புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் இலங்கைக் கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டு காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகேயுள்ள தெற்கு புதுக்குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 25 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் நா.ராமன் (30), அவரது சகோதரர் லட்சுமணன் (30), ஆ. பூமிராஜ் (29) ஆகிய மூவரும் ஒரு படகில் சென்றனர்.
மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அவர்களைத் தாக்கினராம். இதனால் அவர்கள் மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.
மேலும் அவர்கள் வைத்திருந்த வலைகள், செல்போன்கள் மற்றும் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றை கடலில் வீசி எறிந்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கரை திரும்பிய அவர்களிடம் கடலோர காவல்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.