீரன், எவ்வளவு கோழைத்தனமாக பேசுகிறீர். நாங்கள் இலங்கைக்குப் போகவே தேவை இல்லை அங்கு மக்கள் போராடும் போது அதற்குப் பலமாக இருந்தாலே பெரிய விடயம்.நீங்களோ இனிமேல் ஒன்றும் சரிவராது என்று அவர்களை அவமானப் படுத்துகிறீர்கள்.
உம்மமை போன்ற உசுப்பேத்திகளைநம்ப்பி தான் பிரபாகரன் வீனாய் போனார், தமிழர்களும் அழிந்தார்கள், மிகுதி இருப்பவர்களையும் பரலோகம் அனுப்ப கிள்ம்பிடாய்ங்கயா……
General Douglas Mac Arthur: said that the old Soldiers never die. They just fade away. The only Five Star General to see action in Korea thought the he can advise the President of the USA. Harry S. Truman relieved him of his command. USA had a UNO mandate in Korea with 16 nations participating in military action in Korea. Let us all then our friend Dr. Jayantha Dhanapala (1938) for his wonderful service to the UNO and Sri Lanka – Shri Lanka. The third Kim got married. Panmunjam. A Super Sabre Jet Fighter that saw action in Korea is on display at the Town Hall of Terre Haute, Indiana, USA.
ஆயுதப் போரட்டம் என்றவுடன்>கடந்த மூன்று தசாப்த அழிவுப்போராட்டமே கண்முன் வருகின்றது. நடைபெற்றறது விடுதலைப் போராட்டமல்ல. மக்களை புறம் தள்ளிய அனைத்தும் அழிவுப்போராட்டத்திற்கே வழி வகுக்கும். இதிலிருந்து வெகுஜனப்போராட்ட மார்க்கம் முதன்மை பெறவேண்டும். அது பேரினவாதத்தின் திட்டமிட்ட அடக்குமுறைக்கு எதிராக ஆங்காங்கே துளிர் விட்டுள்ளது. இது இன்றைக்கில்லாவிட்டாலும் நீண்டகாலப் போக்கில் வெகுஜனப் விடுதலைப் பொராட்டமாக பர்ணமிக்கும். இங்கேதான் மக்கள் ஆயுதங்களைக் கையாள்வதா? ஆயுதங்கள் மக்களை கையாளுமா எனும் நிலை வரும். மக்கள் கையாண்டால் புரட்சிகர வெகுஜன விடுதலைப் போராகும். ஆயுதங்கள் எனின் அழிவுப்போராகும். போர் என்பதை மக்கள் எப்போதும் வீரும்புவதேயில்லை. ஆனால் அட்குமுறை அவர்களை போராட நிர்ப்பந்திக்கின்றது.
அழிந்து போய்விடுவோம் ஆதலால் அடிமைகளாக இருந்துவிட்டுப்போவோம் என்பது அடிமை மனோபாவம். நன்று குமார் நறுக்கென்று உள்ளது.
மக்கள் போராட்டம், வெகுஜனப்போராட்டம்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை வழிநாடாத்தும் தேசியத்தலைவர் அவர்கள், இமயமலை மொட்டை மாடியிலிருந்து புஸ்பக விமானம் மூலம் பறந்து வந்தவர் போலும். அவருடன் இணைந்து போராடிய போராளிகளும், பொத்து பொத்தென்று ஆகாயக்கோட்டை வாடியிலிருந்து உருண்டு விழுந்தவர்கள் போலும்.
ஆயுதப் போராட்டம் – அகிம்சைப்போராட்டம் என்ற பாகுபாடே முதலாளித்துவ அணுகுமுறையே. மக்கள் போராட்டம் என்பதே சரியான அணுகுமுறை. மக்கள் போராடப்புறப்படும் போது கையில் அகப்பட்டதையேல்லாம் எடுத்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு கிறீஸ் பூதத்திற்கு எதிரான அவர்களது போராட்டத்தில் பல வே ளைகளில் ஆயுதமேந்தினார்கள். ஆயிரக்கணக்கில் அரச படைகளிற்கு அஞ்சாமல் நல்லெண்ண ஆணைக்குழுவிற்கு முன்பாகப் போய் எங்கள் பிள்ளைகள் எங்கே என்றும் கேட்டார்கள்.
இந்தப்போராட்டங்களில் மக்கள் தாமாகவே போராடினார்கள். தலைமையேற்று நடத்த சரியான தலைமை வரும்போது இது புரட்சியை நோக்கி நகரும்.
மக்கள் தேவைக்கேற்ப ஆயுதங்களைக் கையாளுவார்கள். மக்கள் மீது ஆயுதப்போராட்டத்தைத் திணிக்க வேண்டாம்.
பூரண உண்மை. இதை தாண்டிய எந்த உண்மையும் இல்லை.
நாம்ப பீலா வுடுறமோ பித்தலாட்டம் பண்றமோ மத்தவங்களுக்கு தெரியாம பண்ணணும்பா.
லண்டனில் குடும்பத்தோடு செட்டில் ஆகி விட்டு போராட்டம் பற்றி அதுவும் ஆயுத போராட்டம் பற்றி பேச இஅவ்ர்களுக்கு என்ன தகுதி உள்ளது
அமெரிக்காவில் “செட்டில்” ஆனவா்களெல்லாம் முல்ளிவாய்க்கால் போன்ற படுகொலைகளை நடத்தும் போது லண்டனில் செட்டிலானவன் ஆயுதத்தைப்பற்றி பேசுவதற்கு என்ன தகுதி வேண்டுமோ நானறியேன்.
சிலவேளை பேரினவாதிகளுக்கு ஊதுகுளலாக தக்க தருணத்தில் வெளிப்படும் உங்களைப்போன்றவா்களுக்கு அங்கு குடும்பங்கள் இல்லாதிருக்கலாம் ஆனால் புலம் பெயா்ந்த தமிழா்களில் பெரும்பான்மையினரின் இரத்த உறவுகள் அங்கேதான் வாழ்கின்றன, அவா்களின் ஏக்கங்களை நாங்கள் நேரில் சென்று அறியவும் முடிகின்றது. அதாவது புலம்பெயா்ந்த தமிழா்களை பெரிதும் நம்பியே அவா்கள் வாழ்வதை அவதானிக்கமுடிகிறது.லண்டனில்” செட்டில்” ஆனவா்கள் இலங்கையை சென்றடைவதும் போராடுவதும் மிகவும் சாதாரணவிடயம்.
இது நடக்காது என்று வாதாடாதீா்கள்.
லண்டன்
மத்தாளோடையில் கிராமத்தவர்கள் விபரித்த ரஞ்சன் தோழராக அன்றி வெறும் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற இந்திய இராணுவத்தின் துணைகுழுவின் தலைவராக அவர் இறந்துபோனார். எது எவ்வாறாயினும் தனது லண்டன் வாழ்வைத் துறந்து மக்களுக்காகப் போராட என்று ஆரம்பித்த சமூகப்பற்றுள்ள போராளியின் மரணமும் மாற்றங்களும் வலி மிகுந்தவை.
இன்னும் 100 வருடங்களுக்கு சாத்தியமே இல்லை. அதன் பிறகு உலகமக்கள் ஆயுதங்களைப் பற்றி (மனிதன் மனிதனைக் கொல்லுவது பற்றி) சிந்திக்கவே மாட்டார்கள்.
புலிகளின் “மேக்குரி” வெளிச்ச போராட்டங்களும் அதன் இழப்புகளும் கிழக்காசியாவுக்கு நல்லதொரு ஒளியை கொடுத்துள்ளது.
இதன் அனுபவங்கள் இந்திய நக்சலைட்டுகளை பனிசறுக்கு வண்டிபோல கீழ்நிலைக்கே கொண்டு செல்லும்.
இந்த அனுபவங்கள் தேசியம் கண்டங்கள் கடந்து உலகத் தொழிலாளவர்கதின் ஐக்கியத்திற்கு நாள்தோறும் நிர்ப்பந்திக்கும்.
