“நான் தமிழ் நாட்டிற்குச் சென்றிருக்கிறேன். பிரதான அரசியல் வாதிகள் தமது அரசியல் ஈழத் தமிழர் குறித்துப் பேசியே தம்மை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். நான் ஈழத் தமிழ் அகதிகள் வாழும் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். பலர் அங்கேயே பிறந்து வழர்ந்து பெரியவர்களாகியிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக பதிவின்றி வெளியே சென்றுவர முடியாது. வேலை செய்யமுடியாது.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தமிழ் பிரதான அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? பலர் செய்வது போல, தமிழ் அடையாளம், தேசியம் என்பவற்றை உருவாக்கி அதனை மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருந்திருக்குமானால் அந்த அக்கறை முதலில் முகாம்களில் அடைக்கப்ப்படுள்ள மக்கள் மீதே செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.”
இதை யாரும் புலி எதிர்ப்புப் பன்னாடை சொல்லவில்லை. லண்டனில் புலி ஆதரவு அமைப்புக்கள் ஒன்றிணைந்து அருந்ததி ராய் ஐ பேச அழைத்த போது அவர் கூறிய விடையங்கள்.
தமிழ் நாட்டிலே உங்களது முற்றத்திலே விலங்குகளாக நடத்தப்படும் உங்கள் “தொப்புள் கொடி உறவுகள்” என்ன தவறு செய்தார்கள்? இன்று நேற்ற்றல்ல கடந்த 25 வருடங்களாக தஞ்சம் தேடிச் சென்ற இடத்தில் அதிகார வர்க்கத்தால் சிறை வைக்கப்படிருக்கிறார்கள். நீங்கள் புல்லரித்துப் புழகாங்கிதமடையும் “அன்னை ஜெயலலிதா” வின் தமிழுணர்வும், இதுவரை நீங்கள் தமிழர் தலைவனாக வேடம்கட்டியிருந்த “இரத்ததின் இரத்தம்” கருணாநிதியும் காலாகாலமாக ஆண்டு மகிழ்ந்த மாநிலைத்தில் தான் இந்த மனித அவலமும் நடக்கிறது.
இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். உங்களோடு நீண்ட தொலைவிலிருக்கின்ற அருந்ததிக்குத் தெரிகின்றதென்றால் “விலங்குப் பண்ணையை” சுற்றிக் குறுக்கும் மறுக்குமாக நடந்து திரியும் உங்களுக்கு இதெல்லாம் அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்திருக்கும்.
தேசியம் அடையாளம் என்பவற்றை நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்வதற்கான முதலீடாகப் ப்யன்படுத்திக் கொள்கிறீர்களா இல்லையா என்பது தான் இங்கு வினா. இதற்கு ஆயிரம் பேசுக்களில் நீங்கள் பதில் சொல்லலாம். நரம்பு புடைக்க உணர்ச்சிவயப்படும் சீமானைப் பார்த்திருக்கிறோம். சினிமாவில் வந்த வீரபாண்டியக் கட்டப்பொம்மனுக்கு மறு அவதாரம் கொடுப்பது போல் பேசும் வை.கோபாலசாமியைக் கண்டிருக்கிறோம். தமிழ் நாட்டில் முதிர்ந்த “தேசியத் தலைவராகும்” நெடுமாறனைப் பார்த்திருக்கிறோம். ஈழப் பிரச்சனை, ரியல் எஸ்டேட் பிரச்சனை என்பவற்றோடு தலித் ‘பிளேவரையும்’ கலந்து தேசிய உணர்விற்குச் சாம்பார் படைக்கும் தொல்.திருமாவளவனைக் கேட்டிருக்கிறோம்.
நீங்கள் “விலங்கு கூடங்கள்” குறித்து என்ன செய்யப் போகிறீர்கள். வழமை போலவே ஒளிந்திருக்கும் “தேசியத் தலைவர் பிரபாகரன்” நாளை வந்து தமிழ் நாட்டின் அகதிகளையும் சேர்த்து விடுவிப்பார் என்றா சொல்லப் போகிறீர்கள்? இன்றைய திகதியில் பிரபாகரன் வருவார் என்று ஜெனீவாவில் வை.கோ அதிர்ந்ததையே கோமளித் தனமாகத் தான் புலம்பெயர் தமிழர்களே நோக்கினார்கள்.
அருந்ததி ராய் இன் கூற்றைக் கண்டு அஞ்சிவிடாதிர்கள் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள்கள். கருணாநிதி ஈழம் பெற்றுத்தரும், அமரிக்க வரும், ஐரோப்பா கடைகண் திறக்கிறது என்று மக்களை நம்பவைத்தே நீங்கள் நன்றாக முதலிட்டிருக்கிறீர்கள். இப்போது ஜெயலலிதா பெற்றுத் தருவார் என்று இன்னொரு கதையை பரப்பியிருக்கிறீர்கள்.
