இனியொரு வெளியீடாக உருவான “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற நூல் 10.03.2012 அன்று லண்டனில் வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்வில் பிரித்தானியாவைச் சேர்ந்த பல அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தமது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கலந்துகொண்டனர். முரண்பாடுகளுக்கு மத்தியிலான ஐக்கிய முன்னணி போன்ற ஒன்று கூடலில் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட பலர் நூலை விமர்சனம் செய்தனர்.
பல்வேறு அரசியல் கருத்துக்களையும் கொண்ட ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அரசியல் சக்த்திகளின் ஒன்று கூடல் போன்று இந்த நிகழ்வு அமைந்திருந்ததாக உரையின் பின்னர் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
விமர்சகர்களின் குறிப்பான கருத்துக்கள் சிலவற்றைப் கீழ்வரும் குறிப்புக்களில் காணலாம். அவர்களின் முழுமையான உரைகள் இனிவரும் காலங்களில் வெளிவரும்.
முதலில் நூலை விமர்சனம் செய்த புதிய திசைகள் அமைப்பைச் சார்ந்த மாசில் பாலன், விடுதலைப்புலிகள் அமைப்பின் உள் செயற்பாடுகளை நன்கு புரிந்துள்ள ஐயர் அவர்கள் அதன் உள்ளே காணப்பட்ட உள் முரண்பாடுகளை நன்கு விபரித்துள்ளதாகவும், குறிப்பாக அரசியல் கருத்து வேறுபாடுகள், தனி மனித ஆதிக்கம், அதனால் இயக்கத்தில் காணப்பட்ட மக்களிலிருந்து அந்நியமாகும் போக்குகள் என்பவற்றை அடையாளம் காண முடிந்ததாக குறிப்பிட்டார். அரசியல் தவறுகள் குறித்த தேடலில் நூலாசிரியர் ஐயரைத் தனிப்பட சந்தித்தாகக் கூறிய பாலன் எதிர்காலத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது தவறுகள் குறித்த விமர்சனத்திலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றார்.
ஊடகவியல்லாளரும் விமர்சகருமான தயானந்தா உரையாற்றும் போது, விமர்சன நிகழ்விற்கு முன்னதாக ஐயரிடம் பேசியதாகவும் புஷ்பராஜா போன்றவர்களின் வரலாற்று நூலில் தவறான தகவல்கள் தரப்பட்டிருப்பதாகவும் அதனால் தனது நேரடி அனுபவத்தைப் பதிவுசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் ஐயர் குறிப்பிடதாகக் கூறினார்.
மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்ட இராணுவமாக அன்றி இராணுவத்தைப் பாதுகாப்பதற்காக மக்கள் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே போராட்டக் குழுக்கள் உருவானதாகவும் அதன் வெளிப்பாடாகவே தோல்வி வரை அழைத்துச் சென்றதாகவும் கூறினார். இடதுசாரிகளின் அரசியல் தவறுகளே போராட்டம் தவறாக வழி நடத்தப்பட்டமைக்குக் காரணம் என்று நூலாசிரியர் கருதுவதக அவர் குறிப்பிட்டார்.
பிரசாத் பேசும் போது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்த அல்பிரட் துரையப்பாவின் கொலை குறித்து நூலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அரசியல் என்ற போர்வையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி கொலைசெய்யப்பட்டதை நியாயப்படுத்தும் மனோபாவம் பின்னதாக நீண்ட பட்டியலாக விரிந்தபோது மக்கள் மௌனமாக இருந்தார்கள். இவ்வாறான நடவடிக்கைகள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவசியமானது என்ற கருத்துப் படிமம் மக்கள் மத்தியில் உளவியலாக உருவாக்கப்பட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் தொடர்ச்சி பல அழிவுகளை ஏற்படுத்தி இறுவரை அழிவிற்கு வித்திட்டது என்றார்.
