ஒடுக்குமுறையும் வன்மமும் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் போதெல்லாம் அவற்றிகு எதிராக மக்கள் போராடுகிறார்கள். மக்களின் போராட்டங்கள் அரசியல்ரீதியாகத் திட்டமிடப்படும் போது மக்கள் இயக்கங்களாக வளர்ச்சியடைகின்றன. மக்கள் இயக்கங்கள் மீதான அரச பயங்கர வாதம் எதிர்கொள்ளப்படும் போக்கில் தலைமறைவு இயக்கங்கள் புரட்சிகரக் கட்சிகளால் தலைமை தாங்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்ததின் பின்னான காலகட்டம் முழுவதிலும் விடுதலை இயக்கங்களை அரசுகளும் ஏகபோகங்களும் உருவாக்கிக் கொள்வதும் இறுதியில் இரத்த வெள்ளத்தில் மனிதப்பிணங்களை காண்பிப்பதும் பொதுவான நிகழ்ச்சிப் போக்கக அமைந்தது.
மக்களையும் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கங்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டு போராட்டங்கள் மீது மக்களுக்கு நீண்ட வெறுப்பை ஏற்படுத்துவதும் ஈழத்தில் மட்டுமன்றி உலகின் பல்வேறுநாடுகளில் இன்னமும்நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.
கொங்கோ, சோமாலியா, சூடான் போன்ற ஆபிரிக்க நாடுகளில் தேசிய வெறியையும் மத அடிப்படை வாதத்தையும் உருவாகுவது அவற்றைத் தலைமை தாங்குவதும் ஏகாதிபத்தியங்களின் உளவுநிறுவனங்கள் தான்.
இவ்வ்வாறான இயக்கங்கள், அரசுகளையும் அவற்றின் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துப் போராடுவது போன்ற தோற்றத்தை வழங்கினாலும் இறுதியில் அவற்றைப் பலப்படுத்துகின்றன.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் முழுவதும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களின் வரலாறு வெற்றியை மட்டுமே விளைவாகக் கொடுத்தன. அந்த வெற்றிகளிலிருந்து கற்றுக்கொண்ட ஏகாதிபத்தியங்களும் அரசுகளும் புதிய எதிர்ப் புரட்சி அரசியல் வழிமுறை பலவற்றை முன்வைத்தன.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெற்றிபெற்ற அத்தனை போராட்டங்களும் மக்கள் இயக்கங்களூடான ஆயுத எழுச்சிகளாக எழுந்தவை. மக்களை ஒழுங்கமைத்த்த முன்னணிப் படைகள் இறுதியில் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டன.
மக்களைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்துவதற்கான வழிமுறைகள் இந்த வெற்றிகளிலிருந்து கற்றுக்கொண்ட ஏகாதிபத்தியங்களாலும் அரசுகளாலும் கையாளப்பட்டன.
அந்த வழிமுறைகள் அனைத்தினதும் சாராம்சத்தில் சில பொதுமைப்பாடுகளைக் காணலாம்.
1. மக்கள் மத்தியில் போராட்டங்கள் மீதான வெறுப்புணர்வைத் திட்டமிட்டு உருவாக்குதல்.
2. மக்களின் ஆதரவுத் தளத்தைத் தமதுபக்கம் ஈர்த்துக்கொள்ளல்.
இவை இரண்டோடும் கூடவே 70 களின் பின்னர் புதிய எதிர்ப்புரட்சி திட்டமும் உருவாக்கப்பட்டது. அரசுகளுக்கு எதிரான, அவற்றைப் பலவீனப்படுத்தும் போராட்டங்களை இனக்குழுக்களுக்கு இடையேயான மோதலாக மாற்றுதல் என்பதே மூன்றாவது முக்கிய எதிர்ப்புரட்சித் திட்டம்.
சாமூவேல் ஹன்டிங்டன் என்ற ஏகபோகங்களின் அடியாளான புத்திசீவி முன்வைத்த மிகப்பிரபலமான கருத்தாக்கமான நாகரீகங்களின் மோதல் என்ற நூல் புதிய எதிர்புரட்சிக்கு தத்துவார்த்த அடித்தளத்தை வழங்குகிறது. எவ்வாறு வேறுபட்ட இனக்குழுக்களுக்கு இடையேயான மோதல்கள் உருவாகலாம் என்று அந்த நூல் கற்பிக்கிறது.
தனது எதிரியைத் தானே வளர்த்தலும் இறுதியில் அழித்தலும் என்ற வழிமுறையின் உலகளாவிய உதாரணமாக ஒசாமா பின்லாடனைக் காணலாம். இலங்கையின் உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய அனைத்து இயக்கங்களையும் காணலாம்.
இந்த இரண்டிலுமே பெரும்பான்மையினரின் ஆதரவை அரசுகள் தக்கவைத்துக்கொண்டன. ஒசாமா பின்லாடன் ஊடாக உலகம் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான அபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டது. ஐரோப்பிய அமரிக்கநாடுகளில் இஸ்லாமியநாடுகளை ஆக்கிரமிப்பதற்கான பெரும்பான்மை ஆதரவை அந்த அரசுகளும் அதிகார வர்க்கமும் பெற்றுக்கொண்டன.அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான அரபுநாடுகளின் போராட்டம் இஸ்லாமியர்களின் மதவாதப் போராட்டமாகச் சித்தரிக்கப்படது.மறுபுறத்தில் இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத அடிப்படை வாதம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது.இதற்கு ஒப்பான சூழலையே இலங்கையிலும் காண்கிறோம்.
சீக்கியர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தனது எல்லைக்குள்ளேயே ஒடுக்கிய வரலாறு இந்திய ஆவணங்களில் இன்னமும் செத்துக்க்கிடக்கிறது. பிந்தரன் வாலேயின் குழு இந்திய ஆயுதப்படைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு ஆயுதம் வழங்கியதே இந்திய அரசுதான். இறுதியில் சீக்கியர்களின் போராட்டம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டது.
இதன் பிரதியீடு செய்யபட்ட மறுவடிவமே ஈழப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு. 80 களின் ஆரம்பத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணப்பட்ட போராட்ட சூழலும் அதன் வெற்றிக்கான வாய்புகளும் இன்றைக்கு இல்லை. முப்பது வருடங்களாக இந்தியாவாலும், ஏகாதிபத்தியங்களாலும் அழிப்பதற்கு என்றே வளர்க்கப்பட்ட போராட்டங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தை இன்னமும் முப்பது வருடங்களுக்கு மேலாகப் பின்னோக்கிக் கொண்டு சென்றிருக்கிறது.
ஏகாதிபத்தியங்களின் இந்த அழிவுத் திட்டம் குறித்துப் பேசிய அனைவரும் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அன்னியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், அகதிகளாக்கப்பட்டிருகிறார்கள்.
இன்று இந்த ஏகபோகங்கள் இலங்கை அரசிற்கு எதிரிகளற்ற வெளியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. அவை இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரை நீண்டு செல்கின்றன.
83 ஆம் ஆண்டு இந்திய அரசு இயக்கங்களுக்கான ஆயுதப்பயிற்சி வழங்குவதற்கு முன்பதான காலப்பகுதியில், மக்கள் இயக்கங்களும், அரசியல் உரையாடல்களும், தலைமக்கான முன்னணி சக்திகளின் உருவாக்கமும் காணப்பட்டன.
இந்த சூழலில் ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கான திட்டம் இந்திய அரசால் உருவாக்கப்படுகின்றது. சந்திரகாசன் செல்வநாயகம் என்ற இந்திய உளவாளி ஊடாக இயக்கங்கள் அணுகப்படுகின்றன. நான்கு பிரதான இயக்கங்கள் தெரிவாகின்றன. TELO, LTTE, EPRLF, EROS ஆகிய இயக்கங்கள் ஆயுதப்பயிற்சி வழங்குவதற்காகத் தெரிவாகின்றன. இவற்றுள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகளவான பயிற்சியும் ஈரோஸ் இற்கு குறைந்த அளவான பயிற்சியும் வழங்கப்படுகின்றது.
இந்த நான்கு இயகங்களையும் புளட் என்ற ஐந்தாவது இயக்கத்தையும் கையாள்வதனூடாக் இந்திய அரசு மூன்று பிரதான அழிவுகளை மேற்கொண்டது.
1. மோதல்களை உருவாக்கி மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி அவர்களைப் போராட்டங்களிலிருந்து அன்னியப்படுத்தல்.
2. இந்தியாவிற்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராகப் போராட முனைந்தவர்களையும் அவர்களின் அழிவு அரசியல் திட்டத்தை வெளிக்கொண்டுவர முனைந்தவர்களையும் அழித்தது.
3. இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாக உருமாற்றி சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பேரினவாதத்திற்குப் பெற்றுக்கொடுத்தது.
குறிப்பாக, இன்றுவரை சிங்கள மக்களை மிகப்பெரிய அளவில் அழித்ததாகக் கருதப்படும் அனுராதபுர தாக்குதலை இந்திய அரசின் தூண்டுதலின் பேரிலேயே புலிகள் மேற்கொண்டார்கள். இலங்கை அரசிற்கு எதிரான இராணுவத்தைக் கட்டியெழுப்புவதையே தனது ஒரே அரசியல் வழிமுறையாகக் கருதிய விடுதலைப் புலிகள் 1985 இல் இந்தத் தாக்குதலை மேற்கொண்டார்கள். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மீசை அல்லது சூரி என்பவரால் தலமை தாங்கப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னர் இந்திய அரசு பெருமளவிலான ஆயுதங்களை வழங்குவதாக விடுதலைப் புலிகளுக்கு உறுதியளித்திருந்தது.
இத் தாக்குதல் நடைபெறும் வரைக்கும், சிங்கள மக்கள் மத்தியில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான குரல்கள் வேர்விட ஆரம்பித்திருந்தன. இலங்கை ஆசிரியர் சங்கம் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. பல சிங்கள இளைஞர்கல் ஈழப்போராட்ட இயக்கங்களில் முழு நேரப் போராளிகளாக இணைந்துகொண்டனர்.
சிங்கள மக்களைக் குண்டுவைத்து அழிக்கும் கலாச்சரத்தை உருவாக்கிவைத்தது ஈரோஸ் இயக்கமே. இவற்றின் பின்னர் பேரினவாதம் முன்னெப்போது இல்லாத அளவிற்கு தொலைதூரக் கிராமங்கள் வரை சென்று ஆழ வேரூன்றிக்கொண்டது.
இன்னும் வரும்..
ஈழப் போராட்டத்தை அழித்தவர்களுள் இன்று முதலிடத்தில் இருப்பவர்கள் முஸ்ஸீம் சமூகத்தவர்களே. அந்தச் சமூகத்தைசேர்ந்த ஒசாமா பின்லாடனின் இரட்டைக்கோபுர அழிப்பே ஈழப் போராளிகளை அழிப்பதற்கு உலகை ஒன்றுபட வைத்தது. யார் பயங்கரவாதிகள் என்று ஆராயாமல், எத்தகய கொடூரமான அரசுகளாக இருந்தாலும் அவற்றிற்கு எதிராக போராடும் விடுதலை இயக்கங்கள் அனைத்தையுமே பயங்கரவாத இயக்கம் என்று முத்திரைகுத்தி அழிப்பதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின்பவல் வெளியிட்ட யோசனையை, உலகம் ஏற்றுக்கொண்டு செயல்பட காரணமாக இருந்தவர் ஒசாமா பின்லாடனும் அவர் சமூகத்தினருமே.
?
இப்படியான ஒரு குற்றசாட்டு முஸ்லிம்கள் மீது சுமத்தவே இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம்
ஈழப் போராட்டத்தை அழித்தவர்களுள் இன்று முதலிடத்தில் இருப்பவர்கள் முஸ்ஸீம் சமூகத்தவர்களே என்பதுநகைப்புக்கு இடமானது,
மகெந்திரா ஒர் இந்திய உளவாளி
இப்படியான ஒரு குற்றசாட்டு முஸ்லிம்கள் மீது
சுமத்தி தமிழ் சமுகத்தை பிரிக்கும் உளவாளி
உமது கண்டுபிடிப்பு அபாரமானது!. இந்த அபார மூளையை உபயோகித்து மேலும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
சிங்கள தமிழ் கலவரம்…….