இனிமேல் அதிகமாக மக்கள் உங்களை நம்பத் தயாரில்லை. இந்த நூற்றாண்டின் அறிவு சார் சமூகத்தில் தகவல்கள் காட்டுத் தீ வேகத்தில் பரவி விடுகின்றன. ஆயிரம் வியாபாரிகள் உங்கள் “தேசிய” முதலீட்டுகளுக்கு ஆதரமாக நின்றாலும் எங்காவது, ஏதாவது ஒரு சந்தில் சமூகப் பற்றுள்ள குரல் ஒலிக்கும்.
ஆக, அருந்ததி ராய் கூறியதை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முதல்.. .
சீமான், நெடுமாறன், வை.கோபாலசாமி, திருமா, த.பாண்டியன் போன்ற இன்னோரன்ன தமிழினவாத அரசியல் வாதிகளுக்கு இது பகிரங்க வேண்டுகொள் மட்டுமல்ல சவாலும் கூட.
– விலங்குக் கூடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்யப் போராடுங்கள்.
– அவர்களின் சுதந்திர நடமாட்டத்தை உறுதி செய்யுங்கள்.
-விரும்பியவர்களுக்குப் பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்க பரிந்துரை செய்யுங்கள், மறுத்தால் தெருவிலே போராடுங்கள்.
-அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை முன்வையுங்கள்.
-இந்தியாவில் பிறந்து ஈழப் போராட்டத்தின் வரலாற்றோடு வளர்ந்து பெரியவர்களாகியிருக்கும் விலங்குக் கூடங்களின் குழந்தைகளின் கல்வியை உறுதிசெய்யுங்கள்.
-ஈழத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றவர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய அரசியல் போராட்டங்களை முன்னெடுங்கள்.
-இந்த அவலங்களை உலக மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள்.
இதற்கெல்லாம் உங்கள் சொந்தப் பணத்தில் ஒரு பைசா கூடத் தர வேண்டாம். இப்போது தான் சடுதியாகத் தமிழ் உணர்வு மேலெழுந்து தேசியக் கூத்தாடும் அன்னை இருக்கிறாரே. அவர் பெரும் பண முதலைகளிடம் பெட்டி வாங்கும் போது அகதிகளுக்கும் சேர்த்து வாங்கச் சொல்லுங்கள். அப்படி வாங்காவிட்டால் அம்பலப்படுத்துங்கள்.
தமிழ் அடையாளக் கனவில் மூழ்கிய நேரம் போக மிகுதியானவற்றில், சிறைவைக்கப்படிருக்கும் அகதிகளிடம் பேசிப் பார்த்தாலே இன்னும் கோரிக்கைகளைக் கண்டறியலாம்.
இனிமேலும் பிரபாகரன் வருவார் என்பதை மட்டும் முன்வைத்து அரசியல் நாடகம் போட முடியாது. நேர்மையாக மக்கள் பற்றிருந்தால் இந்த எரியும் பிரச்சனையை அதுவும் 25 வருடங்களாக தீபந்தம் போல எரியும் பிரச்சனையை முன்வைத்துப் போராடுங்கள். உங்கள் முற்றத்தில் நிகழும் அவலம் அல்லவா?
பிரபாகரன் வந்தால் வரட்டும். அதுவரைக் கான இடைக் காலத்தில் நீங்கள் சாதித்ததாக இவை அமையட்டுமே?
தமிழ் ஆய்வாளர்கள் எல்லாம் கொதித்து எளப்போகிரார்கள்!
Every refuge tamilian should be freed and get all rights like other indian citizens.We have to help our
brothers and sisters(Srilankan tamilian)
தமிழகப்புதிர் : 15-Jun-2011
அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்
இருப்பாய் புழைப்புவாதிகளே
முதல்வர் அம்மாவின் செருப்பாய்
நெருப்பாய் நிமிரும்
தமிழக உணர்வை அணைப்பாய்
சட்டசபை சரித்திரம் படைத்ததாய்
மக்கள் எழுச்சியைத் தடுப்பாய்…..
வீரவசனம் உரைப்பாய்
வெறிகொண்டாடி இளைஞரை தீக்குளிக்க வைப்பாய்
ஈழத்தமிழர் இன்னலே உரமாய்
ஜெயலலிதா காலடியில் கிடப்பாய் போ..
