லைக்கா குழுமம் என்ற தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் உட்பட ரோரிக் கட்சிக்கு நிதி வழங்கும் பெரு நிறுவனங்களோடு, அவற்றின் நலனுகாக மட்டும் இலங்கை செல்லும் பிரதமர் டேவிட் கமரனுக்கு முன்னதாக பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கை. சென்றடைந்தார். சார்ள்ஸ் இலங்கையின் இலவசக் கல்வியைக் குண்டுவைத்துத் தகர்க்கும் சமூகவிரோதச் செயலில் ஈடுபடவிருக்கிறார். கொழும்பின் மீரிகமவில் 120 ஏக்கர் காணியில் பிரித்தானியாவின் லங்ஷையர் பல்கலைக்கழகத்தின் வாளகமொன்று அமையவுள்ளது.இப் பல்கலைக் கழகம் 75 மில்லியன் பவுண்ஸ் செலவில் உருவாக்கப்படவுள்ளது. அதற்கான அடிக்கல்லை பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்ள வரும் இங்கிலாந்தின் இளவரசர் சாள்ஸ் நாட்டி வைக்கிறார். ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் அவசர அவசரமாக இலங்கையில் முதலாவது தனியார் பல்லைக்கழக வளாகத்தை அமைக்க அனுமதியளித்த வர்த்தமானி அறிவித்தலை இலங்கை அரசு வெளியிட்டது.
இலங்கையில் நடைமுறையிலுள்ள முழுமையான இலவசக் கல்வித்திட்டம் தெற்காசியாவின் கல்வியறிவு பெற்ற நாடாக இலங்கையை மாற்றியிருந்தது. வசதியற்ற ஏழைகளின் குழந்தைகள் கூடப் பல்கலைக் கழகக் கல்வியை கற்றுப் பட்டதாரியாக வாய்ப்பை வழங்கிய மூன்றாமுலக நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது. இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் இலவசக் கல்வியில் கைவைக்கத் துணிந்ததில்லை.
மேற்கு நாடுகளினதும் இந்தியவினதும் அடிமை போன்று செயற்படும் பாசிச ராஜபக்ச அரசு கல்வியைத் தனியார் மயப்படுத்துவதைச் சட்டமாக்கியது. தமது எஜமான விசுவாசத்தைக் காட்டிய ராஜபக்ச அரசு பிரித்தானியப் பல்கலைக் கழகத்திற்கு தனது முதல் அனுமதியை வழங்கியது. ‘தமிழ்த் தேசியத்தின் பெயரல்’ தமிழ் நாட்டின் ‘எஸ்.ஆர்.எம்’ குழுமம் இலங்கையில் பல்கலைக் கழகம் திறப்பதற்கு விண்ணப்பித்துள்ளது.
தேசியம் என்பது அன்னிய நாடுகளுக்குக் காட்டிக்கொடுப்பது என்று எண்ணிகொண்டிருக்கும் பிழைப்புவாத ‘தமிழ்த் தேசியவாதிகள்’ இளவரசர் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதைத் தெரிந்துகொண்டால் பாறாங்கல்லையே நட்டுவைப்பார்கள்.
உண்மைகளை மக்கள் காலடிக்குக் கொண்டு செல்வது ஊடகம் ஒன்றின் தார்மீகக் கடமை.அவை தினச் செய்திகளாகவோ, அறிவுசார் விடயங்களாகவோ, மறந்துள்ள அறிவுப் பொக்கிஷங்களாகவோ, ஒழுக்க சீலங்களாகவோ, அனர்த்தங்களாகவோ, நன்மை, தீமைகளாகவோ எதுவாயினும், மக்கள் நலம் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும்.
ஒரு நடவடிக்கையால் ஏற்படவுள்ள சாதக பாகங்களை சீர்தூக்கி, தீர்வுக்காக மக்களிடம் விட வேண்டும். எவ்வாறான சந்தர்ப்பங்களிலும், ஒழுக்க சீலங்களை, பத்திரிகா தர்மத்தை, பண்புகளை மீறாமல் இருப்பதே, மக்களுக்காக அவவூடகம் செய்யும் மாபெரும் சேவையாகும். சுருக்கமாக, நம்பகத் தன்மை ஒன்றே ஊடகம் கட்டி வளர்க்க வேண்டிய உணர் பண்பு. அப்பண்பு காணப்படும் ஊடகங்கள், மக்கள் வாழ்வை இலகுபடுத்திவிடுின்றன.
அதைவிடுத்து, பின்பற்றப்படும் எவ்வித தரமற்ற விமர்சனங்களும் மக்களைச் சென்றடையாமல் மக்களின் வெறுப்பையே சந்திக்கும். அத்தோடு, தரப்பட்ட கருத்துக்கூட அதன் பெறுமதியை இழந்து நிற்கும்.
