இலங்கையில் மதம் என்பது தொடர்ந்து ஓர் அரசியல் அமைப்பாக வலியுறுத்தப்பட்டு வந்தமை குறித்து இத்தருணத்தில் பேசுவது இன்றைய அரசியலுக்கு எவ்வாறு தொடர்புடையதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்கும் என்பது தெளிவாகும். ஓர் அரசு ஏன் மதத்தைத் தன் துணையாக எடுத்துக்கொண்டு இயங்குகிறது என்பது இலங்கையின் அரசியலைமைப்பில் பெளத்தத்திற்கு என்ன மாதிரியான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து அறியலாம். எல்லா மதங்களையும் அங்கீகரிக்கும் அதே வேளை புத்த சாசனம் என்பதை முதன்மையாகக் கொள்வதும் அதைக் காப்பாற்றி வளர்ப்பதும் அரசின் கடமை என்பதை 1978-ல் அரசியல் அமைப்பில் உள்ளடக்கியதும் உறுதி செய்ததும் சாதாரண அர்த்தத்தில் அல்ல. மேலும் மேலும் மதத்தின் கட்டமைப்பை அரசின் வல்லமைக்கு ஆதரனவானதாக மாற்றுவது என்ற அர்த்தத்தில் தான். அதற்கு ஏதுவாக அரசியல் வரலாறு முழுமையும் புத்த மதகுருக்களும் தொடர்ந்து அரசியல் குறுக்கீடுகளைச் செய்துள்ளனர்.
அயல்நாட்டு அரசுகள் குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற நாடுகள் ஈழத் தமிழர்களுக்காக ஆதரவு செலுத்திய போது மிகப்பெரிய கண்டனக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். அரசின் குரலாக மதகுருமார்கள் முன்னின்று நடத்திய இக்கண்டனக் கூட்டத்தில் அவர்கள் கூறியது, ’மற்ற நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிடக்கூடாது; இது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை. இதை நாங்களே தீர்த்துக் கொள்வோம்’, என்பது தான். இவ்விடத்தில் அரசு அளித்த பாதுகாப்பு உணர்வே, பெளத்த குருமார்களை அரசியல்வாதிகளாக இயங்கச் செய்தது. ஆக தொடக்கத்திலிருந்தே அரசு பேணிவந்த மத ஆதிக்க ஆட்சியின் விளைவால், இந்த மத குருமார்கள் மக்களுக்காக நிற்காமல் அரசிற்காக நிற்கத் தலைப்பட்டனர். சர்வதேச அளவில் யாரும் தலையிட முடியாத அளவிற்கு மதத்தால் இறுகிப்போன அரசு, இலங்கை அரசு. வரலாற்றிலேயே மதத்தைப் பயன்படுத்தி ஒரு மனிதக்கூட்டத்தை அழித்தொழித்த நிகழ்வுக்கு இலங்கை அரசும் அங்கு நிலவும் பெளத்தமுமே என்றென்றும் உதாரணமாயிருக்கும். கடந்து சென்ற அரசியல் பாதையில் இந்த மதகுருமார்கள் தமிழர்களுக்கு அடிப்படைகளைப் பெற்றுத் தருவதற்கான அரசியலமைப்புச் சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இதே காரணத்திற்காக 2000-ல் ஒரு பெளத்த மதகுரு இறக்கும் வரையிலான உண்ணாவிரதத்தைக்கூட மேற்கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு துறவியோ, குறிப்பாக பெளத்தத்தை உள்வாங்கிய ஒருவரோ செய்யக்கூடிய காரியமாக இது இல்லை. இனவாத உணர்வை பலப்படுத்தும் பரப்பும், செயல்களின் தொடர்ச்சி தாம் இவையெல்லாம். வேறுவேறு வடிவில் காலந்தோறும் தமிழர்களுக்கெதிரான போரை முடுக்குவிட்டவர்களின் இப்பெளத்த குருக்கள் கடுமையான அதிகாரங்களைப் பிரையோகித்துள்ளனர்.