மானுடப்பேரழிவு
வாக்குப்பொறுக்கிகளிற்கும்
ஏய்த்துப்புழைப்போருக்கும் வாய்ப்பாய்ப்போச்சு
அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்
வாழ்த்துரையும் விழாவென
துடித்துச் செத்தசனத்தை நித்தம் வதைக்கிறாங்கள்
சோத்துப்பருக்கைக்கு ஏழைகள் குளறுது
சொந்த நிலத்தையே
கம்பனிகள் விழுங்குது–அட
எந்தச் சீமானும் போராடக்காணோம்
அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்……..
கடலில் மீனவர் கண்ணீர் தொடர் கதை
விழைச்சல் நிலமெலாம்
வெடித்துப் பாளமாய்க் கிடக்குது
குடிக்கும் தண்ணீரை
கொக்ககோலா அடியோட உறிஞ்சி இழுக்குது-அட
எந்தச் சீமானும் போராடக்காணோம்
அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்………………
இந்திய மாநிலத்து எல்லாத்தெருக்களிலும்
உழைப்பவர் உரிமைக்காய்
இரத்தம் சிந்திய வண்ணம்தான்
ஓவ்வொரு பொழுதும் செந்தணலாய் விடிகிறது
இந்தச் சீமான்கள் போராடக்காணோம்………….
தமிழகத்தின் முகாம்களில் அல்லலுறும் ஈழத் தமிழ் அகதிகளை நிலையை மேம்படுத்த இந்தக் கட்டுரையாளர் எடுத்த முயற்சி என்ன? யாராவை பேசியதை வைத்துக்கொண்டு மேதாவித்தனத்தை காட்டிக்கொள்வதை விட்டுவிட்டு, நம்மால் இயன்றது யாது என்றறிந்து செய்ய முன் வாருங்கள். சீமான் செய்த பிரச்சாரத்தால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவுதான் ஆளுநர் உரையில் “இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் சீரமைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்திலேயே கெளரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்ற உறுதிமொழியாகும். இதனை நிறைவேற்ற 07.06.2011 ஆன்று அரசு ஆணை எண் 480 தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது வந்து அகதிகள் முகாம்களில் உள்ளோரைக் கேளுங்கள். பிறகு இப்படியொரு நீண்ணண்ணட கட்டுரை எழுதுங்கள்.
முட்டாள்!!
The man who wrote this article must be a man of flame. Are you calling him foolish? You must ashame to write your name “thamil maran”?
Dont be fuelish.i dont call anyone here muttal sory i called myself
நண்பரே தமிழ் அடையாளம், தமிழ்த் தேசியம் என்ற புனிதத்தைக் கட்டமைத்து அதனை முதலீடாக்கி நான் ஒரு போதும் வியாபாரம் நடத்தவில்லை.அப்பாவித் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதி இந்த வியாபாரிகளின் பின்னால் அணிதிரள்கிறது. உங்களது அடையாளத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதற்குப் பயன்படுத்துங்கள். இந்திய தமிழின வாதிகளோ ஒடுக்கப்பட்ட தமிழர்களின் புனிதம் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தித் தம்மை வளர்த்துக்கொள்கிறார்கள். போராட்டம் என்று வரும் போது ஒதுங்கிக் கொள்கிறார்கள். முள்ளிவாய்காலில் ஒரு இனம் அழிக்கப்பட்டபோது தமிழ் நாட்டில் மக்களை அணிதிரட்டி இவர்கள் எழுசியை ஏற்படுத்தி இருக்கலாம்.
இவ்வாறான சந்தர்பவாத அரசியல் வியாபாரிகள் மக்களை ஏமாற்றிகொண்டிருப்பதால் தான் முள்ளிவாய்க்கால் காலங்களில் அருந்ததி ராய் போன்றோரின் குரல் கூட சாகடிக்கப்பட்டது. இன்று இந்தியாவில் நடக்கும் இன அழிப்பிற்கு எதிராக உலக அபிப்பிராயம் உருவாகி வருவதுபோல் இப்போது கூட எம்மால் எதுவும் செய்ய முடியாமல் உள்ளது. இன்னும் ஈழத் தமிழர்களை அழிவிற்கு அழைத்துச் செல்லாதீர்கள். சீமான் கம்பனி வேண்டுமானால் முதலில் அங்கு மிருகங்களாக நடத்தப்படும் ஈழத் தமிழர்கள் அனைவரையும் விடுவித்து தம்மை நிரூபித்துக் காட்டடும். அதன் பின்னர் அவர் நல்லாட்சி என உதாரணம் காட்டும் மத வெறியன் நரேந்திர மோடியைப் பற்றிப் பேசட்டும்.
