இலங்கை அரச துணைக்குழுக்களைச் சார்ந்தோரும், ஏனைய இலங்கை அரச சார்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பெரும்பான்மையாகக் கொண்ட குழுவினர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுமையும் இங்கு தரப்படுகிறது. இலங்கையில் நடைபெறும் “சர்வதேச எழுத்தாளர் மாநாட்டிற்கு” சார்பு நிலை கொண்டுள்ள இக்குழுவினரின் அணிசேர்க்கையை இவ்வறிக்கை வெளிக்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம்!
இலங்கை மற்றும் புகலிடத்தில் வாழும் சமூக அக்கறையாளர்களான நாங்கள் எதிர்வரும் சனவரியில் இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்பமிட்டுள்ளோம்.
கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ் – முஸ்லிம் – மலையக -சிங்கள எழுத்தாளர்களிடையே ஒரு பகைமறுப்புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ்மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து – அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத்தாளர்களிடயே ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த மாநாட்டைக் கருதுகிறோம்.
அயல்நாட்டு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே சிந்தனைப் பரிமாறலை சாத்தியப்படுத்துவதோடு அவர்கள் எதிர்காலத்தில் இணைந்து பல்வேறு இலக்கியப் பணிகளை முன்னெடுக்கவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் எனக் கருதுகிறோம்.
மாநாட்டு அமைப்பாளர்கள் முன்வைத்திருக்கும் 12 முன்னோக்குகளும் மிகச் சரியானவை எனவும் அவை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நன்மைகளைச் சாதிக்கவல்லவை என்றும் கருதுகிறோம்.
இந்த மாநாடு இலங்கை அரசால் நடத்தப்படவில்லை என மாநாட்டு அமைப்பாளர்கள் பலதடவைகள் ஊடகங்களில் உறுதிமொழிகளை அளித்துள்ளார்கள். இம்மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்குமான தொடர்புகள் இதுவரை எவராலும் நிரூபணம் செய்யப்படவில்லை. மாநாடு மீது இவ்வாறு ஆதாரமில்லாத அவதூறுகளைச் சுமத்திய எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையையும் ‘குமுதம் ரிப்போர்டர்’ இதழையும் ‘புதிய ஜனநாயகம்’ இதழையும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.
இந்த மாநாட்டை நிராகரிக்கக்கோரி “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்” என்ற பெயரால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை நாங்கள் முற்று முழுவதுமாக நிராகரிக்கிறோம். இந்த மாநாட்டை இலங்கை அரசு பயன்படுத்திக்கொளளக் கூடும் என்ற ஊகமே அவர்களது அறிக்கையின் மையம். இந்த ஊக அரசியல் மலிவானது. ஊகத்தை முன்னிறுத்தியே ஒரு ஆக்கபூர்வமான மாநாட்டை அவர்கள் நிராகரிக்கக் கோருவது அநீதியானது. மாநாடு அரசு சார்பாக மாறாதவரை ஊகத்தின் அடிப்படையில் அதை நிராகரிக்கக் கோருவது நியாயமற்றது எனக் கருதுகிறோம்.
இன்று இலங்கையில் ஊடகச் சுதந்திரம் அரசால் கடுமையாக அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு மாநாடு தேவையா என எழுப்பப்படும் எதிர்ப்புகளையும் நாம் நிராகரிக்கிறோம். இந்த அச்சுறுத்தல் சூழலுக்குள்ளும் அதை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதையும் குழு நிலை மோதல்களிற்கு அப்பால் அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம்.
கடந்த முப்பது வருட யுத்தத்தில் இலங்கை அரசு செய்த அனைத்துக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியும் இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக இலங்கையில் எந்த நிகழ்வுகளையுமே நடத்தக் கூடாது எனச் சொல்லப்படும் கருத்துகளை நாங்கள் மறுக்கிறோம். குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை நோக்கி நடத்தப்படும் மாநாட்டை நடத்தக்கூடாது எனச் சட்டாம்பிள்ளைத்தனம் செய்பவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இலங்கையில் மாநாடு நடத்துவது எமது பிறப்புரிமை. முப்பது வருடகால யுத்தத்தில் எழுத்தாளர்கள் கலைஞர்களிடமிருந்து இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இன்னபிற ஆயுதக் குழுக்களாலும் பறிக்கப்பட்ட கருத்து – எழுத்து உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய நெடிய போராட்டம் எம்முன்னே உள்ளது. அந்த நெடிய பாதையில் இவ்வாறான ஒரு மாநாடு நடைபெறுவது ஒரு முன்னேற்றகரமான புள்ளியென்றே கருதுகிறோம்.
இலங்கையின் எல்லாச் சமூகத்தளங்களிலும் இருந்தும் எழுத்தாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகிறோம். குறிப்பாக தலித்துகள், பெண்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் போன்ற விளிம்புநிலையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்நிலைப்படுத்தப்பட வேண்டுமென மாநாட்டு அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த மாநாட்டிற்குப் புலமைசார் பங்களிப்பையும் தார்மீக ஆதரவையும் வழங்குமாறு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
-28 டிசம்பர் 2010.
அறிக்கையில் இலங்கையிலிருந்து கையொப்பமிடுபவர்கள்:
தெணியான் (எழுத்தாளர், சிறுபான்மைத் தமிழர் மகாசபை)
கவிஞர் சோ.பத்மநாதன்
சுமதி சிவமோகன் (பேராசிரியை, பேராதெனியா பல்கலைக்கழகம்)
ரியாஸ் குரானா (எழுத்தாளர்)
பெர்னாண்டோ ஜோசப் (பத்திரிகையாளர்)
தமிழழகன் (சிறுபான்மைத் தமிழர் மகாசபை)
மஜீத் (எழுத்தாளர்)
மு.மயூரன் (எழுத்தாளர்)
தேவராஜன் ரெங்கன் (சட்டத்தரணி, சமூகவியலாளர், பத்திரிகையாளர்)
ஏ.சி.ஜோர்ஜ் (ஆசிரிய ஆலோசகர், சமூகவியலாளர், எழுத்தாளர்)
சே.சிவபாலன் (மனித உரிமை செயற்பாட்டாளர்)
பூபாலசிங்கம் சிறீதர்சிங் (பதிப்பாளர்)
கிருஸ்ணசாமி கிருபானந்தா (எழுத்தாளர்)
சிவநாமம் சிவதாசன் (எழுத்தாளர்)
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா (யாழ் பல்கலைக்கழகம்)
கே.வி.குணசேகரன் (ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர்)
வை.சிவசுப்பிரமணியம் (எழுத்தாளர்)
த.பாலதயானந்தன் (ஊடகவியலாளர்)
மதுரகவி காரை எம்.பி.அருளானந்தம்
ந.சதீஸ் (ஊடகவியலாளர்)
ஜெ.பாலகுமரன் ( ஊடகவியலாளர்)
பா.கலைவாணி (பத்திரிகையாளர்)
க.சோபனா (பத்திரிகையாளர்)
வல்லி தாமோதரராஜா (பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர், பளை)
சின்னத்தம்பி தங்கராசா (உதவி அரச அதிபர், சாவகச்சேரி)
தியாகராஜா சண்முகவடிவேல் (ஊடகவியலாளர்)
செல்லத்துரை நவநாதன் (பத்திரிகையாளர்)
செல்லத்தம்பி மாணிக்கம் (விரிவுரையாளர்)
அறிக்கையில் புகலிடத்திலிருந்து கையொப்பமிடுபவர்கள்:
வி.ரி. இளங்கோவன் (எழுத்தாளர்)
சரவணன் நடராசா (ஊடகவியலாளர்)
கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்
சுமதி ரூபன் (எழுத்தாளர்)
ஹரி இராசலட்சுமி (எழுத்தாளர்)
த. அகிலன் (எழுத்தாளர், வடலி பதிப்பாளர்)
கரவைதாசன் (எழுத்தாளர்)
நிர்மலா ராஜசிங்கம் (இலங்கை ஜனநாய ஒன்றியம்)
சந்துஷ் (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)
நட்சத்திரன் செவ்விந்தியன் (எழுத்தாளர்)
ரவிநேசன் பொன்னுத்துரை (பத்திரிகையாளர்)
உதயகுமார் (ஊடகவியலாளர்)
ஜீவமுரளி (எழுத்தாளர்)
விஜி (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
தேவதாசன் (தலைவர் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, இணைப்பாளர் சிறுபான்மைத் தமிழர் மகாசபை)
நோயல் நடேசன் (எழுத்தாளர்)
அசுரா (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
அன்ரன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
சிவசாமி சிவராசன் (புலம் பெயர்ந்த இலங்கையர்களிற்கான வலையமைப்பு)
எஸ்.சுந்தரலிங்கம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
அருந்ததி (திரைப்பட இயக்குனர், தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
எஸ். காசிலிங்கம் (இலங்கை கிராம அபிவிருத்திச் சங்கம்)
யோகரட்ணம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
ப.பகீரதன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
தர்மினி ( ‘தூமை’ இணையத்தளம்)
தேவகாந்தன் (எழுத்தாளர்)
எம்.ஆர்.ஸ்டாலின் (ஜனநாயத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி)
ஷோபாசக்தி (எழுத்தாளர்)
உமா (எழுத்தாளர்)
கற்சுறா ( ‘மற்றது’ இணையத்தளம்)
ராமமூர்த்தி ராஜேந்திரன் (முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்)
ச.வாசுதேவன் (நாடகக் கலைஞர்)
செ.கிருஸ்ணமூர்த்தி (எழுத்தாளர்)
டி.பி.எஸ்.ஜெயராஜ் (பத்திரிகையாளர்)
நா. ஸ்ரீ கெங்காதரன் (சமூக சேவையாளர்)
அகிலன் கதிர்காமர் ( இலங்கை ஜனநாயக ஒன்றியம்)
நஜா முகமட் (இலங்கை இஸ்லாமியர் முன்னணி)
மாணிக்கம் நகுலேந்திரன் (ஆசிரியர் -தாகம், நிரூபம்)
ராகவன் ( (இலங்கை ஜனநாய ஒன்றியம்)
முன்னதாக எழுத்தாளர் மாநாட்டை எதிர்த்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:
இதில் இலங்கையில் வாழ்பவர்களும் அந்த நாட்டுப் பிரச்சனை அதிகம் புரிந்தவர்களும் போராட்டத்தில் பங்கு பற்றியவர்களும் கையொப்பம் இட்டு இருப்பது உண்மையாக இனத்தின் மேல் எவருக்கு அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் மட்டும் கொலை செய்யப்படவில்லை.
