இந்தியாவை ஆளும் பாஜக தனது ஆட்சியமைப்பு ஆசியா முழுக்க பரப்ப திட்டமிடுகிறது. குஜராத் மாநில முதல்வர் மோடியும் அமைச்சராக இருந்த அமித்ஷாவும் வெற்றிகரமாக பாஜகவை இந்தியாவில் கைப்பற்றிய பின்னர். நேபாளம் , இலங்கை போன்ற நாடுகளிலும் பாஜக ஆட்சியமைக்க விரும்புவதாக தெரிவித்தனர்.நேபாளம், இலங்கை இரண்டிலும் இந்துக்கள் வசிக்கிறார்கள்.
இலங்கையில் பௌத்த பெரினவாத சிங்கள இனவெறியர்கள் ஆளும் வர்க்கங்களாக உள்ள நிலையில் தென்னாசியாவின் இன்னொரு இனவாத சக்தியாக உருவாகி வளர்ந்து வருகிறது பாஜக. இவர்கள் இப்போது இலங்கையில் கட்சி துவங்க விரும்புகிறார்கள்.
ஏற்கனவே தமிழ் மக்கள் வசிக்கும் வட பகுதியில் சிவசேனா என்ற இந்து அமைப்பின் தலைவராக மறவன்புலவு சச்சிதானந்தன் உள்ளார். சைவ சிந்தனை அடிப்படையில் செயல்படும் இவர் இந்திய அரசோடு நெருக்கமான தொடர்புகளை பேணக்கூடியவர். தமிழக பாஜக தலைவர்களோடும் இவர் நெருக்கமாக உள்ளார்.
சமீபத்தில் தமிழக பாஜக பிரமுகர் இல. கணசேனைச் சந்தித்து இலங்கையில் பாஜக துவங்குவது தொடர்பாக ஆலோசித்து வந்திருக்கிறார்.”இலங்கையைச் சேர்ந்த தமிழ் இந்துக்கள் பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் துவங்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதாகவும், இலங்கை தமிழர் பண்பாடு என்பது இந்தியாவின் பண்பாடுதான்” என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாஜக துவங்கப்படும் போது மறவன் புலவு சச்சிதானந்தத்தையே அதன் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.