இங்கே சிங்களவன் சிங்களவனே. தமிழன் தமிழனே.
முஸ்லீம் தமிழ் கலவரம்…….
இதன் பொருள் என்ன?. முஸ்லீம் முஸ்லீமே. தமிழன் தமிழனே என்றால் தமிழ் சமூகத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?.
தமிழர் சிங்கள குடும்பத்தில் இணைந்து சிங்களக் கலாச்சாரத்தோடு குடும்பமாக ஒன்றிவாழ்ந்த நிகழ்வுகளும். சிங்களர் தமிழர் குடும்பத்தில் இணைந்து சிங்களக் கலாச்சாரத்தோடு குடும்பமாக ஒன்றிவாழ்ந்த நிகழ்வுகளும். இலங்கையில் ஏராளம் உண்டு. ஆனால் முஸ்லீம்கள் தமிழர் குடும்பத்தில் இணைந்து குடும்பமாக தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒன்றிவாழ்ந்த நிகழ்வுகளோ, தமிழர் முஸ்லீம்கள் குடும்பத்தில் இணைந்து முஸ்லீம் கலாச்சாரத்தோடு குடும்பமாக ஒன்றிவாழ்ந்த நிகழ்வுகளோ நான் அறிந்தவரை நடைபெற்றதில்லை.
தமிழர்களின் பூர்வீக மண்ணையும், பொருளையும் முஸ்லீம்கள் பறித்தெடுத்த நிகழ்வுகள்தான் இலங்கையில் ஏராளம் உண்டு. இதுபற்றி உமது அபார மூளையில் ஏதாவது பதிந்திருந்தால் சற்று வெளியிட வேண்டுகிறேன்.
Whether you like it or not it was a by prodiuct of the attcak of 9/11 by the Muslims, no one can deny that.
உலக வல்லரசுநாடுகள் தமக்குப் பாதுகாப்பான, தேவையான,ஆதரவுநாடுகளின் இனங்களின் போராட்டங்களை விடுதலைப்போராட்டம் என்றும், தமக்கு வேண்டாத, ஆபத்தான என் தோன்றும் இனங்களின், நாடுகளின் போராட்டங்களைப் பயங்கரவாதப் போராட்டம் என்று அழிப்பதும் , ஒடுக்கநினைப்பதும் ஒன்றும் புதிதல்லவே. இதுவே எமது தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத் தோல்விக்கும் முக்கிய காரணம். இது தெரியாத சாம்பிராணிகள் , போராட்டம் தோல்வி அடைய புலிகளும் , பிரபாகரணும் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கினம். தமிழ் ஈழப் போராட்டத்தை எந்த தலைவர் முன்னெடுத்துச் சென்றாலும் அவெர்களுக்குநிச்சயம் ஒரு முள்ளிவாய்க்கால் காத்துக்கொண்டே இருந்த்திருக்கும்.ஏன் எனில் சூடானுக்கு சுதந்திரம் கொடுக்க முடிந்த உலகத்தால் ஏன் இன்னும் தமி இனத்துக்கு ஒரு சுதந்திரம் கொடுக்க ஆதரவளிக்க முடியவில்லை. அச்சே மானில மக்களுக்கு சுயாட்சி வாங்கித்தர முடிந்த உலகத்தால் ஏன் ஈழதமிழ் இனத்திற்கு சுயாட்சி வழங்க பரிந்துரைக்க முடியவில்லை. கிழக்குத் தீமோர் விடுதலை யடைய முடியம் என்றால் ஈழதமிழருக்கு விடுதலை அடையா அதைவிட ஆயிரம் காரணம் இருந்தும் ஏன் எமது விடுதலைக்கு ஆதரவ தர முடியவில்லை இந்த உலகநாடுகள்: இவை எல்லாம் , எதற்கு எடுத்தாலும் புலிகளை வம்புக்கு இழுக்கும், வசை பாடும் கூட்டங்களான கிணத்துதவளைகளான வீரன், சந்திரன் ராசா ,வொட்டர் போன்ற புண்ணாக்குகளுக்கு எங்கே புரியப்போகின்றது.
சுயாட்சி வாங்கி புலியிடம் கொடுத்திருந்தால் ,,,ஐயோநினைக்கவே தலையை சுற்றுதே,நல்னேரம் தேசிய தலை மகிந்தவிடம் கையூட்டு பெற்று அவர் யதார்தவாதி என்று பதவிக்கு வர உதவி செய்து, மாவிலாற்றில் தண்ணியை அடைத்து, முள்ளி வாய்க்காலில் சமாதி அடைந்த்து
திருடனுக்குத்தான் போலீஸைக் கண்டால் பயம் வரும். கொலைகாரனுக்குதான் நீதிமன்றத்தைக் கண்டால் மரணபயம் வரும். உமக்கு புலிகளைக் கண்டால் ஏன் பயமும் கோவமும் எரிச்சலும் வருகின்றது என்பதைக் கண்டுபிடிக்க எமக்கு நியூட்டனும் தேவை இல்லை. எடீசனும் தேவை இல்லை 🙂 புலிகளின் கட்டுப்பாட்டில் எத்தனை மக்கள் லட்சம் மக்கள் எத்தனை பல ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்பது உமக்கும் தெரியும் , உலகத்திற்கும் தெரியும். 1990 ஆம் ஆண்டுக்குபின்னர் யாழ், வன்னி, கிழக்கு என்று புலிகளின் கட்டுப் பாட்டில் சுமார் 15 இலட்சம் மக்கள் வாழ்ந்தார்கள்: புலிகள் ஓர் அரசாங்கத்தையேநடத்தி இருந்தார்கள் . அவெர்களுக்கென தனியானநீதித் துறை , காவல் துறை , சட்டத்துறை என்று அத்தனை வெகுசிறப்பாக மக்கள் ஆட்சி நடத் தி இருந்தார்களே. புலிகளிடம் சுயாட்சி கொடுத்திருந்தால் உம்மைப் போன்ற மக்கள் விரோத ஆக்கள் எல்லாம் துண்டைக்காணம், துணியக் காணம் என்று ஓடிப் போய்யிருப்பீர்கள்:ஆசியாவின் அடுத்த சிங்கப்பூராய் தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டியிருப்பார்கள்:மாவீரர்களுக்கு ஏது மரணம். அது உம்மைப்போன்ற கொள்கை, கோட்பாடற்ற,தாய் மண்ணைநேசிக்காத மானுடர்க்கே. கட்சியின் தலைவன் அல்ல எம் தலைவன், அவென் மக்கள் தலைவன்.மரணம் ஓர் போதும் அவெனை இந்த மண்ணில் இருந்து மறையச்செய்யாது.
சிங்கப்பூர் என்றே எழுத தெரியாத மக்கன் பிரபாகரன், அவன் எவ்வாறு ஈழத்தை சிங்கப்பூராக மாற்றுவான், இழவு வீடாக அல்லவா ஆக்கினான்,
சொறி வீரன்! உலகத்தில் பிரபலியம் ஆனவர்கள் பலபேர். அறுபது டொலர்உடன் வியாபாரத்தை தொடங்கியவன் காலப்போக்கில் உலகப்பணக்காரர் வரிசையை பிடிக்க வில்லையா? பேப்பர் குப்பை பொறுக்கியவன் தமிழ்நாட்டு பணக்காரன் ஆகவில்லையா? புத்தன் ஒருயிடத்தில் இருந்து கொண்டே அன்பை உபதேசிக்கவில்லையா? யேசு ஆணிஏற்றி முள்முடி தரித்தபின்னும் ” அவன் அறியாமல் செய்கிறான் அவனை மன்னித்து விடுங்கள்” என குரல் எப்ப வில்லையா? இப்படியான பிரபயலிங்களில் ஒருவரே தம்பி பிரபாகரன். இவர் கொலை செய்வதில் துணிகரமானவர். நிச்சியமாக இந்த செயல் திறன் ஏல்லோருக்கும் கூடிவருவதல்ல. சிலருக்குக்கு வரலாம். அதை அரசியலோடு இனைக்கிற திறமை இந்தக் கனகலிங்கம் சுருட்டுக்கே இருந்தது.
சொறி வீரன்! எந்த மொழியில் என்று சொல்லவில்லையே? அதனால், கவனமாக யோசித்து (வேலை செய்யுமாயின்) சொல்லுங்கள் யாரும் மூஞ்சில் காறி துப்பாத வகையில்.
மேலும், இந்த வருடமும் பின்னூட்டம் இடுவதில், சிறந்த முட்டாளுக்கான போட்டியில் தாங்களும், மிகச்சிறந்த நகைச்சுவை இடுகைக்கான பந்தயத்தில் chandran.raja அவர்களும் முன்னிலை வகிப்பதாக முக்கி முக்கி வரும் முக்கிவாகினி செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, கக்கி கக்கி நீங்கள் எடுக்கும் எந்த கழிவு இடுகைகளையும் எப்போதும் எவருக்காகவும் கைவிடாதீர்கள் வெற்றி உங்களுக்கே.
முட்டாள் என்றழைக்கும் அதி மேதாவி அவர்களே, தேசிக்காய் தலையனுக்கு சிங்கப்பூர் இருப்பது இடமா வலமா என்று தெரியாது, இல்லை எனில் முள்ளி வாய்க்காலில் அமெரிக்காவிலிருந்து கப்பல் வரும் என்று காத்திருக்குமா அது, அதுக்கு உலகத்தை பற்றி ஒரு அற்வும் இல்லை சொன்னவர் எரிக் சோல் எய்ம். ஆனால் கொலை செய்வதில் விண்ணன், தமிழர்களுக்குநல் தீர்வை பெறுவதில் அதுக்கு அக்கறை இல்லை, தான் இருக்கும் வரை கொலை செய்து திருப்தி அடைந்த மனநோயாளி,
அடேய் பயலே estate boy, அவனா… நீ… (சொறி வீரன்)?
வெத்துவீரன் சிங்கப்பூர் என்று எழுதத் தெரிந்த நீர் என்ன , கோட்டை கட்டி . கொடியை பறக்கவிட்டு ,நாட்டையா ஆழுறீர் 🙂 :@ >
வெத்து வீரன் 🙂 எமது “”தேசியத் தலைவர் “”அதி மேதகு பிரபாகரன் அவெர்கள் ,” தேசிக்காய்க்கும்” கூட தலைவராய் இருந்திருக்கிறார் என்பதை ,
நீர் சொல்லக் கேள்விப்பட்டு நாம் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். ஏன் எனில் தேசிய்க்காய் சிறந்தநோய் எதிர்ப்புநிவாரணி . அது மட்டுமல்ல ஆண்டவன் சன்னிதானத்திலும் வைத்து பூஜிக்கபட்டு பின்பு அந்த தேசிக்காயை வீட்டில் கொண்டு போய், பேய் பிசாசு அண்டாதவாறு வைய்க்கும்படி ஜயரால் பக்தர்களுக்கு கொடுக்கபடுகிறது. பேயை ஓட்டவும் பயன்படுகிறது. எனவே வெத்து வீரன் ,நீர் முதலில் தேசிக்காயை இரண்டாக வெட்டி பூஜை பண்ணி உம்முள் இருக்கும் , மகிந்த , டக்கிளஸ் அன் கோ சாத்தான் களை வெளி யேற்றவும் 😀 🙂 . பின்பு எமது தேசியத் தலைவர் பெயர் சொல்லி தேசிக்காயை தலையில் வைத்து தேய்த்து உமது பித்தத்தைப் போக்கவும். அரோகரா அரோகரா …….
அதிமேதகு தமிழன் அவர்களே
உலக நாடுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் என்கிறீர்கள். இதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட போர்த்தந்திரம் என்ன?
