ஈழப்போர்-4ல் இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களை அழிக்கக்கூடிய எந்தவொரு ஆயுதமும் அளிக்காது என்று தமிழக மக்கள் கொடுத்த அழுத்தத்தினால் இந்திய அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், மறைமுகமாய் ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திற்கு இந்திய கொடுத்துள்ளதை எ.டி.டி.வி.யின் இராணுவ செய்தியாளர் நிட்டின் கோகுலே தனது “இலங்கை சமாதானத்தில் இருந்து போர் வரைக்கும்” என்ற புத்தகத்தில் தெரிவிக்கிறார்.
இந்த புத்தகம் ஹர் ஆனந்த் பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அரசுக்கு ஆதாரமாய் விளங்கி வந்த தமிழகத்தை சேர்ந்த தி.மு.க.வை வைத்துக் கொண்டே இந்நடவடிக்கையை இந்திய அரசு எடுத்து வந்தது.
உதாரணமாய், இந்தியா ஐந்து எம்.ஐ.-17 ரக உலங்கு வானூர்தியை 2006 தொடக்கத்திலேயே கொடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.
இந்த உலங்கு வானூர்திகளை பயன்படுத்தும் போது, இலங்கை கடற்படையின் வர்ணம் தீட்டியே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டது.
இந்திய கடலோர கடற்படையின் அன்பளிப்பாய் “சுகன்யா கிளாஸ் ஆப் சோர் வேசல்” என்ற அதிவேகமாய் பயணிக்கக்கூடிய சிறிய ரக போர்க் கப்பல், இலங்கையின் ஆழ ஊடுருவும் அணியை விடுதலைப்புலிகளின் ஊடறுப்பு அணியினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அதனை முறியடிக்க முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
அதேபோல், விடுதலைப்புலிகளின் ஊடறுப்பு அணியினால் படுகாயமடைந்த இலங்கை இராணுவத்தினரை விமானத்தில் கொண்டு செல்ல இக்கப்பலே பயன்படுத்தப்பட்டது.
அதிஉயர் சக்தி வாய்ந்த ரேடார் பொருத்தப்பட்ட இந்தியாவின் தயாரிப்பான டோனியர் விமானத்தில் கடல் மேல் உயரப் பறந்து திறமை வாய்ந்த ரேடார் இயக்குபவரை வைத்து விடுதலைப்புலிகள் பயன்படுத்திவந்த மிதக்கும் ஆயுத கிடங்குகளை காட்டி கொடுக்கப்பட்டது.
இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை 2006 லிருந்து 2009 வரையிலான திட்டமிட்ட ஒத்துழைப்போடு, விடுதலைப்புலிகளின் முதுகெலும்பை உடைக்கப்படுமாறு, இலங்கை கப்பற்படையின் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமையில் சுமார் 11 விடுதலைப்புலிகளின் ஆயுதந்தாங்கிய கப்பல்களை முற்று முழுதாய் அழித்து ஒழித்ததோடு அல்லாமல், விடுதலைப்புலிகளுக்கு வரக்கூடிய ஆயுத வழிகளை அடைத்தது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளை ஒவ்வொரு நிலையிலும் இந்தியாவிற்கு இலங்கை தெரிவித்தே வந்துள்ளது.
இதற்காக மூன்று சிறப்பு இலங்கை இராணுவ அலுவலர்களை நியமித்து, இந்தியாவில் உள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கும் மற்றும் இந்திய பாதுகாப்புச் செயலாளருக்கும் செய்திகள் கொடுக்கப்பட்டு வந்துள்ள அதிர்ச்சி தரும் செய்திகளை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
it was india devotion to a divine suitor that caused singalese mind to wander.but india knew the real reson was their own interest.