புலம்பெயர்தேசங்களில் தமிழ் இளைஞர்களுக்கிடையேயான வன்முறைகள் என்பது தற்போது தமிழர்களின் வாழ்வில் ஒருஅன்றாடநிகழ்வாகிவிட்டது;மலைப்பிரதேசங்களில் மாலையானதும் மழை பொழிவதைப்போல. மிக அண்மையில் பாரிசின் புறநகர்ப்பகுதியில் நடைபெற்ற வன்முறை நிகழ்வொன்றில் 16 வயதேயான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். இது ஒரு வழமையான நிகழ்வு எனபது போல் பாரிஸ் வாழ் தமிழர்கள் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.
ஈழத்தில் விடுதலைப் போராட்டங்களின் ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் ஆங்காங்கே எரியுட்டப்பட்ட நிலைகளில் கண்டெடுக்கப்பட்டுகாலப்போக்கில் அவை சாதாரண நிகழ்வுகளாகின.இவை இலங்கைப்படைகளால் நிகழ்த்தப்பட்டன. பின்னர் யாழ் குடாப்பிரதேசத்தில்இருந்து அனைத்து விடுதலை இயக்கங்களாலும் இராணுவம் விரட்டியடிக்கப்பட்டபின் இயக்க உள் முரண்பாடுகளால் மின்கம்பத்தில் பிணங்கள் தொங்கின. அவையும் சாதாரணமாகிப்போயின. எண்பத்து மூன்றுகளின் பின்னான புலப்பெயர்வு அதிகரிப்பின் பின்னர் புலம்பெயர்தேசங்களில் எம்மவர்கள் கடுமையான தொழிலாளிகளாகவே அத்தேசங்களில் அறியப்பட்டார்கள். இக் கால கட்டங்களில் யாழ்ப்பாணத்தின் மிக இறுக்கமான சாதி முரண்பாடுகளும் இவர்களிடையே அதிகம் தலை தூக்கியிருக்கவில்லை. கடுமையான உழைப்பின் பெறுமானங்களால் தங்களது மனைவி பிள்ளைகள் சகோதர சகோதரிகள் என இவர்களை புலத்துக்கு அழைக்கும் முயற்சிகளை மேற்கொண்டபோது பல்வேறு நாடுகளில் ஆண்டுக்கணக்கில்மாதக்கணக்கில் தங்கியிருந்து பிரயாண முகவர்களால் சீரழிக்கப் பட்டு ஒரு தலைமுறை புலத்துள் புகுந்த போது அது ஈழத்தின் வன்முறையின் எச்சங்களையும் காவி வந்து ஆங்காங்கே பதியனிட்டுக்கொண்டது.
ஆரம்பப் புலப்பெயர்தமிழர்கள் தங்குவதற்கு போக்கிடமின்றியும் மொழிப்புரிதலின்மை காரணமாகவும் ஒருவரையொருவர் இறுகப்பற்றியிருக்க வேண்டிய தேவை இருந்தது. அப்போது சாதி, பிரதேச வேறுபாடுகள் ஓடியொழித்துக்கொண்டன. ஆனால் தொண்ணூறுகளுக்குப் பின்னர் வருகை தந்தவர்களுக்கு வதிவிடப்பிரச்சினையோ மொழி பெயர்ப்புப்பிரச்சினையோ இருக்கவில்லை. (இதற்குள் பிரான்சில் பிரெஞ்சு மொழி தெரியாத இலங்கைத்தமிழர்களிடம் பிரெஞ்சுக் கொலனியவாசிகளான பாண்டிச்சேரித்தமிழர்கள் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றுகின்றோம், உதவி புரிகின்றோம் என்கின்ற போர்வையில் ஈழத்தமிழரின் கடின உழைப்பின்பலன்களை மனிதாபிமானமின்றி மிக இலகுவாகத் திருடியும் கொழுத்தார்கள்.) பிற்காலப்புலப் பெயர்வாளர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை தேட வேண்டியது அவசியம் என்கின்ற நிலமையும் இருக்கவில்லை. அவர்களைத் தாங்குவதற்கு தந்தையோ சகோதரனோ இருந்தார். எனவே அவர்களுக்கான ஓய்வு நேரங்களும் ஒருவரையொருவர் சந்திக்கும்திறனும் அதிகரித்தன. புலப்பாடசாலைகளுக்குப்படிக்கப்போன இளைஞர்களுக்கு அப்பாடசாலைகளின்நெகிழ்வுத் தன்மைகள் ஆச்சரியங்களைக்கொடுத்தது.