அப்போது எல்லாம் யாரும் எதையும் முன்பு பஸ்கரிக்கவில்லை.
அரசையும் புலிகளையும் கூண்டில் ஏற்ற வேண்டும்.
அதற்காக குளத்தோடு கோபித்துக் கொண்டு அதைக் கழுவாமல்
இருந்தால் யாருக்கு நட்டம்.
நக்கீரன்,
பிரான்ஸ் பிள்ளையான் குழு எம்.ஆர்.ஸ்டாலின், கனடா கற்சுறா, சோபாசக்தி அவர் சீடப்பிள்ளை மயூரன், எலக்சன் புகழ் தலித் முன்னணி, கோதபாயவின் தோழர் நோயல் நடேசன் இத்தியாதி இத்தியாதி…. எல்லாம் இனத்தின் மேல் அக்கறை உள்ளவர்களோ? இவங்களை வைச்சு கா.. மடி கீ..மடி பண்ணலையே?
ஒரு இனம் அழிந்ததைக் கண்டும் காணாமல் தன் சுகமே பெரிது என எழுதுபவனை என்ன என்று சொல்வது ? இன்றும் கூட நெருக்குதலுக்கு உள்ளாகி, தமிழ் நிலங்களை இழந்து, சிங்களமயமாகிவரும் இலங்கையை கண்டும் காணாது இருப்பவனை எப்படி எழுத்தாளன் என்பது? சுதந்திரமாக உலவ முடிகிறதா? என்று மரணிப்போம் என்றே தெரியாத வாழ்க்கை வாழும் பல்லாயிரவர்களுக்கிடையில் அதைப்பற்றிப் பேசாது ஒரு நாள் கூத்துக்காக மீசை வழிப்பவனை என்ன என்று சொல்வது? எத்தனையோ மாநாடுகள் நடந்து முடிந்து விட்டன. இவைகளால் தமிழுக்கோ தமிழனனுக்கோ என்ன பயன்? இதை உணர இயலாதவன் எப்படி எழுத்தாளனாக இருப்பான்?
உன் எழுத்துகளை வரிசைப்படுத்தி நீ பார்
அதனால் யாருக்குப்பயன் என்று
நீயே உணர்ந்து கொள் நீ ஒரு எழுத்தாளனா என்று ?
உனக்கு ஒரு மாநாட்டு மேடை தேவையா என்று ?
புருடஷ் ,எட்டப்பன் ,கருணா பரம்பரையின் தொடர்ச்சி
மேலுள்ள அறிக்கையில் காண்க
இரா .இரவி
ஈழ அழிவுக்குப் பின்னால் இலங்கையில் நடைபெற்றுள்ள மீதமுள்ள தமிழர்களின் இன்னல்களுக்கு எதிராக., வெளிப்படையாக, மாநாட்டு ஆதரவாளர்கள் செய்தது என்ன?.. தமிழன் அழிந்தாலும் தமிழைக் காப்போம் என்றால் அதனைத்தானே தமிழ் செம்மொழி மாநாடு மூலமாக கருணாநிதியின் குடும்பக் கும்பல் தமிழ் நாட்டில் செய்தது… சிங்கள ராஜபக்சே கும்பளை நக்கிப்பிழக்கும் நிலைக்கு … துரோகிகளீன் பணவெறி ஓங்கிவிட்ட்து அவமானம்… அவமானம்
இந்த எழுத்தாளபெருமக்கள் எழுதி என்ன சாதித்து விட்டார்கள்.குறிப்பாக புலம் பெர்யர்ந்த மேதாவிகள் தின்ற சாப்பாடு செரிமானமாடையாமல் திரிபவர்கள்.தமிழ் இனத்திற்கே இது அவமானம். சூடு சுரணை அற்ற இனம்.சிறிலங்காவில் பத்திரிகை எழுத்தர்கள் மீது நாடாத்தப்படும் கொடுமைகளை நடாத்தும் ஒரு கொடுங்கோல் அரசை ஆதரிக்கும் சூடு சுரணையற்ற கும்பலின் காவடி எடுப்புதான் இந்த மாநாடு.
கால நிலையை மறந்து கம்பையும் கொம்பையும் நீட்டும் அறிவிலிகள்.
நந்தவனம் என்றொரு சிற்றிதழ்.. படிக்கக் கிடைக்காதவர்கள் பாக்கியம் செய்தவர்கள்… தமிழினத் துரோகியாக உருவெடுத்துள்ள வதிலைபிரபா தன் உலகத் தமிழ் சிற்றிதழ் சங்க சார்பில் தமிழ் மாநாட்டிற்காக 2011 சனவரியில் செல்லும் இலங்கைப் பயணத்தை நியாயப்படுத்தியும், தான் எந்த வகையிலும் இதனால் தமிழினத் துரோகியல்ல என்பதையும், மாய்ந்து, மாய்ந்து எழுதி வருவதோடு…
இலங்கையில் நடைபெறும் தமிழ் மாநாட்டை தமிழ் எழுத்தாளர்கள் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்ததை – கீற்று தனது இணையத்தில் வெளியிட்டதற்காக…
கீற்று தன் பொருளாதாரம் காரணமாக வெளிவராமல் போய்.. நேயர்களிடம் உதவி கேட்டு.. அந்த உதவியின் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததையும் கூட அவர் தரம் தாழ்ந்த தன் எழுத்துகளின் மூலம் இழிவுபடுத்த முனைந்திருக்கிறார்.
தம் உலகத் தமிழ் சிற்றிதழ் சங்கத்தை செம்மொழி மாநாட்டுக் குழு மதித்து.. தம்மையும் அழைத்து கட்டுரை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று குற்றால கூட்டத்தில் தீர்மானம் போட்டார்.. அது எடுபடவில்லை.
“ஈழத்திலே நடைபெற்ற படுகொலையை மறுக்கவில்லை.. ஆனால் சனவரி 2011 ல் நடைபெறும் தமிழ் மாநாட்டிற்கு தான் செல்வதால் என்ன தீமை நடந்துவிடப்போகிற்து? போகாததால் என்ன நனமை நடைபெறப்போகிறது?” என்று விடலைப் பையனைப்போல் கேள்வி கேட்கிறார்..
வலிய.. வலிய.. எழுதும் இவரது எழுத்தின் மூலம் நமக்கு வரும் சந்தேகம் என்னவென்றால்.. ஈழத்தமிழர் சாவுக்கு துணைபோய்.. தமிழுக்காக செம்மொழி மாநாடு கூட்டியவர்கள் போன்ற ஏதேனும் ஒரு கூட்டத்திடமிருந்து வதிலைபிரபா என்ன ஆதாயம் பெற்றார் என்பதுதான்..
ஈழத்தமிழர்களையும்.. போராளிகளையும் கொடூரமாகக் கொலை செய்தவர் தன்னை நியாயவாதியாக காட்டிக் கொள்ளவும்.. இலங்கையில் எந்த போர்குற்றங்களும் நடைபெறவில்லை என்று காட்டிக்கொள்ளவும் நாடகங்களைத் தொடர்ந்து நடத்துகிறார்..
அதற்கு ஆதரவாக இந்தியாவும் தன் பங்குக்கு காமன்வெல்த் போட்டி இறுதி நாளில் கொலைகாரனை அழைத்து கவுரவித்தது…
இப்படியாக மற்றொரு கவுரவத்தை ராஜபக்சேவுக்கு கொடுக்கக் கூடுவதே 2011 சனவரி தமிழ் மாநாடு..
இது துரோகிகளின் துரோக உச்சமல்லவா?
வதிலைபிரபாவின் தந்தை உடல்நலமின்றி இருந்து சில வாரங்களுக்கு முன் இயற்கை எய்தினார்.. (எனது மனமார்ந்த இரங்கலை தெரியப்படுத்திக் கொள்கிறோம்)
அந்த காலகட்டத்தில் சில மாதங்கள் அவரின் பத்திரிக்கை வெளிவரவில்லை..
