புத்தளத்தை சேர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களிர்க்கிடையிலான புரிந்துணர்வை ஏற்ப்படுத்தும் சகோதரி.ஜன்சில மஜீத் (Ms. Jansila Majeed) அவர்கள் அமெரிக்க அரச செயலாளர் திருமதி. ஹில்லரி கிளிண்டன் அவர்களால் “சர்வதேச பெண்களிற்கான விருதிற்கு (International Women of Courage award) தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இவர் புத்தளத்தில் Community Trust Fund என்பதற்கு காப்பாளராக இருந்து சிறுபான்மை இனத்தினரினதும், பெண்களினது பிரச்சனைகள், உரிமைகள், இனங்களிர்க்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்தல், புனர்வாழ்வு, இளையோருக்கான வேலைத்திட்டங்கள், வடகிழக்கில் மிதிவெடி அபாயம் சம்பந்தமான அறிவு சார்ந்த விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துவது மட்டுமல்லாமல், முக்கியமாக தனது புத்தளம் மாவட்டத்தில் தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் மக்களிர்க்கிடையிலான புரிந்துணர்வை ஏற்ப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறார்.
இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவர் கடந்த 20 வருடங்களாக ஈழத்தில் எமது இனத்திற்கு அழகாக அழைக்கும் சொல்லான, “இடம் பெயர்ந்தவர்” என்ற அடையாளக் குறியுடன் புத்தளத்தில் வாழ்வது மட்டுமல்லாமல் தமது சொந்த மண்ணை, வாழ்விடங்களை விட்டு தம் சொந்தத நாட்டினுள்ளே தன்னைப்போல் அகதியாக “இடம் பெயர்ந்தவர்கள்” என்ற குறியுடன் வாழும் சக தமிழ் முஸ்லிம் சகோதரர்களுக்கு ஆரோக்கியமான முறையில் வாழ்க்கை முறை, சுகாதாரம், பெண்களின் விழிப்புணர்ச்சி முதலியவற்றை எடுத்துரைத்து சேவையாற்றி வருவதுடன், பொதுவாக, முக்கியமாக அவர் சார்ந்த சிறுபான்மை இனமான முஸ்லிம் இடம்பெயர்ந்தவர்களின், குறிப்பாக பெண்களின் பிரச்சனைகள், தேவைகள் இனம்கண்டு, நாட்டு அரசியல் சூழ்நிலைகளுக்குமிடையில் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இவருக்கு கிடைத்திருக்கும் International Women of Courage award உலகத்திலுள்ள சமூகங்களிக்கிடையிலான பெண்களின் போராட்டங்கள், மனித உரிமை, சமூக நீதிக்கா போராடுபவர்களுகாக மார்ச் 2007ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தால் தொடக்கி வைக்கப்பட்டது.
மேலும் இவருக்கு கிடைத்திருக்கும் இவ்விருது உலகத்தில் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்படும் பத்துப் பேரில் ஒருவருக்காக இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெரும் மற்றயவர்களின் விபரங்கள்:
Shukria Asil (Afghanistan), Col. Shafiqa Quraishi (Afghanistan), Androula Henriques (Cyprus), Sonia Pierre (Dominican Republic), Shadi Sadr (Iran), Ann Njogu (Kenya), Dr. Lee Ae-ran (Republic of Korea), Sister Marie Claude Naddaf (Syria), and Jestina Mukoko (Zimbabwe).
தகவல்:
அலெக்ஸ் இரவி
இலங்கை அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைக்கு:
http://usembassycolombo.blogspot.com/2010/03/sri-lankan-recognized-as-international.html
ஜன்சில மஜீத் என்ற சமூக சேவகி!!!
ஈழத்து மண்ணிலே பிறந்த இனமொன்று
வாழ்கின்ற வயதிலே வளமிழந்து இடம்பெயர்ந்து
சூழ்கின்ற துயரங்கள் சுழன்றடித்த போதினிலே -மனமும்
பாழ்பட்டுப் போகாமல் பக்குவப் படுத்தவேண்டி
ஆழ்ந்த சிந்தையுடன் அயராது பாடுபட்டு -தோல்வியில்
மூழ்கிப்போய் மூலையிலே முடங்கிக் கிடக்காமல்
வீழ்ச்சியில்லா வீறுகொண்ட வீரமான மாதரசி!
தாழ்வில்லை உன்பணிக்கு தரணியிலே முன்னுரிமை!!
மங்கிய பொழுதொன்றில் இருபது ஆண்டுமுன்னே
பொங்கிவந்த கண்ணீரை வெறுங்கையால் துடைத்துவிட்டு
எங்குதான் போவதென்ற ஏங்கிய உள்ளத்தோடே
தங்களின் சொத்துக்களை வடக்கிலே விட்டுவிட்டு-அகதிக்கு
பங்களிக்கும் பாசப்பூமி புத்தளம் வந்தடைந்த
நங்கையர்கள் வாலிபர்கள் நலிந்த முதியோர்கட்கு……
“உங்களுக்கு நாமிருக்கோம்” என்றவொரு நம்பிக்கையை
அங்கு வழங்கினார்கள் அன்பான மானிடர்கள்.!