உண்மையைப் பேசுகிறீர்கள் தன் சோற்றீற்கே தள்ளாடும் தமிழனின் இயலாமையைப் பயன்படுத்திக் காசு பண்ணூம் திருடர்கள இனங்காட்டுகிறீர்கள் ஆனால் இந்தக் குருடாகிப் போன தமிழர் மட்டும் தமது பார்வை வேண்டாம் எனப் பகிஸ்கரிக்கிறார்கள், எப்படி நாம் நம் மக்களீடம் புதுய பார்வையை ஏற்படுத்தப் போகிறோம்.
அது சரி நீங்கள் முதலில் புலம் பெயர்ந்த தமிழர்களை தாயகத்திற்கு திரும்பச் செய்யும் சூழலை ஏற்படுத்துங்கள்.
புலம் பெயர்ந்தோர் நாடு திரும்புதல் நடக்க கூடிய காரியமா அப்பு.
நீர் திரும்பமாட்டீர்?
பூந்தமல்லி, செங்கல்பட்டு ஆகிய சிறப்பு முகாம்களில் பல ஈழத் தமிழ் அகதிகள் வருடக்கணக்கான வழக்கு விசாரணை இன்றி அடைபட்டுள்ளனர். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீமான். செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 3 பேர் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 13 ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதில், செல்வம், அருங்குலசிங்கம், தர்மலிங்கம் ஆகிய அந்த மூன்று பேரில், செல்வத்தின் உடல் நிலை மோசமாகி அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களைச் சந்தித்த செங்கல்பட்டு தாசில்தார் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு சம்பிரதாயப்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், போராட்டக்காரர்கள் அவரின் வேண்டுகோளை ஏற்கவில்லை.தங்களை விடுவித்து, தமிழ்நாட்டில் இதர முகாம்களில் வசித்துவரும் தங்கள் உறவினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். இதே கோரிக்கையைத்தான் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களும் கோரி வருகின்றனர்.இலங்கைக்கு உணவு கடத்தினார்கள், மண்ணெண்ணை கடத்தினார்கள், இரத்தம் கடத்தினார்கள் என்கிற குற்றச்சாற்றின் பேரிலும், ஐயத்தின் பேரிலும் செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லி முகாமில் 4 தமிழர்களும் ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் உள்ளனர்.அவர்களை, சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தவறு செய்திருந்தால் தண்டியுங்கள் என்றும் இல்லை எனில் எங்களை விடுவித்து இதர முகாம்களில் உள்ள எங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்பதுமே அவர்களின் கோரிக்கையாகும்.
ஆனால் கடந்த ஆட்சியில் அவர்களின் எழுப்பிய கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவும், அடக்குமுறைக்கு உட்படுத்தப்படும் நிலையைத் தான் ஏற்படுத்தியதே தவிர, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. ஐயத்தின் பேரால் ஈழத் தமிழர்கள் பலரை இப்படி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைத்து வைப்பது என்பது கடந்த திமுக ஆட்சியில் அடிக்கடி நடைபெற்றது. அங்குள்ளவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக ஏதாவது செய்து பிரச்சனையை அன்றைய திமுக அரசும் அங்குள்ள அதிகாரிகளும் திசை திருப்பினர். ஆனால், அவர்களை விடுவிக்க மறுக்கின்றனர்.இப்படி வழக்கு, விசாரணையின்றி அவர்களை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மறுப்பாகும் என்பதை எடுத்துக்கூறி தமிழர் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திவிட்டன.
ஆனால் அன்றைய திமுக அரசு இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஈழத்தில் போர் முடிந்த பிறகு வன்னியில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட நிலையே, இங்கு சிறப்பு முகாம்களில் என்ற பெயரில் இருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு அவமானமல்லவா?எனவே, தமிழகத்தின் முதல்வராக 3 வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
ஆக அண்ணாசீ, நீங்க சீமானுக்கு எதிராக பேசுற அல்லாரையும் வாய மூடூங்கிறீங்க!! புலிகளின் வாரிசு போலகீது? பொழப்பு புட்டுகினு போய்டுமோ?
சீமானா? யாரப்பு அவர்? வேலி எல்லாம் வேட்டியைக் காயப் போட்டிருக்கும் சலவைத் தொழிலாளீ சமூகத்திற்கு சேவை செய்கிறான் ஆனால் அரசியல் வாதி மக்கள கொள்ள அடிக்கிறான்.இதில் சீமான் யாரப்பு.
புலி எதிர்ப்பாளர்கள் பன்னாடையோ? சரியாகத்தான் எழுதியிருக்கிறீயள். 😆 😆 😆 😆 😆
அப்படியானால வால் பிடித்தோர்.
