இலங்கையின் போர் முடிவடைந்ததிலிருந்து தீர்வுத்திட்டத்துக்கான அவசியத்தையும் மக்கள் பாதுகாப்பையும் வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டு வந்த அமெரிக்காவின் தெற்காசிய மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் முதல் முறையாக நாளை (08) இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
இலங்கை வரும் ரொபட் ஓ பிளேக்கை, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் எதிர்வரும் புதன்கிழமை சந்திக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசிய முன்னணியின் கரு ஜயசூரிய ரவுப் ஹக்கீம், மனோ கணேசன், மங்கள சமரவீர மற்றும் ரவீ கருணாநாயக்க ஆகியோர் ரொபட் ஓ பிளேக்கைச் சந்திக்கவுள்ளனதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கொழும்புக்கான முன்னாள் தூதுவராக இருந்த பிளேக் அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகளைச் சந்தித்து பேச்சுக்கள் நடத்தவுள்ளார் என ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.