இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் 21 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர். முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்கல்வி பிரதியமைச்சர் முஸ்தபா,தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கள் ஆகியோர் நேற்றே தமது கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர். இலங்கைத் தேர்தல் வரலாற்றில் அதிகளவானோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த தேர்தல் இதுவாகும்.
சிவாஜிலிங்கத்திற்கே அதிகளவான தமிழ் வாக்குகள் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ஆங்கில ஊடகம் எதிர்வுகூறியுள்ளது. மகிந்த ராஜபக்சவிற்கு பின்புல ஆதரவு வழங்கும் இந்தியாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் தேர்தலில் பங்குபெற்றுவதாக சிங்கள ஊடகவியலாளர் கருத்துத் தெரிவித்தார்.மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான மனோநிலையில் தமிழ்பேசும் சிறுபான்மையினரின் வாக்குகள் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படுவதைத் தடுக்கவே சிவாஜிலிங்கம் தேர்தலில் பங்காற்றுவதாகப் பலத்த சந்தேகங்கள் எழுவதாக லக்பிம ஊடகவியலாளர் எமக்குத் தெரிவித்தார்.