உழவுசெய்ய, பார வண்டி இழுக்க, காளை அடக்க, பொங்கல் சிறக்க, திலகமிட்டு மகிழ, பயிருக்கு எருவிட, மூத்திரம் உரமிட, நெற்றியில் நீறணிய, முதலிரவில் பலமேற்ற, பாலகர் வளர்ச்சிபெற, முதியவர் மூப்புநீங்க, வாயிலூற்றி பாடைக்கு அனுப்ப, பால், தயிர், மோர், வெண்ணை நெய்தந்து, கடவுளுக்கும் அபிஷகப் பொருள் வழங்கி, முடிவில் பதமான இறைச்சியாகி அனைத்தையும் வழங்கும் பலம்கொண்ட வீரியமுடைய மாடுகளை, தங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு, மனிதர்கள் எப்படி எப்படிப் பாவிக்கின்றார்களோ, அப்படியே உலகமின்று ஈழத்தமிழர்களைப் பாவிக்கின்றது. இதற்கு அடியெடுத்துக் கொடுத்து இந்தியா. அதுவே பெரும் சிறப்பு. அருந்ததி ராய் திலகமிட்டால், திருமாவளவன் காளை அடக்குவார், றோ இறைச்சியுண்ணும் அவ்வளவே.
தமிழனுக்கு ஒரு நாடு அமையாவிட்டால், ஈழத்தமிழர்நிலை தமிழ்நாட்டுத் தமிழனும் பெறுவான், உலகத்தமிழனும் பெறுவான். அக்காலமும் வெகுதூரமில்லை.
உலகெங்கும் எம் உறவுகள் ஏதிலிகளாய் அலைவதற்கு காரணம் சிங்கள பேரினவாதமும் சிங்கள பேரினவாதிகளுமே.தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள உறவுகள் ஈழம் வரவேண்டும் .தமிழகத்திலாவது பாலியல்தொல்லைகள் வெள்ளை வேன் கடத்தல்கள் இன்றியாவது மானத்துடன் உயிர் வாழ்கிறார்கள்.ஆனால் இங்கு நித்திய கண்டம் .ஆனால் பூரண ஆயுசு இல்லை?புலிகளின் ஆட்சியற்ற இன்றைய சூழலில் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகள் உயிருடன் திரும்பி வந்தால்தான் நிலை.இராசபக்சே இன்னும் புலி கரடி விட்டே ம்மிழர்களை வதைக்கிறான்.புலத்தில் சுகமாய் வாழ்ந்துகொண்டு உளறாமல் மீதமிருக்கும் தமிழர்களை காப்பாற்ற முனையவேண்டும்.மனசாட்சியே இல்லாமல் இப்படி எழிதி என்ன பயன்.அனைத்து உறவுகளும் தமிழீழம் திரும்ப வழிவகை காணவேண்டும்.
அட போங்க பாஸ். 30 வருசத்துக்கு மேல, இது போல பலபேர் வந்து கத்திட்டு போனதுதான் மிச்சம்.
2009 மே மாதம் 16ஆம் தேதி வரையில, துப்பாக்கி தூக்கி போராடி விட்டு, முடியாம, ஒரு ஈழத்து பெண் போராளி தப்பித்து, தமிழ் நாட்டுக்கு எப்படியோ குத்துயிரும், கொலையிருமா வந்து, ஏதோ தமிழ் நாட்டு இயக்கவாதிகள் தங்களை காப்பாத்துவாங்கன்னு நெனைச்சு, ஒரு வயது முதிர்ந்த தலைவருன்னு? சொல்லிக் கொண்டிருப்பவரிடத்திலே போயீ நின்னா, எல்லா கதையும் கேட்டுட்டு, ரூ.500 கவருல போட்டு கொடுத்துட்டு, இனிமே இந்த பக்கம் வர வேண்டாம். இத வச்சு பொலச்சுக்கோன்னு, சொல்லி அனுப்பினாரூ….
