ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைப் பாசிஸ்டுக்களுடனும் அழிக்கும் அதிகார வர்க்கத்துடனும் அடையாளப்படுத்தும் சீரழிவு நடவடிக்கைகள் தொடர்கின்றன. தென்னிந்தியாவில் பாரதீய ஜனதா என்ற மத அடிப்படைவாதப் பாசிசக் கட்சி உலகின் மிகப்ப்ரும் இனக் கொலையாளியான ஹிட்லரின் தத்துவங்களை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் கட்சியாகும். ராஜபக்சவைப் போன்றே குஜராத்தில் இனப்படுகொலை நடத்திய நரேந்திர மோடி என்ற நரபலியாளனை பிரதமர் வேட்பாளராக இக்கட்சி நிறுத்தியுள்ளது. ஈழத் தமிழர் பெயரால் அரசியல் வியாபாரம் நடத்தும் வை.கோபாலசாமியின் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இக்கட்சியில் முக்கியமானவரும் இந்து பயங்கரவாதிகளில் ஒருவரும், இலங்கை அரசு பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது எனப் பாராட்டுத் தெரிவித்தவருமான சுஷ்மா சுவாஜ் பின்வருமாறு தெரிவித்துள்ளார் ‘லோக்சபா தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை பாமகவுடன் பேசி வருகிறோம். ம.தி.மு.க.வுடன் ஏற்கனவே பேசி விட்டோம். அக்கட்சி பா.ஜ.கவுக்கு ஆதரவு அளிக்கிறது. தே.மு.தி.க.விடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம். கேப்டன் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஜனவரி மாத மத்தியில் சென்னைக்கு விஜயம் செய்வார்.’.
வை.கோவை தீனிபோட்டு வளர்த்த புலம்பெயர் புலி சார் அரசியல் வியாபாரிகள் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் வை.கோ வைக் கண்டுகொள்ளாது மௌனம் சாதிக்கின்றனர். இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை உலகம் தழுவிய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக முன்னெடுக்கும் போது அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர்.
சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அவமானகரமான பாசிசமாக வெளிக்காட்ட முனையும் வை.கோ போன்றவர்களை கண்டிக்கக்கூடத் திரணியற்ற தமிழ் விதேசியத் தலைமைகளே ராஜபக்சவினதும் மோடியினதும் உற்ற நண்பர்கள்.
உமது கருத்து மிகவும்ச பிழையானது..தவறான வழியில் அடியெடுத்து வைத்துள்ளீஈர்கள்.மிது தொடர்ந்தால் வீழ்ச்சி நிச்சயம்