பிரான்செஸ் ஹாரிசன் ( ஈழம் : சட்சியமற்ற போரின் சாட்சியங்கள் நூலாசிரியர் ) இந்த ஆண்டு இலங்கையில் பல தமிழ் ஆண்களும் பெண்களும் பாதுகாப்பு படையினரால் வன்பாலுறவுக்கு உட்படுத்தப் பட்டதற்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தியுள்ளார். முதல்முறையாக ஒரு தமிழ் பெண் தன் முகம் காட்டி சாட்சியமளிக்கிறார்.
நெஞ்சைப் பிழியும் இந்த இந்த அவலங்கள் ஏகாதிபத்திய அரசுகளதும் பிழைப்பு வாதிகளதும் வியாபார நோக்கங்களுக்காகப் பயன்படக்கூடாது. மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இலங்கை அரசிற்கும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் அவர்களை அணிதிரளச் செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படும் இந்தப் பெண்கள் கூறுவது போல இனிமேல் இவை யாருக்கும் நடைபெறத புதிய உலகத்தை உருவாக்கப் பயன்பட வேண்டும்.
இந்தப் பெண்கள் கூறுவது போல இனிமேல் உலகில் யாருக்கும் நடைபெறாத புதிய உலகத்தை உருவாக்கப் பயன்பட வேண்டும்…
இந்நேரம் இங்கு வாக்கு மூலம் அளித்த ஆண்கள் கூறுவதை 80களிலேயே சிறையில் இருந்தவர்கள் மூலம் அறிந்துள்ளேன்… அதுமட்டுமல்ல, இவர்கள் தாம் அனுபவித்த சித்திரவதைகளை (torture) தாம் சிறைபிடித்த எம்மவர் (tamils) மேலேயே… “நாம் இப்படிதான் அடிபட்டோம்… சித்திரவதை பெற்றோம் (torture) என்று பிரயோகித்ததையும் அறிந்தேன்…
ஆனால் பாதிக்கப்பட்ட எல்லோரும் வெளியில் வருவார்களா… இல்லை…!!!
This is not happen in SL, happens all over the world… இதை போஸ்னியா தொடக்கம் ருவண்டா வரை பார்க்கிறோம்…
அதற்காக உண்மைகளை வரவழைக்க இவை சரியான முறைகளும் இல்லை… இந்தப் பெண்கள், ஆண்கள் கூறுவது போல இனிமேல் உலகில் இவை யாருக்கும் நடைபெறாத புதிய உலகத்தை உருவாக்கப் பயன்பட வேண்டும்…!!!
இதைக் கூற இன்றும் என்னையும்… துரோகி என்பார்கள்… என்றுதான் சுயவிமர்சனத்துடன் கூடிய ஜனநாயகம் வெளிப்படுகிறதோ அன்றுதான் மனிதனிற்கு மீட்சி…!!!