இன்று ஈழத்துக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் மரணச்சடங்குகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாக் கலாசாரத்தை ஊடறுத்துக்கொண்டு ஈழத்துக் நாடகக்கலை வளர்ச்சியடைந்த எழுபதுகளில் கொடிகட்டிப் பறந்த அண்ணை ரைட் என்ற உரை வடிவ நாடகத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பாலச்சந்திரன் ஈழத்துக் நாடகக் கலையின் வளர்ச்சியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார். திரைப்படங்களில் நுளைந்து கொள்வதற்காக தென்னிந்தியாவை நோக்கிப் பயணமான நூற்றுக்கணாக்கான கலைஞர்களுக்கு மத்தியில் சொந்த மண்ணிலேயே தனது திறமையை வெளிப்படுத்தியவர் பாலச்சந்திரன்.
வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளா, இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர். –
சில்லையூர் செல்வராஜனின் ஆக்கமான ‘தணியாததாகம்; வடக்கிலும் கிழக்கிலும் கலைத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்து. அந்த நாடகத்தில் கே.எஸ்.பாலச்சந்திரன் பிரதானபாத்திரம் ஏற்றிருந்தார்.
கனடாவிற்கு புலம்பெயர்ந்த கே.ஸ்.பாலச்சந்திரன் அங்கு பெப்ரவரி 26, 2014 அன்று காலமானர்.
எழுபதுகளில் இயல்பாக வளர்ந்த ஈழத்துக் கலை தென்னிந்திய மூலதன ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளவேண்டியிருந்ததால் அதன் இயல்பிலேயே பல முற்போக்குக் கூறுகளைக் கொண்டிருந்தது. ஈழ தேசியக் கலையின் நவீன தோற்றத்தின் அக்காலத்தின் குறியீடுகளில் ஒருவராகத் திகழ்ந்த கே,எஸ்,பாலச்சந்திரன் கனடாவிலும் கலைத்துறையைக் கைவிடவில்லை.
அண்ணை ரைட்:
பாலு மகேந்திரா சாதனைகளும்… நினைவுகளும்…
ஒளி ஓவியன்
பாலு மகேந்திரா
சாதனைகளும் நினைவுகளும்
…
காலம்: March 02,2014
நேரம்: 2-6 p.m
இடம்: GTA Square Mall
Middlefield and Finch
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
மேலதிக தொடர்புகட்கு
ராம் சிவதாசன் 416-804-3443, 416-315-9397
விளம்பரம் பத்திரிகை மற்றும் சுயாதீன திரைப்படக் கழகம்
Vlambaram News Paper and Independent Art Film Society of Toronto