ஈழப்போர் : சாம்பல் மேடுகளிலிருந்து..
ஒரு வருடம் கடந்து போய்விட்டது. அப்பாவிகளின் அவலக் குரல்கள், குழந்தைகளின் அழுகுரல்கள்,முதியோரின் கூக்குரல்கள் வன்னிமண்ணிலிருந்து உலகமெல்லாம் எதிரொலித்து பன்னிரண்டு மாதங்கள் கடந்து போய்விட்டன. உலகமே செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்க மனிதர்களைச் சாரிசாரியாகக் கொன்றுபோட்ட ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரம் கொலைகளைக் கொண்டாட்டமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் பேசும் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறார்கள். சாட்சியின்றிச் சாகடிக்கப்பட்ட ஐம்பாதாயிரம் மக்கள் குறித்து உலக அதிகாரவர்க்கம் மறந்து போயிருக்கலாம், துரோகங்களுக்குப் பலியான தமிழ்ப் பேசும் உலகம் மறந்துவிடாது. எம்மைப்போல ஒடுக்கப்படும் தேசிய இனங்களும், ஒடுக்குமுறைக்கெதிராக உலகெங்கும் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டங்களும் வன்னி இனப்படுகொலையை பாடமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆயிரமாய் அவர்கள் எம்மோடு கைகோர்க்கத் தயாராகுவார்கள்.
எமது அன்னையர் மண்ணில், ஈழத்தின் இதயத்தில் துடிக்கத் துடிக்கக் கொலைசெய்யப்பட்ட ஆயிரமாயிரம் குழந்தைகளின் புத்திரசோகத்தில் நெஞ்சு பிழந்து அன்னையரை, ஊனமாக்கப்பட்ட சிறார்களை, முதியோரை திறந்தவெளிச் சிறையில் அடைத்து வைத்தது ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரம். ஊனமுற்ற ஒரு சமூகத்தை உருவாக்கிவிட்டு அபிவிருத்தி குறித்தும் சமாதானம் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
சிறையில் அடைத்துவைக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் பெரும்பகுதியினருக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. தமிழ்ப் பிரதேசங்கள் இராணுவ மயமாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. பௌத்த புனிதப் பிரதேசங்கள் தமிழ்ப் பிரதேசங்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. சிங்கள மயமாக்கலும், இராணுவக் குவிப்பும் தான் அறுபது வருட தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்கிறது மகிந்த அரசு.
மே மாதம் பதினெட்டாம் திகதி போர் முடிந்து போய்விட்டதாக நந்திக்கடலைச் சூழ விதைக்கப்பட்டிருந்த மக்களின் பிணங்களின் மேல் ஓங்கி அறைந்து எக்காளமிட்டது பேரினவாதம். சாட்சியின்றி ஒரு மக்கள் கூட்டம் கொன்றொழிக்கப்பட்ட இந்த நாள் உலக வரலாற்றில் இருண்ட நாள். வலுவிழந்த தமிழ் மக்களைப் போல உலகெங்கும் கொல்லப்படும் மரணபயத்தோடு வாழ்கின்ற மக்களின் எதிர்ப்பு நாள். தமிழ் பேசும் மக்களின் பேரினவாதத்திற்கு எதிராகப் போர்முரசு ஒலிக்கவேண்டிய நாள்.
குருதியுறைந்து போன எமது தேசத்தின் சாம்பல் மேடுகளிலிருந்து மக்கள் ஒரு நாள் எழுந்து வருவார்கள். மரண முகங்களோடு அவர்களின் கொல்லைபுறத்தில் குடிகொண்டிருக்கும் சிங்களப் பேரினவாதத்தை வெற்றிகொள்வார்கள். தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட மக்கள், மேலாதிக்க நவஞ்சகர்களை மரணித்துப் போன மக்களின் பெயராலும், தியாகிகளின் வலுவாலும் தோற்கடிப்பார்கள்.
மக்களின் வெற்றிக்காக நாம் எம்மாலான அனைத்தையும் வழங்குவோமென உறுதிகொள்வோம்.
தேசிய இன ஒடுக்குமுறையின் கோரத்தீயிலிருந்து மீண்டு புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ் பேசும் மனிதனும் போராட்டத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள இந்த சந்தர்ப்பத்தில் முன்வரவேண்டும். எம்மைப் போல சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் மக்கள் கூட்டங்களோடு கைகோர்த்துக் கொண்டு, பேரினவாத இலங்கை அரசை முறியடிக்க நாமும் உந்து சக்தியாக அமையவேண்டும்,
மே பதினெட்டாம் திகதியை “ஈழப்போர்” நாளாகப் பிரகடனப்படுத்துவோம். உலகெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக சக்திகளுக்கும், மனிதாபிமானிகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இலங்கை அரச பாசிசத்தை எதிர்கொள்ள அறைகூவல் செய்வோம்.
–புதியதிசைகள் துண்டுப்பிரசுரம்
ஈழப்போர் எதற்காக தொடஙகப்பட்டது? யாரின் விடுதலைக்காக? புலம் பெயர்நாடுகளில்
மட்டும்தான் இப்போ தமிழர் உருமையின்றி இருக்கின்றன்ர், புலிகள் இலங்கையிலும்
புலம்பெயர்நாடுகளிலும் தமிழரின் கருத்துருமை பேச்சுருமைகளைப் பறித்து
புலிக்கொடியின் பின்னும், தலைவரின் படத்தின் பின்னும் ஆட்டு மந்தைகள் போல் கூப்பிடும்போது
பின்னால் வரவேண்டும் என்பதே நோக்கமாக் இருந்தனர்.. இலங்கை தமிழர் புலியிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தமிழனாகப் பிறந்த் ஒருவன் தன் கருத்தை தன் முகத்துடன்
வெளியில் சொல்ல முடியாமல் தடுக்கும்,மிரட்டும் புலிகள், யாருக்காக, எதற்காக, எங்கு போராடினார்கள்? துரை
சென்ற ஆண்டு 30-40,000 பேர் உலகத்திலிருந்தே விடுவிக்கப் பட்டனர். இன்னமும் 3,00,000 பேர் தங்கள் வீடுகட்குத் திரும்பவில்லை. 20-30,000 பேர் முடமாகியுள்ளனர்.
இலங்கையில் நடப்பது எத்தகைய ஆட்சி என்று தெரிந்து எழுதுகிறீர்களா? தெரியாமல் எழுதுகிறீர்களா?
தயவு செய்து புலிகள் மீதான உங்கள் கோபதையும் மனித நிலை பற்றிய அக்கறையையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
இவ்விதமான அணுகுமுறை உங்களுக்கும் மூர்க்கத்தனமான புலி ஆதரவாளர்கட்குமிடையே வேறுபாடில்லாமல் செய்து விடும்.
for whom thurai’s bells always toll?
what is your game plan, thurai? leaving four line comments on inioru? or is it yet to come from your high command in new delhi and colombo?
தாரை, துரை குரைப்பது ஈழவிடுதலை ந்ரிகளிற்கு மட்டும்தான் பயத்தை
உண்டுபண்ணும்.
ந்ரிகள் புலிவேசம் போட்டதாலேயேயும், இந்த நரிகளை ந்ம்பி தமிழர் பின்னால் போனதாலெயேயுமே முள்ளிவாய்க்காலில் சிங்கள்வர்களிற்கு பலி கொடுத்து நரிகள்
ஓடித் தப்பி விட்டார்கள். துரை
அப்புறம் அப்படியே ஈழத்தையும் வெப் சைற்றில் பிரகடனப்படுத்தி விடுங்களேன்.