Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழத்து –தமிழகத்துக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் : சேனன்

இனியொரு... by இனியொரு...
04/11/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
15
Home பிரதான பதிவுகள் | Principle posts

40th Ilakkiyach Chanthippu -London - 6th, 7th April 201340வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்த வேண்டும் என்று தொடங்கிய இலங்கை அரசு சார்ந்து இயங்குபவர்களின் அடாவடித்தனம் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று வாதிட்டவர்கள் 40வது இலக்கியச் சந்திப்பை லண்டனில் நடத்தினர். இதற்கான எதிர்ப்புடன் கலந்துகொண்ட அரசு சார் இலக்கியவாதிகள் அடுத்த சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக பறித்துச் சென்றுள்ளனர்.

இவர்களின் நோக்கத்தையும் அவர்தம் அரசியற் பின்னணியையும் அனைத்து முற்போக்கு எழுத்தாளர்களும் கண்டிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஈழம் இன்றிருக்கும் நிலையில் அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கிய‌ம் என்று பேசுவது தவறு. சுயநலன்களுக்கும் அப்பாலான ஒடுக்கப்பட்டோர் அரசியல் சார்ந்து சிந்தித்து எத்தகைய அரசியலைப் பலப்படுத்துகிறோம், எதைப் பலவீனப்படுத்துகிறோம் என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தயவு செய்து யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் ‘புலம்பெயர் இலக்கியச் சந்திப்புக்கு’ உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். நடத்துவோரின் அரசியலைக் கண்டிக்க வேண்டும்.

1.
ஈழத்தில் இலக்கியக் கூட்டம் போட அங்கிருக்கும் இலக்கியவாதிகளின் உரிமையை யாரும் கேள்வி கேட்க முடியாது. எல்லாப் பிரச்சினைகளுக்குள்ளும், தடைகளுக்குள்ளும் அங்கு பத்திரிகைகள் வருகின்றன; கூட்டங்கள் நடக்கிறது. பல காத்திரமான எழுத்துக்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

2.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குச் சென்று கூட்டம் போடலாம் என்பதையும் மறுக்கவில்லை. அப்படி ஒரு கூட்டத்தில் அதை நடத்துபவர்கள் தாம் ‘அதிகாரத்துக்கு எதிர்’, ‘அரசுக்கு கண்டணம்’ என்றெல்லாம் கூடப் பேசலாம். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட பாராளுமன்றத்தில் வெளுத்து வாங்கியிருந்ததை அறிவோம். பல்வேறு எழுத்தாளர்கள் தமது கடும் எதிர்ப்பைப் பதிந்துதான் வருகிறார்கள்.

3.
எதிர்ப்பரசியலுக்குள் இருந்து முளைத்த வரலாறு இலக்கியச் சந்திப்புக்குண்டு. கடும் எதிர்ப்பிலக்கியம் செய்யும் கலைஞர்களின் தளமாக இருக்கவேண்டும் – பல்வேறு வகையில் ஒடுக்குதலுக்கு உள்ளான கலைஞர்கள் ஒன்றுகூடும் இடமாக இருக்க வேண்டும் – ஒடுக்கப்பட்டோர் அரசியலையும் கலையையும் பேசும் தளமாக இருக்க வேண்டும் – கருத்துச் சுதந்திரத்தைப் பலப்படுத்தவேண்டும் ‍ போன்று பல்வேறு அடிப்படைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட, பல்வேறு கலைஞர்கள் இச்சந்திப்புடன் நீண்டகால உறவு கொண்டவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இவர்களுள் சுசீந்திரன், லட்சுமி, ரஞ்சி, உமா போன்றவர்கள் லண்டன் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்கள்.

4.

இருப்பினும் பல ஆண்டுகளாக இலக்கியச் சந்திப்பின்மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பல கலைஞர்கள் சந்திப்பில் நின்று விலகி நிற்க இது காரணமாக இருந்தது. கிழக்கின் உதயம் என்ற பெயரில் கருணா, பிள்ளையான் முதலான அதிகார சக்திகளின் பிரச்சாரக்கூடமாக இலக்கியச் சந்திப்பை மாற்ற முனைந்தனர் சிலர். டக்ள‌ஸ் தேவானந்தா, சிறிடெலோ என்று அரச சார்புக்குழுக்களின் ஆதரவாளர்கள் அல்லது அங்கத்தவர்களின் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. ‘மாற்று’ அரசியல் என்ற போர்வையில் கொலைகார அரசியலுக்கு புலத்தில் தளம் தேடியோர் இலக்கியச் சந்திப்பை நோக்கித் திரும்பினர் என்று கூறுவது மிகையில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சந்திப்போடு சம்மந்தப்பட்டோர் பலர் இந்த நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொண்டதை நான் உட்பட பலர் கண்டித்திருக்கிறோம். அவர்களுக்கு கருத்து சொல்ல இன்று பல தளங்கள் உண்டு. இலக்கியச் சந்திப்பிலும் அவர்கள் கலந்து கொள்ளலாம்; கருத்துச் சொல்லலாம். ஆனால் அவர்கள் தமது பிரச்சார நடவடிக்கைக்கு தளம் தேடுவதற்கு துணை போகக்கூடாது என்ற அடிப்படையில் நாம் இந்த விமர்சனங்களைச் செய்திருந்தோம். ஆனால் அவர்களின் ஆதிக்கம் வளர்வது தவிர்க்கப்படவில்லை. அராஜக அரசு ஆதரவாளர்கள் தமது அரசியல் நலன்களுக்காக இலக்கியச் சந்திப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டவட்டமான நகர்தலைச் செய்தது இன்று பல கலைஞர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

5.

