இனியொருவில் விடுதலைப் புலிகளின் முன்பகுதி வரலாற்றை எழுதிய ஐயரின் பதிவுசெய்யப்பட்ட நேர்காணலின் முதலாவது பகுதி இங்கு தரப்படுகிறது. சில நாட்களின் முன்னர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஐயர், இப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை தேறி வருகிறார். மிகவும் நேர்மையாக வாழ்ந்த ஐயர் தனக்காக சொத்துக்களை வைத்திருந்ததில்லை. தனியார் மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய இனம் சார்ந்த விடுதலைப் போராட்டத்தில் உங்களின் ஈடுபாட்டிற்கு அடிப்படையாக அமைந்த காரணங்கள் என்ன?
நான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன். ஐயர் என்ற எனது பெயர் கூட அதன் அடிப்படையிலேயே அனைவராலும் அறியப்பட்டிருந்தது. சிறு வயதில் எனது பள்ளிப்பருவ நண்பர்களில் பலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே அமைந்திருந்தனர். இது குறித்துப் எனது குடும்பம் சார்ந்தவர்கள் பல தடவை என்னைக் கண்டித்திருந்தனர். அவை ஏன் எனது நட்பைக் கண்டிக்கிறார்கள் என்பது எனக்குப் புதிராகவே பல சந்தர்ப்பங்களில் தென்பட்ட்டது.
பின்னர் நான் கோவிலில் பூஜை செய்வதற்காக நியமிக்கப்பட்டேன். அப்போதெல்லாம் கோவிலுக்கு வருகின்ற தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கொட்டும் மழையில் கூட அர்ச்சனைத் தட்டுகளோடும் பூக்களோடும் பூஜைக்காக கோவிலுக்கு வெளியிலேயே அவர்கள் காத்திருப்பார்கள்.
இந்த அவலம் அவர்களுடனான எனது நெருக்கத்தையும் நட்பையும் ஆழப்படுத்தியது மட்டுமன்றி சமூகத்தின் மீதான கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. சில காலங்களில் இதுவே கடவுள் மறுப்பாக என்ன்னுள் உருவானது.
ஆக, சமூகத்தின் விதி முறைகளுக்கும் வரம்புகளுக்கும் எதிராக உழைக்கும் வலுவை எனக்கு வழங்கியிருந்தது. இதன் மறு பகுதியாகத் தேசிய இன அடக்கு முறை உச்சத்தை அடைந்த வேளையில் நான் சார்ந்த சமூகத்தின் வரம்புகளைக் கடந்து அதற்கு எதிரான போராட்டத்தில் முழுமையாகப் பங்காற்றும் உறுதியை எனக்கு வழங்கியிருந்தது. ஆக, பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பதாகவே எதிர்ப்புப் போராட்டங்களில் பல வகைகளில் பங்களிக்க ஆரம்பித்திருந்தேன்.
பிரபாகரனை முதலில் சந்தித்த போது விடுதலை இயக்கத்தை ஆரம்பிப்பதாகத் தீர்மானித்துவிட்டீர்களா?
பிரபாகரனை ராகவன் தனது தொடர்புகளூடகவே முதலில் அறிமுகம் செய்தார். ராகவன் அப்போது பாடசாலை மாணவன். நாம் போராட்டங்களில் நம்பிக்கை உடையவர்கள் என்ற அடிப்படையிலேயில் தனது தலைமறைவு வாழ்க்கைக்கு உதவி கோரியே அவர் எம்மைச் சந்தித்தார். முதலில் செட்டியுடன் தொடர்புடையவர் என்பதால் அவருக்கு உதவிசெய்ய மறுத்துவிட்டோம்.
பின்னதாக செட்டியுடன் அவர் தொடர்புகளைக் துண்டித்துவிட்டதாகக் கூறியதும் அவருக்கு உதவிசெய்யச் சம்மதம் தெரிவித்தோம். நானும் குலம் என்ற எனது பால்ய நண்பனும் அவரின் தலைமறைவு வாழ்க்கைக்கான உதவிகளைச் செய்து வந்தோம்.
தவிர, அவ்வேளையில் பிரபாகரன் தன்னோடு சார்ந்திருந்த எவருமற்றுத் தனித்திருந்தார். முதலில் பல நாட்கள் சரியாக உணவருந்தாமல் களைப்புற்ற நிலையிலிருந்தார்.
யாழ்ப்பாண மேயர் துரையப்பாவைக் கொலைசெய்திருந்த காரணத்தால் இலங்கை அரச படைகள் எப்போதும் அவரைக் கைது செய்யலாம் என்ற நிலையே காணப்பட்டது. தவிர, மீசை கூட அரும்பாத பதினேழு வயது இளைஞனான பிரபாகரன் இலங்கை அரச படைகளுக்கு எதிராக இன்னும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற துடிப்புடன் காணப்பட்டார்.
இவை அனைத்தும் பிரபாகரன் மீதான விமர்சனங்களுக்கு அப்பால் அவர் மீதான அனுதாபத்தையும் மதிப்பையுமே ஏற்படுத்தியிருந்தது.
(இன்னும்வரும்..)
அய்யரின் இருப்பு,புனைகதையாளர்களை ஓரம் கட்டத் தேவை.”இனியொரு” தன் வரலாற்றுக் கடமையை சரிவரச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.அய்யரின் கருத்துகள்,வரலாற்றுப் பரப்பில் நடந்து கொண்ட முறை பற்றி,என் எதிர்வாதம் இருந்தாலும்,அவர் தன் நோய்ப் போராட்டத்திலிருந்து வெற்றி கொள்ள வேண்டுகிறேன்.
நேர்மையான சாட்சி இயற்கையை வென்றாக வேண்டும்.
துரையப்பா கொல்லபட்டது 1975 இல் பிரபாகரன் பிறந்தது 1954 இல் 17 வய்தாக இருக்கமுடியாதே
சிங்கள இராணூவத்தோடு கதைக்கப் போகும் போது நெக்டோவும்,பன்ராவும் தேடித் திரிந்த புலிகள் தம்மைப் போல் போராட வந்தவர்கள பிடித்துக் கொன்றார்கள்?இந்த சைக்கோ குணம் புலுகளூக்கு வரக்காரணம் என்ன?ஆட்டு இறச்சிக் கறீயும்,முட்டையும் பருப்பும் என தலமைகள் சாப்பிட்டுக் கொண்டு சென்றீயில் நின்றவர்களூக்கு பாணூம் சம்பலும் கொடுத்தது ஏன்?இப்படி பதில் இல்லாமல் பல கேள்விகள் விடைகள் நம் எதிர்கால அரசியலுக்கு உகந்ததாய் இருக்க வேண்டும்.அய்யர் அய்யா நீங்கள் பெட் ரெஸ்ட் எடுத்தபின் பதில் தாருங்கள்.உங்கள நலம் அம்மையப்பன் அருளால சிறப்புற பிரார்த்திக்கிறேன்.
மெல்லிய இரும்பைக் கண்டால் கொல்லன் துள்ளித் துள்ளித் அடிப்பதாக ஒரு மொழிவழக்கு எங்கள் ஊரில் இருக்கிறது.
முப்பது வருடகாலமாக அராஜகத்தையும், அடக்குமுறையையும் கடைப்பிடித்த ஒரு அமைப்பின் வரலாற்றைக் கூற ஒரு நபர் காணாது ஒரு நூறு பேர் புறப்பட வேண்டும். அதுவும் உள சுத்தியோடு புறப்பட வேண்டும். இது தமிழர்களைப் பொறுத்தவரையில் சாத்தியமாவது அவ்வளவு எளிதல்ல.
ஐயர் தமது நினைவில் இருந்தவற்றை எழுதுகிறார், அவருடைய பார்வையில் பிரபாகரன் முதிர்ச்சியற்ற ஒரு பதின்ம வயதினராக தோற்றமளித்திருக்கிறார் என்றுதான் அந்த செய்தியை நாம் எடுக்கலாம்.
