இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய ராணுவ தளபதி “ இலங்கை ராணுவம் திறமை மிக்கது. கட்டுப்பாடானது. ஒழுக்கமானது” என்றெல்லாம் புகழ்ந்து பேசியுள்ளார். 40ஆயிரம் அப்பாவி மக்களை கொன்ற ராணுவத்தை இப்படி புகழ்து பேசுகிறாரே என ஆச்சரியப்பட வேண்டாம். கீழே உள்ள படத்தை பாருங்கள். இந்திய ராணுவத்தின் அருகதையை புரிந்து கொள்ளலாம்.
புலிகள் என்று கூறி அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. நக்சலைட்டுக்கள் என்று அப்பாவி ஆதிவாசிகளை இந்திய ராணுவம் கொன்று வருகிறது. அப்பாவி ஆதிவாசிப் பெண்களை கற்பழிப்பது. பின் நக்சலைட்டுக்கள் என்று கூறி கொலை செய்வது. இந்தியாவில் இவை அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். அந்த ராணுவத்தின் தளபதி இலங்கை ராணுவத்தை புகழ்வது ரொம்பவும் பொருத்தம்தான்!
நன்றி : பாலன்








They have come a long way. They do have a very long way to go in dealing with civilians in the North and East because of the ethnic divide. They are trying to fix all those holes.