‘ஜன்சில மஜீத்” என்ற சமூகநலச் சேவகியே!
சனங்களின் புனர்வாழ்வைச் சரித்திர நிகழ்வாக்கி
மனம் மொழி மெய்யறிவு மாறாத தியாகச்சிந்தை…..
இனங்களின் பாதுகாப்பை ஏற்றமாய் நடாத்துவதால்…..
தன்நம்பிக்கை விடாமுயற்சி தளராத மனவுறுதி…..
தன்னலம் சிறிதேனும் தலைகாட்ட முடியாத
பொன்மனச் செல்வியெனப் பொதுமக்கள் போற்றுவரே!
மென்மேலும் உனதுசேவை மேதினியை உயர்த்தட்டும்!!
வாழ்த்துரை எழுதியவர்;—-வள்ளீயம்மை சுப்பிரமணியம்.
புலிகளினால் அகதியாக்கப்பட்டு சர்வதேச விருது பெற்றுக்கொண்ட சகோதரி ஜன்சிலா மஜீத்!
எமது ஈழத்து தமிழ் முஸ்லிம் சகோதரி ஜன்சிலா மஜீத் இன்று (மார்ச் 10) 2010 ஆம் ஆண்டிற்கான தைரியமிகு பெண்மணிக்கான விருதை (International Women of Courage – IWOC) அமெரிக்க இராஜாங்க செயலகத்தில் நடந்த விருது வழங்கும் வைபவத்தில் அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் கிலரி கிளின்டனிடமிருந்து பெற்றார்.
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீர் ஊற்றை பிறப்பு இடமாகக் கொண்ட சகோதரி ஜன்சிலா மஜீத் அவர்கள் யாழ் . ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி தொடர்ந்திருந்த வேளையில் 90களில் தமிழீழ விடுதலை புலிகளால் யாழ் மண்ணை விட்டு குடும்பத்துடன் விரட்டப்பட்டு புத்தளத்தில் கடந்த 20 வருடங்களாக அகதியாக வாழ்ந்து வரும் வேளையில் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களிக்கிடையில் சமூக நம்பிக்கை நிதியம் (Community Trust Fund) என்ற அரச சார்பற்ற அமைப்பு மூலம் நிருவாக நம்பிக்கையாளராக (managing trustee) சேவை புரிந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.
விருது வழங்கும் போது வாழ்த்து தெரிவித்த இராஜாங்கச்செயலாளர் கிலரி கிளின்டன் கூறினார், ” கடந்த 20 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் சகோதரி ஜன்சிலா மஜீத் அவர்கள், புத்தளம் மாவட்டத்தில் வாழும் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையேயான ஓர் குறிப்பிடத்தக்க பெண் என்றும், புத்தளம் பிராந்திய சக நம்பிக்கை நிதியத்தின் நிருவாக நம்பிக்கையாளராக திகழ்கின்றார் என்றும், அவருக்கு இன்று கொடுக்கப்படும் விருது, அவரின் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மையிரையிடயான தலைமைத்துவம், புனர்வாழ்வு, இடம்பெயர்ந்தவர்க்கான மீள் குடியேற்றம், மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும், அந்த சமூகங்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்கும், முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளதற்கும் ஆகும்” எனத் தெரிவித்தார்.
SECRETARY CLINTON: Jansila Majeed of Sri Lanka is a women who lived as an internally displaced person for almost 20 years. She became one of the few women activists working on behalf of the displaced Muslim and Tamil civilians and is the managing trustee of the Community Trust Fund in Puttalam Province. She’s being honored for her dedicated grassroots activism and minority community leadership on behalf of women and girls, their empowerment, peace building, relief work, the resettlement of internally displaced persons, and a commitment to bringing society together. Congratulations.