உங்கள் பத்திரிக்கை வராததால் சமூகத்திற்கு என்ன இழப்பு.. வந்திருந்தால் மட்டும் என்ன நன்மை என்று வதிலைபிரபாவிடம் கேட்டால்..
கேட்பவன் கல்நெஞ்சக்காரனாக மட்டுமே இருக்க முடியும்….
இதே கல்நெஞ்சத்துடன் வதிலைபிரபா இருக்கிறார்… இவரின் துரோகப் பயணம் தடை செய்ய இயலாததுதான்.. ஆனால், யார்..யார்.. தமிழினத்தின் துரோகிகள்… ராஜபக்சேவின் கைக்கூலிகள் என்பதை இது நமக்குக் காட்டும்
நண்பர்களுக்கு அரச ஆதரவாளர்களின் இந்த அறிக்கை பிரசுரித்து இவர்களின் முகத்திரையை கிழித்தமைக்கு நன்றிகள். இந்த மாநாடு குறிப்பட்ட ஜனவரி 6ஆம்இ 7ஆம்இ 8ஆம்இ 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பச்சோந்தி பேராசிரியர் சிவத்தம்பி சிலவேளைகளில் சிறப்புரை ஆற்றுவார் என நம்பப்படுகிறது. மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து இவர்கள் எதிர்பார்த்த எவரும் வர மறுத்துவிட்டார்கள். இங்கும் பல முக்கிய படைப்பாளிகள் ஒதுங்கிவிட்டார்கள்.பெயர் தெரியாத பலர் தங்களை எழுத்தாளர்களாக சொல்லிக் கொண்டு மேடையேற இருக்கிறார்கள். இலங்கை அரசின் ஆதரவு கிடைத்த அளவுக்கு தமிழ் படைப்பாளிகளிடமிருந்து ஆதரவு கிடைக்காதது இவர்களுக்கு பெரிய ஏமாற்றமே. இப்போது அரச ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைகூட அவர்களுக்கு ஏமாற்றமே. இந்த அறிக்கையில் தமிழகத்தைச் செர்ந்த ஒருவராவது கையெழுத்திட முன்வரவில்லை.
இங்கிருந்து (இலங்கை) கையொப்பம் இட்டவர்களில் பலரை யார் என்றே தெரியவில்லை. பலபேர் தங்களை ஊடகவியலாளர்கள் என குறிப்பிட்டுள்ளனா. வெளியில் உள்ள உங்களைப்போன்றவர்களுக்கு உண்மை தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவர்கள் இங்கு யார் என்றே தெரியவில்லை. புகலிடத்திலிருந்து கையொப்பம் இட்டவர்கள் அனைவரும் அரச எடுபிடிகள் என்பது எல்லோருக்கும் இங்கு தெரிந்தவிடயம். குறிப்பாக தலித் முண்னனி தலைவர் என்று சொல்லி ஒருவா இவ் அறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளார்.இவர் அடிக்கடி இங்கு வருபவர். இலங்கை அரசின் ஆதரவில் இயங்கும் டான் என்ற தொலைக் காட்சியில் அடிக்கடி காட்சி கொடுப்பவர்.இங்கு ஐனநாயகம் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் மகிந்தா அரசு ஐனநாயக அரசு என்றும் இத் தொலைக் காட்சியில் வாந்தி எடுப்பவர்.இவ்வாறே லண்டனில்லிருந்து இங்கு வரும் ராகவன் என்பவரும் இந்த தொலைக்காட்சியில் வாந்தியெடுத்தவரே.இவர்கள் எல்லாம் சோந்த அறிக்கை விட்டால் எப்பிடியிருக்கும்! மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு இந்த அறிக்கை மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.தங்கள் மாநாட்டை மேலும் அம்பலப்படுத்த இந்த அறிக்கை உதவி செய்துவிட்டதாக புலம்புகிறாhகள். அவர்கள் புகலிடத்திலிருக்கும் படைப்பாளிகள் சிலராவது இதில் கையொப்பம் இட்டிருப்பார்கள் என எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் எந்த முக்கிய படைப்பாளியின் கையொப்பத்தையும் இதில் காணவில்லை. கையொப்ப கும்பல் முழுக்க முழுக்க அரச எடுபிடிகளாக இருப்பவர்களே. இங்கு பலபேரை தனிப்பட்ட வகையில் சந்தித்து சந்தித்து வரும்படி அழைத்தார்கள். யாரும் மசியவில்லை. இறுதியில் புதிய யுத்தியொன்றை பயன்படுத்தினாhகள்.” நீங்கள் இந்த மாநாட்டிற்கு வரவில்லையொன்றால் இலங்கை அரசு உங்களை அதன் எதிரியாக கருதிவிடும். என்ற பயமுறுத்தும் தொனியில் அழைப்பு விட்டுள்ளார்கள். இது ஓரளவு வேளை செய்துள்ளது. இந்த பயத்தின் காரணமாக சிலர் வருவதாக கூறியுள்ளார்கள்.
இங்கு கலையும் கொலையும் கைகோர்க்கின்றது.
ஜனநாயகம், முன்னனி என்ற பதங்கள் இங்கு பீதியை உண்டுபண்ணுபவை.
இவைகள் , கொலை ,கொள்ளை, ஆள்கடத்தல், தலைமறைவு, கப்பம்,அடிமை-விபச்ச்சாரம் என்பனவற்றுடந்தான் தொக்கி நிற்கின்றது.
சிவலிங்கராஜா அவர்களுமா கையெழுத்திட்டுள்ளார்? அவருக்கும் எழுத்துக்கும் என்ன தொடர்பு. சுந்தராம்பாள் பாடல்களுக்குப் பொழிப்பு எழுதவா?
ஆமய்யா! சிவலிங்கராசா நல்லை ஆதீனத்தில்
நன்றாக ‘ஜால்ரா’ போடுபவராய்ச்சே!
தமிழ்ப் பேராசிரியர் என்பதெல்லாம்
பெயரளவில்தான்!!
அந்தந்த நாடுகளில், அரச மானியங்களில் வாழ்ந்து போகும் கூட்டம் இவர்கள்.
புலிகளால் வாழ்ந்து போனவர்கள்.
புலியற்ற நிலையில் அரசாங்க அரவணைப்பு,இந்த ‘நாற்பதுக்கு ஒன்று குறைவான’ புகலிடத்திருடர்களுக்கு தேவைப்படுகிறது.
இவர்கள் படைப்பாளிகள் அல்ல,கிடைப்பாளிகள்.
இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்பமிட்டுள்ளோர் யாவர். ஊடகத்துறையில் விபச்சாரிகள் ஊடுருவி உள்ளதைப்போன்று, படைப்பாளிகளிடையேயும் விபச்சாரிகள் ஊடுருவி உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
உலக ஊடக சுதந்திர தரவரிசையின் பட்டியல் படுத்தல்களுக்கு அமைய இலங்கை 162ம் நிலையை வகிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
மாணிக்கம் நகுலேந்திரன் (ஆசிரியர் -தாகம்இ நிரூபம்) – யார் இவர்? இவர்தான் இலங்கை பத்திரிகைகளில் இணையத் தளங்களில் “கடத்தல் மன்னன் ” என்ற பேரில் உலாவருபவர். சமீபத்தில்கூட லண்டனில் இருந்து சென்ற ஒருவரைக் கடத்தி கப்பம் பெற்றதாக இவர் பெயர் அடிபட்டது. லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு இணையத் தளத்திலும் இச் செய்தி வெளிவந்தது. இலங்கையில் ஆட்களை கடத்தி கப்பம் பெறும் சிறீரெலோவின் முக்கியஸ்தர். ராகவன் நிர்மலா இராஜசிங்கம் அகிலன் கதிர்காமர் அங்கம் வகிக்கும் இலங்கை ஜனநாய ஒன்றியத்தின் முக்கியஸ்தரும்கூட. உதாரணத்திற்கு இவரைப் பற்றி ஆங்கில இணையத்தளம் ஒன்றில் வந்த செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.பார்க்க.
Sources from the Wanni told Lanka News Web that a group of persons who have defected from the TELO and formed a separate organization called Sri TELO is currently engaged in playing out monies from displaced Tamil civilians in the North claiming they are trying to get land and building toilets for the displaced persons.
The Tamil civilians are being swindled by Sri TELO, which has the support of the government, by operating a false kachcheri. It is learnt that a considerable amount of money taken from the innocent civilians are being divided among government officials as well.
One Udayan acts as the leader of the Sri TELO group. He has received political asylum in Norway and is therefore a Norwegian national. The other person called Nimo, has received political asylum in Germany and is a German national. Both these individuals fled the country in the 80s and received political asylum in the respective countries by making various claims against the country.
The third person heading the group is one Keeran, who is a British national. He arrived in London after being released from the Boossa camp, where he was held captive for his actions against the Indo-Lanka Accord.
Sources told Lanka News Web that this group had taken monies from displaced civilians for the land in Karpak Street in Mannar that was given free by the government.
http://www.lankanewsweb.com/news/EN_2010_07_30_002.html
சரி, கே.பி, கருணா, பிள்ளையான், தேவா எல்லாம் ஏன் கையெழுத்து போடவிலை?