இப்போது கூட நான் வாசகன் என்ற முறையில், செய்திக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட, பத்திரிகா தர்மத்துக்குக் கொடுத்த முக்கியத்வமே, இக்கருத்துரை என்பதை ஆசிரியர் புரிந்து கொள்வது, தரக்கட்டுப்பாட்டின் அவசியத்தை வெளிப்படுத்தும்.
Prince Charles came to Batticaloa too to inspect the tsunami damage in 2005. Unlike him I have new life at 62 without the parents. I like him and fell it is good to have a new female life partner/ 1952. Is a very important year. Long live Queen Elizabeth II. She went o Ireland after 90 years.
‘செய்திகள்’ என்று சொல்லப்படுபவை ஒருபோதும் அரசியலற்றவை அல்ல. ஊடகங்கள் வெறும் தகவல் பரிமாறும் நிறுவனங்களும் அல்ல. ‘To inform, educate and entertain’ என்ற குறிக்கோள்களுடன் இயங்கும் ‘சுதந்திர’ ஊடகங்கள் தரும் ‘தகவல்களில்’ பொதிந்து கிடக்கும் உட்கருத்துக்கள் பல. மக்களை தம் வழியில் சிந்திக்க வைப்பதில் தவறொன்றும் இல்லை. அது பெரும்பான்மையான மக்களுக்கு, அதாவது உழைக்கும் சாதாரண மக்களுக்கு, நன்மை புரியும் நோக்கத்துடன் கருத்துகளை முன்வைக்கிறாதா அல்லது பெரும் வர்த்தக மற்றும் நிதி நிறுவனங்களின் சார்பாக செய்திகளைத் திரித்துக் கூறுகிறதா என்பதே முக்கியம். பத்திகாதர்மம் பற்றி பேசும்போது இதை கவனித்தில் கொள்வது நல்லது.
இலங்கையில் முதல் முறையாக கல்வி தனியார்மயப் படுத்தப்படுகிறது என்பது செய்தி. தனியார் நிறுவணங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் இதை வரவேற்பார்கள். உயர் தர வர்க்கம் இதை ஆதரிக்கும். அனால், இது சாதாரண மக்கள் கல்வி பெறுவதற்கு தடையாக அமையும் என்பதில் ஐயமில்லை. சாதாரண மக்களின் சமூக மேம்பட்டுக்கு (social mobility) முட்டுக்கட்டையாக அமையும். இன்று படித்து நல்ல நிலையில் இருக்கும் இலங்கையர்கள் எல்லோரும் இலவச கல்வியின் வழியாகவே இந்த நிலைக்கு வந்தார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பது நல்லது.
அடிப்படை மக்கள் சேவைகளான கல்வி, சுகாதாரம், சமூக நலன் ஆகியவற்றை வழங்க வேண்டியது எந்த ஒரு அரசாங்கத்தினதும் கடப்பாடு. இதை அரசாங்கங்கள் தட்டிக் கழிக்க முடியாது; மற்றவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்க அனுமதிக்கவும் கூடாது. நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது, மக்களும் மேம்பட வேண்டும்.
இந்த கருத்தை ‘இனியொரு’ முன்வத்தது சரியானதே. அதை விமர்சித்தவரின் இது பற்றிய கருத்து என்ன? அதை வெளிப்படையாகக் கூறாமல் பத்திரிகா தர்மம் பற்றி பேசுவது சுத்த கபடத்தனம். ‘இனியொரு’ தொடர்ந்து தன் கருத்துகளை சீற்றத்துடன் முன்வைக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
இலங்கையில் கல்வித்தரம் குறைந்த்துவிட்டது. அதை சர்வதேச தரத்துகு உயர்த்தவேண்டும் என்றால் அங்கு லண்டன் பல்கலைகழகம் போவது நல்லதே. அது தமிழர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
That is not so right Mr. Sriranjan. None will ever touch the Free Education started by the late C. W. W. Kannangara in 1865 when we were still under British Rule.. They want to get some private investment into education to cater to those who can afford and could not get into the state universities. It will be cheaper than going abroad. Then again you need not compromise quality. Actually the British are going to learn from us.
To Author:
The. following were compelled me to write that comment:
// யானைகளோடு ஓநாய்கள் //
// இனக்கொலைக் குடும்பத்தோடு சார்ள்ஸ் //
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர் மட்டுமே தண்டிக்கப்படலாம். நிரூபிக்கப்பட்டவரின் குடும்பம் தண்டிக்கப்பட முடியாது. அதற்கு உலகில் எந்தச் சட்டமும் இடங்கொடாது, உண்மையில் ஜனாதிபதியின் குடும்பத்தை கொலைக் குடும்பம் எனக் கூறுவதும், இளவரசர் சார்ள்ஸையும் ஓநாய் எனக் குறிப்பிடுவதும் எந்த தர்மத்தைச் சார்ந்ததுவோ!
