கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டும் இரகசிய முயற்சியொன்று இப்பொழுது இரகசியப் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப கட்டமாக கதிர்காம பிரதேசத்தைச் சேர்த்த பாடசாலைகள் சிலவற்றுக்கு வந்து சென்றுள்ள இரகசியப் பொலிஸார் (C.I.D) குழுவினர் இவ்விதமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை விசாரித்துள்ளனர். இது அதிபர்கள், ஆசிரியர்களை பெரிதும் தொந்தரவுக்குள்ளாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.