இவர்கள் இன்னும் எழுத்தாளர் ஆகவில்லை. தற்போது களுத்தறுப்பு வேலைதான் செய்கிறர்கள். சொல்லமுடியாது இவர்களும் ஏதாவது எழுதத் தொடங்குவார்கள், மேலே கையெழுத்திட்ட கோமாளிகள் போல. பட்டியலில் பெயர் வந்துவிட்டால் பிறகென்ன எழுதாதவனும் எழுத்தாளந்தான்.
இனியொருவின் முன்னுரையை நான் கேள்விக்குள்ளாக்க விரும்புகிறேன்.
“இலங்கை அரச துணைக்குழுக்களைச் சார்ந்தோரும்இ ஏனைய இலங்கை அரச சார்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பெரும்பான்மையாகக் கொண்ட குழுவினர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுமையும் இங்கு தரப்படுகிறது. ”
யார் அரச துணைக்குழுக்களைச் சார்ந்தோர்?
அய்யா விக்டர் என்பரே இலங்கையில் நிலவும் அரசு பயங்கர்வாதத்தை கண்டித்து எழுத வேண்டிய அறிவுலகம் அதை மௌனமாக சகித்துக் கொண்டிருப்பதோ அல்லது இன்னொரு தளத்தில் இருந்து அதை ஆதரிப்பதோ அரசு சார்புதான். போர் முடிந்த பின்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் கடத்தல் கொலைகளுக்கு எதிராகக் கூடப் பேசாமல் மௌனம் சாதிப்பது. ஆதரிப்பது போன்றதுதானே? எல்லோரும் அரசுக்கு எதிராக எழுதுவதில்லை. ஆனால் ஆதரிக்கிற அயோக்கியத் தனத்தை செய்வதில்லைதானே? ஆனால் இவர்கள் மௌனமாக இருப்பதோடு ஆதரிக்கவும் செய்கிறார்கள். இவர்களை அரச துணைக்குழுவினர் என்று சொல்வதில் என்ன தவறு?
ஆனால் இவர்கள் மௌனமாக இருப்பதோடு ஆதரிக்கவும் செய்கிறார்கள். என்று தாங்கள் சொல்கிறீர்கள்
அறிக்கையிருந்து சில வரிகள் மறுதலையாக இருக்கிறது :
“கடந்த முப்பது வருட யுத்தத்தில் இலங்கை அரசு செய்த அனைத்துக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியும் இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும்.”
“இந்த அச்சுறுத்தல் சூழலுக்குள்ளும் அதை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதையும் குழு நிலை மோதல்களிற்கு அப்பால் அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம்.”
//“கடந்த முப்பது வருட யுத்தத்தில் இலங்கை அரசு செய்த அனைத்துக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியும் இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும்.”
// ஆமாம் நீங்கள் ஏன் இனப்படுகொலை செய்த ராஜபட்சேவுக்கு எதிராகப் பேசுவதில்லை என்று கேட்டால் ராஜபட்சே மட்டுமா கொலை செய்தார் ஜெயவர்த்தனா செய்யவில்லையா> என்று கேட்பது போலுள்ளது மேலுள்ள வரிகள். – உலக மனித உரிமைச் சட்டங்களின் மூலம் மேற்குலகம் தண்டிப்பதற்கான ஏராளமான சாட்சியங்கள் இறைந்து கிடக்கும் படுகொலைதான் 2009 மே படுகொலைகள். துல்லியமாக அது குறித்து தண்டிக்கக் கோருவதை விட்டு முப்பது வருட வரலாற்றுள் ஒழிவதுதான் இவர்களின் தந்திரம். முப்பது அல்ல அறுபது என்று கூட போட்டிருக்கலாம். அடுத்து //
“இந்த அச்சுறுத்தல் சூழலுக்குள்ளும் அதை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதையும் குழு நிலை மோதல்களிற்கு அப்பால் அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம்.”// இந்த அறிக்கையின் இந்த வசகங்கள் உலகெங்கிலும் எழுந்துள்ள குழப்ப நிலைய்யின் மீது பழி போட்டு பொந்துக்குள் ஒழிந்திருக்கிறது. புலிகளின் இராணுவ வாத போராட்டத்தின் தோல்வியையும், வலதுசாரி தமிழ் தேசியத்தின் பல வீனங்களையும் பயன்படுத்தும் இவர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள் அல்லாமல் வேறு யார்?
உங்கள் குறிப்பு சொல்வது இதுதான்: முந்தாநாள் நிகழ்வுகள் முப்பது வருடத்திற்குள் வருவதில்லை
எல்லா அரசியல் உ ண்மைகளும் பேசப்படக்கூடாது. எனக்கு வசதியானதை மட்டும் பேசுக.
எல்லாக் கொலைகளையும் பேசாதே.
யார் அரச துணைக்குழுக்களைச் சார்ந்தோர்?
அ
ருமையான வினா. a voter
மாறனின் பதிவே உங்கள் வினாவுக்கு பதிலாக இருக்கிறது. இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை பிள்ளையான் குழு / ஈபிடிபி டக்கிளஸ் குழு/ சிறீ ரெலோ இவை மூன்றும் அரச துணைக் குழுக்கள்தான். இவர்களின் கொலை /கொள்ளை/ ஆட்கடத்தல்/கப்பம் இவைதானே இவர்களின் தொழிலாக இருக்கிறது. இந்த அரச துணைக் குழுக்களைச் சேர்ந்த ஸ்ராலின் (பிள்ளையான் குழு) மாணிக்கம் நகுலேந்திரன் (சிறீரெலோ) தேவராஜன் ரெங்கன் ( ஈபிடிபி டக்கிளஸ் குழு) இவை எனக்கு தெரிந்தவை. இந்த கும்பலில் வேறு நபர்களும் இந்த கொலைகாற குழுக்களை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
தகவல்களிற்கு நன்றி. எனக்குத் தெரிய பல அரசுடன் சாராதவர்களும் இதில் உள்ளனர்.
எனது கேள்வி தகவல்களை அறிய மட்டுமே.
எனக்குப் புரியாத விடயம் இதுதான்: இதுவரை அரசோ புலிகளோ தமக்குச் சார்பாக மட்டுமே கூட்டம் போட்டபோது “மௌனம் சாதித்தவர்கள்” ஏன் இப்போது கூச்சல் போடுகிறார்கள்?
மேலே பதிலளித்தவர் போலல்லாது பல தகவல்களை தெரிவித்தமைக்கு அனைவருக்கும் நன்றி
புலிகள் தமக்குச் சார்பாக மட்டுமே கூட்டம் எப்போது போட்டார்கள் என்று சொல்ல்கிரீர்கள்? முள்ளிவாய்க்காலுக்கு முன்பா பின்பா?
புலிகள் எதிர்ப்பென்று சிங்கள அரசு செய்வதற்கு மௌனம் சாதிக்கவேண்டுமென்றா சொல்கிரீர்கள்?
இந்த எலும்பு பொறுக்கிகளை சிங்கள அரசிற்கு விளம்பரம் செய்யாதே என்று சொல்ல்வது உங்களுக்கு கூச்சலாகவா தெரிகிறது?
புலிகள் எப்போது தமகடகுசட சார்பாகக் கூட்டம் போடாமல்விட்டார்கள்?
புலியும் சரி அரசும் சரி மக்கள் விரோத சகதிகளே
இவர்கள் அனைவரும் எலும்பு பொறுக்கிகளா?
முள்ளீவாய்க்காலைப் பற்றீ முறயிட்டுக் கொண்டிருக்காதீர்கள் இராமரும் பட்டாபிகேசத்திற்கு முன்னால் அவஸ்தைப்பட்டவர் என சுகமான சிவம் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்ப் கெல்ப் கொடுக்கிறார்.மகிந்தாவுக்கு தலையாட்டும் நிர்மலா ராஜசிங்கம் இண்டிபெண்டனில் எழுதுகிறவர் அவருக்கு தலித்தைக் கண்டாலே பிடிக்காதே, அவரும் போஸ்டருக்கு போஸ் கொடுக்கிறார்.சோ பத்மநாதன் ஆசிரியர் கலாசாலையில் இருந்து ஓய்வு பெற்றூம் அரச ஓய்வு ஊதியத்திற்கு விசுவாசமாய் உள்ளார் போலும்,சீறீதர்சிங் அப்பா பிள்ளகளூக்கு எல்லாம் கார்ல் மாக்ஸ் பெயரை வைத்து புலம்ப வைத்தவர் அவற்ற பிள்ளயும் அதைத் தான் செய்யுது.ஏதோ திட்டமிருக்கு இவர்களீடம்.
நண்பர்களுக்கு அரச ஆதரவாளர்களின் இந்த அறிக்கை பிரசுரித்து இவர்களின் முகத்திரையை கிழித்தமைக்கு நன்றிகள்.
இவர்கள், இலங்கை அரச துணைக்குழுக்களைச் சார்ந்தோரும் ஏனைய இலங்கை அரச சார்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பெரும்பான்மையாகக் கொண்ட குழுவினர்
மேலே கையெழுத்திட்ட கோமாளிகள் போல. பட்டியலில் பெயர் வந்துவிட்டால் பிறகென்ன எழுதாதவனும் எழுத்தாளந்தான்.
