காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட தனது கணவர் காணாமல் போயுள்ளமை சம்பந்தமாக ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஒரு திறந்த மடலின் மூலமாக தெரிவித்திருக்கிறார்.
நிராயுதபாணி மனிதரொருவரை கொல்வதானது மிலேச்சத்தனமானதொரு செயலெனவும், அதனால் துயருருவது அவரது பிள்ளைகள் தானெனவும், மனிதரொருவரை காணாமல் போகச் செய்வது மிகக் குரூரமானதெனவும் அதனால் அவரது குழந்தைகள், மனைவி மற்றும் உறவினர்கள் அனைவரும் நிரந்தரமாக துயருர நேர்வதாகவும் முக்கியமாக பிள்ளைகளின் முழு எதிர்காலமுமே இருளாக்கப்படுவதாகவும் அவ்வாறான துயர் எந்தப் பிள்ளைக்கும் உரிமையாக்கப்படக் கூடாதெனத் தான் வேண்டிக் கொள்வதாகவும் சந்தியா எக்னெலிகொட அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.








காணாமல் போனவர் பத்திரிகையாளர் அவரைத் தேடிப் பிடிக்க இல்ங்கையிம் முதல் பெண்மணீக்கு கடிதம் எழுதுவது நல்லதே ஆனால் நீங்கள் சொன்னட்து எல்லாம் தெரியாமலா அவரைக் கடத்தி இருப்பார்கள்?
நீர் எல்லாம் அறிந்தவர் தமிழ்மாறன.
மகிந்தாவுக்கு மொட்டை போடுவதாக நினைத்து நமது பத்திரிகையாளர் தமக்கு தாமே மொட்டை போட்டு விட்டார்களோ? மண்டை காலியான நமது அரசியல் வாதிகளூக்கு புகழ்ச்சி மட்டுமே விருப்பம் அவர்கள இகழ்ந்தால் விடுவார்ளா?அதிலும் மகிந்த தன் தொப்பை குறயவில்லை எனும் கவலையில் இருப்பவர், அவரது தம்பி கோத்தா எங் கே, எப்போது தன் கழுத்த தள்ளூவார்களோ எனும் கலக்கத்தில் உள்ளவர்.அவர்களே டென்சனில் இருக்கும் போது நமக்கேன் வம்பு.பொல்லைக் கொடுத்து அடிவாங்குவது என்பது இதுதான்.