தமிழ்ஈழவிடுதலைப்புலிகளைப் பற்றிய வீரசாகசங்களை மட்டும் பிரச்சாரப்படுத்திக் கொண்டு, அழிவுகளையும் கொலைகளையும் இன்றும் நியாயப்படுத்திக் கொண்டு இரவில் நிம்மதியாக நித்திரை செய்யும் பலரிடையே ஐயர் இவற்றை சொல்ல வந்தது ஒரு ஆரம்பமே, உளச்சுத்தியிருந்தால் வேறு நபர்களும் தமது அநுபவங்களை எழுத ஆரம்பிக்கலாமே.
ஆம், உமது கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன் தேவா!!.
பிரபாகரன் சாப்பிடாமல் கிடந்தார் ஆமியை அடிக்கோணூம் எண்டு கோபத்தோடு அலைந்தார் எண்டு அய்யர் எழுதுறார் ஆனால் அவர் முப்பது வயதானபோது போராட வந்தவர்கள போடுவதில்தான் இலக்காக இருந்தார் இது ஏன்? நாங்கள் தமிழரில்லையா? நாங்கள் கனவு கண்டதும் தமிழ் ஈழம் தானே? எத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டன் எத்தனை தமிழ் இளஞர் அவமானப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்? தமிழ் ஈழம் என்பது கிட்டுவுக்கும்,பிரபாகரன் மட்டும் சொந்தமானதா? இந்த நியாயத்தைக் கேட்டால் நாமெல்லாம் தூரோகி.
அப்பவே பறையாம விட்டுட்டு வந்திருக்கலாமல்லே.வலிஞ்சு கட்டி,என்னத்தைக் கண்டியள்? சிங்களத்தோடை பொங்கிக் கிடந்ததும்,நியாயம் பிளக்கிறமெண்டு கோள் மூட்டித் திரிஞ்சதும் ஆராம்? குளத்தை கலக்கி பிராந்துக்கு குடுத்தாச்சு.எல்லாத்துக்கும் இனியொரு இருக்கு. பேசாமப் பிரண்டு படும்.எல்லாப் பழிக்கும் புலி இருக்கல்லே.அய்யரும் எழும்பி வரட்டுமொரு பிடி பிடிக்கலாம்.அண்ணை மாறன்!
பின்னை வாறன்.வரட்டே!
விளங்காமுடி வார்த்தை வேத வாக்கு ஆனால் சொல்வழி கேக்காத பிள்ள குழப்படி செய்யும்போது அது என்னத்தச் சொன்னாலும் கேக்காது அது தன் விதிவழி நடந்து வீணாய்ப் போகும்
Get well soon.
நம் கண்கள் முன் நடமாடி நம் கண்களுக்கு தெரியாத ஓராயிரம் விடயங்களை மனதிற்குள் புதைத்துக் கொண்டு சிரித்து பேச மட்டுமே தெரிந்த விந்தை மனிதர்கள். உலகில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவர்க்கும் இருக்கக் கூடிய அவ்வளவு ஆசாபாசங்களையும் கொண்டவர்கள் ஆனால் அதை எதையுமே உள்வாங்க மறுத்து தலைவர் காட்டிய பாதை மட்டுமே கர்மமாய் கொண்ட நடமாடும் தெய்வங்களே எமது… தேசத்தின் போராளிகள்.
இளவயது ஆரம்பித்தாலே மனதில் பட்டாம் பூச்சிகள் பறப்பதய் ஒவ்வெருவரும் உணர்ந்துகொள்வோம். ஆனால் போராளிகள் என்ற இந்த கடவுள்கள் ஒரு பட்டாம் பூச்சியை கனவில் கூட கண்டதில்லை. காரணம் கொள்கை உண்ணத இலட்சியம் கட்டுப்பாடுகள் இவை அனைத்திற்கும் மேலாக அவர்களுக்கே உரிய பண்பாடு. இவைகளை தாண்டி இவர்கள் எப்போதுமே வெளியே வந்ததில்லை வர நிணைப்பதும் இல்லை.
