இந்து பயங்கரவாதக் கட்சியான பாரதீய ஜனதாவின் பாராளு மன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் அமர்ந்தபின்னரும் நாஸிக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தைத் தொலைக்காட்சி ஒன்றில் பாஜக எம்.பி. யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆதித்ய நாத் கூறுகையில், “10 முதல் 20 சதவீதம் வரை சிறுபான்மையினர் வசிக்கும் இடங்களில் ஆங்காங்கே வகுப்புக் கலவரங்கள் இடம்பெறுகின்றன.
20 முதல் 35 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியில் அந்தக் கலவரம் கடுமையாகவும், அதுவே 35 சதவீதம் பேரை தாண்டினால் அந்த இடங்களில் முஸ்லிம் அல்லாதோருக்கு இடமில்லை என்ற நிலை உருவாகிறது.
ஹிந்துகள் மீது சிறுபான்மையினர் தாக்குதலில் ஈடுபட்டாலோ அல்லது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டாலோ, அதே விதத்தில் ஹிந்துகள் பதிலடி கொடுப்பார்கள்“ என வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தூண்டும் வகையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரஷீத் ஆல்வி கூறுகையில், “இது துரதிருஷ்ட வசமானதும், கண்டனத்துக்கு உரியதுமாகும்.
எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையே ஆதித்ய நாத் கூறி வருகிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றி இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்க முடியாதது“ என்றார். இந்து பாசிஸ்டுக்களை எதிர்க்கும் வகையில் உறுதியான அரசியலையோ கருத்துக்களை முன்வைக்க முடியாமல் செல்லமாகக் கடிந்து கொள்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான சல்மான் குர்ஷித் கூறுகையில், “இது பாஜகவின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது. எனினும், இந்தியாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஹிந்துகள், சீக்கியர்கள், ஜைனர்கள் என யாரானாலும் உணர்ச்சிப் பூர்வமானவர்கள், எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கூடியவர்கள். அவர்கள் பாஜகவின் வலையில் விழ மாட்டார்கள்“ என்று தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில், “ஆதித்யநாத்தின் கருத்து அபத்தமானது. இது முஸ்லிம்கள் மீது பாஜக கொண்டுள்ள வெறுப்புணர்வையே காட்டுகிறது“ என்று கூறியுள்ளார்.
உலகத்தில் அத்தனை மதங்களும் வளர்கப்பட வேண்டும் சைவமும் தமிழும் அழிந்து போக வேண்டும் என பலதரப்பட்ட நகர்வை மனித குலம் எடுத்தாலும் வரலாற்றின் உண்மைகளை அவ மதித்து வரலாற்றுப் போரை நிகழ்த்தி வரும் மனித குலமானது கண்டனங்களை தெரிவிக்கும் போது வரலாறுகளையும் மதிக்க வேண்டும். பாரத மண்ணில் சைவ மதத்தை அழிக்கலாம் எண்ணவது தவறு ஈழத்தில் ஈழத்தமிழர்களை அழிக்க உலகமே எதிரிக்கு ஆதரவளித்த போது வரலாறு தன்னை அடையாளப்படுத்தியது . என்ற உண்மையோடு சைவசமயத்தின் புனிதத்தை பாரத மண்ணில் இருந்தோ ஈழமண்ணில் இருந்தோ அகற்ற முடியாது .
முஸ்லிம்களின் போராட்டம் கூட ஈழத்தின் வரலாற்றுப் போரை பாதுகாத்துள்ளது . அதனால்தான் ஈழத்தின் விடுதலைப்போர் முன்னுதாரணமாக திசைமாற்றப்பட்டுள்ளது .
பூமித்தாயின் கடமையை மனித குலம் எந்தளவிற்கு தர்மவழிகளைககொண்டு சத்திய நெறிமுறைகளோடு பாதுகாத்து வழிநடத்து கின்றதோ அதற்கான பலனும் மனிதகுலத்திற்கு நன்மைகளை தரும். அதற்கான எதிர்காலத்தையே வரலாறுகள் உணர்த்தி நிற்கின்றன.
சர்வதேச நகர்வை சந்தற்பமாக வைத்து ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கான நகர்வை பாரத தேசம் முன்னெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை யோடு.
சைவமதத்தை ஈழத்தில் மட்டுமல்ல பாரத மண்ணில் இருந்தும் அகற்ற முடியாது ஈழத்தின் விடுதலை அதற்கு முதன்மை பெற வேண்டும். காலத்தின் பொறுப்பை அரசியலில் தட்டிக்கழிக்க முடியாது. அது கருணை அல்ல கடமை ஆகும்
புனிதப் போர் என்பதனை முஸ்லிம்கள் நிரூபித்து தமது சுதந்திரத்தை எந்த வழியில் அடைய வேண்டுமோ அதனை மக்களின் பாது காப்புடன் உறுதிப்படுத்த வேண்டும். அரசியலில் தவறு இருப்பது என்பதற்காக ஆயதம் ஏந்தியதற்கான அவசியத்தை நிரூபிக்காமல் சமூக அழிவை தொடர்வது நியாயமாகாது.
அவரவர் மதங்களை அவரவர் பாதுகாப்பது மனிதாபிமானமுடைய செயல்பாடுகளை முன்வைத்து மண்ணின் புனிதத்தை சீரளித்து இன்னொரு மதவாதத்தை தொடர்வதனைவிட ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு மதம் முதன்மை பெறுவது போல் பாரத மண்ணில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் சைவமதமானது இன்றும் உயிர்போடு இருப்பதனை முள்ளிவாய்காலில் ஈழத்தின் வரலாற்றுப் போர் உறுதிப்படுத்தி உள்ளது.
சவூதி அரேபியாவில் ஒரு கோயிலை உருவாக்குவதை முஸ்லிம்கள் ஏற்க்க மாட்டார்கள் ஆனால் தமிழர்களும் சைவ மதத்தவர்களும் தமது மதத்தைப்போல் மற்றவர்களையும் நேசித்தமையே இத்தனை முரண்பாடுகளும் எமது மண்ணில் தொடர்கின்றது. .. இனவாதிகளாகவோ மதவாதிகளாகவோ நாம் எம்மை அடையாளம் காண்பதனைவிட நாம் எமது மண்ணில் எமது கலாச்சார பண்பாடுகளுடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே காலத்தின் தேடல் . அதில் மதமும் மொழியும் விதிவிலக்கல்ல மொழியும்