இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலை நிறுத்தவே இராணுவத்தினரை பலப்படுத்தி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் நாட்டை இராணுவமயப் படுத்துகின்றது என்ற சர்வதேச சமூகத்தினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இராணுவத்தினரை நிலை நிறுத்துவது குறித்து, உலகின் வேறு எந்த தரப்பிற்கும் கருத்து வெளியிடும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் வடக்கும் கிழக்கும் முழுமையான இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இனப் படுகொலையை தலைமை தாங்கியவர்களில் ஒருவரான கோதாபயவின் கூற்று கேலிக்குரியது.