40 வருட வரலாற்றைக் கொண்ட தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. நேர்மறையானவற்றை உள்வாங்கிக்கொள்ளலும் எதிர்மறையானவற்றை விமர்சித்தலும் மக்களின் தொடரும் போராட்டத்தைச் செழுமைப்படுத்தும். முள்ளிவாய்க்காலில் பேரினவாத அரசு உலக அதிகாரங்களின் அனுசரணையோடு திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னர் நான்கு தசாப்தங்களின் முன்னர் எங்கிருந்து ஆரம்பித்திருக்கிறோம் என்ற விமர்சனத்தை தான் குறித்த சுய விமர்சனத்தோடு நூலுருவில் உருவாக்கியிருக்கிறார் கணேசன்(ஐயர்).
ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும், பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய « ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் » என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற இருக்கிறது. இவ் விமர்சனக் கலந்துரையாடலில் ஈழப் போராட்டத்தில் ஆரம்ப நிலைகளில் செயல்பட்ட பல்வேறு கருத்துநிலை கொண்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். போலியான போராட்ட வரலாற்று கட்டமைப்புக்களை, புனைவுகளை « வரலாறு » என்ற போர்வையில் எழுதிக் குவிக்கும் புலம்பெயர் சூழலில், இந் நூலும் இவ் விமர்சனக் கலந்துரையாடலும் உண்மை சார்ந்த வரலாறுகளை மீளவும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகருகின்றது. எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்”
விமர்சன ….கருத்தாடல்
இசிதோர் பெர்ணான்டோ
சஷீவன்
வாசுதேவன்
சத்தியசீலன்
அசோக் யோகன்
மற்றும்
சத்தியசீலனோடு ஓர் உரையாடல்…
) தலைவர் ; தமிழ் மாணவர் பேரவை (
காலம்: 29.04.2012. ஞாயிறு.
பிற்பகல் 2. 30 மணி தொடக்கம் 8.00மணி
இடம்: SALLE POLONCEAU
25 , RUE POLONCEAU
75018 PARIS.
மெற்றோ: LA CHAPELLE
பாதை: place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU
அசை – சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் – பிரான்ஸ்
06 19 45 02 76
asai.marx@gmail.com
ஐயரின் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – ஆய்விற்கான அவசியம் – பகுதி ஒன்று!
தத்துவம்… கோட்பாடு… திட்டமிடுதல்… செயற்பாடு……
நாம் கடந்துவந்த காலங்களையும் அக் காலகட்டதிற்குரிய தகவல்களையும் அனுபவங்களையும் மேற்குறிப்பிட்ட பல படைப்புகள் பதிவு செய்துள்ளன. இவை வெறுமனே பொழுதுபோக்கிற்காவும் தகவல்களை அறிவதற்காகவும் வாசிக்கப்பட வேண்டியவை மட்டுமல்ல. மாறாக, இவை ஈழத்து தமிழ் பேசுகின்ற சமூகங்களினதும் தனிமனிதர்களினதும் இயக்கத்தை, சிந்தனைப் போக்கை, தன்மையை, அரசியலை, உளவியலை, விடுதலைப் போராட்டத்தை எனப் பலவற்றை ஆழமாகவும் விரிவாகவும் புரிந்துகொள்வதற்கான ஆதார மூலங்களாக இருக்கின்றன. இதனால்தான் ஐயரின் நூலை முக்கியமான மூலப்பொருள் என ரகுமான்ஜான் தனது உரையில் குறிப்பிடுகின்றமை கவனத்திற்குரிய ஒன்றாகும்.
இந்த மூலப் பொருட்களை நாம் எப்படிப் பார்கின்றோம் என்பதற்கமைய அதுபற்றிய புரிதல் நமக்கு கிடைக்கின்றது. சதாரண மனிதர்களின் நேரடியாக பார்கின்ற பார்வைக்கும், சமூக மாற்றத்தை விரும்புகின்றவர்களினதும் அதற்காக செயற்பட ஆர்வமுள்ளவர்களின் ஆய்வுரீதியான பார்வைகளுக்குமிடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது நாம் அறிந்ததே. பின்னையவர்களது பார்வைகள் ஒரு ஆய்வாளருக்குரிய பன்முகப்பார்வைகள் கொண்ட தேடலாக இருக்கும் என்றால் மிகையல்ல. நமது சாதாரண பார்வைகள் மேம்பட வேண்டுமாயின் இவை தொடர்பான பன்முகப்பார்வைகளின் அடிப்படையிலான ஆய்வுகள் பல வெளிவரவேண்டும். இதுவே நமது சமூகம் மற்றும் அதன் இயக்கம் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துவதுடன் அவை தொடர்பான தத்துவார்த்த தெளிவையும், அதனடிப்படையில் கோட்பாட்டை உருவாக்குவதற்கான பார்வையும், செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான வழிகாட்டலையும் தரும் எனலாம். இதுவே சாதாரண மனிதர்களின் பார்வைகள் மேம்படுவதற்கும் வழிவகுக்கும்.