அதற்குப்பின்பு, 2002 – லும் அரசியலமைப்பில் எந்த மாற்றம் செய்தாலும் அது மகா சங்கத்துடன் விவாதிக்கப்பட்டு செய்யப்படவேண்டும் என்றும் சிங்கள அரசின் விழைவைக் கருத்தில் கொண்டும் செய்யப்பட வேண்டும் என்றும், சிங்கள மக்களுக்கு மட்டுமே இந்த தேசத்துடன் அடிப்படையான உறவு உண்டு என்றும் இம்மத வாதிகளால் வலியுறுத்தப்பட்டது. மேலும் தேசிய அடையாளங்களும் பெளத்த குறியீடுகளால் மட்டுமே ஆனவையாக இருக்கவேண்டும் என வற்புறுத்தப்பட்டது. சமாதானக்குழுவில் இருந்த நார்வே தூதுவரை வெளியேற்ற மதத்தலைவர்கள் கையொப்பமிட்டு பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமிய கிராமங்களில் கூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. ஆழிப்பேரலை அழிவுக்குப்பின்பு புனரமைப்புப் பணியில் ஈழத்தமிழர்களுக்கு எந்த அளவிலும் பங்களிக்கப்படக்கூடாது என்பதற்காக புத்த மத வாதிகளால் போராட்டம் நிகழ்த்திக் கட்டுப்படுத்தப்பட்டது.
அரசு மதகுருமார்களுக்கு இத்தகைய அரசியல் முக்கியத்துவம் அந்த அரசால் தரப்பட வில்லையெனில், அவர்களுக்கு இத்தகைய மேலோங்கிய சமூக முக்கியத்துவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அரசும் இந்த மதவாதிகளை ஒரு நிறுவனமாக்கி தனது இனவாதத்துக்குப் பயன்படுத்தவில்லையெனில் இத்தகைய ஓர் இனவாதப்போரை அவர்களால் நிகழ்த்தியிருக்க முடியாது. எப்போதுமே இலங்கை வாழ் தமிழர்களுக்கு பண்பாட்டு ரீதியாக தங்களை தமிழகத் தமிழர்களோடு அடையாளப் படுத்திக்கொள்வதற்கான தேவை இருந்ததால் இந்த மத ரீதியான சூழ்ச்சியும் நடவடிக்கைகளும் தோற்கடிக்க முடியாதனவாக வளர்ந்துவிட்டன. இன்று இலங்கை அரசினை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது புத்த சாசனங்களும் அம்மதவாதிகளும் தாம். மேலும் ஒட்டுமொத்தமாக நடந்து முடிந்த இன அழிதொழிப்புக்கு அதுர்லியே ரதானாதான் நாம் அறிந்த எல்லா சிங்கள அரசியல்வாதிகளையும் விட முக்கியமான காரணம். இவரது பிரச்சாரத்தால் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கு மேலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தால் இணைந்தனர், தமிழர்களைக் கொன்று குவிக்க. அதுமட்டுமின்றி சமாதான நீரோட்டத்தைச் சேறாக்குவதில் இவரது பங்கு ராஜபக்க்ஷேக்களைவிட மேலதிகமானது. அவரது அடிப்படையான நோக்கம் மண்ணின் ஆதிக்கத்தை மதம் என்னும் பெயரில் தன் கையில் கொள்வது தான்.
இந்த அபாயத்தை தமிழ்ச் சூழலிலிருந்தே நான் புரிந்து கொள்கிறேன். தமிழகத்தில் சாதி எனும் அமைப்பை எதிர்க்க வேண்டியை, கட்டுடைக்க வேண்டிய ஒன்றாக ஒத்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் ஆன்மீகம் என்பதை இந்து மதத்தோடு மட்டுமே இணைத்துப் பார்ப்பதைப் போன்றது இது. அவர்கள் தேசியவாதிகளாகவும் மதவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் ஏன் அரசியல்வாதிகளாகவுமே தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர் என்பதே இதன் அர்த்தம். இந்தியச் சமூகத்தில் மதம் ஒடுக்குமுறையை நிகழ்த்தும் ஒரு வல்லரசாக எவ்வாறு உருக்கொண்டிருக்கிறது என்பதை இங்குள்ள சாதிய அரசியலை புரிந்து கொள்வதன் மூலம் தெளியலாம். அவ்வாறே இலங்கையிலும் மதம் என்பது ஓர் ஆயுதமாக, ஒரு வன்முறை வடிவமாக வார்க்கப்பட்டு அரசியல் ஆதாயத்துக்காக, இனவாதத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் எந்தத் திசையிலிருந்து வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரியும். தீவிரமான மதவாதம் ஒரு துப்பாக்கியை இயக்குதலைவிட வன்முறைப் பூர்வமானது.