ராமமூர்த்தி ராஜேந்திரன் (ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா குழு) தமிழழகன் (ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா குழு)
பிரபா அவர்கள் என்னை ஈ.பீ.டீ.பி யுடன் தொடர்பு படுத்தி பிண்ணோட்டம் விட்டுள்ளார். நான் அதிலிருந்து விலகி 15 வருடங்களுக்கு மேலாகி விட்டது. தொடர்ந்தும் என்னை ஈ.பீ.டீ.பி யுடன் தொடர்பு படுத்தி எழுதும் போது எனது வரலாற்றை சரியாக அறிந்து எழுதுவது ஆரோக்கியமானதாகும்.
ஜயோ.. ராமா…ராமா. .நீர் என்ன ராஜ, ராஜ சோழனா. உங்கள் வரலாற்றை எல்லாம் அறிந்து, தெளிந்து எழுத. ?
ராமமூர்த்தி, ஆரோகியமானதாகும் என்று தாங்கள் குறிப்பிட்டு எழுதுவது எந்த ஆரோகியத்தைப் பற்றியது? என்னைப் பற்றி இப்படி தொடர்ந்து எழுதினால் உயிரோடு இருக்க மாட்டீர்கள் என்று சொல்கிறீர்களா?
தாங்கள் இன்னமும் ஈபிடிபி இலிருந்து விடுபடவில்லையென்று தெரிகிறது. இல்லையென்றால் என்ன மண்ணாங்கட்டிக்கு பட்டியலில் கையெழுத்து போட்டுள்ளீர்கள்?
இந்த பட்டியலில் கையெழுத்திட்டவர்கள், ஒன்றுமட்டும் உண்மை, இலங்கைத் தமிழருக்கு நல்லது செய்யப் இவர்கள் ஆகக்குறைந்தது கனவுகூட காணவில்லை.
ஆக நீங்கள் சொல்லுவது என்னவென்றால் நீ என்னுடன் இல்லை. ஆகவே நான் உன்னைப்பற்றி எது வேணுமானாலும் எழுதுவேன்.
நீ என்னுடன் இல்லை என்றால் ஒபாமா பின்லாடனுடன் இருக்கிறாய் என்று சொன்ன ஜோர்ஜ் புஷ்ஷிற்கும் உங்களிற்கும் என்ன வித்தியாசம்?
வைத்தால் குடும்பி வழித்தால் மொட்டை என்று நின்று நாம் இழந்து போனவைகள் அதிகம்.
நல்லா இருக்கிறது உங்கள் ஒப்பீடு! உலக சமாதானத்திற்கு ஆப்பு வைத்த ஜோர்ஜ் புஷ் என்ற முட்டாளுடன் யாரை ஒப்பிடுகிறீர்கள்?
பட்டியலில் கையெளுத்து வைத்த கோமாளிகளை எங்களுடன் நிற்கச் சொல்லவில்லை, சிங்கள அரசின் இனவெறியாட்டத்திற்கு துணைபோகாதீர்கள் என்றுதான் கேட்கிறோம்.
நீங்கள் குடும்பி வழித்து மொட்டைத் தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப் போட முனைகிறீர்கள்.
னோயல் நடேசன் – இலங்கை அரசின் நேரடிப் பிரதினிதி,
எம்.ஆர்.ஸ்டலின் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.
ஆங்கிலத்தில் எழுதும் புளீயமரத்துப் பேய்கள் கேசரி சாப்பிட கொழும்புக்கு வெளீக்கிடுது இந்த துண்டு வேட்டிக் கூட்டம் சாறம் கட்டி சண்டித்தனம் செய்யுது.மகிந்தாவுக்கு பல்லிளீத்து அவர பல்லக்கில தூக்க கீயூவில நிற்குது.போய்த் தொலையட்டும்.ஒருநாள் இந்த அரைலூசுக் கூட்டம் முழு லூசாய் மாறீ ரோட்டில பிதற்றீத் திரியப் போகுது.
இங்கே எதிராய் கருத்து எழுதுபவர்களுக்கு, தமிழ் நாட்டுப் படங்களுக்கு பாடல் எழுதுகிற பாவலர்களும், மேல்நாடுகளுக்கு போய் கலை நிகழ்ச்சிகள் நடத்தி காசு சம்பாதிக்கிற கலைஞர்களும் தான் எழுத்தாளர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பது கவலை தான். உங்களுடன் ஒத்துப்போகிற கருத்தாளர்கள் மட்டும் தான் எழுத்தாளர்கள் என்றால்…மாற்றுக்கருத்துள்ளவர்கள் எல்லாம் துரோகிகள் என்றால்…முள்ளிவாய்க்காலில் போய் மண்டையைப்போட்டதே ஒரு மிருகம். அதற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
சேகரன் சொல்வது சரியே.சுகி சிவமும் அவரைக் கூட்டி வரும் சிவமும் தில்லைக் கூத்தன் புகழ்பாட ஆகும் செலவுக்கு ஒரு குமரைக் கரையேற்றலாம்.நமது தமிழ் என நமக்கு தொதல் குடுத்து பவுண்ஸ்சோடு பறந்து விடுகிறார்கள்.ஆனால் இலங்கை,சிங்கை,மலேசியா என்றூ தமிழ் உணர்வுள்ளோரை எப்போதாவது அழைத்துள்ளார்களா? தமிழகமான நமது தாய்வீட்டு தமிழ் இன உணர்வாளருகு இலை போட்டுள்ளார்களா? பெயரறீந்தோரை கூட்டி வந்துதான் கும்மாளம் போடுகிறார்கள்.
நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூரும் விடயம் என்னவென்றால் போராட்ட ஆரம்ப காலத்தில் அல்பிரட் துரையப்பா தொடங்கி பல புத்தியீவிகள் என்று இயக்கங்கள் கொன்றது மிகத்தவறென்று ஆனால் வேதாளம் முருக்கை மரத்தில் இவ்வளவு அனுபவங்களின் பின்பும் ஏறத்தொடங்குகின்றது என்றால் பழயதை( கொலைகளை) சிலவேளை இவா்களாகவே நியாயப்படுத்தி விடுவார்களோ என்று பயமாகவுள்ளது,நல்லகாலம் இவா்களையோ இவா்களுடய புத்தகங்களைப்பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது.
ஆம் நான் அறிவீலியாக இருப்பதில் எனக்கு கவலையே இல்லை இப்படிப்பட்டவா்களின் படைப்புகளை படித்து எதைக்கிளிக்கப்போகிறேன்.
எழுத்தாளர்களே! மாநாட்டை வரவேற்று கையொப்பமிட்டு நீங்கள் யார் என்பதை உங்களால் மட்டும்தான் வெளிக்காட்ட முடியுமா? தோற்றுவிட்டால் தோற்றவரை தேசத்துரோகியாக்கி காலில்போட்டு மிதித்துக் கருத்தெழுதி, நாங்கள் யார் என்பதை, எங்களாலும் வெளிக்காட்ட முடியும்.
சர்வதேச எழுத்தாளர் மாநாடு என்ற போர்வை போர்த்திக்கொண்டு சிலர் தமக்கு தாமே கிரிடம் சூட்ட
எடுத்த முயற்சி தான் இது.
முருகபூபதி- எழுதி தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதால் மாநாடு நடதுவதெய் தொழில்.
ஆஸ்திரேலியாவில் தமிழ் மாநாடு, கொலம்பில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு
ஞானம்- சுத்த சூனியம் 100 இதள்கள் ஒன்றும் உருப்படி இல்லை,இந்த மாநாடும் உருப்படி இல்லை
சிறீட்டர் சிங்- நாட்பது பேர் வந்தால் நாலு புத்தகம் விக்கலாம், வியாபாரமாகவும் போச்சு விளம்பரமாகவும்
போச்சு.
அஸ்ரபு சியாபுதின்- ஊழல் செய்து புடிபட்டதால் எந்த அரச தொழிலும் செய்ய முடியாது
இப்படி மாநாடுகள் நடந்தால் அதில் தொங்கிக்கொள்வது. இதுவரை எழுதியதில் ஒன்றும் உருப்படி இல்லை,
எல்லாம் திருட்டும் கொபியும்.
இவர்கள் நடத்துவதுதான் சர்வதேச எழுத்தாளர் மாநாடு
ஏன் ஐயா இதட்கு அறிக்கை போர் நடத்துகிறிகள்?
சிராஜ்
மல்லிகை ஜீவா ஒரு தலித் என்பது நமக்கு அனுதாபம் தருகின்ற விடயம், ஆனால் இந்த மாநாடு நடத்துபவர்கள் பட்டியலில் ஜீவாவின் பெயரை எப்படி தவற விட்டிர்கள்?
இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
ஜீவா- இலங்கை அரசாங்கம் எந்த தலித்தையும் படுகொலை செய்யவில்லை,
சாதி நமக்கு வியாபாரம் செய்ய வசதி என தனது மல்லிகையை மணம் பரப்புபவர்.
தேசிய இனப் பிரச்சினை இருப்பதே இவருக்கு தெரியாது, நடந்த இனப்படு கொலைகள் பற்றி
மல்லிகையில் ஒரு வரி தானும் குறிப்பிடாத அரச அனுதாபி
சரியாகச் சொன்னீர்கள்.மல்லிகை ஜீவா மல்லிகைக்காரர், ஜேசுராஜா அலை நடத்தினார்.இவர்கள் எப்போதும் எதிரான திசையில் நடந்தவர்கள்.இடக்கு முடக்கான் இவர்களது சிந்தனையும்,எழுத்தும் தமிழ் சமூகத்தோடு மல்லுக் கட்டி நின்றன.இவர்கள் இன்றக்கா இப்படி நிற்கிறார்கள் மாறூவதற்கு?