இலங்கைப்பாடசாலைகளில் கடுமையான ஒடுக்குதல்களுக்குள் கல்வியைப் பெற்றவர்களும் ஆயுத வன்முறைகளுக்கு இடையில் கல்வியைத் தொலைத்தவர்களும் புலம்பெயர் பயண இடைநடுவில் பல்வேறு நாடுகளில் தங்கியிருக்க நேர்ந்ததனால்கல்வியை இடை நிறுத்தியதன்பின்னர் அந் நாடுகளுக்குள் புகுந்த பின் திரும்பவும்பாடசாலைகளுக்குள் புகுந்தவர்களுக்கு மேற்கத்தைய நாடுகளின்பாடசாலைகள்அளித்த சுதந்திர நடவடிக்கைகளும் அவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தினைத் தடுத்து அந்தச் சுதந்திரங்களை தமது வயதுக் கேற்ற வழிகளில் எவ்வாறு செயற்படலாம் என்ற தோற்றுவாயையே ஏற்படுத்தியது. மொழி புரியாத பெற்றோரினால் பிள்ளைகளைச் சரியான கல்வியின் வழியில் கொண்டு செலுத்தவும் முடியவியல்லை.இயக்கங்களின் குழு வன்முறைகளைப் பிரதியெடுத்தவர்களாக இத்தேசங்களுக்குள் புகுந்தவர்கள் இங்கும் குழுக்களாகப் பிரிந்து கொண்டு தமது வன்முறைகளுக்கு வடிகால் தேடத் தொடங்கினார்கள்.
சாதிவாரியான, பிரதேசவாரியான வன்முறைகளும்வெடிக்கத்தொடங்கின. ஆரம்ப காலங்களில் சாதியை ஒளித்து வைத்தவர்களும் இப்போது வசதி வந்து விட்ட தைரியத்தில் புலத்தில் தமது புதிய சந்தததிகளுக்கு அதனைக் கற்றுக் கொடுக்கவும் சாதியக் குப்பையான இந்துவத்தினைப் பேணுவதற்கான ஆலயங்களை அமைப்பதற்கும் தொடங்கினார்கள்.
இது மட்டுமல்லாது தாராளமான மது, போதை மருந்துகளின் பாவனைகளும் அதிகரித்துக்கொண்டது. தேடுதல் குறித்த பிரக்iஞைகளற்ற பொருளாதாரத் தேடுதலையே குறிக்கோளாகக்கொண்ட பெற்றோர். தமக்குக்கிடைத்த சுதந்திரத்தை மட்டுமே பற்றிக்கொண்ட இளம்சந்ததி. புலம் பெயர் தமிழர்களின் பொருளாதாரச் செழிப்புக்களில் கண்வைத்துக்கொண்ட மதவாத அமைப்புக்கள் இவற்றுக்கிடையே இளைஞர் வன்முறை இன்று தலைவிரித்தாடுகின்றது. இதனை ஒளிப்பதற்கும் சீர்படுத்துவதற்கும் வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களுடன் சரியான உறவுகளைப் பேணி அவர்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் யாரும் ஈடுபட முன்வரவில்லை.
நான் எல்லா இளம்சந்ததிகளையும் குற்றம்சொல்லவரலில்லை புதிய தேசங்களில் பதியனிட்டுக் கொண்டு சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளும் ஏராளம்தான். ஆனால் ஒரு குடம் பாலுக்கு ஒருதுளி விசம் என்பது போலசிலரின்நடவடிக்கைகள் முழுமையான தமிழ்ச் சமூகத்தையும் சக சமூகங்கள் வன்முறையாளராகவே பார்க்கும் நிலைக்குத் தள்ளுகின்றது. திரைப்படங்கள் என்கின்ற போர்வையில் இந்தியத்திரை அட்டைக்கத்தி வீரர்களுக்கு இரசிகர்களாகி விடுகின்றவர்கள் இங்கு நிஜக் கத்திகளைத் தூக்கிக் கொண்டு தமக்கிடையே செய்யும்கொடூரமான தாக்குதல்களைக்கண்டு மேலைத்தேயக் காவற்துறையினரே மிரண்டு போயுள்ளனர். தங்கள் காதலிகளுக்கான தாக்குதல்கள், தங்களைக் காதலிக்க மறுக்கும் பெண்கள்மீதான தாக்குதல்கள் என புலம்பெயர் இளஞ்சமூகம் வன்முறைப்பரம்பல்களை விரித்துக்கொண்டே போகிறது.