இலங்கை கலைஞர்கள் கேட்டா அங்கு சந்திப்பு நிகழ்கிறது? இல்லை.

புலத்தில் நடந்துவரும் இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை இலங்கைக்குள் இருந்து எழவில்லை. அது பிரான்ஸ் கலைஞர்களிடம் இருந்துதான் எழுந்தது. அடுத்த சந்திப்பை இலங்கையில் நடத்துவோம் என்பது பிரான்ஸ் வாழ் தேவதாசிடம் இருந்து வந்த கோரிக்கை. ‘அவங்கள் அங்க பொன்னாடை போர்த்தித் திரியிறாங்கள். அவங்களுக்கொருக்கா நடத்திக் காட்டோனும்’ என்றும் பேசியதாகத் தெரிய வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் எழுத்தாளர்களைத் தாம் தொடர்பு கொண்டு அங்கு இச்சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்ததை தேவதாசும் அசுராவும் லண்டன் சந்திப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.

6.

லண்டன் சந்திப்பின்மேல் அவதூறு

‘இலங்கை இலக்கியச் சந்திப்பின் ஊடக அறிக்கை’ என்ற தலையங்கத்தோடு ஒரு அறிக்கை மார்ச் 28ல் தேவதாசின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. அது 40வது இலக்கியச் சந்திப்பின்மேல் பின்வரும் தாக்குதல்களைச் செய்தது.

‘மூன்றாவதாக ஒரு பொது அரங்கை நிர்மானித்து அதன் உச்சியில் பௌசரும் கிருஸ்ண‌ராஜாவும் அமர்ந்திருந்து தீர்ப்பு வழங்க எத்தனிக்கும் அவல நாடகத்தை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.” என அறிவித்துக்கொண்டது அவ்வறிக்கை.

‘லண்டன் இலக்கியச் சந்திப்பின் செயல் வெறுக்கத்தக்கது.’ என்று சாடியது அறிக்கை.

தாம் இலங்கையில் சந்திப்பு நடத்துவது மறுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து யூலையில் சந்திப்பை நடத்திக் காட்டுவோம் என்றும் அவ்வாறான ‘பிளவு’ ஏற்பட்டால் அதற்கும் நீங்களே பொறுப்பு என்றும் மிரட்டியிருந்தது. இலக்கியச் சந்திப்பை உடைத்தாவது தாம் இதைச் சாதிப்போம் என்ற அவர்களின் அடாவடித்தனத்தையும் அவர்தம் மொழியில் இருக்கும் அதிகாரத்தையும் இவ்வறிக்கையை படிப்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும். தவிர இந்த அறிக்கையை ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனைபேர் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற கேள்வி எமக்குண்டு. ஆக இவ்வறிக்கையின் தலையங்கத்தைப் பொய்ப்பாவனையாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இது தவிர இணையத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மேல் கேவலமான அவதூறுகள் தூவிவிடப்பட்டுக் கொண்டிருந்தது.

7.

லண்டனில் நடந்தது என்ன?

சுசீந்திரன், ரஞ்சி. லட்சுமி, ராஜா, பௌசர் நான் உட்பட பலர் அடுத்த இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தோம். தேவதாஸ் முதற்கொண்டு பலர் இந்தச் சந்திப்பை புறக்கணிக்க நின்றனர். அவர்களை வரவழைத்தது தான்தான் என்ற ராகவன் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கலாம் என்றார். நாடுகடந்த தமிழீழம் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி சனநாயகம் பேசுவதெல்லாம் விசர்க்கதை என்றவர்கள் எல்லாம் விழுந்தடித்துக் கைதூக்கினார்கள். நாங்கள்தான் பெரும்பான்மை என்று ஒருவர் சத்தமாகச் சொல்லிக்கொண்டார். இந்த விசர்த்தனமான சனநாயகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிறகு சந்திப்புக்குழு கூடி முடிவெடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து அதிகாரங்களுக்கும் எதிராக நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் அடுத்த சந்திப்பை இவர்கள் நடத்தலாம் என்று முடிவை பௌசர் அறிவித்தார். அடுத்த சந்திப்பை எங்கு நடத்துவது என்பதையும் இங்கு தீர்மானிக்க வேண்டும் என்றார். ஜேர்மனியில் நடத்துங்கள் என்று சொல்லி கொதிப்பில் நின்ற சுசீந்திரனை வளைச்சுப்போடும் முயற்சி நிகழ்ந்தது. நீங்கள் புலமபெயர் இலக்கியச் சந்திப்பை இச்சமயத்தில் இலங்கைக்கு எடுத்துச் செல்வது சந்திப்பை உடைப்பதற்குச் சமன் என்று அவர்கள் முன்பு வைத்த மிரட்டலை அவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. முடிவை அறிவித்த போதும் ராஜா, பௌசர் உட்பட பலரும் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர். ‘வந்திட்டான் உடைக்கிறதுக்கு’ என்று என்மேலும் அனாவசியமாக தாக்குதல் நடத்தினர். எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வரலாற்றில் பதிய வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் உறுதியாக இருந்தது தெரிந்தது. சந்திப்பு அரசுசார் கலைஞர்கள் – அரச எதிர்ப்புக் கலைஞர்கள் என்று பிரிந்தது என்று சொல்வது மிகையில்லை.