கடைசிநேரம் வரை அமெரிக்கா வரும் என்று காத்திருந்தது ஏன்?
இப்படிக்கு “சாம்பிராணி” + “புண்ணாக்கு” வோட்டர்.
சரியான கேள்விநண்பரே
“சாம்பிராணி” + “புண்ணாக்கு” வோட்டர் அவர்களே, உங்களைப்போன்ற சாம்பிராணி புண்ணாக்குகளுக்கு வோட்டர் காட்டிவிட்டு டாட்டா காட்டுவதற்குத்தான்.
ஈழப்போராட்டத்தை அழித்தவர்கள் ஒரு வரியில் புலிகள் தான்! புலிகளின் இயக்கங்களிற்கிடையிலான ஜனநாயக விரோதப் போக்கு – பேச்சுக்களால் தீர்கப்பட வேண்டியவை துப்பாகிளால் தீரக்கப்பட்டமை. புத்திஜீவிகள் ஒருவர் விடாது கலைத்து கலைத்து கொலை செய்து புத்திஜீவிகளை ஈழப்போராட்டத்தில் இருந்து கலைத்தமை. புலிகளின் தலைமை இதன் பின்னர் செய்தது நாசிகளின் ஆக்கிரமிப்பு யுத்தமே. ஒளிய போராட்டம் அல்ல.
புலிகள் என்றுமே இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்கியவர்கள் அல்ல. மாறாக தான்தோன்றி தனமான முடிவுகளை எடுக்க முழுக்காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்மே. குறிப்பாக அனுராதபுரத்த தாக்குதலிற்கு பிரபாகரன் கட்டளையிட்டதும் மாத்தையா அதற்கு ஆதரவுகொடுக்கவில்லை. அந்த தாக்குதல் முழுவதுமாக விகடர் மற்றும் கிட்டுவின் படைகளே செய்தது
லண்டனில் வந்து வசித்து மாரடைப்பால் இறந்த ஹென்றி மற்றும் தற்போது கனடாவில் வசிக்கும் ரஹீம் அவருடன் ஊத்தை ரவி கிட்டுவுடன் கடலில் மரணமான குட்டிசிறி விகட்டருடன் அவரின் சகா சாந்தமணி தலைமையில் மன்னார் ஊடாக சென்றே இந்த தாக்குதல் நடைபெற்றறது. இதற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இனியும் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றும் வகையில் இந்தியா சொலிலி செய்ததது என்று கூறி தப்ப வேண்டாம்.
மற்றது இந்தியா புலிகளிற்கு அதிக பயிற்சி கொடுத்தது என்பதும் தவறு. ரெலோ இயக்கதிற்கே அதிக பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டது. புலிகளின் பயிற்சி முகாம்கள் பல இந்தியாவிடம் பயிற்சி பெற்ற படைகளைால் பின்னர் வழங்க்பட்டது. அதே போல் வன்னயில் பல பயிற்சிப்படையணிகளும் சாவகச்சேரியில் பல பயிற்சி படையணிகளும் 1984இலேயே புலிகளால் ஆரப்பிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பிரபாகரன் இந்தியாவிடம் பயிற்சிக்கு முழுமையாக தங்கியிருக்க விரும்பாததுடன் இந்திய ஊடுருவல் இயக்கதிற்குள் வர விடக் கூடாது என்பதே பிரபாவின் முக்கிய நோக்கம். இதனால் பல பயிற்சிகள் தளத்திலும் பிறிசி தளம் 9 வரை இந்தியாவிலும் நடைபெற்றது. வரலாற்றை திரிக்கும் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே இவ்வளவு ஓட்டைகள் இதுவா ஈழப்போராட்ட அழிவு பற்றி உண்மைகளை தரப்போகிறது???
சரியான கருத்து நன்பரே, உங்களை போன்ற உண்மையையும் வரலாற்றையும் துனிந்து எழுதுவோர் சிலரே
சகோதரப்படுகொலை நடைபெறாமல் இருந்திருந்தால்மட்டும் தமிழ் ஈழம் கிடைத்திருக்குமோ.புலிகள் , மாற்று இயக்கங்களை அழித்திராது விட்டிருந்தால், இந்தியாவின் உதவியோடு மாற்று இயக்கங்கள் புலிகளை அழித்திருப்பார்கள். அப்போது மட்டும்நீங்கள் புலிகளை அழித்தது என்று ஒப்பாரி வைத்திருப்பீர்களா ? அல்லது உங்களால் யாரிடம் சென்றுதான் முறையிட்டிருக்க முடியும். புளட்டோ உட் கொலைகளுக்கோ பெயர் போன அமைப்பு. ஈ.பி.ஆர்.எல்.எவ் – டக்கிளஸ் போன்ற தலைமிற்குக் கட்டுப்படாத தெருச் சண்டியர்களை வைத்திருந்த அமைப்பு. டெலோ முழுக்க முழுக்க ரோவின் கட்டுப்பாட்டில் இயங்கிய அமைப்பு. இப்படி தமக்கு என்ற கொள்கை கோட்பாடற்ற இயக்கங்களை விட புலிகள் எவ்வளவோ மேல். இன்றைக்கும் எப்படி மாற்று இயக்கங்களால் தங்களுக்குள் ஓர் ஒழுங்குக்குள் வர முடியாமல் குழப்பி அடித்து தெளிவில்லாமல் இருக்கிறார்களோ, அன்றும் அவேர்கள் அப்படித்தான் இருந்தருப்பார்கள்: புலிகளால் மூன்று இயக்கங்களை தனியே தாக்கி அழிக்க முடியும் என்றால், ஏன் அந்த மூன்று இயக்கங்களாலும் ஒன்று சேர்ந்து புலிக்ளை அழிக்க முடியாமல் போனது. எப்படி அழிக்க முடியும். அவெர்களிடம் வீரம் இல்லை, விவேகம் இல்லை, தலமைக்கு கட்டுபடவேண்டும் என்ற ஒழுக்கம் இல்லை, சரியான திட்டமிடல் இல்லை. இப்படி எல்லா” இல்லைகளையும்” வைத்திருந்தவர்களால்தானா சிங்கள ஆமியை எதிர்த்துப் போராடி தமிழ்மக்களைக் காத்து தமிழ் ஈழம் பெற்றுத் தந்திருப்பார்கள். “தம்பிக்கு “ஆமாம் போட “வீரன் ” சரியான சின்ன மேளம் தான்.
சுதந்திரம் தேடி ஆயுதம் ஏந்தியவர்கள் விடுதலைக்கான பாதையைத் தொலைத்துவிட்டு திசை தெரியாமல் தமிழக அரசியல் கட்சிகளின் குரல் வளத்தில் விடுதலைக்கு உரம் சேர்க்க முற்பட்டுள்ளனர். சிங்கள அரசியல் கட்சிகளுடன் ஒரே மேடையிலிருந்து விவாதிக்கத் தயாரான இவர்கள் சகோதர இயக்கங்களுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதற்கு தயாரில்லை என்று அறிவித்தனர் 1987ல். கௌரவம் குறைந்துவிடும் என்பதனைத் தவிர இவர்கள் வேறென்ன காரணம் சொல்ல முடியும்.
சிங்களவரது கைகளுக்குள் தமிழீழப் பகுதிகள் செல்லலாம். ஆனால் தமிழச் சகோதர இயக்கங்கள் தமிழீழத்தில் வாழமுடியாது. ஏகத்துக்கும் பிரதிநிதிகள் இவர்கள்தான். இன்று ஏகப் பிரதிநிதித்துவம் எங்கு இருக்கிறது என்று பார்த்தால் அது முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் கிளிநொச்சி மாவட்டத்துக்கும்தான். அதிலும் பாதிக்கு மேல் பறிபோய்விட்டது. எட்டு மாவட்டங்களில் ஆறரை மாவட்டங்கள் பறிபோய்விட்டன. அப்படிப் பார்த்தால் ஒன்றரை மாவட்டங்களுக்குத்தான் இப்போது அவர்களது ஏகப்பிரதிநிதித்துவம் பொருந்தும். ஆதலால் மொத்தத் தமிழினத்துக்கும் ஏகப்பிரதிநிதிகள் நாங்கள்தான் என்ற திமிரான கோரிக்கை கைநழுவிப் போய்விட்டது என்பதனைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பணமும் ஆயுதமும் விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற நீண்ட காலமாக நம்பியிருந்தனர். இறுதிக்கட்டத்தில்தான் தெரிகிறது அது தவறு என்று! இருந்தாலும் இன்னமும் வறட்டுக் கௌரவம்தான் முன்னிலை வகிக்கிறது. தமிழினத்தின் குத்தகையாளர்கள் தாங்களேதான். தமிழர்கள் குத்தகைப் பணத்தை தங்களிடம் மட்டுமே தரவேண்டும், பிற நாடுகளில் இருப்பவர்கள் அனுதாப குத்தகை செலுத்துகின்றனர். செலுத்தத் தவறியவர்களிடத்து கட்டாயக் குத்தகை வசூலிக்கப்பட்டது. இவை அனைத்தையும் தமிழினம் தாங்கிக் கொண்டது. ஏனென்றால் பொடியள் தனிநாடு பிடிச்சிடுவினம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. எப்படி இந்த நம்பிக்கை வந்தது?. பொடியள் எல்லாரையும் போட்டுத் தள்ளிவிட்டினம், அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு அவர்கள் வல்லவர்கள். அதனால் அவர்கள் பிடிச்சிடுவினம்! தங்களது கைகளுக்கு அகப்படாத கொம்புகளைக்கூட வெறும் வாயினால் சீவி விட்டனர் தமிழர்களில் சிலர்.
யாருக்கு எதிராகத் தமது துப்பாக்கிகளைத் திருப்பினரோ, யாரை உலக அரங்கில் தலைகுனிய வைத்தனரோ அவர்கள் உதவி செய்ய மாட்டார்களா? ஏன் தயக்கம், நாங்கள் என்ன செய்தோம், தந்தையர் நாடல்லவா! என்றெல்லாம் விளக்கக் உரை கொடுத்து வடக்கு நோக்கி நாடிநிற்கின்றனர்.
மோட்டுச் சிங்களவரும், மடத் தமிழரும் இணைந்து இலங்கைத் தமிழருக்கு உரிமை வழங்கப் போகின்றனர். அதனை உலகத் தமிழர்கள் கண்டு களிக்கப் போகின்றனர். சற்றுத் தூரத்தில் இருக்கும் சிங்கப்ப+ரில் மூன்றின மக்களும் அரசியல் அதிகாரத்துடன் நிர்வாகத்தை எப்படி நடத்துகின்றனர் என்று அறிந்து கொள்ள முடியாத மோட்டுச் சிங்களவரும், தங்கள் கைகளில் கிடைத்த ஆயுதத்தை யாருக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாத மடத் தமிழரும்தான் எங்கள் இனத்துக்கு உரிமைகள் பெற்றுத் தரப் போகின்றார்களா? இவை இரண்டுமே நடக்காதவை!
சிங்கள இனம் தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ளனர். அவர்களிடத்திலிருந்து நாம் எதனையும் எதிர்பார்க்க முடியாது. விடுதலை பெற்றுத் தருவோம் என்று கூறி எங்கள் இனத்துக்காகப் போராடிய இயக்கங்களை கொன்றொழித்தவர்கள் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
தமிழ் மக்கள் புலிகளின் முன்வைக்கும் கேள்விகள் பின்வருமாறு உள்ளன:-
(01) தமிழர்களின் போராட்டப் பலத்தை வலுவிழக்கச் செய்தது தங்களது சகோதரப் படுகொலைக் கொள்கைதானே? இது சரியா! தவறா?
(02) இந்தக் கொள்கையினால் தமிழ் இனம் இப்போது துன்பப்படுகிறது என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கிறீhகளா? இல்லையா?