நான்சொல்ல வந்த விடயத்தைச்சொல்லி விடுகின்றேன். அண்மையில் மரண நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது புலம்பெயர் படைப்பாளிகள் கலைஞர்களையும் அங்கு அதிகமாகக் காண முடிந்தது. அப்போது இக்கட்டுரையின்மேலே நான் குறிப்பிட இளைஞனின் மரணம் தொடர்பாகவும் நாங்கள் கதைத்துக்கொண்டோம். அப்போது குறித்த மூத்த முற்போக்குப் பெண் படைப்பாளியொருவர் “இந்த வன்முறைகளில் அவனுகள்தான் ஈடுபடுகின்றானுகள். நானென்ன பனை மரத்தை இஞ்சை கொண்டு வந்து நட்டு அதிலை கள்ளுச்சீவியோ என்ரை பிள்ளையளுக்கு இதுகளை விளங்கப்படுத்த முடியும். பேசாமல் பாரிசை விட்டு எங்காவது தொலைதூரத்துக்கு பிரெஞ்சுக்காறரின்ரை ஏரியாவுக்கு என்ரை பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு போகப் போறேன். இதுக்கு அம்மா பகவான் ஆசி புரிய வேண்டும்” என நெக்குருகினார். மறு கிழமை வெளிவந்த தென்னிந்தியத்தமிழ்ச் சஞ்சிகையொன்றில் அம்மா பகவான் என அழைக்கப்படும் கல்கி சாமியாரின் பித்தலாட்டங்கள் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டிருந்தும் நித்தியானந்தரின் லீலைகளுக்கு மத்தியில் அச்செய்தி பெரிதாக எடுபடவேயில்லை. ஆந்த முற்போக்குப்படைப்பாளி இங்குள்ள அம்மாபகவானின் முகவராகவும்அவரது சக தோழியான இன்னொரு கவிஞரான பெண்மணி பங்காரு என அழைக்கப்படும் செவ்வாடைச்சாமியின்முகவராகவும் செயற்படுகின்றனராம். இங்கே யாருக்கு உளவியல் மருத்துவம் தேவையென்ற கேள்வி எனக்குள் எழுந்தது. சில வேளைகளில் எனக்குத்தான் தேவையென மேற்படி படைப்பாளிகள் இக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் சிபார்சு செய்வார்கள்!
காலத்திற்கு தேவையான ஒரு கட்டுரை ரூபன் மண்ணின் மானம் காக்கவும் இவர்கள்போன்றவர்களின் முகவாp வெளிதொpய ஆயிரம்ஆயிரம் சின்னஞ்சிறுகள் தம் கைகளில் தூக்க முடியாத இரும்புகளை தூக்கியும் சுவாசிக்க முடியாத கந்தக காற்றையும் சுவாசித்து தாங்கமுடியாத வலிகளையும் தாங்கி உண்ணமுடியாத உணவுகளையும் உண்டு மானம் ஒன்றே பொpதென வாழ்தவர்கள் மத்தியில் தோன்றிய நச்சு மரங்களும் செடிகளும் ஏராளம் இவற்றையெல்லாம் களைபிடுங்கி மரம் வெட்டி துப்பரவு செய்யப்பட வேண்டும். இன்றைய இளைஞர்களும்> யுவதிகளும் ஒரு பகுதியினர் தமது திறமைகளையும்சுயநலத்தையும் கொண்டு நல்ல நிலையில் வளர்ந்து போகின்றார்கள் ஒருபகுதி தானும் வாழவேண்டும் தன்இனமும் வாழவேண்டும் என்று வாழ்கின்றனர் சிலர் மட்டும் ஒன்றும் இல்லை வாசிக்கவும் தொpயாது எழுதவும் தொpயாது தனியே ஏதோ பேச்சு ம்ட்டுமே இப்படியொரு சமுதாயம் தான் வளர்ந்து வருகின்றது எல்லாமே பெற்றோர்களின் வளர்ப்பு தான் முக்கிய காரணம் இதை அவர்கள் உணரவோ ஒத்துக்கொள்ளவோ மாட்டார்கள் எப்ப ஒத:தக்கொள்கின்றார்களோ அன்றுதான் எல்லாம் சாpயாக வரும்