// அதைவிடுத்து, பின்பற்றப்படும் எவ்வித தரமற்ற விமர்சனங்களும் மக்களைச் சென்றடையாமல் மக்களின் வெறுப்பையே சந்திக்கும். அத்தோடு, தரப்பட்ட கருத்துக்கூட அதன் பெறுமதியை இழந்து நிற்கும். //
மேற்கண்ட எனது பந்தி உங்களால் சரியாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. உங்கள் செய்தியின் பெறுமதியைச் சிதைத்தது தாங்கள் பொதுப்படையாக பாவித்துள்ள வார்த்தைப் பிரயோகங்களே ! உங்கள் செய்தி பற்றி நான் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்து எனது நோக்கைப் புரிந்து கொள்ளலாம்.
எனது கருத்து யாருக்காகவும் வக்காலத்து வாங்குவதற்காகப் பாவிக்கப்படுவதில்லை. எப்போதும், எல்லாவ்றிலும் ஓர் பொறுப்புணர்வுடனும், ஏற்கப்பட்ட வரையறைக்குள்ளும், நிதானத்துடனும், தக்க காரணமின்றி ஒருவரைச் சாடாதிருப்பதையும் கருத்திலிருத்தி எழுதப்படுவது.
We know that British COuncil has been ‘educating’ the SL military, have a look at the following link to see how they have pre planned to undermine the free education:
http://ihe.britishcouncil.org/sites/default/files/going_global/session_attachments/UPDATE%20GG2012%2012.2%20S%20B%20Dissanayake,%20S%20Nawaratne,%20C%20Embuldeniya,%20I%20Robertson.pdf
Sri Lanka is planning to set up ‘free investment zones’ for education, which will offer land and tax breaks to foreign investors. The aim is to attract international universities and build the country into a higher education hub in Asia.
In January last year Sri Lanka’s Ministry of Higher Education had to withdraw a proposed private universities bill due to escalating resistance from students and lecturers. To circumvent such opposition, the government decided to attract foreign universities into ‘free investment zones’ under Board of Investment projects.
There are plans to establish six education zones outside the capital Colombo, in the Meerigama, Puttalam, Kilinochchi, Hambantota, Deniyaya and Trincomalee areas.
The objective is to attract world-class universities to set up campuses and research centres in Sri Lanka in order to create an international higher education hub that is a cost-effective destination for foreign students.
Several foreign universities have reportedly already submitted applications seeking approval to establish campuses in Sri Lanka.
An extraordinary gazette was tabled in parliament on 3 September by Minister of Investment Promotion LakshmanYapa Abeywardena, to grant a 15-year tax break to a British university that is planning to establish a branch campus in Sri Lanka.
University of Central Lancashire
The University of Central Lancashire, or UCLan, will be
http://www.universityworldnews.com/article.php?story=20130918162822386
If there is no hidden intention behind this move to abolish the FREE EDUCATION, it is a good move to boost the standard of education of Sri Lankan’s at a reduced/low cost -in their own country- and as well as to the Asians especially to South Asian students.
இது யேசுவின் ( தமிழனின் இரத்தம்) நீங்கள் பருகி பாவங்களை ஏற்பீராக ,ஆமேன்,..
Amen, Suntharam. I got baptised as a Gabriel in Christmas Eve in Canada in 1996. Jewish Jesus is the name of a book. Some one may have got offended and told that to Rev. Fr. Henry Miller, S.J., who also have a doctorate from the Eastern University of Sri Lanka. Amen. Praise the Lord.
What is left for you now is only circumcision !
நீண்ட நாட்களாக இலவச கல்வியையும் இலவச மருத்துவத்தையும் அழிப்பதற்கு உலக வங்கி உட்பட பல தரப்புக்கள் விடாப் பிடியாக செயற்பட்டு வந்துள்ளன. இனி வசதியற்ற மக்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகும்.
Sakivara the private sector have also made impressive investments in Health Care and Education.