(03) தமிழ் மக்களின் தலைவர்களான திரு. அமிர்தலிங்கம், திரு. சிறிசபாரெத்தினம், திரு. பத்மநாபா போன்றோரைக் கொலை செய்தது தவறான செயல் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(04) இந்திய அமைதிப்படையை வலுக்கட்டாயமாக சண்டைக்கு இழுத்து இந்தியாவை அவமானப்படுத்தியதை ஏற்றுக்கொள்கீறீர்களா? இல்லையா?
(05) தமிழர்களின் பொது எதிரியான பிரேமதாசாவுடன் இணைந்து தமிழ் இயக்கங்களையும், அமைதிப்படையையும் தாக்கியது தவறு என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(06) நாங்கள்தான் ஏகப்பிரதிநிதிகள் தமிழ் மக்கள் பற்றி யாரும் பேசக்கூடாது அப்படிப் பேசினால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற கொள்கை தவறானது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(07) “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் நிராகரித்து சிங்கள அரசுடன் சேர்ந்து குறைந்தபட்ச தீர்வான அந்த ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்தது தவறு என்று இப்போதாவது ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(08) ஈழத் தமிழருக்கு உதவுவதற்காக முன்வந்த மறைந்த பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களை தமிழகத்தில் வைத்துக் கொலை செய்தது நீங்கள் செய்த மாபெரும் தவறுகளில் ஒன்றா இல்லையா?
(09) “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை நிராகரித்து இப்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றுவரை உங்களால் ஓர் உடன்படிக்கையினைக் கூட இலங்கை அரசுடன் ஏற்படுத்த முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(10) இந்த 20 ஆண்டுகாலமும் தமிழர்கள் இழந்துவிட்ட உயிருக்கும் உடமைகளுக்கும் நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(11) தமிழர்களுக்கு உதவிக்கு வந்த இந்தியாவை, அன்று தமிழர்களின் பொது எதிரியான சிங்களவர்களுடன் சேர்ந்து விரட்டி அடித்தீர்களே இன்று அதே இந்தியா உதவ வேண்டும் என்று தங்களின் விசுவாசிகள் மூலம் கோருவது வெட்கப்பட வேண்டிய விடயமா? இல்லையா?
(12) இந்த நிலைக்கு வந்த பின்னரும் சகபோராளி இயக்கங்களையும் அழைத்து நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம் என்று பகிங்கரமாக் கோராதது தவறு என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா?
(13) சிங்கள அரசுக்கு எதிரிகளாக இருந்த கருணா, பிள்ளையான் போன்றோரை தனக்குச் சாதகமாகவும் தமிழினத்துக்கு எதிராகவும் பயன்படுத்துகிறது இலங்கை அரசு. ஆனால் நீங்கள் எந்தத் தமிழர்களையும் அழைத்துக் கதைப்பது கிடையாது. உங்களை ஏற்றுக்கொண்டு சரணாகதி அடைந்தால் மட்டுமே (திரு. பாலகுமாரன், ரி.என்.ஏ போன்று) அவர்களைப் பயன்படுத்துவீர்கள். மோட்டுச் சிங்களவருக்கு இருக்கிற அறிவு கூட உங்களுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(14) தமிழினத்தின் ஏகப்பிரதிநிதி என்று கூறிக் கொலை செய்ததன் விளைவாக பெரும்பான்மையான தமிழருக்கு இன்று சிங்களவரே பிரதிநிதியாகி விட்டனர் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(15) உங்களது பயங்கரவாதக் கொள்கையால் உங்களுக்கு நீங்களே தடையை ஏற்படுத்திக் கொண்டுள்ளீர்கள் உலக நாடுகளில் இன்று தமிழினத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது போராடுவது அனைத்தும் தமிழக சினிமாக்காரர்களின் கைகளுக்கும், சந்தர்ப்பவாத தமிழக அரசியல்வாதிகளின் கைகளுக்கும் காணிக்கையாக்கி மகிழ்கிறீர்கள். இந்தச் செயல் சரியானதாகப் படுகிறதா உங்களுக்கு?
(16) சினிமாவுக்கு கதைவசனம் எழுதி இயக்குவிப்பவர்களை தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி நடித்துக் காட்டும்படி தூண்டுகிறீர்கள். இதுவா ஓர் விடுதலை இயக்கத்துக்கும் உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் அத்திவாரமாக அமைவது?
(17) இலங்கைத் தமிழர்கள் ஒன்றிணைய மாட்டார்கள், ஆனால் சினிமாக்காரர்களும், தமிழக அரசியல் வாதிகளும் ஒன்றணைய வேண்டும், மத்திய அரசைப் பணிய வைக்க வேண்டும், உங்களுக்கு உதவ வேண்டும் இதுதான் சரியான போராட்டம் என்று உங்களுக்குப் படுகிறதா?
இப்படிப் பல ஆயிரக்கணக்கான கேள்விகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு பதில் கூறப்படாமல் ஆங்காங்கே அலைந்து திரிகின்றன! எங்கள் இனம் மாண்டு போக, சிங்கள வெறியர்களிடம் அடிமையாகிப் போகத்தான் இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் போராடித் தமிழினத்தை சல்லடை போட்டீர்களா
ஏன் வரதன் இதை புலிகள் இருக்கும் போது ஒங்கிக் கேட்டு இருக்க வேண்டியதுதானே. வீதி வீதியாய் போய்நாடகமாவது போட்டு மக்களுக்குச் சொல்லி இருக்க வேண்டியதுதானே. இல்லை மேடை எல்லாம் போட்டு முழங்கி இருக்கலாம் தானே. ஏன் உயிர்ப் பயமோ. உயிர் பயம் உள்ளவர்களுக்கு எதுக்கு சமுதாயம் மேல் அக்கறை. புலிகள் இல்லாத காட்டில் மான் கள் துள்ளி விளையாடுதாம் என்ற கதை போல , புலிகள் இல்லை என்ற் உடனே, ஆள் ஆளுக்கு கொப்பி-பென்சிலோட வெளிக்கிட்டீர்கள். ஏன் பாலகுமாரர் புலிகளோடு ஒன்று சேர்ந்து போனது போல், மற்றவர்களும் பின்னாலே போய் இருக்க வேண்டியதுதானே. அல்லது தம்பாப்பிள்ளை அமைப்பைக் கலைத்து விட்டு சென்றது போல் , போய் இருக்க வேண்டியதுதானே. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல, இளையர்களைச் சேர்த்து வைத்து இருந்தால் அவெர்கள் எல்லாம் என்ன போராட்டத்தலைவர்களோ ? பெரும்பான்மை மக்கள் ஆதரவு இல்லாமலா புலிகள் இத்தனை ஆண்டுகள் போராட்டம்நடத்தினார்கள்: மக்கள் ஆதரவு இல்லாமலா அவெர்கள் இத்துணை தூரம் வளர்ச்சி பெற்றார்கள்: தமிழ் மக்கள் விம்பமே புலிகள் . மக்கள் என்ன நினைத்தார்களோ, அதையே புலிகள் செயல் வடிவம் கொடுத்துநடத்திக் காட்டினார்கள்:புலிகளிடம் கேட் க நினைக்கும் இதே கேள்விகளை தமிழ்மக்களிடம் கேளுங்கள்:நீங்கள் ஒற்றுமையாய் இருந்து போராட்டத்தை வளர்த்து விடாமல்,நீங்களே போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தீர்கள்: குழி பறித்தீர்கள்: ஏன் என்றால் உங்களைப் போன்றோருக்கு ,தமிழருக்கு ஏன் பிரபாகரன் மட்டும் தலைவர் ஆக வேண்டும் ,நாங்களும் ஆனால் என்ன என்ற , அடையமுடியாத ஆசை. அதைதான் புலிகளிடமிருந்து பிரிந்த ராகவன், மாத்தையா, கருணா வரையிலிருந்து, மறு பக்கம் ஆனந்தசங்கரி, சிதார்த்தன், டக்கிள்ஸ் , இந்தியாவின் ஆதரவுடன் இயங்க்கும் இன்னும் சிறு சிறு குழுக்கள் எல்லாவற்றிற்கும். இப்படி நாங்களும் ஆயிரம் கேள்வி கேட் கலாம். சம்பவம் சொல்லலாம். சும்மா சும்மாநேரத்தை வீண்டிக்காமல் வேலையப்பாரும்.
இப்போது நீங்கள் ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள் – புலிகள் இருக்கும் வரை ஒருவரும் அவர்களிற்கெதிராகப் பேசமுடியவில்லையென்று. இதனால்தான் மக்கள் போராட்டங்களிலிருந்து அந்நியப்பட்டு கடைசியில் எந்த மக்களை விடுதலைசெய்யவென்று ஆரம்பிக்கப்பட்டதோ அதே போராட்டம் மக்களைப் பலவந்தப் படுத்துவதில் போய் முடிந்தது. இதனை நான் மிகவும் வேதனையுடன் பதிவு செய்கிறேன். இப்படிப் போகும் வழி தவறு என்று பலர் பல தடவைகள் சொன்னார்கள். ஆனால் அவர்களெல்லாம் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். கடைசியில் மரண ஆபத்திலிருந்த பலர் வெளிநாடுகளிற்கு ஓடித்தப்பினார்கள். வேறுபலர் இலங்கை அரசால் விலைக்கு வாங்கப்பட்டார்கள். ஏனையோர் மெளனமானார்கள். கடைசியில் புலிகளின் தவறுகளைக் காட்டியே தனது பாசிச முகத்தை மறைத்துக் கொண்டு விடுதலைப் புலிகளையும் விடுதலைப் போராட்ட உணர்வையும் அழித்தொழிக்க இலங்கை அரகால் முடிந்திருக்கிறது.
கேள்வி – தமிழர்களின் போராட்டப் பலத்தை வலுவிழக்கச் செய்தது தங்களது சகோதரப் படுகொலைக் கொள்கைதானே? இது சரியா! தவறா?
பதில் – சகோதரப்படுகொலை செய்வது புலிகளின் கொள்கையல்ல, அதற்கு வித்திட்டவர்களும் புலிகள் அல்ல.
கேள்வி – இந்தக் கொள்கையினால் தமிழ் இனம் இப்போது துன்பப்படுகிறது என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கிறீhகளா? இல்லையா?
பதில் – தமிழினத்தின் துன்பம் தீரவில்லை. ஆனால், மனசாட்சியை அடைவு வைத்து விட்டு அல்லது போதிய அறிவு பற்றாக்குறையால் புலிகள் மேல் இந்த குற்றத்தை சாட்டுவது எப்போதும் உள்நோக்கம் கொண்டவை.
கேள்வி – தமிழ் மக்களின் தலைவர்களான திரு. அமிர்தலிங்கம், திரு. சிறிசபாரெத்தினம், திரு. பத்மநாபா போன்றோரைக் கொலை செய்தது தவறான செயல் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
பதில் – கொலைகள் தவறு அல்லது தவறல்ல என்பதற்கு அப்பால், இன்று எந்த அடிப்படையில் இவர்கள் தமிழ்மக்களின் தலைவர்களாக கருதப்படுகின்றார்கள்? ஒரு கட்டத்துக்கு மேல் திரு. அமிர்தலிங்கம் அவர்களையும் தமிழ் மக்கள் தங்களின் தலைவர் என ஆத்மார்த்தமான எண்ணவில்லை.
கேள்வி – இந்திய அமைதிப்படையை வலுக்கட்டாயமாக சண்டைக்கு இழுத்து இந்தியாவை அவமானப்படுத்தியதை ஏற்றுக்கொள்கீறீர்களா? இல்லையா?
பதில் – இல்லை. புலிகள் மேல் திட்டமிடப்பட்டு வலுக்கட்டாயமான சண்டையே திணிக்கப்பட்டது, தமது தற்பாதுகாப்புக்காகவே அவர்கள் சண்டையை எதிர் கொண்டனர், அவர்களை (இந்தியா) அவமானப்படுத்தும் நோக்கம் அவர்களுக்கு(புலிகள்) எப்போதும் இருந்ததில்லை.