நெதர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த மனித உரிமைச் செயற்பாட்டளாரான இந்திரன் சின்னையா அவர்கள் ஓர் போராட்ட அமைப்பினை கட்டி அமைத்து வழி நடத்துவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை நூல் தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்ட அவர் போராட்டத்தின் தோல்விக்கு காரணம் அது சார்ந்திருந்த சமூகமா? அல்லது போராளிகளா? ஏன்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும் எனக் குறிப்;பிட்டார்.
ஜி.ரி.வி ஊடகவியலாளரும் கருத்தாளருமான தினேஷ் கருத்துக்களை முன்வைத்தபோது, நூலில் கூறப்பட்டுள்ள ஆரம்பகாலத் தவறுகளை அளவு கோலாக முன்வைத்து புலிகள் என்ற அமைப்பை விமர்சிக்க முடியாது என்றார். ஆரம்பகாலத்தில் அரசியலை நிராகரிக்கும் போக்கைக் கொண்டிருந்த பிரபாகரன் பின்னதாக அன்டன் பாலசிங்கத்தின் ஊடாக அரசியலை முன்வைத்தார் என்று குறிப்பிட்டார். தனித மனித கொலைக்கான காரணங்களை அக் காலகட்டத்தின் உணர்வுகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஒரு மனிதனின் வளர்ச்சி போன்றே புலிகள் இயக்கமும் வளர்ச்சியடைந்து தனக்கென ஒரு அரசியலைப் பிற்காலத்தில் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். புலிகள் தவறிழைத்தார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் செயற்பட்டார்கள் என்பது தான் எனக் குறிப்பிட்டார்.
நான் 17 வயதில் எனது பாடசாலையில் ஒரு அச்சமூட்டும் ரௌடியாக இருந்தேன். 21 வயதை அடைந்த போது நான் சந்தித்த அனுபவங்களும் உலகமும் என்னை மாற்றி அமைத்தன. பிரபாகரனும் பதினேழு வயதில் செயற்பட தொடங்குகிறார். அந்த வயது வேகம் உணர்ச்சிகள் இவற்றை வைத்துக் கொண்டு அவரது செயல்களை முடிவு கட்டக் கூடாது. படிப்படியாக(என்னைப் போல) அவர் திருந்திக் கொண்டு வந்திருப்பார்.
தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் முன்னோடியும் ஐயர் பிரபாகரன் ஆகியோருக்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டவருமான தமிழ் மாணவர் பேரவையின் தலைவரான சத்தியசீலன் பேசும் போது, ஐயரின் நூலில் கூறப்படவற்றில் 90 சதவீதத்திற்கும் மேலான உண்மைச் சம்பவங்களைக் கொண்ட்ருப்பதாகக் குறிப்பிட்டார். ஐயரை இரண்டுதடவைகள் சந்தித்ததாகக் குறிப்பிட்ட சத்திய சீலன், முதல் தடவை தமிழ்ப் புதிய புலிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரபாகரனோடு தன்னை வந்து சந்தித்தாகக் குறிப்பிட்டார்.அச்சந்திப்பின் போது தமிழ்ப் புதிய புலிகளின் இராணுவ ஒழுக்கம் குறித்த விதிகளைப் பிரபாகரன் வாசித்துக் காட்டிய வேளையில் ஐயர் அவருடன் வந்திருந்ததாகவும் குறிப்பிட்டர்.
பிரபாகரன் பல தடவைகள் தனிமைப்பட்ட போதும் அனைத்தையும் இழந்து ரெலோ இயக்கத்தோடு இணைந்துகொண்ட போதும், உறுதிமிக்க தலைவராகக் காணப்பட்டார் என்றார்.
