லங்கா இரித பத்திரிகை நிறுவனம் இலங்கை அரசாங்கத்தின் உளவுத்துறையால் மூடப்பட்டுள்ளது. ஜே.வி.பி இற்கு ஆதரவான இந்தப் பத்திரிகை நிறுவனம், தேர்தல் நேரத்தில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தகது. முன்னதாக லங்கா இரித பத்திரிகைக் காரியாலத்திற்கு தீவைப்பேன் என இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்புச் செயலரும், பல குற்றச்செயல்களோடு தொடர்புடையதகக் கருதப்படுபவருமான கோதாபய ராஜபக்ச தொலைபேசியூடாக எச்சரிக்கை விடுத்ததாக ஜே.வி.பி தமது ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறும் இந்திய அரசு, இலங்கையின் வெளிப்படையான அரச பயங்கரவாதத்தை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதாகயும் மறைமுக ஆதரவு வழங்கிவருவதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.