ஏற்கனவே அரசுசார் ‘கலைஞர்கள்’ அள்ளி எறிந்து கொண்டிருந்த பொய்கள், புரட்டுகள், அடாவடிக் குற்றச் சாட்டுகள் என்பவற்றை பலரும் வரிசைப்படுத்தியிருந்தனர். கேவலமாக அரச எதிர்ப்பாளர்களை அரசுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்தது தொடங்கி காசுவாங்குவது ஈறாக கேவலமான முறையில்தான் இந்த அரச ஆதரவாளர்கள் தொடர்ந்து இயங்கி வந்தனர் என்பதை யமுனா ராஜேந்திரன், பௌசர், ரஞ்சி ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்காக தேவதாஸ் ‘பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்று பாலா பலதடவை வற்புறுத்தி அவரை மன்னிப்புக் கேட்க வைத்தார். இவர்கள் எல்லாரும் வெள்ளாள சாதி அரசியல் செய்பவர்கள் என்ற குண்டைத் தூக்கி எறிந்தார் கீரன். சாதி வெறி இப்படியும் கிளம்பும் என்ற உய்தறிவின்றி ரஞ்சி கலங்கிப்போய் நின்றதையும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் அனைவரும் பார்க்கக்கூடியதாக இருந்தது. தலித் என்ற சொல்லை எப்ப கீரன் கண்டுபிடித்தவர் என்று சிலர் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டனர்.

அரச எதிர்ப்புக் கலைஞர்கள் மேல் குற்றச் சாட்டுகள் வாரிக்கொட்டப்பட்டது. உரத்து நடந்த உரையாடலில் ஒவ்வொருவரையும் சுற்றி நின்று விதண்டாவாதத்தை ஏற்கும் படி அழுத்தம் கொடுக்கப்பட்டது. படங்கள் எடுக்கப்பட்டது. அதிகாரங்களுக்கு எதிராக என்று தொடங்கி இலக்கிய சந்திப்பு தளம் எவ்வாறு அதிகாரங்கள் கொக்கரிக்கும் தளமாக சிலரால் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்தது. அவர்கள் வெற்றிபெற்றதாக நினைத்துக்கொண்டு சென்றார்கள். தனி ஒரு மனிதன் இருக்கும் வரையும் உங்களின் வெற்றி வெற்றியல்ல என்று மற்றவர்கள் துக்கத்துடன் கலைந்தார்கள்.

8.

யாரிந்த அரச ஆதரவாளர்கள்?

தேவதாஸ், அசுரா போன்றவர்கள் தலித்துகளின் பெயரால் மகிந்த அரசின் புகழ் பாடுபவர்கள். யுத்தத்தை நிறுத்திய செயலுக்காக மகிந்த அரசுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தவர்கள். மகிந்த அரசை முற்றாக எதிர்ப்பது தவறு என்று பகிரங்கமாக பேசி வருபவர்கள். இவர்களுக்காவது எதிர்ப்பரசியல் செய்த பழைய வரலாறுண்டு. புலி எதிர்ப்பு தவிர வேறு அரசியல் தெரியாதவர் ராகவன். புலி எதிர்ப்பு ஒன்றை மட்டுமே அரசியலாக வைத்து இயங்கும் ராகவன், நிர்மலா போன்றவர்கள் அண்மைக்காலமாகத்தான் சந்திப்புடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள். தம்மை எதிர்ப்போரை கேவ‌லமான முறையில் மட்டம் தட்டி மற்றையவர்களையும் அவர்களுக்கு எதிராக திருப்பி உடைக்கும் வேலிச் சண்டை அரசியல்தான் இவர்கள் அரசியல். இவனுக்கென்ன தெரியும் என்று தன்னை நிர்மலா மட்டம் தட்டியதை ராஜா பதிவு செய்திருந்தார்.

இவர்கள் புலி எதிர்ப்பு என்ற ஒன்றை முன்வைத்தே தமது முடிவுகளுக்கு தாவுகிறார்கள். வன்னி மவுஸ் என்ற குறுந்திரைப்படம் விம்பம் விருதுக்கு தகுதியானதாக இருந்தபோதும் அந்தப்படம் ‘புலிப்பொடியனால்’ எடுக்கப்பட்டது என்பதால் அதற்கு விருது கொடுக்கப்படக்கூடாது என்று ராகவன் வாதித்ததை ராஜா பதிவு செய்திருந்தார். இவர்களின் இந்த வக்கிர அரசியல் லண்டன் வாழ் கலைஞர்கள் பலருக்கும் தெரிந்ததே. புலிகள் கொல்லப்பட்டது பிரச்சினையில்லை; மக்கள் கொல்லப்பட்டதுதான் பிரச்சினை என்று கொலைக்கு வக்கால‌த்து வாங்குபவர் சோபாசக்தி. இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தலித்துகள், பெண்கள், குழந்தைகள் இலங்கை இராணுவத்தால் வேட்டையாடப்பட்டதை அது பிரச்சினையில்லை என்று ஒதுக்கிக்கொண்டு தலித் அரசியல் முத்திரை கேட்டு அலையும் கேவலத்தை என்ன சொல்வது? இந்த அரசுசார் தரப்பினரின் செயற்பாடுகள் நன்கு பதியப்பட்டிருக்கிறது.

9.

அதிகார‌த்தை எதிர்ப்பார்களா?

முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைக்கு எதிராகப் பேசிய தோழர் தான் லண்டனிற் பேசுவதைக்கூட அளந்துதான் பேசவேண்டியிருக்கு என்று பச்சையாக போட்டுடைத்திருந்தார். இதே கூட்டத்திற் கலந்துகொண்டிருந்த ஒருவர் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட கிராமங்களை முன்னேற்றுவதற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்து போராடி வருபவர். அவர் அதிகாரங்களுக்கும் எதிராக இருக்கிறார் என்பதால் அவரது புகைப்படம் எடுக்கப்பட்டது பற்றி நமக்கு பயம் உண்டாகியிருக்கிறது.

இவர்களின் அரசுசார் அரசியற் பின்னணியைத் தெரிந்த பின்பும் இவர்கள் அதிகார எதிர்ப்பு செய்யப் போகிறார்கள் என்று நம்ப முடியுமா? என்னே வேடிக்கை. யாழ்பாணச் சந்திப்பின்போது பொலிசை வைத்து கைதாகி வெளியாகும் ஸ்டண்டை உருவாக்கக்கூட உங்களுக்கு சக்தியிருக்கிறது. எமது அழுத்தம் காரனமாக டக்ள‌சுக்கு மாலைபோட்டு கூட்டம் தொடங்குவதை நீங்கள் தவிர்க்கலாம் – அதைக்காட்டி உங்கள் அவியலில் வேகச் சொல்லி எங்களைக் கேட்காதீர்கள்.

அரச வாகனங்களிற் பயணிக்கும் அவர்கள், கூட்டம் போட்டு அது அரச எதிர்ப்புக் காட்டும் என்கிறார்கள் – அதை நாம் நம்பவேண்டுமாம். எப்படியாவது மகிந்த அரசுக்கெதிரான எதிர்ப்புகளை மழுங்கடிப்பது என்பது இவர்கள் தலையாய குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக இவர்கள் தலித்துகள், முஸ்லிம்கள் என்று எந்த ஒடுக்கப்பட்ட சிறுபான்மையையும் பாவித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். தலித் மக்களின் பெயரில் நீங்கள் செய்யும் அநியாயத்தை நாம் முடிந்தளவு அம்பலப்படுத்துவோம். அதிகார சக்திகள் எத்தகைய முகமூடிகளைப் போட்டிருந்தாலும் அது கிழித்துக் காட்டப்படுவது வரலாற்றில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இவர்கள் கூட்டம் போடுவார்கள்; கூத்தடிப்பார்கள். அதற்காக அவர்களுக்கு இருக்கும் உரிமைக்கும் சேர்த்துத்தான் நாம் போராடுகிறோம். ஆனால் நீங்கள் அதிகாரத்தை எதிர்க்கிறீர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கதைக்கிறீர்கள் என்ற பம்மாத்துகளுக்கு நாம் எடுபடமுடியாது.

10.

காந்தியக் காய்சல்

இந்த அரச ஆதரவாளர்களிற் பலர் காந்தியவாதிகளாகவும் தங்களை அறிவித்துக் கொள்கிறார்கள். அடிபட்டது போதும் இனி இணக்கமாக வாழவேண்டும் என்று காந்திய ஆலோசனை வழங்குகிறார்கள். இதில் பலர் சொந்த வீடு- குடும்பம் ‍வள‌ர்ந்து ‘நல்லாவரும்’ குழந்தை குட்டிகள் என்ற ‘நல்’ வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களுக்கு இணக்கம் சாத்தியப்படலாம். நித்தம் வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தினமும் இராணுவத்தினரால் வன்பாலுறவுக்குள்ளாக்கப்படுபவர்களுக்கு இந்த இணக்கம் எப்படிச் சாத்தியம்? இவர்கள் புறவய காரணிகளை கண்டுகொள்ள மறுக்கிறார்கள் என்று நாம் சுட்டிக் காட்டினால் காரசாரமாக இடதுசாரிய மறுப்பு – மார்க்சிய மறுப்பு வாதிகளாக தம்மை மாற்றிக் கொண்டு வாதத்தை புறந்தள்ள முயற்சிக்கிறார்கள். இவர்களில் யாரும் இன்று வரைக்கும் தாம் சொல்லும் காந்தியம் என்ன என்றோ அல்லது தாம் தற்போதைய சமூக-அரசியல் நிலவரத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்றோ எதையும் எழுதியதில்லை என்பதையும் இங்கு பதியவேண்டும். ஏனென்றால் இது ஏதோ அவர்கள் தத்துவார்த்த முறையில் எடுத்த முடிவு என்ற பிழையான முடிவுக்கு நீங்கள் தாவி விடக்கூடாது. அவர்கள் தமது ஸ்டண்டுகளுக்காக அவ்வப்போது எடுக்கும் ஆயுதங்களில் ஒன்று இது.

11.

வளரும் குற்றச் சாட்டுகள்.

பானுபாரதி, மலர் பத்மநாதன் போன்றோர் சாஸ்திரி என்ற எழுத்தாளர் லண்டன் சந்திப்பில் கலந்துகொண்டமையைக் காரசாரமாக விமர்சித்து வருகிறார்கள். சாஸ்திரி பல மோசமான எழுத்துக்களை எழுதியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததே. இன்று படுகொலை அரசின் ஆதரவு சக்திகளுடன் சேர்ந்து கூக்குரலிடுவதுதான் வேடிக்கையான விசயம். ‘புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது என்ற கருத்து பரவலாக உள்ளது அதுதானா இது’ என்று சாதாரண‌ கேள்வியைக் கேட்ட யோ.கர்ணணுக்கும் அடி விழுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளை இவர்கள் எவ்வாறு வகுத்துக் கொள்கிறார்கள் என்று பாருங்கள்.