இத கேட்டுட்டு, அந்த பெண் போராளி, ஏன்தான் இங்கு தப்பி வந்தேனோன்னு, மனசு ஒடஞ்சு, தேம்பித் தேம்பி அழுது விட்டு, இப்போ இலவசம கிடைக்கிற அரிசியில வாழ்க்கைய ஓட்டுது…
இப்படிப்பட்ட தலைவனுக இருக்ககிற இடத்திலே, அருந்ததி ராய் ஏன்ன, யாரூ வந்தாலும் கவலை பட மாட்டானுக, நம்ம தலைவனுக. ஏதாவது ஒரு திட்டத்தை போட்டிட்டு, அதிலே எப்படி காச பாக்கலாம்னும் இருக்கற இவங்க கிட்ட, எதுக்கையா வேண்டு கோள சொல்லனும்… வேஸ்ட்
போர் நிறுத்தம் வரும் வரை என் உடலை அடக்கம் செய்ய விடாமல் போராடுங்கள் என்ற முத்துக்குமாரின் உயிர் ஆயுதத்தை இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அழித்தார்கள்.ஆனால் ஈழவிடுதலைக்காக உண்மையான உணர்வுடன் அங்கே பெருந்தொகுதி மக்கள் இருக்கிறார்கள்.நல்ல தலைமையின் கீழ் அவர்கள் அணிதிரளவேண்டும்
எம் வீரர்களை
எதிர்க்கும் திராணியற்று,
மானத்தை சூரையாடி…
மாதரை இழிவுச்செய்ய,
வரிசையில் நின்று
வல்லுறவு கொண்டப்பின்…,
மருத்துவச் சோதனையில் -தம்
உயிரணுக்கள்…உலகிற்கு
உணமையைச் சொல்லும் என்று
உடலுறுப்பில் வெடி சொறுகி
உடல் வெடிக்க வைக்கின்ற
சிங்கள இராணுவத்தின்
செயலை…என்னச்சொல்ல?
இது… சிங்களனுக்குக்
கைவந்தக் கலை _அவன்
உறுப்பால் செய்கின்ற கொலை
please stop this kind of writing please,there is no evidence about your complain sir.please.
உள்ளதைச்சொன்னால் உமக்கேன் கோபம் வருகிறது.நீர் சிங்களப்பேரினவாதத்துக்கு துதிபாடுவதை வேண்டுமானால் நிறுத்திக்கொள்ளும்
இதுக்கு என்ன சொல்றீங்க?
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வொஷிங்டனிலுள்ள அமெரிக்க சமஷ்டி நீதிமன்றமொன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
இலங்கையில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணைக்காவே அவருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்க சட்டத்தின் கீழ் பிரஸ்தாப வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மாணவர் ரஜிஹரனின் தகப்பனார், மூதூரில் அக்ஷன் பெய்ம் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கொல்லப்பட்ட பிரேமாஸ் ஆனந்தராஜாவின் ஆகியோரின் உறவினர்களும் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தவராஜா குடும்பத்தினர் ஆகிய மூன்று தரப்பினர் கூட்டிணைந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக முப்பது மில்லியன் நஷ்டஈடு கோரி மேற்குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நீதிக்குப் புறம்பான மேற்படி படுகொலைகளால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் தங்கள் வழக்கின் பிரதிவாதியாக இலங்கை முப்படைகளின் கட்டளைத் தளபதி என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிட்டுள்ளனர்.
இனஅழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் துணையுடன் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரான புரூஸ் பெயின் ஊடாக குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சித்திரவதைகளுக்கெதிரான ஹேக் பிரகடனத்தில் அமெரிக்காவும், இலங்கையும் கையெழுத்திட்டுள்ள நிலையில் அதே சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் எந்தவொரு நாட்டினருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமென்ற விதியைப் பயன்படுத்தியே பிரஸ்தாப வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. அதற்கான அழைப்பாணை நீதியமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
தமிழகத்தின் எண்ணவோட்டத்தை சிங்களப்பேரினவாதிகள் புரிந்துகொள்ளவில்லையென்றால் இராசராச்சோழன் படைகொண்டு வந்து சிங்களத்தை ஒடுக்கிய நிலை கட்டாயம் வரலாம்.அதற்கு நீண்டகாலம் ஆகாது? இலங்கை இனப்பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு குறித்து சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ராஜபக்சே போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளன.
//கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்// கச்சதீவு, வட கிழக்கு ஈழத் தமிழரின் பகுதி. தமிழ் நாட்டில் ஈழத் தமிழரின் உரிமைக்கான ஆதரவு சிந்தனையை மட்டும் வளர்க்க வேண்டும், ஆதரவு சிந்தனையை ஆதிக்க சிந்தனையாக்காமல் தமிழ் நாட்டு முற்போக்கு சக்திகள் தமிழ் நாட்டில் செயல் படுகிறார்கள்.
தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்
சிங்களப்பேரினவாதிகள் ஈழத்தைவிட்டு வெளியேறட்டும்.ஈழ விடுதலை நடந்தேறட்டும்.கச்சத்தீவு எங்கிருந்தால் என்ன ?