உவருக்குநிட்சயமாகத்தெரியும் தான் 100 வருசத்துக்கு இருக்கப்போற இல்லை எண்டு, அதனால என்னத்தையும் சொல்லித்தப்பிடலாம் எண்டு பாக்கிறார்.
ராசாக்கள்! என்ர கருத்தை சொல்றண்டா மோனை இண்டைக்கு உலகப் பொருளாதார சூராவளிக்குள்ள யாரும்
மற்றவையலைப் பற்றி கவலைப் படமாட்டினும் கிடைக்கிறத பொக்கற்றுகுள்ள போட்டுக் கொண்டு போகத்தான் எல்லாரும் பாக்கின இதில இனப் பிரச்சினை, மனித உரிமை மீறல், பயங்கரவாதம், சுய நிர்ணயம், சுண்ணாம்புக் கட்டி என்று ஏகப்பட்ட கதையள கதைச்சு காலத்தை வீணடிகிறது ஒரு அரசியல் உத்தியா போச்சு ஆரும் அடக்கப் படுற சனத்துக்காக போராட ரெடி இல்லை தங்கட இருப்பை காட்டிக் கொள்ள விலாசமா பேசத்தான் முந்தியடிக்கினும். எங்க பிரச்சனையோ அங்க நிண்டு போராட வேணும் மோனை யாருக்கு பிரச்சனையோ அவன்தான் எதிர்த்து நிக்க வேணும் கண்டியலே நீ துவக்கு எடுத்துப் போராடுறதும் துண்டுப் பிரசுரம் விடுறதும் உனக்கு எதிரான அடக்குமுறையின் வடிவத்தைப் பொறுத்து ஆனா ஒண்டு சொல்றன் இண்டைக்கு தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்ற அநியாயத்தை உண்ணா விரதம் இருக்கிறதாலயும் ஐ. நா வரைக்கும் மரதன் ஓடுறதாலயும் தடுக்க முடியாது. அரசாங்கங்கள் உள்ளுக்குள்ள ஒண்டுக் கொண்டு நல்ல தொடர்பு ஆற்ர கையடா அம்பி கறை படியாமாக் கிடக்கு அமெரிக்கா துவக்கம் தமிழ் தேசிய கூத்தமைப்பு வரை எல்லாரும் முன்னாள் இந்நாள் மனித விரோதிகள் தாண்டா அத விடுவம் தமிழ்ச் சனம் தனக்குள்ள விடுதலை அடியாம என்னெண்டு அந்நிய அடக்கு முறைக் காரனை எதிர்த்து விடுதலை பெறுறது சாதி, சீதனம், சடங்கு, கோயில், காவடி லொட்டு, லொசுக்கு எண்டு எத்தனை அர்த்தமில்லாத சங்கதியலை தூக்கிச் சுமக்கிறியல் கொஞ்சம் அறிவியல் பூர்வமா சிந்தியுங்கோ எங்கட பலவீனம் நாங்கதான் பாருங்கோ. அடக்கு முறை இருக்கும் வரை அதுக்கு எதிரான போராட்டம் இருக்கும். இழப்புகள் இல்லாம எங்க மோனையள் போராட்டம் நடந்திருக்கு வரலாற்ற நல்லா படிச்சு பாருங்கோ அந்த பட்டறிவில இருந்து நமக்கு பொருத்தமான வழிமுறைகளை பொறுக்கி எடுத்து மனதில வைச்சுக் கொண்டு முன் செல்லுங்கோ பிரபாகரனை கூட பின்தள்ளி வைக்கதிங்கோ அவங்கள் கட்டமைச்ச ராணுவம், நிர்வாகம், கலை பண்பாடு போன்ற ஊருப்பட்ட நல்லா விசயங்கள் இருக்கிது எங்கட காழ்ப்புணர்வால எல்லாத்தையும் காலுக்க போட்டு மிதிக்கப்பிடாது மக்களின்ர விடுதலைக்காக தூர நோக்கில் சிந்தியுங்கோ. என்ர தோட்டத்து அடி வளவில ஒரு மாமரம் இருக்கு பேரப் பிள்ளையல் திண்டது போக மிச்சம் இருந்தா சிங்கள நாட்டுக்கும் அனுப்பி வையுங்கோ.
ஐயா, கோமாளி veeran, பேச்சு பல்லக்கு தம்மி கால் நட நாவலன், பலகுரல் கலைஞன் ராகவன், தூண்டில்காரன் விஜய், நாக்கில்லா ஜீவன் chandran.raja போன்ற முகங்கள் வேறாயினும் இவர்களே இனியொருவின் அடையாளம் இவர்களின் ஒப்பாரிகளே இனியொருவின் இலக்கும் கூட. இப்பட்டாளம் எப்பாடுபட்டாலும் எதையுமே சாதிக்கப்போவதில்லை என்பதே உண்மை. இருந்து பாருங்கள் இன்னும் ஒரு வருடம் கழித்தும் இதே கோலம் இதே ஓலம்.
இப்பட்டாளம் எப்பாடுபட்டாலும் எதையுமே சாதிக்கப்போவதில்லை என்பதே உண்மை—- என்பதை புலிகல் பற்றிய க்ணிப்பாக 87 ம் ஆன்ட்டே முன்வைக்கப்பட்டது, உங்கள் ஆயுத போராட்டம், குப்பியை வீசி விட்டு ஆமிகாரரின் காலில் சரனடைவது தானே, அதனை மிண்டும் செய்ய விருப்பம் என்றால் முயற்சியுங்கள்
அப்போ, முத்திபெற்றதில் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் 22 வருட இடைவெளி என்று சொல்லுங்கோ சார்.
தத்துவப்புலி அரிச்சந்திரா! சாதிப்பது என்பது என்ன? நாலு அப்பாவிகளை போட்டுத்தள்ளுவதற்கு ஆதரவு வழங்குவதா?
வீட்டைகொளுத்துவதற்கு ஒருகிழிந்த கந்தல்துண்டும் கொஞ்ச மண்ணையும் இருந்தால் போதுமானது ஒரு முட்டாளுக்கு. வீடுயென்ன நாட்டையே கொளுத்தி விடலாம்.
இதுவே இலங்கையில் இரண்டுசதாகப்தற்கும் மேலாக “இனவிடுதலை”என்கிற பெயரில் நடந்தது. அதற்கு தாம் நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். இனியும் தெரிவிப்போம். நீங்களோ பூரவசம் இலையில் குழல் ஊதி ஆனந்தக்கூத்து ஆடினீர்கள்.
இதுமற்றவனின் இளவுவீடு உங்களுக்கு விருந்தாயிற்று. அந்த விருந்தைத் தான் இனியும் வருமென காத்திருக்கிறீர்கள்..!
அரிச்சந்திரா!….
எழுதவதற்கு நாக்குதேவையில்லை. கையும் கொஞ்ச மனிதநேயம் மட்டும் தான்…
//சாதிப்பது என்பது என்ன? நாலு அப்பாவிகளை போட்டுத்தள்ளுவதற்கு ஆதரவு வழங்குவதா?// நாற்பதாயிரம் உயிர்களை ஒரே நாளில் குடித்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கும் அடுப்பங்கரை ஊதுகுழல் உமக்கு இதை சொல்லுவதற்கு என்ன தகுதியிருக்கு. இப்படித்தான் உங்கள் போலி தத்துவ கோழி கிறுக்கல்கள் எல்லாம்.
ராசா, விழுங்கும் ஜீவன்கள் யாவும் நாவில்லா ஜீவன்கள் தான் அப்பு.
8000 ஆயிரமாக இருந்த 200 000 ஆக்கியதும், 12 லட்சம் பேரைநாட்டை விட்டு துரத்தியதும், 83 ம் ஆண்டு இருந்ததும் இல்லாமல் செய்ததே யாழ்ப்பாணிகளின் போராட்டம்