12.

இனி…

யாழ்ப்பாண‌ இலக்கியச் சந்திப்பு அரசியலுக்கு மறுப்பைக் கடுமையாக பதிவு செய்ய வேண்டும் என்பதில் பலரும் உறுதியாக இருக்கிறார்கள். இலக்கியச் சந்திப்பு இவர்கள் கைகளுக்குள் நிரந்தரமாக போய்விடக்கூடாது என்பதற்காக ஜேர்மனியில் அடுத்த சந்திப்பு நிகழவேண்டும் என்றும் கோரப்படுகிறது. எதிர்ப்பிலக்கியவாதிகள் ஓய்ந்து போய்விடப் போவதில்லை. ஏதோ ஒரு வழியில் அவர்கள் தமது இருத்தலைக்கூடி பதிவு செய்த வண்ணம்தான் இருப்பர்.

அரச ஆதரவாளர்களுக்கு பரந்த எதிர்ப்பை பதிவது இன்று அவசியம். தயவு செய்து தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

– சேனன், 0044 7908050217 ( senann@hotmail.com)

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: இலக்கியம்கல்விஅரச பயங்கரவாதம்
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீடிப்பு

இந்திய அரசு புலிகளுக்கு 50 லட்சம் இந்திய ரூபாய்களை வழங்கியது

Comments 15

  1. mano says:
    13 years ago

    இன்று தலித்தியம் பேசுபவதுகளை எடுத்துப் பார்த்தால் இவர்களில் பலர் தலித்துக்களே அல்லர். அப்பட்டமான தலித்போலிகள் இவர்கள். இன்னும் சிலரோ தலித் மேலோங்கிகள். அதிலும் வேடிக்கை என்னவென்றால் ராகவன் கடந்த காலத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களில் நேரடியாக சம்பத்தப்பட்டவர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தலித்தியம் பேசுவதே மிகவும் சந்தர்ப்பவாதமானது. அப்பட்டமான பிழைப்புவாதம் இது.
    யாழ்ப்பாணத்தல் இலக்கிய சந்திப்பை நட்த்த மறுப்பது என்பது தலித்துக்களுக்கு எதிரான செயற்பாடு என்பதை கண்டுபிடித்தவருக்கு பரிசு வழங்கித்தான் ஆகவேண்டும். இது அரச ஆதரவுக்கு அப்பட்டமாக போடப்படும் மூடுதிரையாகும். இவர்களது தலித் அக்கறை மாத்திரமல்ல கிழக்கு ஆதரவு முஸ்லிம் ஆதரவு பெண்ணிய அக்கறை போன்ற அனைத்துமே தமது அரச ஆதரவுக்கு மூடுதிரையாக இந்த ஒடுக்கப்பட்ட மக்களது அடையாளங்களை பயன்படுத்திக் கொள்வது என்ற பயன்பாட்டு அரசியலைக்கடந்து வேறு எதுவுமில்லை.
    ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலையில் அக்கறையுள்ள அனைவருமே இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை கண்டித்தாக வேண்டும்.
    மிகவும் ஒடுக்கப்பட்ட தலித்துக்களை நாம் வேறு எங்கும் தேடத்தேவையில்லை இன்று “விடுவிக்கப்பட்டு” அரசின் கண்காணிப்பின் கீழ் துன்புற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் புலி அங்கத்தவர்கள் இந்த தலித்துக்களேயாவர். இவர்களை தொடர்ந்து வேட்டையாடும் அரசின் கைக்கூலிகளான இவர்களுக்கு தலித்துக்களைப்பற்றி பேச எந்த யோக்கியதையும் கிடையாது.
    இவர்கள் அனைவருமே அரசின் கைக்கூலிகளே என்பதை மீண்டும் ஒரு தடவை உரத்துச் சொல்வோம்.

  2. mano says:
    13 years ago

    இன்று தலித்தியம் பேசுபவதுகளை எடுத்துப் பார்த்தால் இவர்களில் பலர் தலித்துக்களே அல்லர். அப்பட்டமான தலித்போலிகள் இவர்கள். இன்னும் சிலரோ தலித் மேலோங்கிகள். அதிலும் வேடிக்கை என்னவென்றால் ராகவன் கடந்த காலத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களில் நேரடியாக சம்பத்தப்பட்டவர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தலித்தியம் பேசுவதே மிகவும் சந்தர்ப்பவாதமானது. அப்பட்டமான பிழைப்புவாதம் இது.
    யாழ்ப்பாணத்தல் இலக்கிய சந்திப்பை நட்த்த மறுப்பது என்பது தலித்துக்களுக்கு எதிரான செயற்பாடு என்பதை கண்டுபிடித்தவருக்கு பரிசு வழங்கித்தான் ஆகவேண்டும். இது அரச ஆதரவுக்கு அப்பட்டமாக போடப்படும் மூடுதிரையாகும். இவர்களது தலித் அக்கறை மாத்திரமல்ல கிழக்கு ஆதரவு முஸ்லிம் ஆதரவு பெண்ணிய அக்கறை போன்ற அனைத்துமே தமது அரச ஆதரவுக்கு மூடுதிரையாக இந்த ஒடுக்கப்பட்ட மக்களது அடையாளங்களை பயன்படுத்திக் கொள்வது என்ற பயன்பாட்டு அரசியலைக்கடந்து வேறு எதுவுமில்லை.
    ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலையில் அக்கறையுள்ள அனைவருமே இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை கண்டித்தாக வேண்டும்.
    மிகவும் ஒடுக்கப்பட்ட தலித்துக்களை நாம் வேறு எங்கும் தேடத்தேவையில்லை இன்று “விடுவிக்கப்பட்டு” அரசின் கண்காணிப்பின் கீழ் துன்புற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் புலி அங்கத்தவர்கள் இந்த தலித்துக்களேயாவர். இவர்களை தொடர்ந்து வேட்டையாடும் அரசின் கைக்கூலிகளான இவர்களுக்கு தலித்துக்களைப்பற்றி பேச எந்த யோக்கியதையும் கிடையாது.
    இவர்கள் அனைவருமே அரசின் கைக்கூலிகளே என்பதை மீண்டும் ஒரு தடவை உரத்துச் சொல்வோம்