கேள்வி – தமிழர்களின் பொது எதிரியான பிரேமதாசாவுடன் இணைந்து தமிழ் இயக்கங்களையும், அமைதிப்படையையும் தாக்கியது தவறு என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
பதில் – இல்லை. தமிழ் இயக்கங்களும் (ஒட்டுப்படைகள்) அமைதிப்படையும் இணைந்தே தமிழ் மக்கள் மீதும் புலிகள் மீதும் கொடிய தாக்குதல்களை மேற்கொண்டார்கள். புலிகள் எவருடனும் இணைந்து தாக்குதல்களை மேற்கொள்வது கிடையாது.
கேள்வி – நாங்கள்தான் ஏகப்பிரதிநிதிகள் தமிழ் மக்கள் பற்றி யாரும் பேசக்கூடாது அப்படிப் பேசினால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற கொள்கை தவறானது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
பதில் – இல்லை. பேச்சுவார்த்தை மேசைகளில் தமிழ் மக்கள் சார்பில் ஏகபிரதிநிதியாக பேசுவதற்கான தகுதி புலிகளுக்கு இருப்பதாக பேச்சுவார்தையின் மறுபகுதியினர் ஏற்றதன் அடிப்படையிலேயே பேச்சுக்கள் நடந்தேறின, அதனை தமிழ் மக்களும் ஏற்றிருந்தனர். தமிழ் மக்கள் சார்பில் வேறு யாருக்காவது அந்த தகுதி இருந்திருப்பின் அவர்கள் பேச்சுவார்த்தை செய்யும் மறுபகுதியினரிடமும் அல்லது மக்களிடமும் அதை கேட்டுப்பெற்றிருக்க வேண்டும் அல்லது நிலைநாட்டியிருக்க வேண்டும். அப்படி கேட்டுப்பெற்றால் அல்லது நிலைநாட்டினால் எவரையும் கொலை செய்வோமென புலிகள் எவ்வகையிலும் எப்போதும் கொள்கை கொண்டிருந்ததுமில்லை வெளியிட்டிருந்ததுமில்லை.
கேள்வி – “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் நிராகரித்து சிங்கள அரசுடன் சேர்ந்து குறைந்தபட்ச தீர்வான அந்த ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்தது தவறு என்று இப்போதாவது ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
பதில் – குறைந்தபட்ச தீர்வான இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை அதனை செய்த தரப்பினரும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. அவ் ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சங்களை நிறைவேற்றுமாறு கோரியே தியாகி திலீபன் தன் உயிரை ஈகம் செய்திருந்தான்.
கேள்வி – ஈழத் தமிழருக்கு உதவுவதற்காக முன்வந்த மறைந்த பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களை தமிழகத்தில் வைத்துக் கொலை செய்தது நீங்கள் செய்த மாபெரும் தவறுகளில் ஒன்றா இல்லையா?
பதில் – தமிழகத்தில் வைத்து கொலை செய்ததுதான் தவறு அல்லது தவறல்ல என்பது போல் உள்ளது தங்கள் வினா.
பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கு விசாரணை இன்னும் முறைப்படியாக முற்றுப்பெறவில்லை. அத்துடன் அதனுடைய உசாவல் முறையாக கொண்டு செல்லப்படவுமில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் வலுப்பெற்று வருகின்றன. எனவே, ஒரு வழக்கின் இறுதித்தீர்ப்பு வரும்வரை சந்தேக நபர்களை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டுவது தவறு.
கேள்வி – “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை நிராகரித்து இப்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றுவரை உங்களால் ஓர் உடன்படிக்கையினைக் கூட இலங்கை அரசுடன் ஏற்படுத்த முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
பதில் – தமிழர் பிரச்சனைக்கு இலங்கை அரசுடன் புலிகளால் மட்டுமல்ல எவராலும் எந்த உடன்படிக்கையையும் பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்த முடியாது. அதுவே வரலாறு. இது ஒரு கட்டத்துக்கு அப்பால் புலிகளுக்கு புரிந்திருந்தாலும் உள்ளூர்காரர்களுக்கும் வெளியூர்காரர்களுக்கும் இதனை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாகவே புலிகளின் ஈகங்கள் இருந்தன, இருக்கின்றன.
கேள்வி – இந்த 20 ஆண்டுகாலமும் தமிழர்கள் இழந்துவிட்ட உயிருக்கும் உடமைகளுக்கும் நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
பதில் – இது புலிகளிடம் மட்டும் கேட்கின்ற கேள்வி அல்ல.
கேள்வி – தமிழர்களுக்கு உதவிக்கு வந்த இந்தியாவை, அன்று தமிழர்களின் பொது எதிரியான சிங்களவர்களுடன் சேர்ந்து விரட்டி அடித்தீர்களே இன்று அதே இந்தியா உதவ வேண்டும் என்று தங்களின் விசுவாசிகள் மூலம் கோருவது வெட்கப்பட வேண்டிய விடயமா? இல்லையா?
பதில் – வெட்கப்படுவதற்கு இது மணமேடையல்ல. தமிழர்களுக்கு உதவிக்கு வந்த இந்தியா ஏன் அப்பாவித்தமிழர்களைக் கொன்றது என்பதற்கு உங்களைப்போன்றோரின் பதில் என்ன? எனினும், இந்தியாவிற்கு தமிழீழ மக்களின் சார்பில் நியாயமாக நடந்து கொள்ளவேண்டிய தார்மீகக் கடமையும் உரிமையும் எப்போதும் உண்டு என்பதை புலிகள் நன்குணர்வர். அதனால், புலிகள் தமிழ் மக்களின் சார்பில் அவர்களின் (மக்களின்) உணர்வை அவர்களிடம் (இந்தியா) வெளிப்படுத்த வேண்டிய தார்மீகக்கடமையை எப்போதும் கொண்டுள்ளார்கள்.
கேள்வி – இந்த நிலைக்கு வந்த பின்னரும் சகபோராளி இயக்கங்களையும் அழைத்து நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம் என்று பகிங்கரமாக் கோராதது தவறு என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா?
பதில் – அவர்கள் (இயக்கங்கள் என்று சொல்லப்பட்டவை) மக்களின் நலனுக்காகவே உளப்பூர்வமாக இறுதிவரை போராடினார்கள் என்பதை மக்கள் பரிபூரணமாக ஏற்கின்ற பட்சத்தில் அவ்வாறான கோரிக்கையை இத்தருணத்தில் நிராகரிப்பது தவறாகலாம்.
கேள்வி – சிங்கள அரசுக்கு எதிரிகளாக இருந்த கருணா, பிள்ளையான் போன்றோரை தனக்குச் சாதகமாகவும் தமிழினத்துக்கு எதிராகவும் பயன்படுத்துகிறது இலங்கை அரசு. ஆனால் நீங்கள் எந்தத் தமிழர்களையும் அழைத்துக் கதைப்பது கிடையாது. உங்களை ஏற்றுக்கொண்டு சரணாகதி அடைந்தால் மட்டுமே (திரு. பாலகுமாரன், ரி.என்.ஏ போன்று) அவர்களைப் பயன்படுத்துவீர்கள். மோட்டுச் சிங்களவருக்கு இருக்கிற அறிவு கூட உங்களுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
பதில் – கருணா பிள்ளையான் மட்டுமல்ல பல சுயநலமிக்க நபர்களை சிங்கள அரசு ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தியே வருகின்றது. புலிகள் அமைப்பு தோன்றுவதற்கு முன்பிருந்தே இது நடந்தேறி வருவது கண்கூடு.
சிங்களவர்களை தங்களைப்போன்றவர்களே மோட்டுச் சிங்களவர் என அழைக்கின்றனர். அதே போன்றே தங்களைப்போன்றவர்கள் புலிகளையும் அறிவில்லாதவர்கள் என அழைக்கின்றனர். திரு. பாலகுமாரன் அவர்கள் போன்றோரும், த.தே.கூட்டணி அமைத்தோரும் புலிகளிடம் சராணாகதி அடையவேண்டிய தேவை அவர்களுக்கில்லை. அவர்கள் வெவ்வேறு தளங்களில் நின்றாலும் அவர்களின் ஆழ் மனதில் தமிழ் மக்களின் நலன் குடிகொண்டிருந்ததால் ஒரு புள்ளியில் அனைவரும் சந்திக்கவேண்டியிருந்தது என்பதே உண்மை.
கேள்வி – தமிழினத்தின் ஏகப்பிரதிநிதி என்று கூறிக் கொலை செய்ததன் விளைவாக பெரும்பான்மையான தமிழருக்கு இன்று சிங்களவரே பிரதிநிதியாகி விட்டனர் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
பதில் – முதுகெலும்பு இல்லாத தமிழர்கள் சிலருக்கு சிங்களவர்கள பிரதிநிதியாகி விட்டனர் என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
கேள்வி – உங்களது பயங்கரவாதக் கொள்கையால் உங்களுக்கு நீங்களே தடையை ஏற்படுத்திக் கொண்டுள்ளீர்கள் உலக நாடுகளில் இன்று தமிழினத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது போராடுவது அனைத்தும் தமிழக சினிமாக்காரர்களின் கைகளுக்கும், சந்தர்ப்பவாத தமிழக அரசியல்வாதிகளின் கைகளுக்கும் காணிக்கையாக்கி மகிழ்கிறீர்கள். இந்தச் செயல் சரியானதாகப் படுகிறதா உங்களுக்கு?
பதில் – புலிகளுக்கு பயங்கரவாத கொள்கை கிடையாது. புலிகள் பயங்கரவாத கொள்கையுள்ள அமைப்பினராயின் வெளிநாட்டு உயரதிகாரிகள் அவர்களுடன் கைலாகு கொடுத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். தடைசெய்தல், கடன் கொடுத்தல், நன்கொடையளித்தல் போன்றவை உலகநாடுகள் தங்களின் தேவையை அடைந்து கொள்வதற்காக வகுத்திருக்கும் பொறிமுறைகள்.
தமிழினத்தின் உரிமைகளை எந்த சந்தர்ப்பவாதிகளிடமும் புலிகள் எப்போதும் கையளித்ததில்லை. அவர்கள் உள்ளூர் சந்தர்ப்பவாதிகளாயினும் சரி வெளியூர் சந்தர்ப்பவாதிகளாயினும் சரி.
கேள்வி – சினிமாவுக்கு கதைவசனம் எழுதி இயக்குவிப்பவர்களை தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி நடித்துக் காட்டும்படி தூண்டுகிறீர்கள். இதுவா ஓர் விடுதலை இயக்கத்துக்கும் உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் அத்திவாரமாக அமைவது?
பதில் – மனப்பூர்வமாகவும் உணர்வுபூராகவும் உண்மையாகவும் தமிழ்மக்களின் விடுதலையில் பங்களிப்பு செய்வதற்கும் பாடுபடுவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு. சாதியோ தொழிலோ பிரதேசமோ இவை போன்ற எவையும் அதற்கு தடைகள் அல்ல.
கேள்வி – இலங்கைத் தமிழர்கள் ஒன்றிணைய மாட்டார்கள், ஆனால் சினிமாக்காரர்களும், தமிழக அரசியல் வாதிகளும் ஒன்றணைய வேண்டும், மத்திய அரசைப் பணிய வைக்க வேண்டும், உங்களுக்கு உதவ வேண்டும் இதுதான் சரியான போராட்டம் என்று உங்களுக்குப் படுகிறதா?
பதில் – தமிழீழத்தமிழர்கள் சில புறநடைகளைத்தவிர ஒன்றிணைந்தே போராடினார்கள். இனியும் ஒன்றிணைந்தே போராடுவார்கள்.
இப்படிப் பல ஆயிரக்கணக்கான கேள்விகளை காலமெல்லாம் தங்களைப்போன்றோரால் கேட்டுக்கொண்டு இருக்க மட்டுமே முடியும். எனவே, இதற்கெல்லாம் அவர்களால் (புலிகள்) பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று நான் நம்புவதால் அவர்கள் சார்பாக மேற்படி வினாக்களுக்கான பதில்களை நானே தந்துள்ளேன், நன்றி வணக்கம்.