“தமிழகத்தின் எண்ணவோட்டத்தை சிங்களப்பேரினவாதிகள் புரிந்துகொள்ளவில்லையென்றால் இராசராச்சோழன் படைகொண்டு வந்து சிங்களத்தை ஒடுக்கிய நிலை கட்டாயம் வரலாம்.அதற்கு நீண்டகாலம் ஆகாது” கனவுகள் காண்பதற்கும், கனவுகளில் வழ்வதற்கும் (சிலர் இதை மனப்பிற்ழ்வு என்று சொல்வார்கள்) உங்களுக்கு முழு உரிமையுண்டு. நாட்டில் உள்ள மக்கள் கனவுகாண்பதை நிறுத்திவிட்டார்கள். உங்கள் ஆஸ்தான கவி புதுவையின் வார்த்தையில் ” கண்ணீரானது கனவு, கம்பலையானது வாழ்வு ,ஒரே ஒருதரம் விழிகளை திருப்பி, எஙகளை பாருங்கள்”
புதுவை எங்கள் மண்ணீன் பாரதிதாசன் அவனையும் எம்மால் காப்பாற்ற முடியவில்லை ஆனால்…………..இராசராசன் என்றூ தினமும் பகற்கனவு மட்டும் காண முடிகிறது.என்ன உலகமய்யா இது/
அப்பு, இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலையிருந்து தமிழர் சாட்சியோடு கொடுத்த முறைப்பாடுகளை எல்லாம் சிங்கள அரசு விசாரித்து, விளங்கி, நீதிவழங்கினதுமல்லாமல் முறைப்பாடு குடுத்தவையை மோட்சத்துக்கும் அனுப்பிவைத்திருக்கிற விசயம் உங்களுக்கு தெரியாதோ. இப்ப நீங்கள் சொல்லுகிற விசயங்களுக்கும் சாட்சி தேடிக்கொடுத்தா பாருங்கோ தமிழ்மாறன் மகிந்தாட்டை சொல்லுவார் மகிந்தாவும் உங்களுக்கு மோட்சத்துக்கு போற வழியை காட்டிவிடுவார். நீங்கள் பிழையா விளங்கி அவரை கோவிக்காதையுங்கோ. இப்ப எங்களுக்கு வேறை வேலை வந்திருக்கு பாருங்கோ, உந்த நாடுகடந்த அரசாங்கத்துக்கை வந்து அதை விழுத்த வெளிக்கிட்டவை சிலபேர் வழுக்கி விழுந்து ஏதோ ஜனநாயகம் என்று ஊளையிட்டவை. இப்ப கீரைக்கடைக்கு எதிர்கடைமாதிரி தாங்களும் ஒரு நாடுகடந்த அரசாங்கத்தை தோற்றுவிக்கபோகினமாம். பொங்குதமிழிலை செய்தி வந்திருக்கு. வாங்கோ நாங்கள் மக்களிட்டைப்போய் இதை சொல்லி, அவை ஏமாறாமல் உசார்படுத்த வேணும்.
இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தனியானதோர் நாடு உருவாக்கப்படவேண்டுமென வலியுறுத்தும் கையெழுத்து இயக்கமொன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆரம்பிக்கவுள்ளது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 14ஆம்இ 15ஆம் திகதிகளில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதன்போதே மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனித் தமிழ் நாடொன்றுக்காக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் சுமார் 10 இலட்சம் பேரிடம் கையெழுத்துப்பெறும் மாபெரும் இயக்கத்தை மேற்கொள்வதென தீர்மானித்துள்ளது.
அண்மையில் ஐ . நா பேரவையின் மனித உரிமைகளுக்கான விசாரணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் மக்கள் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளும் போக்குற்றங்களை இழைத்துள்ளதாக சிங்களவர்களுக்கும் இணையாகக் குற்றம்சாட்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகள் ஆகும். மாபெரும் இனப்படுகொலை மேற்கொண்ட சிங்கள இனவெறியர்களையும் தற்காப்புப் போர் நடத்திய விடுதலைப் புலிகளையும் சமப் படுத்தியிருப்பதை நடுநிலையான அணுகுமுறையானதெனக் கருதமுடியாது.
ஆகவே விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் இழைத்துள்ளதாக ஐ.நா. பேரவை வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற்று ராஜபக்ஷ உள்ளிட்ட சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டும்.
இனப்படுகொலைக் குற்றவாளிகளாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கு வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. பேரவையை இந்தகக் குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
எங்கள் பகைவர்கள் எங்கோ மறைந்தனர் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே.திருமா தேசியத்தலைமையின்மீதும் தமிழீழ விடுதலைமீதும் அளப்பறிய ஈடுபாடு கொண்டவர்.
தமொழுக்கும் அமுதென்றூ பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாரதிதாச்ன் பாடலைக் கேட்டு விட்டு ப்ரதேசி திருமா வளவனை தமிழ் உணர்வாளன் என்றால் எது உண்மை அய்யா?எது தேசியம்? நமது தல்மை ச்மபந்தர் அய்யா என்பதை அறீயீரா?எடுத்ததெற்கெல்லாம் தல,தல என்றூ உயிரை எடுக்கிறீரெ?