  3. ரஃபேல் says:
    13 years ago

    சேனன் வணக்கம்.
    இந்த இலக்கியச் சந்திப்பு பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியது.
    என்னதான் அங்கே நடந்தது என்று யாராவது எழுதுவார்கள் என்று தொடர்ந்து அய்ரோப்பாவிலிருந்து வரும் இலக்கியம் தொடர்பான 3 இணையங்களைதான் துளாவிக்கொண்டிருந்ததுதான் மிச்சம்.
    ஒருவரும் அதை எழுதியபாடில்லை. வந்திருந்த அழைப்பிதழ் அறிவிப்பிலிருந்து அங்கு ஏதும் இலக்கியம் உசாவப்படவில்லை என்பதும் ஒருபுறும் தெரிந்ததே.
    இந்நிலையில் அடுத் இலக்கியச் சந்திப்புக்கு மறுப்பறிக்கை நீங்கள் எழுதுகிறீர்கள்.
    முதலில் தமிழகத்தில் இருந்து படி;பபோருக்க இந்த இலக்கியச் சந்திப்பு என்றால் என்ன என்பதை யாராவது எழுதி;தந்தால்தானே அவர்கள் புரிந்துகொள்ள முடியும். தொடருவோம்.
    ( ஆசிரியருக்குஇ வரிகளுக்கு மேல் பெட்டியில் தெரிவதில்லை. அதனால் எழுதும் போது எழுத்துப்பிழைகள் தொடர்ப்பிழைகள் பின்னூட்டத்தில் கண்டு பிடிக்க முடியாதிருக்கிறது.
    பொறுப்புணர்வுடனும் தனியாளுமைத் தாக்குதல் இன்றியும் உரையாடல் அமைந்தால் இந்த இணையத்தில் பின்னூட்டம் இடலாம்.
    தற்போதும்கூட மீண்டும் சேனன்-இலக்கியச் சந்திப்பு என்பதனாலேயே எழுத வருகின்றேன். என்னைப்போன்றவர்களைத் துரத்துவதும் இணையத்துக்கு வரவைப்பதும் உங்களைப் பொறுத்தது.

    இணையம் புதிய மாற்றத்தின் பின் எந்த பிரவுசரிலும் எப்போதும் மேலும் கீழுமாகஆடிக்கொண்டிருக்கிறது. இது உங்கள் வாசகர்களைக் குறைக்கும். வாசிப்பிற்கு கடினம்.
    முதலாவது பெட்டிச்செய்திகளின் அளவு மாறுகையில் அதற்கு ஏற்றாற்போல் இணையம் துள்ளுகிறது – மேலும்கீழுமாக ஆடுகிறது. சரி செய்யுங்கள். –நன்றி.)

    • sara says:
      13 years ago

      ரபேல், மற்று இலக்கிய சந்த்திப்பு  நண்பர்களே.
      இலக்கிய சந்த்திப்பு  என்றால் என்ன? அது தங்களை தாங்களே புத்திசீவிகள் என்று  பம்மாத்துக் காட்டும் கூட்டத்தின்  பார்பகீயூ பார்ட்டி. அதுக்கு வேற  விளக்கமும்  விண்ணாணமும்.  ரூம்  போட்டு யோசிக்காமல்  பெரிசா  ஹோல்  எடுத்து யோசிக்கிற கூட்டம் இது.  அது  சரி  ‘இலங்கைக்கு  போகக்கூடாது’  பெளசர்  இப்ப என்ன டக்கி  மாமாவோட ஊடலா? சும்மா  போங்கையா    நீங்கெல்லாம்.  காதுல  பூ வெச்சே பழகிப் போன  நீங்கள்  திருந்த இடமே இல்ல. 

      • ரஃபேல் says:
        13 years ago

        வணக்கம் சரா! எனது கோரிக்கையின் நோக்கம் வேறு. நான் அறியாததால் அல்ல.

        ஐரோப்பியப் புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு என்ற அழைக்கப்பட்டு புலிகளுக்க எதிரான கருத்துக்களை தைரியமாகப் பேசும் இடமாக அறியப்பட்ட இச்சந்திப்பிடம் பற்றி இந்தியாவில்வாழும் நம் தமிழக நண்பர்கள் அறிவார்களா?

