போர் முடிந்து ஒரு வருடம் கழிந்து விட்ட நிலையிலும் ஈழத் தமிழர் தொடர்பான இந்தியாவின் நாடகங்கள் முடிந்த பாடில்லை. ஆறு மாதங்களுக்குள் முகாம்களில் உள்ள மக்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை இப்போது இந்தியாவிடம் கேட்டால் மக்களை மீள் குடியேற்றம் செய்யாமல் இருக்க இதுதான் காரணம் என்று இலங்கை என்ன சொல்கிறதோ அதைத்தான் இந்தியாவும் சொல்லும். இலங்கை என்னும் இனகொலை அரசை பாதுகாத்து வழி நடத்தி வருவதும் இந்தியாதான் என்கிற நிலையில் இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலைப்பாடுகளைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நாடகம் ஆடி வருகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. தான் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த உடன் போர் நின்றூ விட்டதாக உளறிய கருணாநிதி. தனது எம்பிக்கள் குழு இலங்கை சென்று வந்ததும் மக்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாக ஒரு தோற்றத்தை உருவாக்கினார். இந்நிலையில் இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்புவது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இன்னும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு நான்கு மாதங்கள்தானிருக்கிறது, எனவே கருணா உயிருடனிருக்கும் வரை நாடகங்கள் நடந்துகொண்டிருந்தாலும் ,இந்த தேர்தல் நெருங்கும் இடைப்பட்ட காலங்களில் நாடகங்கள் அடிக்கடி மேடையேற்றப்படும், பர்ப்பது பார்க்காதது அவரவரைப்பொறுத்ததாகவிருந்தாலும் “பிறைன் வாஸ்” தொடரும் இந்த நாடகங்களின் நோக்கம் என்னவென்றால், கருணாவுக்கிருக்கும் தொடர் குற்றச்சாட்டுக்கள் நீர்த்துப்போகச்செய்யவேண்டும் என்பதுதான் , மத்திய அரசும் கருணாவுக்கு ஆதரவாக இருப்பதால் நிருபாமா மட்டுமல்ல சோனியா, மண்மோஹன் ராகுல்கான், பசி, பட்டுணி, என்று அரசியல் கோமாளி நடிகர் கூட்டம் கிழவன் கறுணி யைச்சுற்றி ஒப்பாரி பாடிக்கொண்டிருப்பது, பாடப்போவது, தவிர்க்க முடியாது, இன்று வீரியமாக தமது வெற்றிக்கு குழிபறிக்குமென்று எது அறியப்படுகிறதோ அதை மூடிமறைப்பதே நாடகங்களின் கருப்பொருளாகவிருக்கும்,, ஈழத்தமிழர் பற்றிய வசனங்களும் பாசமான தீர்வுகளும் நாடகங்களில் முனிற்கப்போவதை காணலாம், தேர்தல் முடிந்ததும் போடாங்கொய்யாலேஏஏஏஏஏஎ,