01.01.2009.
காசாவில் பாலஸ்தீனி யர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர விமா னத் தாக்குதலை எதிர்த்து உலகெங்கும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்று வரு கின்றன. இஸ்ரேலை ஆத ரித்து நிற்கும் அமெரிக்கா வின் பல மாகாணங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கார் நகரமான டெட்ராய்ட் நக ரில் பாலஸ்தீனக் கொடி களை ஏந்தியபடி, இஸ்ரேல் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபடி ஆயிரக்கணக் கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறந்தவர்களின் படங்களால் அலங்கரிக் கப்பட்ட சவப்பெட்டியில் “அமெரிக்க டாலரின் வேலை” என்று எழுதியிருந் தது பார்வையாளர்களை ஈர்த்தது.
நியூயார்க் நகரிலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் இஸ்ரேல் தூதரகத்துக்கு வெளியே இடி முழக்கங் களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புளோரிடா மாகாணத்தின் இரண்டு நகரங்களிலும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன.
அரபு நாடுகளுடன் சொந்தம் கொண்ட சுமார் 3 லட்சம் பேர் வசிக்கும் மிச்சி கனிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மிச்சிகன் மாகாண பல்கலைக் கழகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. லாடர்டேல் கோட் டையில் நூற்றுக்கணக்கா னோர் பங்கேற்ற ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. பல இடங் களில் இஸ்ரேல் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் நடத்தப் பட்டன.
அமெரிக்காவின் டல் லாஸ், டெக்சாஸ் போன்ற நகரங்களிலும் ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. லண்ட னில் பிரிட்டிஷ் அரசு இஸ் ரேலைத் தடுக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அரபு நாடுகளிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பல் லாயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக கலந்து கொண்டனர்.