இந்திய பிரதமர் மன் மோகன் சிங் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இரண்டு இந்திய யுத்த கப்பல்கள் இன்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. |
ஐ.என்.ஸ். ரண்வீர் மற்றும் ஐ.என்.எஸ். மைசூர் ஆகிய இரண்டு யுத்த கப்பல்கள் இலங்கைக் கடப்பரப்பிற்கு வெளியே நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கை கடற்படை உத்தியோகத்தர்கள் மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவசர நிலைமைகள் ஏற்பட்டால் குறித்த கப்பல்கள் மேலதிக பாதுகாப்பினை வழங்கவுள்ளதாகக் குறிப்பிப்படுகிறது. சார்க் மாநாடு முடிவடையும் வரை குறித்த கப்பல்கள் நிலை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய தென் கரையோரப் பகுதி முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது |