காங்கிரஸ் ஆட்சியிலிருந்த தனியார் மயத்தைத் துரிதப்படுத்தவும் பல்தேசியக் கொள்ளையை வேகப்படுத்தவும் அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்ட இனக்கொலையாளி நரேந்திர மோடி இந்தியாவின் ராஜபக்ச! நரேந்திர மோடி இலங்கை செல்கிறார் என்றால் அவரிடம் ஒடுக்கப்படும் மக்கள் கேட்பதற்கு எதுவும் கிடையாது, மகிந்த ராஜபக்ச வன்னி இனப்படுகொலையில் ஆயிரமாயிரமாய் தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு இலங்கை அரசியலில் இன்னும் சக்திமிக்கவராக வாழ்ந்து வருவது போன்று குஜராத்தில் இனப்படுகொலை நடத்தி ஆயிரக்க்ணக்கான இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர் நரேந்திர மோடி.
ஈழத் தமிழர்கள் போன்று சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடிவரும் கஷ்மீர் மக்களின் போராட்டத்தை அழித்தே தீருவேன் எனச் சூழுரைத்த இனக்கொலையாளி நரேந்திர மோடி. சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு அழிகப்பட்டிக்கொண்டிருக்கும் இந்தியப் பழங்குடி மக்களின் போராட்டத்தை சில நாட்களுக்குள்ளாகவே அழித்துத் துவம்சம் செய்வேன் என்று செயற்படுபவர் நரேந்திர மோடி.
இந்து வெறித்தனத்தை மக்கள் மத்தியில் விதைத்து அதன் பின்னணியில் பல்தேசிய நிறுவனங்களின் கொள்ளைக்கு இந்தியாவைத் திறந்துவிட்டவர் மோடி.
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ,எஸ்.ஐ.ஏஸ் இன் மத வெறிக்கு எந்த வகையிலும் குறைவற்ற ஆர்.எஸ்.எஸ் இன் நீண்டகால உறுப்பினர் மோடி.
இனக்கொலையாளி, சிறுபான்மைத் தேசிய இனங்களின் எதிரி, பல்தேசியக் கொள்ளையர்களின் அடியாள், போன்ற அத்தனை தகமைகளையும் கொண நரேந்திர மோடி ஈழத் தமிழர்களின் நண்பன் அல்ல. ராஜபக்சவைப் போன்ற மற்றொரு எதிரி.
மோடி போன்ற கொலையாளிகளுடனும், அதிகாரவர்க்கத்தின் அடியாட்படைகளுடனும் வைத்துக்கொண்ட உறவே ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அன்னியப்படுத்தி அழிப்பதற்குக் காரணமாயிருந்தது.
மோடியை இலங்கைக்குச் செல்லவேண்டாம் எனத் தமிழ் நாட்டிலிருந்து கூச்சல் போடும் இனவாதிகள் மோடி போன்ற இனக்கொலையாளியை இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.
ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும் போராடும் மக்களே ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்கள். வன்னிப் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பழங்குடி மக்களும், மாவோயிஸ்டுக்களும், தமிழ் நாட்டிலுள்ள முற்போக்கு இயக்கங்களுமே தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தார்கள். மோடி போன்ற இனக் கொலையாளிகள் ஒடுக்கும் இலங்கையரசின் பங்காளிகள்.
உலகத்திலேயே அதிகமாக இனப்படுகொலை மற்றும் தன் முஸ்லீம் இனத்தையே படுகொலை செய்தவர்கள் முஸ்லீம் பயங்கரவாதிகளும், கம்யூனிஸ்ட்களுமாகத்தான் இருப்பார்கள்…எனவே உமக்கெல்லாம் மோடியைப்பற்றி பேசவே தகுதியே இல்லை