காலத்திற்கு ஏற்ற கட்டுரை. எனது அனுபவத்தின்படி சொல்லப்போனால் பெரும்பாலும் பெற்றோர்தான் பிழை விடுகிறார்கள். தமக்கே சரியாகத் தெரியாத மொழியில் பிள்ளைகளுடன் பேசுவது, மொழி புரியாமல் பிள்ளை செய்வதுதான் சரியென்று நம்பி பிழைகளைத் தட்டிக்கேட்காமல் விடுவது, தமது முன்னைய வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லாமல் வரட்டுக் கொள்கை, கெளரவம் முக்கியமென்று வாழ்தல், பிள்ளைகள் முன் தமக்குப் பிடிக்காதவர்கள் பற்றி கூடாமல் கதைத்தல் இப்படிப் பல காரணிகள். இலங்கையில் சொல்வார்கள், பெரியாட்கள் கதைக்கிற இடத்தில் உங்களுக்கு என்ன வேலை என்று. வெளிநாட்டில் சுதந்திரமாம். சும்மா கிடைத்தால் என்னதான் செய்யமாட்டார்கள்.
கோயில்கள் இந்துவத்தின் குப்பைகள் எனபது தவறூ என நினைக்கிறேன்.பெற்றோரது தவறூகலே பிள்லைகளீன் தவறான போக்குகளூக்கு காரணம் இந்த குழுக்கள் அவர்களது மோதல்கள் மேற்கு நாட்டு பண்பாட்டு இயல்பு அதில் தமிழ்ர் மாட்டுப்பட்டு இருப்பதற்கு நமது சமூகமும் ஒரு காரணம், எப்படி என்றால் இளவயதினர் பேச்சைக்கேட் காதது, அவர்களூக்கான மரியாதை தராதது, புறக்க்ணீப்பு மற்றூம் உதாசீனம்.
இந்துக்கடவுள்கள்தான்ஆயுதமுனையில்அனைத்தையும்பெறலாம்எனதமழருக்கும்கற்பித்தனர்.அழிதஇதொழிப்பதையே மூலமாகக்கொண்டவர்கள்.ஆபாசங்களுக்கும்வக்கிரங்களுக்கும்புனிதவடிவம்கொடுத்து ஆலயங்கள்கட்டியவர்க்திழ்மாறனுக்கு இதில்என்னவருத்தம்.
தமிழ்மாறன் இந்துச்சாழியார்கள்தவறான போதனைகளை எமது இளைஞர்களுக்கு வழங்க வில்லையென்கிறாரா? லா சப்பலில்கம்பிகளில்அமர்ந்து கொண்டு அலட்டிக்கொண்டிருக்கும்பல சின்னப்பெடியளோடை கதைச்சுப்பார்க்கவும். தங்களுக்கு விசா கிடைத்த்தே அம்மா சாமிஆட்டுக்குட்டி சாமியின்அருள்என்பார்கள.காக்கை உட்காரப்பனம்பழம்விழுந்தகதைபோல.அதன்பக்தர்களாகிபின்னர் அந்தஅமைப்புகளின்போதை விநியோகங்களுக்குள்ளும்அகப்பட்டு சீரழிகிறார்கள்.இதற்கு மூடநம்பிக்கையுள்ளகபற்றோரும்துணை போகின்றனர் இந்துத்துவம்எப்போதும்குப்பைதான்
ஆரம்பதில் பாண்டிசேரியர் செய்து வந்ததை பின்னர் நம்மவர்களே கேஷ் எழுதுறம் என்டு தின்டு கொளூத்ததையும் மறக்க கூடது.ஆனாலும் ரூபனுடய ஆதங்கம் மிகவும் சரியானதே.இளய தலையினரை இழ்ந்து விடுவோமோ என்ற பயம் வருகிறது.
ஆரம்பதில் பாண்டிசேரியார் செய்ததை பின்னர் நம்மவர்களே ஏமாற்றீ திண்டு கொழுத்ததும் உண்டு.ஆனாலும் மிகவும் நல்ல கட்டுரை