பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் கடற்படை கமாண்டோ வீரர்களின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனைப்பகுதியில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மைரீட் கோரிகன் மேகுர் உள்பட 700 பேர் 6 கப்பல்களில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் பாலஸ்தீனத்துக்கு வருவதை இஸ்ரேல் கடற்படை கமாண்டோக்கள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் மனிதாபிமான உதவிக் குழுவினர் தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு வர முயற்சித்துள்ளனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல் கடற்படை கமாண்டோக்கள் மனிதாபிமான உதவிக் குழுவினர் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் துடிதுடித்து இறந்தனர். 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் துருக்கியைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதும் மனிதாபிமானக் குழுவினர் கதறியுள்ளனர். எனினும் இதை கடற்படையினர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு 6 கப்பல்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ராணுவம் பதில்: கடலில் எங்களது பகுதியில் மனிதாபிமானக் குழுவினர் வந்த கப்பல்கள் அத்துமீறி நுழைந்தன. கப்பல்களை எங்கள் நாட்டு கடற்படை கமாண்டோக்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் இதற்கு மனிதாபிமானக் குழுவினர் செவிசாய்க்கவில்லை. மாறாக, கடற்படை கமாண்டோக்கள் மீது பலத்த ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்துதான் கடற்படை கமாண்டோக்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். பெரிய இரும்பு கம்பிகள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் கடற்படை கமாண்டோக்கள் மீது மனிதாபிமானக் குழுவினர் ஆக்ரோஷமாகத் தாக்குதல் நடத்தியாகவும், இதில் கமாண்டோ வீரர் ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் இறந்துள்ளனர் என்பது பொய்யான தகவல். 10 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கப்பல்களில் வந்த மனிதாபிமானக் குழுவினருக்கும் அல்-காய்தா, ஹமாஸ் தீவிரவாதக் குழுக்களுக்கும் தொடர்பிருப்பதாக இஸ்ரேல் நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் டேனியல் கூறினார்
isral never ever gonn be changed in world .at same same time arbic and muslim world also not going to change.palastine people keep dying each and everyday no one worry about it .they are not ready to support them.better
all the mulim world take sucide them self.
Please do not be pessimistic.
Things are changing, but slowly.
Israel’s master, US imperialism is losing credibility among its allies too.
Can you imagine Turkey denouncing Israel and supporting the Palestinians a mere three years ago?
The Palestinians should unite transcending religion and relidious sects. The just cause of the palestinians is everybody’s cause — I mean every fair minded person’s cause.
Effort to unite the Palestinians by marginalising pro-West opportunists is important to ensure Arab and Muslim solidarity and support.
Let us do what we can to make common cause of all just struggles.
mr. siva i agree with you i am working in dubai i have spoken to many arbs people they don”t even talk about the tapic now days this people worry about football. this is a real world of them