இலங்கையில் எக்காரணம் கொண்டும் இலவசக்கல்வியை நிறுத்தக் கூடாது. அதற்கு எவரும் துணைபோகக் கூடாது. இலங்கையை கல்வி அறிவு நிறைந்த நாடாக மாற்ற வேண்டியது ஒவ்வொரு இலங்கை குடிமகனினதும் கடமை. தற்போது வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் கல்விக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது தெரியும். தமிழ் தேசியம் என்று பேசுபவர்களை மக்கள் ஓரம் கட்ட வேண்டும். இவர்கள் தங்கள் நலன்களை மட்டுமே பார்ப்பார்கள். இன்றுவரை இலங்கையில் படித்து வெளிநாடு சென்றவர்கள் தான் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
Ragu. 1965. Honourable I. M. R. A. Iriyagolla the Minister of Education at Batticaloa. He told the teachers not to tell the students what is in their minds. Now there is a separate Minister of Higher Education.
University of Central Lancashire to build $ 120 m campus in Mirigama
Groundbreaking venture approved under Strategic Development Act by Parliament
■Government looks at five foreign universities to open branches
■Targets reducing foreign remittances made for education
■To provide more higher education opportunities for students with means
■To create direct and indirect employment for residents in Mirigama and suburbs
By Ashwin Hemmathagama
The project to establish a branch campus of the University of Central Lancashire (UCLAN) in the Mirigama Export Processing Zone received Parliament approval yesterday without attracting much criticism from the Opposition.
The UCLAN branch campus, which is identified as a Strategic Development Project, will be the first-of-its-kind foreign university to be established in Sri Lanka to attract fresh investments and mitigate local students leaving the island for foreign qualifications, forcing Sri Lanka to lose foreign currency reserves as remittances.
According to Gazette Extraordinary No.1821/39, UCLAN will comply with the provisions of the Universities Act No. 16 of 1978 in conducting its activities, which will be in the national interest and of economic and social benefit to Sri Lanka.
“It will accept 4,000 local and 6,000 foreign students. We have allocated 120 acres in the Mirigama Export Processing Zone for this special investment reaching US$ 120 million. UCLAN will provide 750 direct employment opportunities and an estimated 50,000 indirect employment opportunities for people in the area,” said Minister of Investment Promotion Lakshman Yapa Abeywardena, moving the motion yesterday.
Representatives from several other universities are expected to visit Sri Lanka next month.
“Last year 16,000 students left Sri Lanka in search of foreign education. According to UNSECO, 400 have gone to Russia, 200 to China, 225 to Bangladesh, 100 to the United Kingdom, United States and Australia, 60 students to Nepal, Malaysia and Singapore, and 15 to India. We have remitted Rs. 3,120 million last year for these medical students. With the addition of other categories of studies, the total remittances exceed Rs. 9,945 million in 2012. It is true that local universities can accept almost 25,000 students. So, we are exploring options to provide education to the remainder while safeguarding the valued foreign reserves,” he said.
Joining the debate, Opposition legislator Akila Viraj Kariyawasam approved the Government’s measure to bring in UCLAN to Mirigama even though the national education system has failed to maintain the State universities, establish legal parameters to govern foreign universities and provide accommodation, laboratories and libraries for the existing universities in Sri Lanka.
“It is not healthy the way you are bringing in foreign universities to Sri Lanka. There has to be a central policy document to regulate related matters. We are happy to see that you follow the higher education plans of the United National Party, tabled many years ago. The Government has failed to provide accommodation for all State university students. So what assurance do we have that this project will succeed? First fill the requirements in local universities. We also propose granting study loans to local students. These loans can be recovered after graduation and securing employment. Private educational institutions and universities are mushrooming. Nobody looks into the quality and standards of what is taught in them,” said Kariyawasam.
Year Number of student left Sri Lanka for studies
2006 11,042
2007 12,975
2008 15,770
2009 16,195
2010 16,150
http://www.ft.lk/2013/10/10/university-of-central-lancashire-to-build-120-m-campus-in-mirigama/
Thank you for the information Alex Ravi. Eastern Province also have great locatins for a campus like that from England.
இங்கிலாந்து கூறுவதாவது: லட்சங்களை செலவழித்து எங்கள: நாட்டுக்கு வரவேண்டாம். சொந்தநாட்டிலே படியுங்கள். நாட்டுக்குள் வரமுயல்பவர்களை தடுக்கும் முயற்சி. இதனால் இந்தியாவில் விருட்சமாக வளர்ந்துள்ள கல்விவியாபாரம் இலங்கையிலும் தழைத்தோங்கப்போகிறது.தங்கள் காசை எங்கே முதலீடு செய்யலாம் என தேடிக்கொண்டிருந்தோருக்கு அரிய சந்தர்ப்பம்!
வெயிலிலே கரைந்து,சேற்றிலே காலை புதைத்து, நம் வயிற்றுக்காக பாடுபடுவோர் பற்றி நாம்தான் சிந்திக்கவேண்டும்.இங்லாந்துக்காரன் சோறா தின்கிறான்?
Theva you are right. They also want to globalise many things.