ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் ஸ்ரேலின் பலபகுதிகளின் ஒன்றிணைந்து அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 60 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொண்ட மிகப்பெரிய பேரணி தெல் அவிவ் இல் நடைபெற்றது. ஜெரூசலம், ஹபிபா, பீர்ஷெவா போன்ற ஏனைய பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. “சமூக நீதி” என்ற தொழிற்சங்களை உள்ளடக்கிய அமைப்பு ஒழுங்கு செய்த இந்தப் போராட்டத்தில் புதிய இளைஞர் அமைப்புக்களும் பங்கேற்றன. பெருளாதாரச் சுமை, வீட்டு விலையேற்றம், இலவசக் கல்வி ஆகிய அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் கருதப்படுகிறது.
சமூக நீதி இயக்கம் ஆர்ப்பாட்ட்டம் குறித்த அழைப்பை இரண்டு வாரங்களின் முன்னமே வெளியிட்டிருந்த போது, பிரதமர் பெஞ்சமின் நதானியாகூ பொருட்களின் விலையேற்றம் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துள்ளது எனினும் இதனை எதிர்கொள்வது இயலாததாக உள்ளது என்றும் கருத்து வெளியிட்டார். எது எவ்வாறாயினும் இஸ்ரேலில் போராட்டம் தொடர்வது தவிர்க்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. சமூக நீதி இயக்கத்தின் போராட்டம் இஸ்ரேலிய வரலாற்றில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
Allahu akbar valillahil hamthu
இன அடக்கு முறையில் வாழ்வு நடத்துகிற நாட்டில்,அரசிற்கு எதிரான போராட்டம்,அதுவும் ஒரு வார அறிவிப்பில்;இந்தச் செய்தி மூலம் யாருக்கு காது குத்த முயற்சி செய்கிறீர்கள்?
மேற்கு நாடுகளின் எண்ணை கபளிகரத்தில்,பங்கு கேட்கும் ஆர்ப்பாட்டம்.
சமூக நீதி வழங்க முடியாத நாட்டவர்களிடம் ‘சமூக நீதி இயக்கம்’ என்பதே வேடிக்கைதான்.
நெருஞ்சி
சமூக நீதி என்பதை மற்றவர்களுக்கு [ குறைந்த சாதியினர் என்று சொல்லப்படுபவர்களுக்கு ] கொடுக்க முடியாத வர்கள் ஈழம் கேட்டு சிங்களவரிடம் போராடுகிறவர்களை நீங்கள் ஆதரிப்பதில்லையோ ?
ஆட்சி,அதிகாரம் கொண்ட அரசாங்கமும்,அது தன்னகத்தே கொண்ட சியோனிசப் பார்வையும்,அந்தப் போராட்டம் வன்முறையற்று,செய்தி வெளியீடாக வருவது பற்றியதுமே என் கருத்து.
இதை விளங்கிக் கொள்ளாது,ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது எழுதி பொழுதுபோக்குவதும்,சம்பந்தமற்ற விடையங்களை முடிச்சுப் போடுவதும்,ஞான சூனியங்களின் கற்பனைக் குறிஞ்சித் தேடல்தான்.