மூலம்:http://kuttyrevathy.blogspot.com/
தொடர்பான பதிவுகள் : புலிகளின் சரணடைவு அரசியலும் புத்துயிர் பெறும் சிங்கள பெளத்த மேலாதிக்க வாதமும்
புத்தர் தோற்றுவித்த மதத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும்விதமாக இலங்கையில் உள்ள புத்த குருமார்கள் நடந்து கொள்கிறார்கள். ஏற்கனவே சிங்களவனும், இலங்கை ராணுவமும் செய்து வரும் அட்டூழியம் போதாதென்று இந்த புத்த மத வெறி பிடித்த நாய்களும் தம் பங்குக்கு ஏதோதே செய்கின்றன். எத்தனைக்காலம் இப்படி நடக்குமோ? என் இனம் அழிவது கண்டு மனம் பதறுகிறது. என் தலைவன் பிரபாகரன் வழி நடக்கும் புலிகள்தான் வழி காண வேண்டும்.
இஸ்லாமிய கிராமங்களில் கூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன — Wow… what a venomous vomit by Kutty Revathi… IF In Hindu Villages, muslims built Mosques then it is right; If Afghani muslims smash 1000yrs old budhdha statues and build mosques it is fine.. But Budhdha status are wrong…. Anyone has liberty to have statue anywhere… If Srilankan Muslim Congress perform Jihadi and kill Srilankan Tamils it is fine… If they write openly that ALL tamils are their number on enemy in their website http://www.slmc.org it is fine wiht Kutty Revathi. But if Budhdhists do that, it is wrong!! wow .. what a communist honesty!!
கம்யூனிசம் பேசும் சீனாவும் புத்தமத அடிப்படையிலேதான் இலங்கைக்கு உதவுகின்றதோ என்ற அய்யப்பாடு உண்டு….புத்தபிட்சுகளின் ஆட்டங்களை கட்டுப்படுத்த இலங்கையை சீனா கேட்டுக் கொள்ளாததில் இருந்தே அது உறுதியாகிறது. அமெரிக்க எதிர்ப்பு ஒன்றுதான் பிரதானம் என்று இருக்கும் க்யூபா கூட அமெரிக்க ஆதரவுநாடான இந்தியாவுடன் இணைந்து இலங்கையை ஆதரிப்பது என்ற முரன்பாடுகளும் …….. பெளத்த மேலாதிக்கத்தை ஊக்கப்படுத்த வாய்ப்பாக உள்ளதால் மதமே பிரதானமோ என்ற எண்ணத்தை முன் வைக்கிறது…. இது புலிகளுக்கான கேள்வியாக இல்லாமல் மனிதனுக்கான கேள்வியாக இருக்க வேண்டும். எதிர்காலம் என்பது சிந்தனையளர்கள் கட்டுரையாளர்கள் இணைந்து வீதியில் இறங்கி போராடாமல் விடிவு கிடைக்காது… இணையதள அல்லது குறுஞ்செய்தி பறிமாற்றங்களால் ஏதும் நிகழாது கருத்து அ.இளஞாயிறு…..9443761307
ooo my god,
Pls save me our peoples ,,,And give the solutions very fastly……Also give the good knowladge for our prime minister ,,,Sonia gandi & Karunanithi…..But any way history will never bless these persons……..Jai Prabaharan eelam….He in alive….
Thanks
Arul.s
MR JK MAY BE NOT KNOW BEING A MUSLIM WOMEN IN AFGANISTAN EDUCATION IS FORBIDDEN AND MUSLIM NATIONS KILLED MORE MUSLIMS THEN ANY OTHER COUNTRY.SO WHAT IS HE WAS TAIKING IS SENSELES.I DONT KNOW WHY PEOPLE STILL NOT LEARN TO RESPECT WOMEN,WHY THEY MALE DOMINATE REPESENTIVES.