http://meerabharathy.wordpress.com/2012/04/18/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/
ஐயரின் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – விமர்சனக் கருத்துக்கள் மீதான சில குறிப்புகள்!
ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக நூல்களாக வெளிவந்தவையும் மற்றும் இணையங்களில் வெளிவந்த அல்லது வந்துகொண்டிருக்கின்ற பல்வேறுவகையான படைப்புகளில் சில இக் கட்டுரையின் முதலாவது பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறன படைப்புகள் பற்றி ஆய்வுகள் விமர்சனங்கள் வெறுமனே தாம் சார்ந்த அரசியல் மற்றும் இயக்கங்களின் போக்குகளையும் அதன் தலைமைகளையும் நியாயப்படுத்துவதற்கு ஒரு புறம் பயன்படுத்தப்படுகின்றன. மறுபுறம் தமக்கு எதிரான அரசியல், இயக்கங்கள் மற்றும் தலைமைகளை குற்றம் சாட்டி அவர்களுக்கு பாசிச, பயங்கரவாத, துரோகப் பட்டங்கள் அளிப்பதற்கான ஆதாரங்களாகவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறுதான் ஐயரின் நூல் தொடர்பாக வெளிவருகின்ற பெரும்பாலான பார்வைகள் அல்லது விமர்சனங்கள் இருக்கின்றன என்பது துரதிர்ஸ்டமானது. தமது தேவைக்கு ஏற்ப நியாயப்படுத்தல்களை செய்வதற்கும் குற்றங்களை சுமத்துவதற்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்த நிலைப்பாடுகளிலிருந்து தமக்கான தரவுகள், ஆதராங்கள் இவ்வாறான படைப்புகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இவ்வாறன நியாயப்படுத்தல்களும் குற்றச்சாட்டுக்களும் நமக்குள் ஆழந்த புரிதலைத் தருவதற்குப் பதிலாக மேலும் பிரிவினையையே தோற்றுவிக்கும். இதற்கு மாறாக முதற் பகுதியில் (ரகுமான் ஜான்) குறிப்பிட்டபடி, இவ்வாறான படைப்புகளை மூலப் பொருட்களாக் கொண்டு, தனி மனிதர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் சமூகத்தையும் அதன் இயக்கத்தையும் பன்முகபார்வைகளுக்குடாக ஆழமாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்பதே இன்றைய முக்கியமான அவசியமான தேவையாகும். இதுவே நமது அக்கறையாகவும் இருக்கவேண்டும். இது நம்மையும் நமது செயற்பாடுகளையும் சுய விமர்சனத்துடன் பார்ப்பதற்கும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான திட்டமிடுதல்களை முன்வைப்பதற்கும் பங்களிக்கலாம். இந்தடிப்படையில் இவ்வாறு முன்வைக்கப்பட்ட சில விமர்சனங்களை பார்ப்போம்.
ஆய்வாளர்கள் தாம் சார்ந்த பக்கத்தின் பிரச்சாரக்காரர்களாக மாறாமல் அடக்கப்பட்ட மக்களின் நலன்களின் அடிப்படையிலிருந்து தமது கருத்துக்களை முன்வைப்பதே நேர்மறையான பார்வையாக இருக்கும். இன்னுமொருபடி மேல் சென்று, மக்களுக்கும் வெளியில் சென்று அதாவது புற நிலையிருந்து பார்க்கின்றபோது மேலும் பல விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் நமது ஆய்வாளர்கள் அவ்வாறு செய்வதில்லை என்பதற்கு ஐயரின் ஈழப்போராட்டம் தொடர்பான எனது பதிவுகள் என்ற நூலுக்கு வெளிவந்த சில குறிப்புகளும் விமர்சனங்களும் ஆதாரங்களாக இருக்கின்றன.
http://meerabharathy.wordpress.com

http://meerabharathy.wordpress.com/
ஐயரின் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – விமர்சனக் கருத்துக்கள் மீதான சில குறிப்புகள்! – part 2