        இந்தக் கட்டுரையை சேனன் கீற்றுவிலும் எதிர் இணையத்திலும் பதிந்துள்ளார். அதைப்படிப்பவர்கள் உங்களைப்போல புலம்பெயர் அய்ரோப்பிய இலக்கியச் சந்திப்புப் பற்றி அறிந்தவரல்லர். அவர்களுக்கு ஒரு விளக்கம் தெளிவு வேண்டாமா என்ற வகையில் கேட்டேன்.
        இலக்கியச்சந்திப்பை முன்னர் பலரும் ‘லக்கியச் சந்திப்பு’ என்று சொல்லும் அழகே தனி! ம்…அது ஒரு காலம்.

  4. sara says:
    13 years ago

    டக்ளஸ் குழுமத்துகும்  மகிந்த குழுமத்தும்  இடையேயான  உள்வீட்டு  ஊடல் தான்  இந்த  முரன்பாடு  என்று சொல்றார்கள்.  அப்படி  இல்லை என்றால்  இலக்கிய  சந்த்திலப்பில் என்ன  அரசாங்கத்தை  எதிராக சொன்னார்கள்.  கின்ஸ்டன்  சிறி  கைய  மடிச்சி  முஸ்டியை உயர்த்தி  மகிந்த எங்க  காலக்காட்டுங்கோ  என்றார்.  அவருக்கு  டொங்கெண்டு மகிந்த  கால்ல விழ வேண்டும்.

  5. Raju says:
    13 years ago

    “அது தங்களை தாங்களே புத்திசீவிகள் என்று  பம்மாத்துக் காட்டும் கூட்டத்தின்  பார்பகீயூ பார்ட்டி. ” 🙂

  6. கமலதாஸ் says:
    13 years ago

    ஜனநாயகம் பற்றி பேச சேனனுக்கு எந்த யோக்கியதையும் இல்லை.தலித்துக்களை பற்றியும் மிக அக்கறை காட்டுவதாகத் தெரிகின்றது.அதுவும் போலியானது.

    இந்த இலக்கிய சந்திப்பும் இசேனனும் மக்களுக்கு எதிரானவர்கள்.ஒடுக்குமுரைக்குள்ளாகு பவர்கள் எல்லாம் ” தலித்” என்பதான் உண்மை .அப்படி என்றால் ஈழத் தமிழர்கள் எல்லோரும் “தலித்துக்கள்” தான் என்பதை இங்கே யாரும்ஒத்துகொள்ளப்பவதில்லை.

    பிறகே இந்தச் சொல்லாடல் ? ஒடுக்கப்படுபவர்களுக்காக மிக நேர்மையாகவும்இ சரியாகவும் இபல தரப்பு மக்களையும் இணைத்து இலங்கை வரலாற்றில் போராட்டம் நடாத்தியவர்கள் தோழர் சண்முகதாசன் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியினரே.

    இந்த இலக்கிய சந்திப்பு வெறும் பம்மாத்து ! அதை எதிர்ப்பது என்பதும் அதை விட பம்மாத்து.! இதில் ஜனநாயகம் பற்றி ஒரு ஒப்பாரி!

  7. Vasanthan says:
    13 years ago

    யாழ்ப்பாணத்தில எத்தனை செத்தவீடு நடக்குது, எத்தனை சாமத்தியச்சடங்கு நடக்குது அப்படி இவையும் ஒரு இலக்கியச்சந்திப்பு செய்யப் போகினம். அவ்வளவுதான், இதுக்கு போய் சேனன் கொடுக்குக்கட்டி எழுத வெளிக்கிட்டது வேஸ்ட் ஃஒவ் டைம். 

  8. S.G.Ragavan (Canada) says:
    13 years ago

    ****சோஷலிச மயப் படுத்தி *** ஜனநாயக மயப் படுத்திய  அறிவியல் நிர்மலா அக்காவை தவிர வேறுயாரிடம் உண்டு? 

    (உண்மையில் புலிகளை ஜனநாயக மய படுத்தவே நிர்மலா 1980 களில் புலிகளுடன் சேர்ந்து வேலை செய்தார் என கேள்விப் பட்டேன்.) 

  9. Viyasan says:
    13 years ago

    senan, wonderful article, carefully written! well done.

  10. pidungi says:
    13 years ago

    இலக்கியச் சந்திப்பு எங்குநடத்துவது என்பதற்கு முன்னாடி கடந்த 40 இலக்கியச் சந்திப்புகளிலும் இலக்கியத்திற்காவும்,சமூக மேம்பாட்டிற்காகவும் எத்தனை தடங்களை இந்த இலக்கியச் சந்திப்பு முன்னோக்கி வைத்துள்ளது என்பது காட்டமான கேள்வி. அடிப்படையிலிருந்தே புலி எதிர்ப்பு என்கின்ற பேசு பொருளே இலக்கியச் சந்திப்பாயிருந்தது.எங்கு புலிக்கு எதிரான குரல் எழும்புகின்றதோ அவர்களை அரவணைத்தே இந்த இலக்கியச் சந்திப்பு வெள்ளம் இதுவரை ஒடியது. முள்ளிவாய்க்காலில் மூன்றே கால் இலட்சம் மக்களும் உயிருக்காகப் போராடிய போது “அதெல்லாம் புலி’ என்று ஒற்றைச் சொல்லில் பேட்டியழித்தவர்களை நாம் இன்னமும் மறந்துவிடவில்லை. மானிட மேன்மைக்கு இலக்கியம் வளர்ப்பதாயிருந்தால் எங்கு வைத்தால் தான் என்ன??? யாழ்ப்பாண மக்கள் அத்தனை பேரும் என்ன மகிந்தவின் புத்திரர்களா????? அரச அதிகாரத்துள்ளான தங்களது போட்டியில் தலித்தின் மற்றும் பெண்ணீயத்தின் வாயில் மண்ணள்ளிப் போடவேண்டாம்.

