வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி இன்று(16.08.11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களுடன் குடாநாட்டு நாளிதழ்களது ஊடகவியலாளர்களும் பங்கெடுத்திருந்தனர். வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் செய்தியாசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை கண்டித்தும் சுலோகங்களை எழுப்பிய ஊடகவியலாளர்கள் அரசுக்கு எதிரானவும் சுலோகங்களை எழுப்பினர்.
துமிழ் தேசிய்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவான் ஆகியோர் கலந்து கொண்டிந்தனர். ஜ.தே.க நாடாளுமன்ற உறுப்பினரான வி;ஜயகலா மகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் கஜேந்திரன் ஜே.வி.பியின் சந்திரசேகரன் உட்பட பலரும் இவ்வார்ப்பாட்டத்தினில் கலந்து கொண்டிருந்தனர்.
சிங்கள மக்களும் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களும் இணைந்த பெரும்பான்மை மக்களின் அழுத்தங்களே இலங்கை அரச பாசிஸ்டுக்களைப் பயமுறுத்தும் நிலையில் இவ்வாறான போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கண்துடைப்பிற்காக மேற்கொள்ளப்படும் சர்வதேச அரச அதிகாரங்களின் அழுத்தங்களைக் கண்டு இலங்கை அரசு அஞ்சப் போவதில்லை. இலங்கை முழுவதும் உருவாகும் மக்கள் போராட்டங்கள் மக்கள் நலன் சார்ந்த அரசியல் தலைமை ஒன்றின் கீழ் நிறுவனப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், புலம் பெயர் அமைப்புக்கள் இவ்வாறான போராட்டங்களை ஆதரிப்பதன் அவசியத்தையும் உணர்ந்துகொள்ள இவ்வாறான போராட்டங்கள் துணைபுரியலாம்.
புலம்பெயர் தமிழர் இங்கு போராட்டங்களை ஆதரித்தால் அவர்களும் இங்கு வந்து பங்குகொள்ளவேண்டும். அல்லாவிடில் நீங்கள் துள்ள நாங்கள் பொதி சுமக்க வேண்டிவரும். அதுதான் நடந்தது. பணம் முக்கியத்துவத்தைவிட பங்குபற்றல் முக்கியமானது. முடிந்தால் படை திரட்டிவந்து இங்கு போராடவும். நாமும் தோள்கொடுக்கிரோம். தூண்டுவது நீங்கள் நரகத் துயர் சுமப்பது நாங்கள்.
-ஈழத்திலிருந்து ஒரு நணபன்-