இறுதியில் எழுத்தாளரும், அரசியல் சமூகச் செயற்பாட்டாளருமான காதர் உரை நிகழ்த்திய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததாகப் பலர் குறிப்பிட்டனர். நூல் குறித்த அவதூறுகளைப் பரப்பியவர்களை விமர்சித்த காதர், பல குறிப்பான போராட்ட சூழ் நிலைகளை சீனப் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். இறுதியில் இராணுவ ஒழுக்கம் குறித்து செஞ்சேனையின் ஒழுங்கு விதிகள் குறித்துப் பேசிய காதர், “நாங்களும் ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறோம் அதனைச் செஞ்சேனையின் போராட்டத்தோடு ஒப்பு நோக்குங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். ஐயர் நூலில் தவறுகளுக்கான காரணங்களைத் தேடுவதாகக் குறிப்பிட்ட பின்னர் அவற்றைற்கான தீர்வை முனவைக்கவில்லை என்றார். தவறுகளுக்கான காரணம் குறித்தும் மக்கள் போராட்டம் என்றால் என்ன என்பது குறித்தும் மிகத் தெளிவான கருத்துக்களைக் காதர் முன்வைத்தார்.நாங்கள் தவறுகள் புரிந்திருக்கிறோம் அந்த தவறுகளை சுயவிமர்சன அடிப்படையில் ஏற்றுக் கொள்ள துணிச்சல் பெற்றிருக்கிறோம் என்பதை இந்த உலகுக்கு பிரகடனம் செய்யுங்கள். தவறுகளை ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனம் செய்யாதவரை எமது போராட்டத்தை ஒரு அடி கூட இனி எம்மால் நகர்த்த முடியாது.
இனியொருவிற்கும் ஐயருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரிடமும் இருந்துநாங்கள் அடுத்த கட்டத்தை எதிர்பார்க்கிறோம்.
inioru has done a wonderful job..so does Iyar..congrates..
உரைகளை முழுமையாக வெளியிடும் போது ஒரு திறந்த கலந்தரையாடல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். நூலும் விமர்சனமும் வரவேற்பினைப் பெறும் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால்> என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் முக்கியமான விடயம். இங்கே – களத்தில் ஒரு கருத்தியல் போராட்டம் ஒன்று -முனைப்பாக நடைபெற்று வருகிறது. பார்ப்போம்…. விஜய்
“ போராட்டம் நடத்தியிருக்கிறோம் அதனைச் செஞ்சேனையின் போராட்டத்தோடு ஒப்பு நோக்குங்கள் என்பதாலோ நூலில் தவறுகளுக்கான காரணங்களைத் தேடுவதாகக் குறிப்பிட்ட பின்னர் அவற்றைற்கான தீர்வை முனவைக்கவில்லை என்பதாலோ தவறுகளை ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனம் செய் என்பதாலோ எது வரப் போகிறது.அலைக்கழித்து தூக்கியெறியப்பட்டிருக்கிற மக்கள் பழைய கட்டுக்களோடு கூடிய தாங்கள் பேசுகிற போராட்ட விழுமியங்களை கனவிலும் நினைத்துப் பார்க்கமாட்டார்கள். புத்திஜீவிதப்புரட்சி வெட்டிப்பேச்சுக்கு வித்திடலாமே தவிர இன் ஒரு புனிதப் புரட்சியை ஏற்படுத்தி விடாது.போராட்டத்தின் அடிப்படையே சிதைந்து கிடக்கையில் நீங்கள் எதைப்பற்றி. எதைப்பற்றி..விவாதிக்கின்றீர்கள்.
.. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை சாம்பலாக்கி விட்டு அதை புலிகள் தவறிழைத்தார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் செயற்பட்டார்கள் என்பது தான் என வந்து பெருமையாக பேசுகிறார்கள். புலிகள் வளர்ச்சியடைந்து தமக்கென ஒரு அரசியலை நிறுவிக் கொண்டார்களாம். உயிர் உடமை எல்லாம் இழந்து அகதிகளாய்; பசிபட்டினியோடு ஒன்றுமேயில்லாமல் மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளின் அரசியல் விளைவு கண்முன்னே சாட்சியமாய் இருக்கின்றது. இவர்கள் தமது வயிற்றுப் பிழைப்பிற்காக இப்படி உளறுகிறார்கள். தினேஸ் 21 வயதில் திருந்தி விட்டார். பிரபாகரன் 50 வயதைக் கடந்தும் திருந்தியிருக்கவில்லை.
புpரபாகரனின் அறிவு ,மனோபாவம், குணாதிசயம் என்பவற்றுக்கு பல உண்மைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று -சமதானப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வன்னியில் பிரபாகனை நேரில் சந்திக்கின்றனர். முக்கியமான பொதுவான ஒரு சந்திப்பு அது. அங்கு வைத்து கூட்டமைப்பு எம்பியாக இருந்த ஒருவரிடம் உங்கள் தானைத்தளபதி, உலகமகா அரசியல் தத்துவங்களை கரைத்து குடித்த மேதை என நீங்கள் புல்லரித்து கொண்டிருந்த உங்கள் தலைவர் கேட்டது – நான் முந்தி மாதிரி வடிவாய் இருக்கிறேனோ? என்பதாகும்.
பிரபாகனுக்கு வரலாற்றில் உரிய இடம் குப்பைத் தொட்டியே. பிரபாகரனும் அவருடன் கூட இருந்தவர்களும் மக்கள் நலன் கருதி சமுதாய முன்னேற்றங்கருதி போராடியவர்களல்லர். சமூக பிரச்சனைகளைப் புரிந்து கொண்டவர்களல்லர். பிரபாகரனைச் சுற்றி கட்டப்பட்ட பிம்பங்கள் அனைத்தும் அற்பமானவை. அரசியலை ஆரம்பத்தில் நிராகரித்த பிரபாகரன் அன்ரன் பாலசிங்கத்தின் கூடாக கொண்டு வந்த அரசியல் என்ன? ஆயிரக்கணக்கான போராளிகளும் பொது மக்களும் எந்த அரசியலிலன்படி புலிகளால் கொன்று குவிக்கப்பட்டார்கள்?; வன்னியில் நிகழ்ந்த ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகளின் பொருளாதார கொள்கை சுதந்திர வர்தகவலயம் என அன்ரன் பாலசிங்கம் பதிலளித்ததன் பொருள் என்ன?
மனிதப்படுகொலைகளை உணர்வுகளின் அடிப்படையில் பார்க்க வேண்டுமாம். அப்படி சொல்வதற்கு கலாச்சாரமடையாத கொடூரமான ஒரு மனம் வேண்டும். அவருக்கு உணர்வு வரும்போதெல்லாம் கொலை செய்வார் என்றால் சித்தசுவாதீனமுற்றவராக பிரபாகரன் இருந்திருக்கிறார். எதிரி யார் நண்பர் யார் என்ற அறிவு இருக்கவில்லை.
தினேஸ் போன்றவர்கள் பிரபாகரனுக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் வேலையை இனியாவது நிறுத்துங்கள். இதுவரை சமூகத்தை அழித்தது போதும். பிரபாகரனையும் அவரது பெயரில் அண்டிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும்- தம்மை ஊடகவியலாளர் ,அரசியல் ஆய்வாளர், நாடுகடந்தவர்கள் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களையும் தலைமுழுகாமல் தமிழ் மக்களுக்கு விடிவு இல்லை. புpரபாகரனைப் பற்றி சனல் 4ல் என்ன வரப்போகிறதோ அவர் மரணத்தை உறுதி செய்து விடுவார்களோ தங்கள் வயிற்றுப் பிழைப்பில் முடிவு நெருங்குகிறதோ என்ற நடுக்கத்தில் எல்லோரையும் துரோகி துரோகி என முத்திரை குத்தியவர்கள் இன்றில் இருந்து சனல் 4 தொலைக்காட்சியையும் மெல்ல துரோகி என பிரச்சாரப்படுத்த தொடங்குவார்கள்.
Good job.
I had a chance to talk to our MP of our area last week. He asked me about any existing book of the latest war or documentation about the war. I could not find anything except the channel 4 vids. do you have any? (thought to record here for strong people might have the consideration)