ஜனாதிபதியால் நேற்று சமர்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகிறது.
ஆவை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று இதைத்தெரிவித்ததுடன் பாராளுமன்றம் இன்று காலை 9.30 க்கு கூடுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை நாட்கள் உட்பட எதிர்வரும் 15 ஆம் தகதி வரை நடைபெறவுள்ளது. 15 ஆம் திகதி மாலை ஐந்து மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது