கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின், அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.இதே வேளை போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குறித்த பிரதான குற்றவாளியான மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக் குழு இறுதிப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு இராணுவத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.படையினர் சிலரால் சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்றாலும் அதற்காக ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்க முடியாது என்று தனது 400 பக்க அறிக்கையில் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.