சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையினை நாளை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் வெளிவிவகார அமைச்சரும் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்காவுக்கு கடந்த வாரம் மேற்கொண்ட பயணம் தொடர்பானா தகவல்களை பிரித்தானியா வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் ஆகியோர் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபையின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் வெளியிட உள்ளனர்.
சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுக்கள் தொடாபான தகவல்களை அவர்கள் சபையில் தெரிவிப்பார்கள். போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன.
இதற்கிடையே, சிறிலங்காவின் தற்போதைய போருக்கு தாம் முழுமையான ஆதரவுகளை வழங்குவோம் என ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் தற்போதைய தலைவரான ரஷ்யா தூதுவர் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.