சனாதன மாறன்! தமிழ் மட்டுமல்ல எந்தமொழிக்காரனுக்கும் தன்மொழியை அமுதமாக, தேனாக, பாலாக நினைக்கின்ற உரிமையுண்டு. கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தில் முன் தோன்றி மூத்த தமிழ் என்ற பீலாக்கள் எல்லாம் தமிழின அடிப்படைவாதத்திலிருந்து பிறந்தது என்பதை அறியீரா?
சிங்களம் பேரினவாதிகளாக இருக்கும் மொழுது தமிழரால் என்ன செய்யமுடியும்?வந்தாரை (சிங்களரை)வாழவைத்தோம்.ஆளவைத்தோம்.இன்று போரிலும் அறம் கண்டு சிங்களத்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம்.திருமாவை பரதேசி என்னதிலிருந்து உம் ஆதிக்கச்சாதிவெறி வெளிப்படுகிறது?நம் தலைமையின் ஆட்சியில் சிங்களன் ஒண்ணுக்கு வெளிக்கிட்டு நின்னவியல்?இனி பொறுத்திடோம் .இனி ஒரு விதி செய்வோம்.தாய்தமிழகத்தின் துணை ஏற்போம்.
அது சரியே ஆனால் இந்த திருமா அங்கும் இங் கும் ஓடி அலைபவர் அவருக்கு என்றூ ஏதாவது கொள்கை உண்டா? விமர்சணங்கள ஏற்றூக் கொள்ளாது எரிந்து விழுவதுதான் அவரது பண்பா/
சிங்களப்பேரினவாதிகள் ஈழத்தைவிட்டு வெளியேறட்டும்.ஈழ விடுதலை நடந்தேறட்டும்.கச்சத்தீவு எங்கிருந்தால் என்ன ?
பெரும் பகுதி தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். உறுதியான ஒரு அரசியல் தீர்வு வந்தாலொழிய இது நடந்தேறுவதை யாராலும் தடுக்க முடியாது.
தலைவனோடு கூடவிருந்து குழிபறித்த பரதேசிகளும் வெளியேறட்டும்.
அப்போ புலத்திலிருந்து விடுதலைக்கு குழி பறித்தோர்?
இதற்கு சிங்களப்பேரினவாதமே காரணம் .அதற்கு வால்பிடிப்பவர் கூலிக்கு மாரடிப்போரே?
முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்சனை பற்றித்தான் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் பேசினார்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசு, கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அய்யநாதன் தீர்மானங்களை வாசித்தார்.
பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய சீமான்,
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் தீர்வு என ஜெயலலிதா கூறியிருந்தார். அதை தேர்தல் நேரத்துப் பசப்பு வார்த்தைகள் என அப்போது சிலர் கூறினர்.
தேர்தலில் அதிமுக வென்றதோடு மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியபோது, இது வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடும் என்றும் சிலர் கூறினர்.
ஆனால் அண்மையில் டெல்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்சனை பற்றித்தான். அதனால் ஈழப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது.
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.
இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்பது நிச்சயம்.
காங்கிரஸ் கட்சியின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை. அதிமுகவின் தயவுதான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை. எனவே அதிமுக ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றார்.
தூக்கில் தொங்கி என் உயிரை விடுவேன்
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. எந்த தமிழன் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டுமென்று கேட்டான். வீம்பிற்காக காங்கிரஸ் அரசு சில காலத்திற்கு அந்த கப்பலை ஓட்டுவிட்டு பின்னர் நிறுத்திவிடும்.
தொடர்ந்து இந்த கப்பலை ஒரு ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அரசு ஓட்டி காட்டட்டும். நான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்கில் தொங்கி என் உயிரை விடுகிறேன்.
இலங்கைக்கு எதிராக மற்ற மாநில அரசுகளின் தலைவர்களிடமும்இ இந்தியாவின் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் பேசிஇ இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை தீர்மானத்தை நிறைவேற்றுமாறு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.
கச்சதீவை மீட்பதற்கான முயற்சியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் வரவேற்கிறோம்.
அதோடு, இருநாடுகளுக்கிடையேயான கடற்பகுதியில் எவ்வித தடையுமின்றி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்திய – இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தையே ரத்து செய்வது தான் சரியானதாக இருக்கும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.
தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களை கண்காணிப்பது அவசியம் என கருதினால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஈழத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்கியிருக்குமாறு கட்டளையிடலாம்.
உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வியை பொறுக்க முடியாமல் இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இந்திய நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.
sariyana saataiyadi…..nanbare….inda puli vaal pidikkum arasiyal komaligal ….mha veerargal…….ivangal ellam koodiya seekiram kanamlal povargal…..