யேசுராசா என்ற பெயரில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை
‘அலை’ இதழுடன் சம்பந்தப்பட்டிருந்த நான் எழுதவில்லை : அதை
வேறு யாரோ எழுதியுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
– அ.யேசுராசா
நீங்கள் தான் அலை ஜேசுராஜா என பிழையாக நினைத்து விட்டேன் யேசுராஜா.என்ன புதுப் பெயரோடு புறப்பட்டு இருக்கிறீர்கள். நீங்களூம் நானும் வாணீ விலாசில மசால தோசை சாப்பிட்டிட்டு அப்படியே சமந்தாவில் படம் பார்த்ததை மறந்து இருக்க மாட்டியள்.என்ன மாதிரி பம்பலப்பிட்டிக்கு வாற எண்ணம் இருக்கோ? அங்க உவர் முருக பூபதிக்கு ஜீவா பொன்னாடை போர்க்க ஜானம் அவற்ற கால்ல விழுவார்.மயூரன் தம்பிதான் கமெராவால படம் எடுக்கும்.இவர் கொரில்லா வர மாட்டார் மணீமேகலயோட இலக்கிய, பின் ந்வீனத்து டிஸ்கசன் இருக்க அப்ப ராசா வா அப்பு.
// வெற்றி பெற்றவனின் கதைகளைக் கேட்டு கேட்டு புளித்து விட்டது. தலித்தியம், பின்நவீனத்துவம், விளிம்பு, மையம் என்று பௌத்த மரபில் ஒன்று கலந்து கடைசியில் ஒரு வழியாக இலங்கை அரசிடம் செட்டிலாகி விட்டார்கள்.
இலங்கையில் சிறிது சிறிதாகத்தான் ஆரம்பிக்க முடியும். இவ்வளவு பேசும் எழுத்தாளர்கள் தாங்கள் ஏன் இன்னொரு மாநாட்டை நடத்தவோ அல்லது அதே மாநாட்டில் தமது கருத்துக்களைக் கூறவோ வாய்ப்புக் கேட்பதில்லை?
இன்று நடக்கும் கூச்சல் மாநாட்டை நடத்தாதே என்றுதான் முடிகிறதே தவிர இருக்கிற வாய்ப்புகளைப் பயனபடுத்துவது பற்றி யோசிக்கவில்லை/
”இவ்வளவு பேசும் எழுத்தாளர்கள் தாங்கள் ஏன் இன்னொரு மாநாட்டை நடத்தவோ அல்லது அதே மாநாட்டில் தமது கருத்துக்களைக் கூறவோ வாய்ப்புக் கேட்பதில்லை?”
இன்னொரு மகாநாடு என்ன எத்தனையோ மகாநாடுகள் நடத்த முயற்சிகள் நடந்தன, ஆனால் கோத்தபாயா இவர்களுக்கு முதலில் 4 ம் மாடியில் விருந்து கொடுக்க விரும்புகிறார். இல்லை இந்த மகாநாட்டில் போய் தமது கருத்துக்களைக் கூறலாமென்றால் முதலில் விமானநிலைய வரவேற்பு, அதில் தப்பினால் பின்பு மகிந்த புகழ்மாலை பாடாத இவர்களுக்கு எப்படி கோத்தா பிரியாவிடை கொடுப்பார்?
வாய்ப்புகள் நிறைய உண்டு ஆனால் இது வாய்க்கரிசி போடும் வாய்ப்புகள்!
எமது எதிர்பார்ப்பு கலைந்து போகும்படி மாநாட்டு ஏற்ப்பாடுகள் தெரியவருகின்றன.ஆகவே பறக்கணிக்கப்பட்ட சிறுகதையாடல் நிலைப்பட்டவர்கள் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் எனக் கருதுகிறோம். எமது எதிர்ப்பை துண்டுப் பிரசுரமாகவும்,
மாநாட்டு மேடைக் குறுக்கீடாகவும் நிகழத்தத் திட்டமிட்டுள்ளோம்.எமது நிலைப்பாடுகளுக்கு இந்த மாநாட்டை எதிர்க்கின்ற மற்றும் ஆதரிக்கின்ற இருதரப்புகளிடமிருந்தும் ஆதரவு கிடைக்குமென்று கருதுகின்றோம்.அப்படி கருதுவதற்கான காரணங்களை இவ் இரு தரப்பினரினதும் அறிக்கைகளில் எம்மால் கண்டுகொள்ள முடிகிறது. maatrupirathi
முட்டாள்களின் அச்சாணி மாநாடு
குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க நினைக்கும் முட்டாள்கள்,
இதில் அகப்பட போவது என்னவோ தமிழர்கள் தான்.
அங்கே தமிழனின் எழுத்திற்க்கும் சுதந்திரம் இல்லை என்பதை இந்த உலகம் அறியட்டும்.
சிங்கள நாய்களின் வெறியாட்டத்திற்க்கு வாலாட்டி செல்லும் மாநாட்டு எழுத்தாளர்கள்.
உண்டி கூலுக்கு அளுதாம் கொண்டை பூவுக்கு அழுத கதையாகி விட்டது
இலங்கையில் இதுவும் தேவை இதற்கு மேலும் தேவை
முதல் மக்களை பாருங்கள்
பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை ஆகிவிட்டது.
இந்த மாநாடு இலங்கையில் யார் நடத்தினாலும் புலி சார்பு நடத்திநாலும் அரசார்பு நடத்தினாலும் சாரி இன்றைய தேவை என்ன ? மக்களுக்கு இன்று என்ன தேவை என்று மாநாடு நடத்துவது நல்லது ஒன்று இலங்கை மக்களுக்கு என்ன தேவை? அதிலும் தமிழ் மக்களுக்கு என்ன தேவை ? சிங்கள மக்களுக்கு என்ன தேவை ? புலம் பெயா; தமிழ்ர்களுக்கு என்ன தேவை ? ஏகாதிபத்தியத்திற்கும் இடை தரகா;களுக்கும் என்ன தேவை என்பதை மாநாட்டின் ஊடாக மக்களுக்கு விளங்கபடுத்துங்கள் என் என்றால் இன்று ஆள்கடத்தல் கொலை களவு மிரட்டல் விலைவாசி உயா;வு என்பன மக்கள் அன்றாட சுமை கூடிவிட்டது இதில் எப்படி யார்சாபாக நடந்தாலும் மக்களுக்கு கவலை இல்லை என்றால் மக்கள் சார்பாக எதுவும் நடப்பதில்லை இதுவே உண்மை மக்கள் சக்திலை நாம் பாதவா;கள் கதை என்ற நடந்தது என்று எங்களுக்கு எல்லேருக்கும் தொpயும் மக்களை நாம் பியதநால் தான் முழுப்புரட்சியும் வெற்றி பெற்றது என்பதும் எல்லேருக்கும் தொpயும்
மக்களை நாம்பவர்களை நம்புங்கள் வெகுஜனமார்கம் ஒன்றுதான் எல்லாவற்றிகும் தீர்வு அரசியல் இல்லாத இடம் இல்லை எல்லேர் மனதிலும் அரசில் உண்டு அதை போல் மாநாடு நடத்துபவர் மனதில் என்ன அரசில் இருக்கிறது என்று எங்களுக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் ஏன் இனி விவாதம் நடத்தி நேரத்தை செலவிடாதிர்கள் விட்டு மக்கள் நன்மைக்கு எதாவது ஆக்கபூவமாக சிந்திப்போம் .
கரவைதாசன் என்பவர் என்ன எழுத்தாளரா ? பத்திரிகையாளரா ?
கடற்கரையில் குழந்தகள் கோடுகள் கீறீனால் அது ஓவியமாவது போல கரவை, குடுவை எல்லாம் எழுத்தாளரானது.
கரவைதாசன் ஒரு கவிஞர்,கண்ணதாசனின் பக்தியால் தன் மண்ணூக்கு புகழ் சேர்க்க கரவை தாசன்.எல்லா முன்னணீ பத்திரிகையிலும் எழுதி இப்போது தூறல் தேடும் மேகம் நீ வேகம் தேடும் வானம் நீ என் காதல் நங்கூரம் நீ அதிகாலை பொன்வேள நீ என மகிந்தாவை தலைவியாக்கி காதல் காவியம் எழுதிக் கொண்டிருக்கிறார்.தமிழின் எல்லாக் கவிஞ்ர்களூம் இவரிட்ட பிச்சை வாங்கோணூம் அந்த மாதிரிக் கவிஞ்ர்.