தவறை தவறு என்று ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறீர்கள். அதிலென்ன தவறு இருக்கிறது. சில பதில்கள் மிக நன்று. ஆனால் மதிப்பெண் கொடுக்கவேணுமென்றால் உங்களுக்கு ஒரு சி மைனஸ் தான் தரமுடியும் 🙁
//இந்தியாவிற்கு தமிழீழ மக்களின் சார்பில் நியாயமாக நடந்து கொள்ளவேண்டிய தார்மீகக் கடமையும் உரிமையும் எப்போதும் உண்டு என்பதை புலிகள் நன்குணர்வர்.//
இந்தியாவானது இந்திய மக்களிடம் கூட நியாயமாக நடந்து கொள்வதில்லை. தார்மீகமாவது மண்ணாங்கட்டியாவது.
வரதன், இந்தியா எதனையும் எமக்கு பெற்று தரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், இந்தியாவையும் ஏனைய நாடுகளையும் கையாளும் உலக அரசியலையும் ராஜதந்திரத்தையும் அதன் அறிவையும் நாம் பெற்று இருக்கவில்லை சிங்களவர்கள் இவர்களை கையாண்ட அறிவியல் கூட அதி புத்திசாலி? தமிழர்கள் கையாளவில்லை என்ற தங்களின் வாதத்தில் உள்ள உண்மை யாராலும் உணர படக் கூடியது.
தமிழ் மக்களின் ஒற்றுமை கூட துரோகிகளின் பெயரால் குறுகி நின்றபோது எப்படி எமது சர்வதேச பார்வை தெளிவாக இருக்கும் என்ற ஆதங்கம் எம்மில் இருக்கும். இவை எல்லாவற்றிற்கும் தீர்வு தமிழ் சமுகத்தின் சகல இயங்கியலும் அசைவியக்கமும் திருத்தி அமைக்கப் படவேண்டும். இச் சமுகத்தின் ஒவ்வொரு குடியானவனும் மிகச் சரியான பாதையில் நகர்த்தப் படவேண்டும் இவ்வாறான செயல் வீச்சு எம்மில் யாரிடமும் இல்லை என்பதே தற்போதைய ஜதார்த்தம்.
ஆறு அரை மாவட்டங்கள் அல்ல முழு மாவட்டமும் அவர்களிடம் தான், எனது அனுமானத்தின் படி 1990 களில் இந்திய படை வெளிஏறிய காலப் பகுதி புலிகளின் பொற்காலம் என்றே சொல்வேன்! எட்டு மாவட்டங்களும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகவே இருந்தன, தென்பகுதியில் அன்று நிலவிய அரசியல் சூழலும் புலிகளுக்கு சாதகமாவே இருந்தது. இதனை புலிகள் பயன் படுத்தி பேரம் பேசும் அரசியல் செய்து இருக்க முடியும். செயல் இழந்து இருந்த மாகாண சபையை மீளவும் செயல்பட வைத்து இருக்க முடியும். அதிகாரங்களை பேரம் பேசி பெற்றிருக்க முடியும். அத்துடன் புலிகள் தமது படைவலிமையையும் ஒன்றாக தக்க வைத்து இருக்க முடியும். ஏனெனில் அன்று புலிகள் கிழக்கில் பொலிஸ் நிலையங்களை சுற்றி வளைத்த போது பிரேமதாச போலீசாரை சரணடையும் படியே கூறியிருந்தார். அத்துடன் பல பொலிஸ் நிலையங்களை அகற்றுவதற்கும் ஒத்துக் கொண்டார்கள். அது அன்றைய தென் இலங்கை அரசியல் சூழலை அல்லது பிரேமதாசவின் நிலைமையை விளக்க போதுமானது ஆனால் புலிகள் அவர்களை கொலை செய்தார்கள். இறுதியில் கிழக்கை முழுமையாக இழந்தார்கள், வவுனியா மன்னார் யாழ்பாணத்தின் தீவகம் என்பவற்றை இழந்தார்கள். மொத்தத்தில் புலிகள் தமது பொற்காலத்தை இழந்தார்கள். கிழக்கிலும் வவுனியாவிலும் தீவகத்திலும் நேரிடையாகவே சிறிலங்காப் படைகளின் கொலைவாளுக்கு எண்ணற்ற மக்களை பலி கொடுத்தார்கள். கிழக்கிலும் தீவகத்திலும் வவுனியாவிலும் இவர்கள் போரை தொடங்கி மக்களை படைகளிடம் விட்டுச் செல்லும் போது பாரிய இன அழிப்பு நடைபெறும் என்பதை புலிகள் அறியாதவர்கள் அல்ல ஆனால் போராட்டம் என்றால் மக்கள் அழிவார்கள் மக்கள் அழிந்தால் தான் போராட்டம் பற்றிய உணர்வு வரும் என்ற புலிகளின் தத்துவத்தில் அன்றைய கள நிலைமை மக்களை அழித்தது தான் மிச்சம். அன்று அந்தச் சூழலை புலிகள் மீளாய்வுக்கு உட்படுத்தியிருந்தால் பின்வந்த காலங்களின் கள நிலைமையை, அது சார்ந்த அரசியலை ஆவது தமிழ் மக்களுக்கு சார்பானதாக மாற்றியிருக்க முடியும் ஆனால் தமிழ் மக்களை ஒட்டு மொத்த அழிவரசியலுக்குள் தள்ளி விட்டு புலிகள் தாம் தோண்டிய குழிக்குள் அழிந்து போனார்கள். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாழ்வியலையும் வலுகட்டாயமாக சேர்த்தே புதைத்து விட்டார்கள் புலிகளின் ஏக பிரநிதித்துவ கொள்கை தமது அழிவுக்கு பின்னரும் யாரும் வரக்கூடாது என்ற போக்கு இருந்ததாகவே உணர்கிறேன்.
ஏனெனில் தமது அழிவு நெருங்கி வந்த பின்னரும் பிற்போக்கு வாத பேரினவாத ஏகாபத்திய நச்சு சக்திகளின் கூட்டினைவாளர்களையே தமிழ் மக்களின் தலைமையாக இனங் காட்டிச் செல்ல வேண்டிய தேவை அல்லது மாற்று வழி இன்மை புலிகளுக்கு இருந்தது.
புலிகளை , ஸ்ரீலங்கா அரசை அல்லது சிங்களவர்களை அமெரிக்காவை அல்லது இந்தியாவை வசை பாடும் அரசியலை தொலைத்து கடந்த காலத்தை வசை பாடுவதில் இருந்தும் மாறி புதிதாக சிந்திக்கும் அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும். இன்று எம்மக்கள் தம்மை மீள் தகவமைத்து கொள்ள முன்னோக்கி பார்த்து நிகழ் கால எதிர்கால அரசியலை சரி யான பாதையில் தகவமைத்து கொள்ள வேண்டும். அதற்குரிய வழிகாட்டுதலே இன்றைய காலத்தின் தேவை.
ஈழப்போராட்டம் அழிக்கபடவிலலை சிதைக்கபட்டிருக்கிறது. இதற்கு இதில் ஏதோ ஒரு பாத்திரத்தை வகித்த நாம் அனைவரும் அதிலும் குறிப்பாக புலிகளும் அவர்களுக்கு ஆதரவாக விசில் அடித்தவர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்
ஈழப் போராட்டத்தை அழித்தவர்களுள் இன்று முதலிடத்தில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள்தான் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து தமிழர் தலைமைகள்தான்
இராசதுரை செய்தது சரி என்றோ அல்லது தவறென்றோ நான் வாதிட வரவில்லை. இராசதுரை துரோகி என்றால் அவர் அரசின் பக்கத்திற்கு செல்வதற்கு காரணமான அமிர்தலிங்கம் போன்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களும் துரோகிகள்தான்.
இராசதுரை அரசின் பக்கம் சேர்ந்து அமைச்சர் பதவியை பெற்றது தவறுதான். அவர் வாக்களித்த மட்டக்களப்பு மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் என குற்றம் சாட்டுவதற்கு மட்டக்களப்பு மக்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைக்கு உரிமை கிடையாது. ஏனெனில் இராசதுரை அமைச்சர் பதவி பெற்றதை விட மிகப்பெரிய துரோகத்தை தமிழ் இனத்திற்கு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி செய்தது.
1978ல் அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் உறவாடி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு செய்த அநீதியை விடவா இராசதுரை தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து விட்டார்?
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றோர் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றிய பயங்கரவாத தடைச்சட்டத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்.சிறையில் அடைக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். இன்றும் அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே வகை தொகை இன்றி தமிழர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அமிர்தலிங்கம் போன்றவர்களின் இந்த மகா தவறை விடவா இராசதுரை அரசின் பக்கம் சேர்ந்து அமைச்சர் பதவி பெற்றது பெரிதாகிவிட்டது?
http://www.thinakkathir.com/?p=29603
I was told the reason CR jumped ship was because the crafty JR trapped him and he did not have a choice. CR was issuing fake bank clerk job papers at a price of Rs1000.00 each outside of the quota given to him. CID found that out and he was to be prosecuted which would have resulted in jail term for him. JR told him that he had two options one was to join the government or to go to jail. Being the crook he was he chose the 1st option. CR and RS ( Rajan Selvanayagam ) were the curse of the BCO people during their time. I am also told that CR while he was with the government discreetly gave support to LTTE to keep himself from taken out. He is a slimy dog who will anything to save his skin. When the MPs were jailed during the Satyagraha he had tried to make advances to Mangarkarasi and he was beaten up by Nagnathan and Amir. It was a well know secret at that time. There are other things that cannot be mentioned here. .
If he made move on mangai akka. thats shows he lacks taste in woman. nothing else
உங்களை எல்லாம் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. வீரன் புலிக்காச்சலில் ஒடிதிரிகிறார். சந்திரன் ராஜா கொள்கையற்ற உளவாளி. இதற்கும் மேலாக பிரபாகரனை வத்து புலி சப்போர்டர்ஸ் பிஸ்னஸ். என்ன சொல்வது? பிரபாகரனோடு 1982 இல் இருந்து சில வருடங்கள் அருகில் வாழ்ந்தவன் என்ற முறையில் ஒன்றை சொல்கிறேன். பிரபாகரனுக்கு தினசரி அரசியல் கூட தெரியாது. தப்பாக யாரை பற்றியும் தகவல் வந்தால் “போட்டுட்டு வந்து கதை” என்பார். உண்மையில் பிரபாவை தன்னிகர் இல்லா தலைவர் என்று சொன்னால் மற்ற இனத்தவர் எம்மை ப்ற்றி என்ன நினைப்பார்கள் என்று சிந்திப்பது கூட கிடையாது. சுத்தி இருப்போரை முட்டாள்களாக வத்திருந்தால் தான் பிசினஸ் ஓட்டலாம் என்பது தான் இவர்களின் னோக்காம்
நீர் வடிவேலுவின் காமெடி ரொம்ப பார்பீரோ. அவுரு மாதிரி அடியும் வாங்கி உடம்பை ரண களம் ஆக்கியதும் உண்டோ. யாரோ உம்மை உசுப்பேத்தி உடுறாகங்க போலிருக்கு.
தமிழா! தமிழா!! எழுவாய் ……………… பு (ழுதி)(யலா)(யா)ய்
1 . சகோதரப்படுகொலை நடைபெறாமல் இருந்திருந்தால்மட்டும் தமிழ் ஈழம் கிடைத்திருக்குமோ?.
*சகோதரப்படுகொலை நடைபெற்றதால் தமிழீழம் கிடைத்ததா? தமிழ் மக்களின் சனத் தொகையை குறைத்ததுதான் மிச்சம்.