ஆண்டுதோறும் தெரிவு செய்யப்படும் பத்துப் பேரில் ஒருவருக்காக இவருக்கு கிடைத்திருக்கும் இவ் விருது, 2007ஆம் ஆண்டு அப்
போதைய இராஜாங்க செயலாளர் கொண்டலிசா ரைசினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு சர்வதேச அளவில் தலைமைத்துவம், பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றத்திற்காகத் துணிவுடன் சிறப்பாகப் பணியாற்றும் பெண்கள் பத்துப் பேர் வருடந்தோறும் தேர்வு செய்யப்படுகின்றார்கள்
இன்று இவ்விருதை சுக்ரியா (ஆப்கானிஸ்தான்), சபீக்கா குரைஷி (ஆப்கானிஸ்தான்), அன்ட்ரொலா ஹென்ரிக்ஸ் (சைப்ரஸ்), சோனியா பியரே (டொமினிகன் குடியரசு), ஷாடி சத்ர் (ஈரான்), ஏன் ஜோகு (கென்யா), டாக்டர். லீ அய்ரன் (கொரியா), மேரி கிளெடே நதாப் (சிரியா). ஜெஸ்டினா முகோகோ (ஸிம்பாப்வே) ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
விருது வழங்கும் விழாவிற்கான விடியோ; சகோதரி ஜன்சிலா மஜீத் விருது பெறுவது 38 -40 நிமிடத்தில் இணைக்கபட்டுள்ளது:
http://www.dailymirror.lk/index.php/video/2279-international-women-of-courage-awards-2010.html
விருது வழங்கும் வைபவத்தில் அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் கிலரி கிளின்டன், அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா ஆகியோருடன் ஜென்ஸிலா மஜீத் எடுத்துக்கொண்ட படம்:
http://sec.wbir.com/photo/0evj47N3yc2LH?q=Sri+Lanka
துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதினை பெற்ற ஜென்சிலாவுடன் சர்வதேச பெண்கள் தின நேர்காணல்
http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=921
புகைப்படத் தொகுப்பு:
http://www.virakesari.lk/VIRA/Online_Gallery/ms_jenzilamajeedphotos/index.htm
முன்னைய தொடர்பான செய்திக்கு:
ஈழத்து பெண்ணிற்கு “சர்வதேச பெண்களிற்கான விருது!
https://inioru.com/?p=11030
நூறாவது சர்வதேச பெண்கள் தினம்!
https://inioru.com/?p=11225
சர்வதேச பெண்கள் தினத்தின் வரலாற்றுப் பரிணாமம்!
https://inioru.com/?p=11219
சர்வதேச பெண்கள் தினம் நூறாவது ஆண்டு-நாம் என்ன செய்யவேண்டும்!
https://inioru.com/?p=11267
மேலும் தொடர்பான செய்திக்கு:
http://www.state.gov/s/gwi/iwoc/2010/bio/137497.htm
http://transcurrents.com/tc/2010/03/post_506.html
http://www.peacemuslims.org/Jansila_Majeed_receives_prestigious_IWOC_award-20-1479.html
யாழில் இருந்து தமீழீழ விடுதலைப் புலிகள் விரட்டப்பட்டு 10 ஆண்டுகள் (சந்திரிக்கா காலத்தில்) ஆன நிலையிலும், வன்னியில் இருந்து தமீழீழ விடுதலைப் புலிகள் விரட்டப்பட்டு ஓர் ஆண்டு ஆகும் நிலையில், அதற்கிடையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து, பாராளுமன்றத் தேர்தல் வாசற்கதவை தட்டும் நிலையில் இடம்பெயர்ந்து அகதிகளாக தம் சொந்த மண்ணிலேயே உள்ள முஸ்லிம் சகோதரர்களை இதுவரை அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தாத நிலையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சினால் “தீரமிக்க சர்வதேச மகளிர் விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்ட எமது ஈழத்து சகோதரி ஜன்சிலா மஜீட் வடக்கு மாகாண சபையினால் எதிர்வரும் வியாழக்கிழமை கௌரவிக்கப்படவிருக்கிறார் என்பதுவரப்போகும் பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியா என்று சந்தேகத்தை கிளப்புகிறது. அத்துடன் இக்கௌரவிப்பு நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் பிற்பகல் நடைபெறவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Resettlement efforts are under way for thousands of displaced Muslims from Sri Lanka’s north who have been languishing in refugee camps for nearly two decades, officials say.
The internally displaced people (IDPs) were forcibly evicted in October 1990 from the northern districts of Jaffna, Mannar, Kilinochchi, Mullaithivu and some parts of Vavuniya by the insurgent Liberation Tigers of Tamil Eelam (LTTE).
About 75,000 Muslims are estimated to have fled, making their way towards government-controlled areas in Vavuniya and Anuradhapura, as well as to Puttalam District on the northwestern coast, according to the International Crisis Group (ICG).
While some of the IDPs have constructed houses and others have been living with host families, most are still in the camps, where conditions are basic, although there is access to clean water and sanitation.
Many of the IDPs were fishermen, farmers or butchers before fleeing but they now mostly work as labourers or masons.
But even with the prospect of resettlement, the decision to return home for Muslim IDPs – after 20 years in Puttalam – is not clear-cut.
At the Saltern Internal Displacement Camp in Puttalam, some IDPs said they had visited their ancestral homes in Jaffna, Mannar and the north of Vavuniya. They found their houses had been destroyed and their belongings looted.
For in full:http://www.irinnews.org/Report.aspx?ReportId=88503