வணக்கம் குட்டிரேவதி.
உங்கள் கருத்துக்கள் நன்று. உலகில் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியது தீவிரவாத குழுக்களை விட மதவாதக் குழுக்களே!
உங்கள் கவிதைகள் படித்திருக்கிறேன். http://WWW.sakaarthik.blogspot.com
தமிழர் இனவிடுதலைப் போராட்டம்.
முன்னர் எழுதிய கருத்துப்பதிவில் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து அதாவது பெருமளவான தமிழர்கள் புலிகளைத் தமக்கான ஒரு அரசியல் அடையாளமாகக் கருதி வாழ்வதை எழுதியிருந்தேன். மேற்குலகம் சனநாயகத்தினை வலியுறுத்தி வருகிற நிலையில், புலிகளை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்திய நிலையில், அங்கு வாழ்கிற புலம் பெயர் தமிழர்கள் புலிகளின் ஆதராளர்களாக இருப்பது குறித்து எழுதினேன். இந்நிலைமைகள் தொடர்பான விளக்கத்தினைத் தரும் என்ற வகையில் ஏ.ஜே.கனகரட்ணா அவர்கள் முன்வைத்த தொலைதூர தேசிய வாதம் பற்றியும் எழுதியிருந்தேன்.
இக்கட்டுரை சிங்கள பௌத்தர் குறித்த ஒன்றாக அமைகிறது. சிங்கள பௌத்தர்களிடையே பல்வேறு சிந்தனைகளும் பல்வேறு அரசியல் தளங்களும் இருக்கின்றனவாயினும் சிங்கள பௌத்த இனவாதம் ஒன்று குறித்து எழுதுகின்றேன். இக்கட்டுரை விடயத்தை முழுமையாக விளக்குவதாகவோ ஒழுங்கமைந்த விளக்கத்தை முன்வைப்பதாகவோ கருத முடியாது. முடிந்தவரை நிலைமைகளை விளக்க முற்பட்டுள்ளேன். நிலைமைகளின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து மேலும் மேலும் விளங்கங்களைப் பெறும் அவாவில் எழுதுகின்றேன்.
ழூழூழூழூழூழூழூழூழூழூழூ
இலங்கையில் வாழும் பௌத்த சிங்களவர் – சிங்கள பௌத்தர் உலகளாவிய ரீதியில் ஒரு சிறுபாண்மையினர் என்ற நிலையில் ஒரு வித அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்ற கருத்தொன்றை அறிந்திருக்கிறேன். பௌத்த சிங்களவர் இலங்கையில் தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதில் இலங்கைத் தமிழர்கள் மற்றும் தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்கள் ஏனைய சிறுபாண்மையினர் தொடர்பில் ஒரு அச்ச உணர்வைக் கொண்டிருந்தார்கள் என்பதே இக்கருத்தின் தொனிப்பொருளாகும்.
உலகளாவிய ரீதியில் சிறுபாண்மையினராக வாழும் பௌத்த சிங்களத் தலைவர்கள் (மன்னர்களும் தலைவர்களும்) வரலாற்று நெடுகிலும் பலவித போராட்டங்களினூடாகவே தமது இருப்பை அதாவது இலங்கையில் தமது அதிகார நிலைநிறுத்தலை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது வராலாறு. நான்கு தமிழர், எல்லாளன், சோழர், கலிங்கர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் எனப் பல்வேறு பிரிவினரால் பல்வேறு காலத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்ததுடன் அவர்க்கெதிராக கடுமையான போரட்டங்களை நடாத்தி தமது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டுமிருக்கிறார்கள்.
இலங்கை முழுவதும் பௌத்த சிங்களவர்களின் ஆட்சி அதிகாரம் – இலங்கை முழுவதும் பௌத்த சிங்களவர்களின் நாடு என்ற உணர்வு வரலாற்று நெடுகிலும் பரந்து கிடப்பதனைக் காண்கிறோம்.