இவர்களின் இந்த தியாகம் இன்று இரும்பு முள்னம்பிகளுக்குள் சிக்குண்டு திக்கெது திசையெது என தெரியாமல் தவித்து நிற்பதை நாம் எல்லோரும் மறந்துவிடக்கூடாது. போராட்டங்களில் இவர்களது சேவை எம் எல்லோர்களாலும் மறந்திருக்க முடியாது.
ஒவ்வெரு போராளியும் தரைப்புலியென்று, கடற்புலியென்றும், வான்புலியென்றும், வேவுப்புலியென்றும் இப்படி பல பல பெயர்களை தாங்கி செய்தாற்றிய பணிகள் அளவிட முடியாதவைகள். கடற்புலியாய் இருந்தவர்கள் மழைகால கடலில் அவர்கள் ஆற்றிய பணிகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. அதுபோல் வேவு புலியாகி பறப்பட்டு போனவர்கள் சில மதாங்களுக்கு திரும்பி வரமுடியாத Åழலில் சிக்கி எதிரியின் வலயத்துக்குள்ளேயே பகலில் தூங்கி இரவில் வேவு பார்த்து அதனை தரவுபடுத்தி அதை பயன்பெறுமாறு தயார்படுத்தி கொண்டு வந்து சேர்க்கும் வரை அவர்கள் படும் வேதனைகள் வரலாற்றில் கூட நாம் படித்ததில்லை.
ஏழுகடல் தாண்டி ஏழுமலை ஏழுகாடுகள் தாண்டிப்போய் போர் புரிந்த கதை எம் ஆச்சி அப்புமார் கதையாக சொல்லுவார்கள். அப்படி போர் புரிந்த வீரர்கள் கூட எமது போராளிகள் முன்பு இரத்தினக்கற்கள் முன் கூலாங்கற்களாக தெரிவார்கள். வரலாறு எமக்கு முன்னர் நிகழவில்லை எம்மோடே நிகழ்ந்தது. இன்று நிர்கதியாகி நினைத்துக் பார்க்க முடியாத பரிதாபத்துக்குறியவர்களாக நிற்கின்றார்கள்.
எமது போராளிகள் செய்த தவறு என்ன எம்மைப்போல அப்போதே வெளிநாடு சென்று இப்போது வெளிநாட்டு பிரஜா உரிமை பெறாமல் போனதுதான் அவர்கள் செய்த தவறா? இல்லையென்றால்தன் கண்முன்னே தன் இனம் கொத்துகொத்தாக கருவறுக்கப்படுவதை பார்க்க சகிக்க முடியாமல் அதை தடுத்து நிறுத்த புறப்பட்டதுதான் தவறா? இன்று யாரும் பார்க்க கூட முடியாத ஓர் இருண்ட வலயத்திற்குள் கட்டுண்டு கிடப்பது என்ன ஒரு கொடுமை.
நாம் அறிந்த தெரிந்த உலக விடுதலைப்போராட்டங்கள் நடத்திய விடுதலை இயக்கங்களில் எமது போராளிகளே மிகவும் அர்ப்பணிப்பு தியாகம் கட்டுப்பாடுகளைக்கொண்ட போராளிகளாக இருந்தர்கள். எமது தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற விடுதலை இயக்கத்தை உலகம் வேறு எங்கும் கண்டிருக்காது. அதற்கு பல சான்றுகளை இங்கு பல கூறலாம்.
இன்றும் காலத்தின் கட்டளைக்காக காத்துக்கிடப்பவர்கள். நஞ்சை மாலையாக்கி துவக்குகளையே செங்கோலாக்கி வாழ்ந்தவர்கள். அன்பின் பிறப்பிடமாக வாழ்ந்தவர்கள். மறைந்துவாழ்ந்த காலத்திலும் தமக்கு கிடைக்கும் செற்பமான உணவைக்கூட தங்களை பார்க்க வருவோர்க்கு மனமாற கொடுத்துவிட்டு தண்ணீரிலேயே வயிற்றை நிறப்பிக்கொள்வார்கள்.