பெண்கள் சந்திப்பு பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் புகலிடத்திலிருக்கும் ஒரேஒரு பெண்கள் அமைப்பாகும். இதில் பெண்ணியம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் .பிள்ளையான் குழு விஜி போன்றவர்கள் அங்கம் வகிப்பது பெண்களுக்கே அவமானமாக கடந்த காலங்களில் இருந்தது. அது தொடர்வது பெண்கள் சந்திப்பை கேலிக்கூத்தாக்கிவிடும். இலங்கை பேரினவாத அரசை ஆதரிக்கும் விஜி இந்த எழுத்தாளர் மகாநாட்டை ஆதரித்தும் கையொப்பம் இட்டுள்ளதை ஊடாறு றஞ்சி போன்ற முற்போக்கு பெண்ணியவாதிகள் எப்படி அனுமதிக்கிறார்கள். இதில் உமா என்பவரும் கையொப்பம் இட்டுள்ளார். இவர் இம் முறை பேர்லினில் பெண்கள் சந்திப்பை முன்னின்று நடத்தியவர்.தயவு செய்து ஊடறு றஞ்சி போன்ற பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்
தேசம் என்ற சிந்தனையாளர் கூட்டமும் இந்த மகாநாட்டு கேசரிக்காக வாயை தொங்கப் போட்டுள்ளது.உப்புமா இங் கே சுவையாக கிடைக்கிறதே ஏனய்யா ஜெயபாலன், இங்கிருந்து பம்பலப்பிட்டி சென்றூதான் சாப்பிட வேண்டுமா?
வரவேற்புரையை தி.ஞானசேகரனும் தொடக்கவுரையை மாநாட்டின் பிரதம அமைப்பாளர் லெ.முருகபூபதியும் வாழ்த்துரையைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியும் நிகழ்த்துவர்-thinakural-06-01-2011
மகாநாடு வைப்பதுநல்லது தான். ஆனால்நடாத்தும் காலமும் நேரமும் சரியில்லை. கொலையும் கொல்லையுமாய் யாழ்ப்பானம் இருக்குது இப்போ! அது சரி சப்பிரகமுவாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பனிகலை ஆராய ஒரு சர்வதேச மாநாடு தேவையா ஐயா ?
கொடும்போரில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக் ஸெல்லடியாலும் குண்டுகளாலும் கொல்லப் பட்டுகொண்டிருக்க “ இராணுவம் தமிழ் மக்களை கொல்ல வில்லை எனக் பேட்டி கொடுத்த சுசீந்திரனும். இலச்சக் கண்க்கான மக்கள்
செட்டிகுள்த்தில் மந்தைகளைப்போல் தடுப்புமுகாங்களுள் அடைபட்டிருக்க “அவர்கள் மிகவும் சந்தோசமாக இருப்பதாக “ உரைத்த கொலைகார பிள்ளையான் ஆலோசகி இராயேஸ்வரி பாலசுப்பிரமணியனும் மகாநாட்டில் பங்கு பற்றி மகாநாட்டின் ”நடுநிலைமைத்தன்னையை” வெளிப்படுத்தினர்
இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும்
மகாநாட்டு நிகழ்ச்சி நிரல் என்னிடம் கிடைத்துள்ளது முடிந்த வரையில் இவர்களில் உங்களுக்கு தெரிந்தவர்களை நடுநிலையாக நின்று விமர்சனத்தை முன்வையுங்கள்.
http://xa.yimg.com/kq/groups/4081048/1195188045/name/Program
மகாநாட்டு நிக ழ்ச்சி நிரலை பார்த்தேன் . அதிர்ச்சி! ஒரு அம்பது வருஷம் முந்தி வாழ்கிறேனோ என கிள்ளிபார்த்தேன் .ஆறுமுக நாவலர் அரங்கு. என்னை மயக்கம் போடவே வைத்தது . கையெழுத்து போட்ட தலித்து முன்னணி முகத்தை எந்த பக்கம் திருப்ப போகிறது புரியவில்லையே மகளிர் அரங்கு மகளிருக்கு இன்னும் நல்லா பூ வச்சு விட்டிருக்கு எனக்கென்றால் கோவில் திருவிழா ,உபயகாரர் ,கொடியேற்றம் நினைவுக்கு வருகிறது இந்த மகாநாட்டில மனிசர பற்றியும் கதைக்க போறாங்களா எல்லாம் வெள்ளையும் சுள்ளையுமா தங்கட புகழ் பாட ஒரு சான்சு .அடியுங்கோ உங்கட மேளத நல்லா சத்தமா அடியுங்கோ என்னத்துக்கு இந்த மகாநாடு கட்டாயம் நடத்த வேணும் என்று ஆராவது விளக்கமா அறிக்கை விடுவிங்களா
கே. டானியல் அரங்கும் உண்டே. இறுதி நாள் விழாவாக பெரியளவில் நடைபெற்ற அரங்கு “கைலாசபதி அரங்கு” ஆயிற்றே. ஈழத்து தமிழ்ச் சூழலில் ஆறுமுகநாவலர் தவிர்க்க முடியாத ஆளுமை என்பதை ஆறுமுகநாவலர் மீது தீவிரமாகவும் ஆக்கபூர்வமாகவும் விமர்சனங்கள் முன்வைத்த முற்போக்காளர் கைலாசபதியே ஏற்றுக்கொண்டிருக்கிறாரே… இறுதிநாள் நிகழ்வில் அழுத்தமான நவீன பெண்ணியக்கருத்துக்களோடு ஓர் ஆற்றுகையே அரங்கேற்றப்பட்டதே.. பொன்னாடையோ பூமாலையோ இல்லாமல், மேடையில் வைத்து அரசியல் வாதிகளையோ பேராசிரியர்களையோ போற்றாமல், வயது-படிப்பு பேதமின்றி வந்திருந்த அனைவரும் குறுகிய தமிழ்ச்சங்க வளவில் கைகளில் ஏந்தியபடி நான்கு நாட்களும் உணவு உண்டார்களே… சும்மா நுனிப்புல் மேய்ந்துவிட்டு, எதையும் ஆழமகா சென்று பார்க்காமல் குரல் உள்ளவன் கத்துகிறான் என்பதற்காகக் கோரஸ் போட்டுக்கத்திக்கொண்டு இருக்காதீர்கள். கேள்விகள் இல்லாமல் ஆமா போடும் கூட்டத்தால் தான் தமிழ்ச்சூழல் இப்படியாகிப்போயிருக்கிறது. மாநாடு மிக வெற்றிகரமகா நடந்தேறி உங்கள் எல்லார் முகத்திலும் கரியைப்பூசிவிட்டிருக்கிறது. அதை முதலில் உணருங்கள். உங்கள் கூச்சல்களின் அரசியலின் தோல்விக்கான காரணங்களையாவது ஆழமாக விசாரியுங்கள்.
குறிப்பு: இந்தப் பத்தி உண்மையில் முருகபூபதி பற்றியதல்ல. முருகபூபதி சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஏற்பாடு செய்த போது அவரை அரசின் கைக்கூலியாகவும், தமிழ் மக்கள் துன்பத்தை மறக்கடிக்க முயன்ற துரோகியாகவும் வர்ணித்தவர்கள் பற்றியது.
தந்தையற்ற இந்த மாணவ, மாணவிகளின் கல்விக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் நல்லிதயங்களிடமிருந்து பண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நபரோடுதான் நானும் பூ.ஸ்ரீதரசிங்கும் ‘செங்கதிர்’ கோபாலகிருஷ்ணனும் அந்த மாணாக்கரின் முன்னால்
அமர்ந்திருந்தோம். அந்த நபர் வேறு யாருமல்ல. எழுத்தாளராக மட்டுமே நாம் அறிந்திருக்கும் லெ.முருகபூபதி.
1988ம் ஆண்டிலிருந்து முருகபூபதி இந்தப் பணியை முன்னெடுத்து வருகிறார். இந்தச் சேவையை முன்னிறுத்திப் பத்திரிகைகளில் செய்திகள் வருவதில்லை. தொலைக்காட்சிகளில் படம் வருவதில்லை. தனது சமூக சேவைக்காக எந்தவொரு இயக்கத்திடமிருந்தும் அவர் பொன்னாடை போர்த்திக் கொண்டதில்லை. ஏன், சக எழுத்தாளர்கள் கூட இதுபற்றி அறிய மாட்டார்கள்.
இந்தச் செயற்திட்டத்தை முருகபூபதி மிக அழகாக நிறுவனமயமாக்கியிருந்தார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் உதவிபுரியும் மனங்கொண்டோரிடமிருந்து மாதம் 20 டாலர்களை உதவித் தொகையாகப் பெற்றுக் கொள்கிறார். அதை தந்தையற்ற ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ கல்வி நிதியாக அனுப்பி விடுகிறார். தான் வழங்கும் பணத்தில் படித்துக் கொண்டிருப்பவர் யார் என்ற விபரம் உதவி வழங்குனருக்கும் தனது கல்விக்கு உதவும் நபர் யார் என்ற விடயம் கற்பவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கிடையே ஓர் உறவை உருவாக்கிக் கொடுத்து விடுகிறார் முருகபூபதி. எனவே இங்கு சந்தேகத்துக்கு இடமே கிடையாது.
முதற்கட்டத்தில் ஆயிரம் மாணவ மாணவிகள் இந்த உதவியைப் பெற்றுள்ளனர். பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்டதும் அவர்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மற்றும் இடம் பெயர்ந்து வெளி மாவட்டங்களில் கற்கும் தந்தையற்ற மாணாக்கர் இந்த உதவிகளை இன்றும் பெற்று வருகின்றனர். பல்கலைக் கழகங்களிலும் இவ்வுதவி பெறுவோர் கற்று வருகிறார்கள். இவ்வாறு உதவி பெறும் ஒரு மாணாக்கர் குழாத்துக்கு முன்னால்தான் ஒரு பாடசாலையின் அறையொன்றுக்குள் நாங்கள் அமர்ந்திருந்தோம்.