மீண்டும் இன்று அந்த வரலாற்று உணர்வு வெளிப்படத் தொடங்கியிருப்பதனை காணமுடிகிறது. முழு இலங்கையையும் தமது அதிகாரத்தின் கீழ் (பௌத்த சிங்களவர்) கொண்டு வந்த ஒருவராக மகிந்த ராஜபக்ச நோக்கப்படுகிறார். எல்லா மட்டத்தினராலும் இன்றைய அரசத் தலைவரும் அரசும் இராணுவமும் கீர்த்தி மிகு வெற்றியைப் பெற்றவர்களாக வாழ்த்தப்படுகிறார்கள். வாழ்த்தப்பட வேண்டும் என்ற கட்டாய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏனைய பிறருக்கும் சிறுபாண்மை இனத்தாருக்கும் வலுக்கட்டாயமாக்கப்படுகிறது. ஒரே இனம்தான் இங்கு வாழ முடியும். அது இந்த சிங்கள பௌத்த தேசத்தை நேசிக்கிற இனம் என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
ழூழூழூழூழூழூழூழூ
பௌத்த சிங்கள இனத்தலைவர்கள் தமது அரசியலை நிலைநிறுத்திக் கொள்வதற்காக மேற்கொண்ட போராட்டங்களிலிருந்து மூன்று விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
1.
தமது எதிரிக்கெதிராக மேற்கொண்ட கூட்டுறவுகள். இதனை வரலாற்று நெடுகிலும் அவதானிக்கலாம். நவீன காலத்தில் அதாவது குடியேற்ற காலத்தில் ஐரோப்பிய இனத்தார்களிடம் அடிமைப்பட்டபோது சிங்கள மன்னர்கள் பல்வேறு கூட்டுச் சேர்க்கைகளை மேற்கொண்டு போரடி வந்திருக்கிறார்கள். போர்த்துக்கேயருக்கு எதிராக ஒல்லாந்தருடன் கூட்டுச் சேர்ந்தமை. பின்னர் ஒல்லாந்தருக்கு எதிராக பிரித்தானியருடன் கூட்டுச்சேர்ந்தமை என்பவற்றைக் காண்கிறோம். அவ்வாறே இருபதாம் நூற்றாண்டில் பிரித்தானிய குடியேற்றத்தினருக் கெதிராக போராடிய போது சிறுபாண்மையினருடன் இணைந்தும் – இணைத்தும் போராடினார்கள். இவ்வாறு கடுமையான போராட்டங்களினூடாகவும் கூட்டுச் சேர்க்கைகளுடாகவும் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சிங்களத் தலைவர்கள் பேய்களுடன் கூட்டுச் சேரவும் தயார் என்ற நிலையில் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். இன்றைய புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இதன் உச்ச நிலையைக் காண்கிறோம்.
ழூழூழூழூழூழூழூழூழூழூழூ
மற்றொரு புறம், வரலாற்றில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள சிங்கள மன்னர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டவை, உள்ளாக்கப்படக் கூடியவை. அவற்றபை; பண்டைக்காலத்திற்குரியவையாக ஒதுக்கி வைத்தாலும் இன்றைய வன்னி போர் நடவடிக்கைகளில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக மோசமானவை. ஒரு இன ஒழிப்பு நடவடிக்கையாக மக்கள் விரோதச் செயற்பாடாக அமைபவை.
ழூழூழூழூழூழூழூழூழூழூழூ
இதற்கப்பால், பௌத்த சிங்களவர் தமது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கு மேற்கொண்ட போர்களின் போதும் வெற்றிகளின் போதும் பௌத்த சிங்களவர்களில் பெரும்பாண்மையோர் விமர்சனத்திற்கப்பாற்பட்ட ஆதரவை வழங்கியிருப்பதுவும் – வழங்கி வருவதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. வரலாற்றுக்கால நிலைமைகளை ஒதுக்கித் தள்ளினாலும் இன்று வன்னிப் போர் நடவடிக்கையின் பின் நாடுதழுவிய கொண்டாட்டங்கள் நடைபெற்றமையையும் சகோதர மனிதர்களுக்கு நடைபெற்ற மனித அவலங்களுக்கெதிராக குரலொழுப்ப முடியாமல் போன நிலையும் தென்னிலங்கை தொடர்பான சிக்கலான கருத்துக்களை உருவாக்குகின்றன.