ஒரு முறை உணவுக்கூடம் நோக்கி கை நீட்டி வழி காட்டியதற்காக கர்ணனை தர்மம் காத்ததாக வரலாறுகள் கூறுகிறது. உலகத் தமிழர் வயிறு மட்டுமல்லாது உயிறும் காத்த எமது போராளிகளை மட்டும் ஏன் தர்மம் கைவிட்டது?. தர்மம் தன்னை Åது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் இதுவும் வரலாறுதான். வரலாற்றுக்கே வழிகாட்டியாக திகழ்ந்த எம் தலைவர் வழி வந்தவர்கள் எமது போராளிகள்.
மீண்டும் வரலாற்றை மாற்றி எழுத வருவார்கள். போராளிகள் பெயர்தான் போராளிகள் ஆனால் அனைவருக்கும் தாயாய் தந்தையாய் தமயனாய் தமக்கையாய் தம்பியாய் என உறவுகளாய் எமது மக்களுடன் வாழ்ந்தவர்கள். எமது போராளிகளுக்கு இருந்த திறமைகள் உலகின் வேறு எந்த விடுதலை இயக்கத்திலும் இருந்ததில்லை அதற்கும் பல சான்றுகள் உண்டு.
பல நூறு இராணுவத்தை ஒரு சில போராளிகள் தந்திரத்தால் விரட்டிய நிகழ்வும் உண்டு. ஓர் உயிர் கொடுத்து பல நூறு உயிர் காத்ததும் உண்டு. எமது உயிரான தமிழீழ விடுதலைக்கு தீயாகி எதிரியை பொசுக்கியவர்கள் எமது போராளிகள். இரவு பகல் என விழி மூடாது தமிழீழ காவல் தொய்வங்களாக இருந்தவர்கள். எதிரியின் கடும் சமரில் வித்தாகிப்போன எமது மாவீரர்களுக்கு தூண்களாக இருந்தவர்கள்.
தோழர்கள் தங்கள் கைகளிலேயே மடிவதைக்கண்டு தினம் தினம் நரகத்தின் கதவைத் தொட்டவர்கள் எமக்காக. இன்று ஒளியற்ற கதவுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் எதிரிகளாளும் துரோகிகளாளும் சர்வதேச நாசக்காரர்களாளும். எமது ஒவ்வொரு போராளிகளும் ஒவ்வொரு சகாப்தங்கள். அவர்களை தரம் நிறுத்திப்பார்ப்பதற்கு இந்த உலகில் எந்த ஒரு அளவுகோலும் கிடையாது.
காலத்தின் கொடுமையால் அவர்களை நாம் தொடர்பற்ற ஒர் இருள் உலகத்தில் வைத்துவிட்டோம். அவர்கள் அங்கிருந்து மீண்டு வர வேண்டும் எம் முண்னே காவல் தெய்வங்களாக மீண்டும் அவர்கள் உலா வர வேண்டும். அதற்கு நாம் நம்மாலான முழு முயற்சியையும் செய்து எமது பங்களிப்பை செலுத்த வேண்டும். வாருங்கள் தோழர்களே ஒன்றாய்ச் சேருங்கள் தோழர்களே
இதுதான் இலக்கியம்.இரத்தமும் சதையுமான உடலுக்கு உணர்வைத் தருவது.
