ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைப் பதவிப்பிரமாணத்துக்கான வைபவங்களின் பொருட்டு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பொதுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்தத் தொகை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டிலான வைபவங்களுக்கு மட்டும் செலவான தொகை என்பதுடன் ஏனைய அமைச்சுக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் செலவுகள் அதனையும் தாண்டும் என்று தெரிய வருகின்றது.
பால்மா விலை அதிகரிப்பு தேங்காய் விலை அதிகரிப்பு என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினாலும் அரசாங்கம் பொதுமக்கள் மேல் சுமையை சாட்டிவிட்டு நாட்டில் பட்டினி பஞ்சத்தை தலைவிரித்தாட வைத்துள்ளது
மறு புறத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களும் போதுமான உணவின்றி வாடுகின்றனர்.
இவ்வாறான நிலையில் பொதுமக்களின் வரிப்பணத்தில் ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் வீணாக்கும் பணம் அவார்களின் குடும்ப சொத்துப்போன்று கையாளப்படுவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கை ஜனாதிபதி தன் சொந்தக் காசையா செலவு செய்கிறார்? இலங்கை மக்களீன் வரிப்பணம்தானே? என் க்கு இதில் எல்லாம் கவனம் செலுத்த நேரமே இல்லை ஏனென்றால் இதெல்லாம் சுத்த வேஸ்ட்.
மேதகு வே.பி.இன் பிறந்த தினத்துக்கே பரதேசித்தமிழர் எத்தனை கோடியைச் செலவழித்தனர். அங்கே மக்கள் பட்டினியில்ச் செத்துக்கொண்டிருக்க!! அதுக்கு இது எம்மாத்திரம்???!!!!