இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 52 பேரும் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவ கிராமங்களாக கிலிஞ்சல் மேடு ,டிஆர் பட்டினம் மீனவர்கள் 32 பேர் கோடிய கரைக்கு தென் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த அக்டோபர் மாதம் 16&ஆம் தேதி இலங்கை கடற்பணியரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதை போன்று புதுகோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 20 பேர் கடந்த நவம்பர் 20 தேதி சிறை பிட்க்கப்பட்டு யாழ்பானம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். விடுவித்த மீனவர்கள் 52 பேரும் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படை அதிகாரியிடம் இலங்கை கடற்படையினர் இன்று ஒப்படைத்தனர்.
அப்பாவி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை இலங்கை மீனவர்களின் வாழ்கையோடும் பின்னிப் பிணைந்துள்ளது. ஒரு புறத்தில் இனவாதத்டைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழக அரசியல்வாதிகளும் மறுபுறத்தில் இலங்கை இனவெறி அரசும் மீனவர்களின் பிரச்சனையை தமது நலன்களுக்காகப் பயன்படுத்துகின்றன.
மீனவர்கள் 52 பேரும் மாலை காரைக்கால் திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.