அய்யர் நலமடைய வாழ்த்துக்கள்
sks kave நீங்கள் விடுதலை புலிகளின் அரசியல் படைத்துறைப் பள்ளிகளில் பகிரப் பட்ட விடயங்களால் நன்கு கவரப் பட்டுள்ளீர்கள் போராளிகளின் தியாகங்களை யாரும் கொச்சைப் படுத்தவும் யாரும் தமது உரிமையாகவும் கொண்டாட முடியாது. போராளிகள் என்பவர் தமிழ் இனத்தின் சொத்து. புலிகள் என்பது ஒரு இனம் அல்ல சிலரின் எழுத்துக்கள் புலிகள் தாம் ஒரு இனம் என்பது போலவும் அவ் இனத்தின் முழுமையான உரிமை யாளர்கள் தாமே என்பதுவும் யாரும் அதனை மீறி கதைக்கவோ விமர்சிக்கவோ முடியாது என நினைக்கின்றனர். விமர்சிக்க முடியாத நபர்களாக தமை சகல வழிகளிலும் ஏற்படுத்திக் கொண்டவர்கள் புலிகள் அதுவே அவர்களின் அளிவுக்கும் வழிகோலியது . அதன் உச்சமாக பிரபாகரனை சூரிய தேவனாக கொண்டாடி கடவுளாக சித்தரித்தனர். மகாவம்சத்தை விட மிக மோசமான வரலாற்று திரிபுகளில் புலிகள் ஈடுபட்டிருந்தனர். மிகவும் கீழ்த்தரமான காழ்புணர்வுகளை தமது சொந்த இனத்தின் மீதே புலிகள் ஏற்ட்படுத்தினர். மாற்று கருத்தாளர்கள் எனக் கூறி 3000 மேர்த்பட்ட இளைஜர்கள் புலிகளின் சிறையில் அடைக்கப் பட்டு கொல்லப்பட்டார்கள். தமிழர்களை தமிழர்கள் கொன்று போட்டோம் அதற்காக டெலோ பிளாட் புலிகள் என பெயரிட்டு கொண்டோம்………………. நாம் எமது தவறுகளை எப்போதும் ஏற்று கொள்வதில்லை நாங்கள் தவறே செய்யாதவர்கள் என சாதிக்கும் மனிதர்கள் அல்லவா தமிழர்கள்.
உண்மையில் இந்தப் புலிக்கொடிகள் புலம் பெயர்ந்தவர்கள் சொல்ல வந்த செய்தியை தவறாக வழி நடத்தி விட்டன. அத்தோடு இங்குள்ள சில இனவாதிகளுக்கு அது ஆயுதமாகியும் விட்டது. எப்படியாயினும் அது ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை. “இது ஒரு அரசியல்வாதியின் கூற்று.”
“புலிக்கொடி” தூக்கிப் பிடித்தமை,இன்றும் தூக்கிப் பிடிப்பது,ஒரு தொழில்நுட்பப் பிரச்சனையல்ல,மாறாக கணக்கியல் சம்பந்தப்பட்டது.
நெருஞ்சியும், தமிழ்மாரனும் இடைக்கிடை நகைச்சுவை குண்டுகளையும் வெடிக்க வைக்கிறார்கள் நல்லதுதான். தொழில்நுட்ப பிரச்சினை என்பது ஈழப் போராட்டத்தை அல்லது நிகழ்கால இயங்கியலை நகர்த்திச் செல்வதில் இருக்கும் தொழில்படுதிறனில் பல்துறைபார்வையற்ற அறிவியல் மந்தம். மற்றையது கணக்கியலும் ஒரு தொழில் நுட்பம்தான். புலிப் பினாமிகள் கணக்கியலில் கெட்டிக் காரர்களும் கறார் பேர்வழிகள்தான். இருப்பினும் விடுதலை புலிகளின் பல உறுப்பினர்கள் நேர்மையாக செயற்படுகிரார்கள் அவர்களை புலிப் பினாமிகளின் கூடத்திற்குள் அடக்க முடியாது.
ஆம் நீங்கள் கூறுவது உண்மை ஆனால் பினாமிகள் கைதானே தற்போது ஓங்கியுள்ளது.
Iyer&Rayakaran were responsible for NLFT’s finance.Iyer created a business empire with a help of that peoples funds.Transport sector,Retail etc..etc..Navalan must know this facts.
ஐயரிடம் தொடுக்கும் வினாவும் ஐயர் கொடுக்கும் பதிலும் தங்களை மேதாவிகளாக்கும் முயற்சிகள். ஐயா, என்னதான் உங்களைப்போன்றோர் பாடுகள் பட்டாலும் வரலாற்றில் நீங்கள் வாய்ச்சொல்லாடிகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்க.