சில குறிப்பிட்ட குழுக்களும், நபர்களும் நாட்டையும், மக்களையும், போர் வீரர்களையும், அவர்களின் வெற்றிகளையும், அரசாங்கத்தையும், சிறிலங்கா அதிபரையும் காட்டிக் கொடுக்க முனைகின்றன.
குறுகிய கால நன்மைகளுக்காக அவர்கள் சிறிலங்காப் படையினர் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.
தீவிரவாதத்தை தோற்கடித்த தமது படையினரின் வெற்றியை மழுங்கடிக்க பல்வேறு நிகழ்ச்சி நிரல்களின் கீழ் இயங்கும் குழுக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாகக் கூறியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
வெளிநாடுகளில் உள்ள இராணுவ அதிகாரிகளை விடவும் சிறிலங்கா இராணுவத்தில் உள்ள அதிகாரிகள் ஆற்றல் மிக்கவர்களாக இருக்கின்றனர்.
சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் 25 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கூறும் “கிசி வெடகத் சதுரட்ட யட்ட நொவன மா“ ( நான் ஒருபோதும் எதிரியிடம் சரணடையாதவன்) என்ற சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூலை நேற்று வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் முதலாளித்துவ சமூக அமைப்பு நிலைக்கமுடியாத சூழலில் மக்களின் அழிவிலிருந்தும் போர் மற்றும் இராணுவ மயமாக்கலிலும் அரசுகள் தம்மைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றன. பயங்கரவாத்தை அழிப்பது என்ற தலையங்கத்தில் மக்களை அழிப்பதில் இலங்கை அரசு உலகின் அதிகார மையங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனது. அமரிக்கா,ஐரோப்பா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் பயங்கரவாதத்தை அழிப்பதில் இலங்கையை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று வெளிப்படையாகவே கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.