2 . புலிகள் , மாற்று இயக்கங்களை அழித்திராது விட்டிருந்தால், இந்தியாவின் உதவியோடு மாற்று இயக்கங்கள் புலிகளை அழித்திருப்பார்கள்!.
*1985 இறுதிகாலப் பகுதி டெலோ வை அளிபதற்கு புலிகள் தாக்குதல் தொடுத்தார்கள் டெலோ கிட்டத்தட்ட அழியும் தறுவாயில் தாஸ் தலைமையிலான டேலோவினர் புலிகள் மீது தாக்குதல் தொடுத்தனர் விளைவு யாழ்பாணத்தில் புலிகள் அழியும் தறுவாயில் இருந்தனர் வடமராச்சியில் உள்ள அனைத்து முகாம்களும் மூடப்பட்டு புலிகள் வல்வெட்டித்துறையில் பதுங்கி கொண்டனர் அங்கு சென்று டெலோ தாக்குதல் தொடங்க முற்றபட்ட போது போது மக்களை முன்னிறுத்தி புலிகள் அபயம் கேட்டனர் அத்துடன் அக்காலத்தில் ஈழதேசிய விடுதலை முன்னணியிடம் முறையிட்ட புலிகள் பலம் பொருந்திய அமைப்பு பலம் குறைந்த அமைப்பு ஒன்றை தாக்குவதை நிறுத்த வேண்டும் எனக் கோரினர் அத்துடன் யாழ் பல்கலைகழக மாணவர்கள் புத்தியீவிகள் மேற் கொண்ட சமரச முயற்சியை அடுத்து டேலோவினர் பின்வாங்கினர் தாசின் மறைவை அடுத்து பலம் குன்றி இருந்த டேலோவினர் மீது தருணம் பார்த்து பாய்ந்த புலிகள் யாருடைய வேண்டுகோளையும் சமரச செயல் பாட்டையும் மதியாது பல சரணடைந்த போராளிகளையும் கொலை செய்தனர்.
3 . புளட்டோ உட் கொலைகளுக்கு பெயர் போன அமைப்பு! (ஆமாம் பிளாட் டின் காட்டுமிராண்டிதனமான படுகொலைகள் அவை)
*மாத்தையா மற்றும் அவர்களுடன் சேர்ந்து கொல்லப் பட்டவர்கள் வெளிக் கொலையா? உட்கொலையா?
4 . ஈ.பி.ஆர்.எல்.எவ் – டக்கிளஸ் போன்ற தலைமைக்கு கட்டுப்படாத தெருச் சண்டியர்களை வைத்திருந்த அமைப்பு!.
*கருணா பிள்ளையான் முழுச் சண்டியர்கள் ஆச்சே அவர்கள் புலிகளின் தலைமைக்கு கட்டுப்பட்டா பிரிந்து சென்றார்கள்? ஆக புலிகளும் கட்டுப் படாத சண்டியர்களை வைத்து இருந்த அமைப்பு ஆகாதா?
5 . டெலோ முழுக்க முழுக்க ரோவின் கட்டுப்பாட்டில் இயங்கிய அமைப்பு!.
*புலிகள் பகுதியளவிலாவது றோவின் கட்டுப் பாட்டில் இருக்கவில்லையா? (ஸ்ரீ சபாரத்தினம் இந்தியாவிலிருந்து தளம் திரும்பியது இந்தியாவின் இறுக்கத்தில் தப்புவதற்கே என்ற விடயமும் உண்டு ஆனால் புலிகள் MGR ஆட்சியில் அவரினதும் அவருடன் இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் சொல்லையும் கேட்டு டெலோ மீது தாக்குதலை தொடுத்தனர். அது டேலோவினர் புலிகள் மீது தாக்கப் போகின்றனர் என்ற செய்தி MGR அரசிடம் இருந்தே கிடைத்ததாக புலிகள் அப்போது கூறிக் கொண்டனர். ஆக றோவின் திட்டம் MGR க்கு கசிந்து அதனை அவர் புலிகளுக்கு சொன்னதாகவே புலிகள் அப்போது தமது பத்திரிகையிலும் ஏன் கிட்டுவின் பொது கூட்டத்திலும் கூறப்பட்டது. ஆக றோவின் நடவடிக்கைகளை வேவு பாக்கும் திறன் MGR இக்கு இருந்ததாக மோட்டு தமிழர்கள் ஆகிய எம்மிடம் புலிகள் சொல்லி இருக்கின்றனர் அல்லது றோவிடம் புலிகள் நேரடி தொடர்பை வைத்துக்கொண்டு அவர்களின் கட்டளைக்கு இணங்க டெலோவை தாக்கியதாகவே எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.
6 .இன்றைக்கும் எப்படி மாற்று இயக்கங்களால் தங்களுக்குள் ஓர் ஒழுங்குக்குள் வர முடியாமல் குழப்பி அடித்து தெளிவில்லாமல் இருக்கிறார்களோ, அன்றும் அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள்!
*புலிகளை போலத்தானே அவர்களும் இருப்பார்கள் தூர நோக்கும் தெளிவும் சிந்தனையும் ஏன் அவர்களிடம் மாத்திரம் வரவேண்டும் என்று சற்று குசும்பாக கேட்க தோன்றுகிறது? இன்றைய நிலவரத்தில் புலிகளை விட பலம் பொருந்திய அமைப்பாக அவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை (அதன் சமூக விளைவு பெறுமானம் என்ன என்பது கேள்விக்குறியே)
7 .புலிகளால் மூன்று இயக்கங்களை தனியே தாக்கி அழிக்க முடியும் என்றால், ஏன் அந்த மூன்று இயக்கங்களாலும் ஒன்று சேர்ந்து புலிளை அழிக்க முடியாமல் போனது.?
*ஆக ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்க வேண்டும் என்பதே ஈழப் போராட்டம் என்பதை நாம் விளங்கி கொண்டவர்களாக இன்றுவரை இருக்கின்ற சென்மங்கள் அல்லவா நாம்.
8 .எப்படி அழிக்க முடியும். அவர்களிடம் வீரம் இல்லை, விவேகம் இல்லை, தலமைக்கு கட்டுபடவேண்டும் என்ற ஒழுக்கம் இல்லை, சரியான திட்டமிடல் இல்லை. இப்படி எல்லா” இல்லைகளையும்” வைத்திருந்தவர்களால்தானா சிங்கள ஆமியை எதிர்த்துப் போராடி தமிழ்மக்களைக் காத்து தமிழ் ஈழம் பெற்றுத் தந்திருப்பார்கள்.
* இவ்வளவு இருந்தும் குறைந்த பட்சம் தமிழீழத்தை பெறாது விட்டாலும் பரவாயில்லை தலைமையாவது
காப்பாற்ற முடிந்ததா?
தம்பி தமிழா நான் யாரின் மேலும் வன்மம் கொண்டு அலையவில்லை புலிகள் மீது தனித்த மோதலும் இல்லை ஏனையவர்கள் மீது தனித்த காதலும் இல்லை ஒட்டு மொத்த தவறுகளின் மீது மோதலும் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வாழ்வியலின் மீது காதலுமே என்னிடம் உண்டு. இந்த மனநிலை ஒவ்வொருவரிடம் வராத வரை நாம் எதனையும் சாதிக்க முடியாது, நாம் ஒரு இனம் அதற்கு விடுதலை வேண்டுகிறோம் என்பததேல்லாம் வேற்று வேட்டு என்பதே ஜதார்த்தமாக இருக்கும்.
தமிழா! தமிழா!! இணையத்தில் மட்டும் தி(ரு)க்கு வாய் மலர்வாய்…மலர்வாய்…
1.சகோதரப்படுகொலை நடைபெறாமல் இருந்திருந்தால்மட்டும் தமிழ் ஈழம் கிடைத்திருக்குமோ?.
*//சகோதரப்படுகொலை நடைபெற்றதால் தமிழீழம் கிடைத்ததா? தமிழ் மக்களின் சனத் தொகையை குறைத்ததுதான் மிச்சம்.//
ஆக்கபூர்வமாகவும் அடுத்து என்ன செய்வோம் எனவும் ஆதங்கப்படும் தங்களின் பச்சோந்தித்தனத்தின் முகமே மேற்படி பதில்.
2 . புலிகள் , மாற்று இயக்கங்களை அழித்திராது விட்டிருந்தால், இந்தியாவின் உதவியோடு மாற்று இயக்கங்கள் புலிகளை அழித்திருப்பார்கள்!.
*//1985 இறுதிகாலப் பகுதி டெலோ வை அளிபதற்கு புலிகள் தாக்குதல் தொடுத்தார்கள் டெலோ கிட்டத்தட்ட அழியும் தறுவாயில் தாஸ் தலைமையிலான டேலோவினர் புலிகள் மீது தாக்குதல் தொடுத்தனர் விளைவு யாழ்பாணத்தில் புலிகள் அழியும் தறுவாயில் இருந்தனர் வடமராச்சியில் உள்ள அனைத்து முகாம்களும் மூடப்பட்டு புலிகள் வல்வெட்டித்துறையில் பதுங்கி கொண்டனர் அங்கு சென்று டெலோ தாக்குதல் தொடங்க முற்றபட்ட போது போது மக்களை முன்னிறுத்தி புலிகள் அபயம் கேட்டனர் அத்துடன் அக்காலத்தில் ஈழதேசிய விடுதலை முன்னணியிடம் முறையிட்ட புலிகள் பலம் பொருந்திய அமைப்பு பலம் குறைந்த அமைப்பு ஒன்றை தாக்குவதை நிறுத்த வேண்டும் எனக் கோரினர் அத்துடன் யாழ் பல்கலைகழக மாணவர்கள் புத்தியீவிகள் மேற் கொண்ட சமரச முயற்சியை அடுத்து டேலோவினர் பின்வாங்கினர் தாசின் மறைவை அடுத்து பலம் குன்றி இருந்த டேலோவினர் மீது தருணம் பார்த்து பாய்ந்த புலிகள் யாருடைய வேண்டுகோளையும் சமரச செயல் பாட்டையும் மதியாது பல சரணடைந்த போராளிகளையும் கொலை செய்தனர்.//
யாவும் முரண்பட்ட உல்டாக்கள்.
3 . புளட்டோ உட் கொலைகளுக்கு பெயர் போன அமைப்பு! (ஆமாம் பிளாட் டின் காட்டுமிராண்டிதனமான படுகொலைகள் அவை)
*//மாத்தையா மற்றும் அவர்களுடன் சேர்ந்து கொல்லப் பட்டவர்கள் வெளிக் கொலையா? உட்கொலையா?//
அது வெளிக் கொலையுமல்ல உட்கொலையுமல்ல, அது மக்கள் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட அங்கேயே உண்மைகள் தெளிவுபடுத்தப்பட்ட அவர்கள் முன்னிலையிலேயே வெளிப்படையாக நடைபெற்ற விடயம்.
4 . ஈ.பி.ஆர்.எல்.எவ் – டக்கிளஸ் போன்ற தலைமைக்கு கட்டுப்படாத தெருச் சண்டியர்களை வைத்திருந்த அமைப்பு!.
*//கருணா பிள்ளையான் முழுச் சண்டியர்கள் ஆச்சே அவர்கள் புலிகளின் தலைமைக்கு கட்டுப்பட்டா பிரிந்து சென்றார்கள்? ஆக புலிகளும் கட்டுப் படாத சண்டியர்களை வைத்து இருந்த அமைப்பு ஆகாதா?//
கருணா பிள்ளையான் புலிகளில் இருந்து பிரிந்து செல்லவில்லை. புலிகள்தான் அவர்களை அமைப்பில் இருந்து கலைத்தார்கள். அவ் அமைப்பு கட்டுப்படாதவர்களை வைத்திருக்க விரும்பவில்லை என்பதால்.
5 .டெலோ முழுக்க முழுக்க ரோவின் கட்டுப்பாட்டில் இயங்கிய அமைப்பு!.
