இந்தியாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறி உள்ள யூதர்கள் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்கள். ஷிவ்டேய் இஸ்ரேல் என்று அதற்கு பெயர் வைத்து இருக்கிறார்கள். தெற்கு இஸ்ரேலில் உள்ள பீர்ஷேவா என்ற நகரில் இந்த கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் 5 ஆயிரம் இந்தியர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர்.
இந்த கட்சியின் தலைவராக ஆபிரஹாம் நகோங்கர் இருக்கிறார். அந்த நாட்டு அரசியலில் அவர் மட்டுமே நகரசபை கவுன்சிலராக இருக்கிறார். இந்தியர்களுக்கு பெரிய பிரதிநிதித்துவம் கிடையாது.