  11. sara says:
    13 years ago

    ரபேல்,
    //புலிகளுக்க எதிரான கருத்துக்களை தைரியமாகப் பேசும் இடமாக அறியப்பட்ட இச்சந்திப்பிடம் பற்றி //புலிக்கு எதிரான கருத்துக்களை தைரியமாகப் பேசுவது என்றால் என்ன. ஊரில கள்ளடிச்சுபோட்டு குய்யோ முறையோ என்டு பக்கத்துவீட்டு காரனை தீட்டித்தீர்ப்பது போலத்தான் இலக்கிய சந்திப்பு பார்பக்கியூவில நடந்தது. புலிகள் செய்த்த எல்லா அட்டகாசங்களையும் தங்களையும் செய்ய விடவில்லை என்றது தான் இந்த கும்பலின் மன உளைச்சல். அதுலை வேற பெண்விடுதலை, தலித்து…. இப்ப அவை எல்லாத்தையும் செய்ய இடௌவெளி கிடைச்சிருக்கு. அட்டகாசத்தை ஆரம்பிச்சுடீனம், கீரன் துவக்கோட பஜரோவிலை, தமிழ் துவக்கோட ரீயுட்டரி, நிம்மி அக்கா எஞிஓ, சேனன் இன்டர் நாசனல் புரட்சி, ரயா மாமா இணைய சண்டித்தனம்,
    முந்தநாள் வரைக்கும் டக்ளசின் கையாள், நேற்று அம்சாவின் அடியாள் இப்ப ஜனநாயகம் இதுதான் பௌசர். பௌசருக்கும் ரஜாவுக்கும் வர்க்க இணைவு. இதுக்கெல்லாம் ஹோல் எடுத்து யோசிக்கிறாங்கள். இதுக்குள்ள கிருசினராஜாவுக்கு சீசன் பேசிஸ்ல மக்கள் பற்று வந்து போகும்.
    சிறீ அண்ணர் முஷ்டி மடிச்சு மகிந்த தாத்தா வுக்கு வணக்கம். எலே ரபேல், இவங்கள் எல்லாம் யாரயாருகு ஆட்டைப் போட்டன் என்றா கேக்கிறம். மக்களின்ர பேரால போடுற கூத்த மட்டும் தானே பேசுறம்.
    சரி இந்தியாவில யாருக்கு இதெல்லாம் தெரிய வேண்டும் ரபேல்? சீமான், வைகோ, ..?
    அவன் காசு கொடுத்த பேசிட்டுப் போறான்.. இலன்கையில் நடத்துறதா, லண்டனில நடத்துறத, இல்ல நோர்வேயில் கப்பல் பிடிச்சு கடலுக்க நடத்துறதா…. என்ற கேள்வி எல்லாம் அதிகாரப் போட்டி. இப்ப ராகவன் குழு லண்டனில் நடத்தவேண்டும் எண்டால் பௌசர் மட்டக்களப்பில நடத்துவார். அஷ்ரப்பே எழும்பிவந்து ஆசீர்வதிப்பர் என்று சொல்லிடுவார்.
    இலக்கியச் சந்திப்பு தொடங்கி புலி அழியும் வரைக்கு அறையப் பூட்டிப்போட்டு பார்பகியூ போட்டாங்கள். இப்பா முத்ததில போடுராங்கள். இதுல வேற கட்டுரை, கத்தரிக்கா, இனியொரு மாமாற்று அரசியல்…..
    கொக்கரக்கோ……

  12. S.G.Ragavan (Canada) says:
    13 years ago

    கொச்சையாக இருந்தாலும்  சராவின்   இல(ள)க்கிய  வாதிகள் குறித்த பார்வை சரியானதே. ரஞ்சன் லாலவை தள்ளி விழுத்தி கொன்றுவிட்டு  தப்பியோடிய பேடீ புலிகளின் ஆயுத வரவை காட்டிகொடுத்தவர். புலிகளின் உள்வீட்டு பிளவுகளுக்கு தனது முந்தைய தொடர்புகள் மூலம் வழி ஏற்படுத்தியவர்  
    சிங்கள அரசின் தமிழின    அழிப்பு மூலோபாயத்திற்க்கு உதவும் மூதேவி பயலி சோரம் போவதையே தனது வாழ்க்கையாகக் கொண்டவர்கள். பூ இவர்களுக்கு ஒரு இலக்கிய சந்திப்பு.   

  13. Raajan says:
    13 years ago

    /ஐரோப்பியப் புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு என்ற அழைக்கப்பட்டு/ அது எப்படி கடந்த வருடங்களில் அமெரிக்க கண்டத்து கனடாவில்நுழைந்தது. எல்லாக் கண்டத்துள்ளும் நுழைகிற சந்திப்பு இலங்கைக்குள் நுழையாதோ????? டக்ளசின் காலை யார் பிடிக்கிறதெனும் போட்டியில் இவர்களுக்குள் குத்து வெட்டு/???மறுத்தனாகி புத்தகம் போட்டு, குடித்துநடிகனாகி இன்று மகிந்த கொடிநடுகின்ற அத்தனை பேரும் சிங்கள அரசின் தமிழின அழிப்பு மூலோபாயத்திற்க்கு உதவும் மூதேவிகள்தான்///

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...