*புலிகள் பகுதியளவிலாவது றோவின் கட்டுப் பாட்டில் இருக்கவில்லையா? (ஸ்ரீ சபாரத்தினம் இந்தியாவிலிருந்து தளம் திரும்பியது இந்தியாவின் இறுக்கத்தில் தப்புவதற்கே என்ற விடயமும் உண்டு ஆனால் புலிகள் MGR ஆட்சியில் அவரினதும் அவருடன் இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் சொல்லையும் கேட்டு டெலோ மீது தாக்குதலை தொடுத்தனர். அது டேலோவினர் புலிகள் மீது தாக்கப் போகின்றனர் என்ற செய்தி MGR அரசிடம் இருந்தே கிடைத்ததாக புலிகள் அப்போது கூறிக் கொண்டனர். ஆக றோவின் திட்டம் MGR க்கு கசிந்து அதனை அவர் புலிகளுக்கு சொன்னதாகவே புலிகள் அப்போது தமது பத்திரிகையிலும் ஏன் கிட்டுவின் பொது கூட்டத்திலும் கூறப்பட்டது. ஆக றோவின் நடவடிக்கைகளை வேவு பாக்கும் திறன் MGR இக்கு இருந்ததாக மோட்டு தமிழர்கள் ஆகிய எம்மிடம் புலிகள் சொல்லி இருக்கின்றனர் அல்லது றோவிடம் புலிகள் நேரடி தொடர்பை வைத்துக்கொண்டு அவர்களின் கட்டளைக்கு இணங்க டெலோவை தாக்கியதாகவே எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.//
ஆக, மேற்படி கருத்துக்கள் யாவும் அனுமானங்களாக இருக்கின்றனவேயொளிய, நிறுவல்களாக அல்ல.
6.இன்றைக்கும் எப்படி மாற்று இயக்கங்களால் தங்களுக்குள் ஓர் ஒழுங்குக்குள் வர முடியாமல் குழப்பி அடித்து தெளிவில்லாமல் இருக்கிறார்களோ, அன்றும் அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள்!
*//புலிகளை போலத்தானே அவர்களும் இருப்பார்கள் தூர நோக்கும் தெளிவும் சிந்தனையும் ஏன் அவர்களிடம் மாத்திரம் வரவேண்டும் என்று சற்று குசும்பாக கேட்க தோன்றுகிறது? இன்றைய நிலவரத்தில் புலிகளை விட பலம் பொருந்திய அமைப்பாக அவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை (அதன் சமூக விளைவு பெறுமானம் என்ன என்பது கேள்விக்குறியே)//
என்ன குசும்புகள் வந்து முட்டினாலும் புலிகள் புலிகள்தான் அலிகள் அலிகள்தான் என்பதை வரலாறே சொல்லும் பொறுத்திருங்கள் இடைவேளை முடியட்டும்.
புலிகளை விட பலம் பொருந்திய அமைப்பாக அவர்கள் (மாற்று இயக்கங்கள்) இருக்கிறார்களா? எங்கே? எதில்?
7.புலிகளால் மூன்று இயக்கங்களை தனியே தாக்கி அழிக்க முடியும் என்றால், ஏன் அந்த மூன்று இயக்கங்களாலும் ஒன்று சேர்ந்து புலிளை அழிக்க முடியாமல் போனது.?
*//ஆக ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்க வேண்டும் என்பதே ஈழப் போராட்டம் என்பதை நாம் விளங்கி கொண்டவர்களாக இன்றுவரை இருக்கின்ற சென்மங்கள் அல்லவா நாம்.//
என்ன செய்வது அப்படி ஒரு கர்மம் பிடித்த இனம் தமிழினம். விந்துகள் கலப்படமானதால் வந்த வினை அது.
8 .எப்படி அழிக்க முடியும். அவர்களிடம் வீரம் இல்லை, விவேகம் இல்லை, தலமைக்கு கட்டுபடவேண்டும் என்ற ஒழுக்கம் இல்லை, சரியான திட்டமிடல் இல்லை. இப்படி எல்லா” இல்லைகளையும்” வைத்திருந்தவர்களால்தானா சிங்கள ஆமியை எதிர்த்துப் போராடி தமிழ்மக்களைக் காத்து தமிழ் ஈழம் பெற்றுத் தந்திருப்பார்கள்.
*//இவ்வளவு இருந்தும் குறைந்த பட்சம் தமிழீழத்தை பெறாது விட்டாலும் பரவாயில்லை தலைமையாவது
காப்பாற்ற முடிந்ததா?//
முடிந்தது, அறிவுஜீவிகளும் அல்லக்கைகளும் ஆளாளுக்கு உள்ளபடி அவிழ்த்துவிட்ட அறிவுப்பொக்கிச சாகசங்கள் யாவையும் அவரவர்கள் அவரவர்களுடையதை பாதுகாத்து சேமித்து வைத்திருக்கும் படி இவ்விடத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன். அவைகள் பொசுங்கும் நாள் வரும்.
//தம்பி தமிழா நான் யாரின் மேலும் வன்மம் கொண்டு அலையவில்லை புலிகள் மீது தனித்த மோதலும் இல்லை ஏனையவர்கள் மீது தனித்த காதலும் இல்லை ஒட்டு மொத்த தவறுகளின் மீது மோதலும் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வாழ்வியலின் மீது காதலுமே என்னிடம் உண்டு. இந்த மனநிலை ஒவ்வொருவரிடம் வராத வரை நாம் எதனையும் சாதிக்க முடியாது, நாம் ஒரு இனம் அதற்கு விடுதலை வேண்டுகிறோம் என்பததேல்லாம் வேற்று வேட்டு என்பதே ஜதார்த்தமாக இருக்கும்.//
தோழரே, தமிழ் மக்களின் வாழ்வியலின் மீது ஒரு ஓரத்தில் காதல் இருந்தாலும், இப்படியொரு இடுகையை தாங்கள் இடுவதற்கு அடிப்டைக்காரணமே அடிமனதில் குடியிருக்கும் வன்மம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். எப்படித்தான் அதை அடக்க முடிந்தாலும் அது அடிக்கடி எட்டிப்பார்க்கவே செய்யும். என் அப்பன் புதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது உங்களின் நிலை.
அரிச்சந்திரன் , இவெர்களைப் போன்ற இரண்டும் கெட்டான் களுக்கு அந்தக் “கடவுளே ” வந்து போராட்டாத்தை தலைமையேற்று நடத்தினாலும் , அவெர் மீதும் கல்லை எறிந்து குற்றம் குறை சொல்லுவார்கள்: மனதில் தெளிவும் இலட்சியவும் , உடலில் வலுவும் இல்லாத இந்தச் சோம்பேறிகளால் செய்ய முடிவது எல்லாம் , வாய் வெருட்டல்களும், பேய்க்காட்டல்களும் தான். இவெர்கள் யார் தலைமையையும் ஏற்கவும் மாட்டார்கள், தாங்களும் தலைமை ஏற்றுநடப்பதற்கும் துணியவும் மாட்டார்கள்: குறை கூறுவதே இவெர்களது “குலத்” தொழிலாகும். இது ஓர் வித மன நோய். இவர்களுக்கு எழுதி எல்லாம் இதை தீர்க்கமுடியாது, யாராவது இவெர்களை டாக்டரிடம் அழை த்துச் சென்றாலொழிய. அரிச்சந்திரன் இங்கு நீங்கள் ; ராகவன் அவெர்களுக்கு கொடுத்த பதில் , தனியேநீங்கள் கொடுத்த பதில் அல்ல , பெரும்பான்மைத் தமிழினம் கொடுத்த பதில் இது. தமிழர் நாம் என்ன மனதினுள் நினைத்தோமோ, அதையே நீங்கள் இங்கு எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்: தாய் தமிழ் மண்ணுக்காய் எழுத்திலும், உழைப்பிலும் உங்கள் பணி தொடரட்டும். நன்றி
நிலப்பறிப்பு, கலாச்சார வன்முறை, பௌத்த சிங்கள மயமாக்கல், சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான திட்டமிட்ட அழிப்பு, மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஆழப்படுத்தல் போன்ற அனைத்து அழிப்புகளும் திட்டமிடப்பட்டன ….. நடைபெற்று வருகின்றன……
இந்த நாடகங்களின் இறுதியில் …… சில சலசலப்புக்களுக்குப் பின்னர் இன்னுமொரு நாடக அரங்கம் தயாராகும். இந்த இடைவெளிக்குள் அழிக்கப்படும் அப்பாவிகளின் எண்ணிக்கை கூட எமக்குத் தெரியாத ஒன்றாகிவிடும்.
அரிச்சந்திரனும், தமிழனும் வெவ்வேறாக வந்து முகத்தை காட்டினாலும் ஒருவருக்கு ஒருவர் புகழ் மாலை சூடினாலும் ஒரு கருத்தை விரிவாக அன்றி பகுத்தாய்ந்து அன்றி விமர்சன ரீதியில் அன்றி கருத்துக்களை கருத்துகளாக பார்க்கும் திறன் தங்களிடம் வர வேண்டும் இல்லையேல் கோசலன் தனது கட்டுரையில்
சொல்லவதைப் போல் ……
இன அழிப்பைத் திட்டமிட்டு நடத்திய அதே அதிகாரங்களை மீண்டும் ஒரு முறை நம்புமாறு கோருகின்ற புலி சார் அரசியல் தலைமைகளுக்கு எதிராக காத்திரமான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பவர்கள் இன்னமும் துரோகிகளளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இது தான் நாடகத்தின் இயக்குபவர்களின் அதி முக்கிய திறமை…… என்பது போல் ஆகும்.
அரிச்சந்திரன்,தமிழன் போன்ற பல ஆயிரம் மூடா்கள் நம்மினத்தில் கலக்கப்பட்டுள்ளதால்தான் நம்மால் எந்த வழியிலும் கரைசேரமுடியவில்லை.
நடக்கப்போகின்றது,வரப்போகின்றது,பிரட்டப்போகின்றது என்று புல்டா விட்டு வியாபாரம் பண்ணுவதே எண்ணம்.அடடடடா என்ன ஒற்றுமை என்ன கரிசனை,பாவம் இவா்கள்.
அவர்கள் இருவருக்கும் இந்தநூற்றான்டின் பில்டப் வியாபாரிகள் என்ற பட்டம் கொடுக்கலாம், இவர்கள் போன்ற உசுப்ப்பேற்றும் வியாபரகளைநம்பி தான் இறுதி யுத்தம் செய்து புலிகல் வாங்கி கட்டி கொண்டார்கள் கோவனத்தை,
இதை இப்படியும் சொல்லலாம். ஈழத்தில் நீண்ட காலப் போரை நடத்திக்கொண்டவர்கள் பிழைப்புத்தேட புறப்பட்ட தமிழர்களே! இவர்களின் சுயநலஎண்ணத்தில் விளைந்ததே ஈழத்தமிழர்களின் இன்னல் இறப்புகள் இடப்பெயர்வுகள். அதுவே அவர்களை வரலாறுதெரியாத சினிமாபாணி- மாயயையும் தோற்றிவித்து பலமூத்தவர்களை கொலையும் செய்துநாட்டை அழிவுப்பாதையில் கொண்டு சென்று ஒரு மாபியா கூட்டத்தையும் தோற்வித்ததும் அல்லாமல். ..இடதுசாரி சிந்தனை கொண்டவர்களையும் அழித்தொழித்தது மல்லாமல் நாட்டைவிட்டும் ஓடப்பண்ணியது.
தம்தலையில் மண்ணையள்ளிப்போட்டு இலங்கை உழைப்பாளர்கள் தலையிலும் அள்ளிப்போட்டு மயாணத்திற்கு அனுப்பிவைக்கும் கூட்டத்தில் இருபிரதிநிகள் என்றால் பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன். இந்த இடதுசாரி இடதுசாரி எஙிறேர்களே அவர்கள் சாதித்ததுதான் என்ன. அதுவும் இலங்கையுல மக்கள் கண்டது சிங்கள துவேசசம்தானெ இடதுசாரிகளிடம்.