கூடவே இருபதாம் நூற்றாண்டில் நவீன பௌத்த சிங்கள இனவாதத்தின் தோற்று வாய் தொழிளார் கட்சியிலிருந்து – தொழிற்சங்கவாதிகயிடமிருந்து ஆரம்பமாவதையும் காண்கிறோம்.
இனக்கலவரங்கள், இன அழிப்பு நடவடிக்கைகள் எனப்பல தமழின விரோத – சனநாயக விரோதச் செயற்பாடுகள் சிங்கள இனத்தின் சார்பாக அம்மக்களின் எதிர்ப்பின்றி தொடர்ந்தும் நடைபெற்று வந்திருக்கிறது.
தென்னிலங்கை முற்போக்கு வாதிகள் பலரிடம்; இருந்து வந்த இனவாதப் போக்குக் குறித்தும் நாமறிய முடிகிறது. சிவராம் தனது கட்டுரைகளில் இவ்விடயம் குறித்து வெளிப்படுத்தியிருந்தார்.
ழூழூழூழூழூழூழூழூழூழூழூ
இனப்பிரச்சினையின் அடிப்படையே தமிழர் வாழ்வு தமிழர்களால் நிர்ணயிக்கப்படவேண்டும் என்பதுதான். அதாவது சிறுபாண்மையினத்தின் சுதந்திரம். ஆனால் தமிழர்களின் அகதிமுகாம் கூட தங்களால்தான் நடாத்தப்பட வேண்டும் என்று முனைந்து நிற்கிறது அரசு.
நிலைமைகள் நாம் அறிகிறபடி நடந்தால் நாடு முழுவதிலும் பௌத்த சிங்களவர் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள வெறித்தனமான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்றே நம்பலாம். வன்னியில் தென்னிலங்கைச் சிங்களவர்களை நிரந்தரமாகக் குடியேற்றத்திiளின மேற்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வன்னியில் வரலாற்றுக்கால மன்னர்களால் கட்டப்பட்டது போன்றதொரு பௌத்த விகாரையக் கட்டும் விருப்புக்; குறித்தும் பேசப்படுகிறது. இவற்றிற்கு விமர்சனத்திற்குட்படாத சிங்கள பௌத்தர் ஆதரவும் இருந்து வருகிறது.
கிழக்கில் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. வடக்கில் தேர்தல் நடத்தப்படலாம். இதற்கப்பால் ஒரு அரசியல் தீர்வு பற்றி நாடகமொன்று ஆடப்படலாம். உள்ள மாகாண சபையின் அதிகராங்களைப் பறிப்பதிலும் தமக்குரிய அடிவருடிகளை உருவாக்குவதிலும் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.
இன ஐக்கியம் தமிழர்களைப் பொறுத்த வரை அடக்கப்பட்டு வாழவதனைக் குறிக்கிறது. ஐக்கியப்பட்ட இலங்கைப் புரட்சி என்ற கருத்து யதார்த்தமற்றதாகி வருகின்றன.
இணைந்து வாழ்வதற்கு இணைந்து வாழும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!
ழூழூழூழூழூ
அரசுக்கெதிரான இன்றைய எதிர்ப்புக் குரல்கள், அரசு தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு அரசியல் தீர்வை வழங்கி விடுமோ என்ற அச்சத்தில் அதனை நிராகரிக்கிறவர்களின் குரலாகவே உள்ளது. பிரதான எதிர்க்கட்சி ஒரு அரசியல் கட்சி என்ற நிலையை இழந்து ( அது பலவற்றை இழந்து நிற்கிற ஒரு கட்சி) விட்டதனால் ஒரு உறுதியான எதிர்ப்பு அரசியலை உருவாக்கும் திறனற்றே காணப்படுகிறது.
இன்று சிங்கள பௌத்தம் என்ற நிலைக்கு அப்பால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மகிந்த ராஜபக்ச என்று நிலைமை வலுவடைவதைக் காணவும் முடிகிறது. இந்த அதிகாரத்துவ இறுக்கம் ஒரு புதிய போக்காய் வளரும் போல் தென்படுகிறது.
இ;னறைய அரசின் சர்வதேசக் கூட்டு எல்லாவற்றிற்கும் மேலான ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. நடப்பவற்றை உள்நாட்டு விவகாரமாக்கி விடுவதும், அரசின் உறுதித் தன்மையபை; பாதுகாப்பதில் காட்டுகின்ற அவாவும் அவ்வாறே சிந்திக்கத் தூண்டுகின்றது. “மேற்குலகின் சனநாயக”த் தலையீடுகள் கூட உள்நுழைய முடியாதவையாக்கப்படுகின்றன.
சீனா ஒரு புதிய வல்லரசாக முயற்சிப்பதாக தோன்றுகிறது. அது தென்னாசியவில் – இந்து சமுத்திரப் பரப்பில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தீவிரத்தன்மையானது தனது அதிகாரத்திற்கு ஒத்துழைக்கிற அரசுகளுடன் வேறு எந்த நிபந்தனைகளுமின்றி கூட்டடிணையும் நிலைமைகளை உருவாக்கியுள்ளது. இதன் பயனாக சீனா இதற்கப்பாற்பட்ட வழிகளையும் பரசீலிக்கத் தயாரகிவரலாம் என்றே கருத இடமுண்டு.
அதே வேளை இந்தியா அரசின் நிபந்தனையற்ற கூட்டுச்சேர்க்கை.
இவையெல்லாம் ஒரு கொடிய இன ஒழிப்புக் காலத்திற்குள் தமிழர்கள் வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்திவிடலாம்.
தமிழர்கள் ஒரு இனம் என்ற நிலையில் தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்குக் கூட கடுமையான விழிப்புணர்வுடன் கூடிய வாழ்வு அவசியமாகிறது.
வியார்.
இளைய அப்துல்லா உங்கள் மன அவசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களுக்கு புலிகள் இழைத்தது மாபெரும் அநீதி. புலிகள் ஒரு சிறுபான்மை இனத்திற்காகப் போராடிக் கொண்டு இன்னொரு சிறுபான்மை இனத்தின் உரிமைகளை மறுப்பதென்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஆனால் ‘துப்பாக்கிகள் ஒழிந்தனவே அது போதும்’ என்று நீங்கள் ஆறுவதில் எவ்வளவு யதார்த்தம் உள்ளது என்பது தான் கேள்வி.
இலங்கை அரசாங்கம் தனது சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை தக்கவைக்க தன்னைத் தவிர வேறு யாரிடமும் ஆயுதம் இருப்பதை விரும்பவில்லை. முதலில் தமிழ் தரப்பிடம் இருந்து ஆயுதங்களை அகற்றியது. தற்பேதது முஸ்லிம்களிடம் உள்ள ஆயுதங்களைக் கையளிக்க கால அவகாசம் கொடுத்துள்ளது.
ஆனால் தனது படைஎண்ணிக்கையை யுத்தம் முடிந்த பின்பும் கூட மூன்று இலட்சமாக உயர்த்த எல்லா நடவடிக்கைகளையும் எடுத:து வருகிறது.
தமிழீழம் கிடைத்த பிறகு வாருங்கள் என்றாவது புலிகள் சொன்னார்கள். அஸ்ரப் அமைச்சராக இருந்த காலத்திலிருந்து அதுவும் ஆளும் கட்சியிலிருந்த போதும் கூட அம்பாறையில் முஸ்லிம்களின் நிலங்கள் சிங்களவர்களால் அபகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
பௌத்த புனித பிரதேசத்திற்கான காணிகள் என்ற போர்வையில் அவை சட்ட ரீதியாகவே அபகரிக்கப்பட்டன. அபகரிக்கப்பட்டு வருகின்றன. சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சரால் முஸ்லிம் மக்களுக்குக் கொடுக்கப் பேரினவாதம் விடவில்லை.
இந்தப்பின்புலத்திலிருந்து ‘துப்பாக்கிகள் ஒழிந்தனவே அது போதும்’ என்ற உங்கள் கூற்றை மீள ஒரு தடவை வாசித்துப் பாருங்கள் அதன் அபத்தம் புரியும்.
புலிகளின் தவறுகளுக்காக இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகளையே தூக்கி வீசிவிட முடியாதல்லவா?