இதுகூடத் தற்செயல் நிகழ்வுதான். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்காகப் பிரதேசம் பிரதேசமாகச் சென்று படைப்பாளிகளைச் சந்திக்கும் பயணத்தில் நாங்கள் இருந்தோம். வழியில் பாடசாலையொன்றின் பெயர் குறிப்பிட்டு அங்கு தனக்கு ஒரு சிறிய வேலையிருக்கிறது என்று மட்டுமே எங்களிடம் சொல்லியிருந்தார் முருகபூபதி. இந்த மாணாக்கரை நேருக்கு நேராகச் சந்திக்கும் வரை இந்த முயற்சியின் பின்னால் உள்ள பாரமும் தாத்பரியமும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களது முகங்களைப் பார்த்த பிறகு நானும் ஸ்ரீதரும் செங்கதிரோனும் இறுகிப் போயிருந்தோம்.
கால் நூற்றாண்டுகால உள்நாட்டு யுத்தம் பலரது வாழ்வைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது. குடும்பங்களைச் சீரழித்து ஒவ்வொரு திசையில் ஒவ்வொருவர் வாழும் துர்ப்பாக்கியத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. ஏதிலிகளாக அலைந்து திரியும் இம்மக்களின் நலனுக்காக தனது ஒரு ரூபாய்க் காசையேனும் செலவளிக்க முன்வராத பல அட்டைக் கத்தி வீரர்கள் யுத்தத்தின் அரசியல் பற்றி இணையங்களில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை, சஞ்சிகைகளில் போராட்டம் நடத்துகிறார்கள். அவ்வப்போது நடக்கும் கூட்டங்களில் கொடியேந்திக் கும்மியடிக்கிறார்கள். கொடும்பாவியெரித்துக் கோபங்காட்டுகிறார்கள். உயிருக்கு அஞ்சியோடி வேறு நாடுகளில் குடியுரிமையும் பெற்றுக் கொண்ட இவர்கள் யுத்தத்தால் அழிந்து போன மக்களை வைத்து அவர்களின் வாழ்வியலை வைத்து அரசியல் செய்து பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவில் வாழும் முருகபூபதியின் சிந்தனை வித்தியாசமானது. அவர் பட்டிமன்றம் நடத்தவோ போராட்டம் நடத்தவோ தெருவில் இறங்கவில்லi. யுத்தத்தில் நசுங்குண்ட மக்களுக்குத் தான் எதைச் செய்ய முடியும் என்று மட்டுமே அவர் சிந்தித்தார். பாடசாலையைப் பார்க்க முடியாமல் கற்றுவந்த கல்வியைத் தொடர வசதியற்று ஏக்கத்தோடு வாழும் இளைய
தலைமுறையினர் கல்வியைப் பெற்றுக் கொள்ள உதவுவது எல்லாவற்றிலும் சிறந்தது என்று முடிவுக்கு வந்தார். தந்தை இழந்தோருக்கு உதவி செய்து அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஊட்டுவதில் இன்று குறிப்பிடத்தக்க எல்லையை அடைந்திருக்கிறார் முருகபூபதி.
உலகத்தில் பலர் தமக்காக மட்டுமே வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். ஆயிரத்தில் ஒருத்தர் மற்றவர் பற்றிச் சிந்திக்கிறார். லட்சத்தில் ஒருத்தர் தமக்காக வாழும் அதே வேளை மற்றவர்களுக்காகவும் வாழ்கிறார், முருகபூபதியைப்போல. மற்றவர்களுக்காகச் சிந்திக்க ஒரு மனமும் உதவுவதற்காகக் கிடைக்கும் வாழ்க்கையும் பெறும் ஒருவன் பாக்கியசாலியாகிறான். இந்தப் பாக்கியத்தைப் பெற்ற ஒருவனுக்கே கண்ணீர் துடைக்கும் கரங்களின் உன்னதம் புரியும். மற்றவர்களுக்காக வாழ்தலில் உள்ள திருப்தி தெரியும்.
அங்கிருந்தவர்களில் ஒருத்தி ஆறாம் ஆண்டு படிக்கும் அழகிய சிறுமி. புன்னகை அவள் முகத்தில் நிரந்தரமாக இருந்தது. அவளைப் பார்த்து, “கொழும்புக்குச் சென்றாயா” என்று புன்முறுவலுடன் கேட்டார் முருகபூபதி. அச்சிறுமி நாணத்துடன்
‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள். ‘இவவுடைய ஸ்பொன்ஸர் இவவை கொழும்புக்கு வரச் சொல்லிப் பார்த்து விட்டுப் போயிருக்கிறா!’ என்று எங்களுக்கு விளக்கம் தந்தார் அவர்.
“உங்களுக்குத் தெரியுமா… ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுமி தனது செலவுகளுக்காகப் பெற்றோர் வழங்கும் பணத்தைச் சேர்த்து ஒரு இளம் பெண்ணின் பல்கலைக் கழகப் படிப்புக்கு உதவிக் கொண்டிருக்கிறாள். கூடிய விரைவில் அவள் தன் பெற்றோருடன் வந்து அந்தப் பெண்ணைச் சந்திக்கவிருக்கிறாள்” என்று எம்மிடம் சொல்லியபடி முருகபூபதி வாகனத்தில் ஏறினார். வாகனத்தின் மூவர் அமரும் ஆசனத்தில் முறையே நான், ஸ்ரீதர், முருகபூபதி என்ற வரிசையில் அமர்ந்தோம். முன் ஆசனத்தில் செங்கதிரோன். வாகனம் நகர ஆரம்பித்தது. பின்னால் அமர்ந்திருந்த என்னுடயதும் ஸ்ரீதருடையதும் உடல்கள் வாகனத்தில் இருக்க ஆன்மாக்களும் சிந்தனைகளும் இன்னும் அதே காரியாலயத்தில் இருந்தன என்பதை அடுத்து நடந்த சம்பவம் உணர்த்தியது.
“பெற்றோர் இல்லாத அந்தச் சின்னப் பிள்ளைய நினைக்கேக்க கவலையா இருக்கு…..” என்று சொல்லத் தொடங்கிய ஸ்ரீதர் சட்டென உடைந்து அழுதார். கண்ணீர் அவரது கண்ணாடியைத் தாண்டித் தெறிக்க எனக்குத் தொண்டைக்குள் ஏதோ வந்து அடைத்தது. “இட் இஸ் ஓகே ஸ்ரீ…… இட் இஸ் ஓகே…. ஈஸி… ஈஸி….” என்று சொன்னபடி ஸ்ரீதரின் தோளில் கைவைத்துச் சாந்தப்படுத்தினார் முருகபூபதி. ஒரு புத்தக நிறுவனத் தலைவராக மட்டுமே நான் அறிந்திருந்த நண்பர் ஸ்ரீதரின் இதயத்துள் பொங்கிப் பிரவகித்த மனிதாபிமானம் என்னை ஒரு கணம் திக்குமுக்காட வைத்தது. திகைப்பிலிருந்து விடுபட்டு, ‘ஸ்ரீ யூ ஆர் க்ரேட்… உனது நண்பனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
சாதனை மனிதர்களுக்கு நன்றிக் கடனாக உலகம் எத்தனையோ விதமான கௌரவங்களை வழங்கி வருகின்றது.
அவை சரியான அளவு கோல்களால் அளக்கப்படாத போது அவை பற்றிய சர்ச்சைகள் உருவாகி உலகம் முழுக்க நாற்றம் எடுக்கிறது. மனிதர்களால் வழங்கப்படும் விருதுகளில் தேசங்களின், பிராந்தியங்களின் அரசியல் லாபங்களும் தேவைகளும் இரண்டறக் கலந்திருக்கின்றன.
ஒரு மனிதன் தனது தன்னலமற்ற சேவையின் பலனைப் பணமாகவோ பதவியாகவோ பெறுவதை விட ஒரு கண்ணீர்த்துளியாகப் பெறுவது எத்தகைய அற்புதமான கொடுப்பினை. அது முருகபூபதிக்குக் கிடைத்து விட்டது. கண்ணுக்கு முன்னால் உணர்வுபூர்வமாகக் கிடைக்கும் ஆத்மார்த்தமான, இயல்பான அங்கீகாரமானது முழு உலகும் பார்த்திருக்க ஒளிவெள்ளத்தில் மிதந்து பெறப்படும் எல்லாவித விருதுகளின் அங்கீகாரத்தையும் விட உயர்ந்தது, உன்னதமானது.
அன்புடன் அனைவருக்கும்
இலங்கையில் நடைபெற்ற சா;வதேச மாநாட்டை ஆதரித்து எனது கையொப்பத்தை அளிக்கவில்லை. எனது கையொப்பம் இடம்பெற்றதிற்கு நான் பொறுப்பில்லை.
இப்படிக்கு உமா
உமா>உங்களதும்>சந்தொஷ்>தங்கள் தோழன் ஜீவமுரளியின் ஒப்பங்களும் இப்படித்தான் இணைக்கப்பட்டதா?அப்படியாயின் தங்கள் குரலைப் பதியலாமே?
உமாவிடம் சிறீரங்கன் கேட்கும் கேள்வி நியாயமானது. நேர்மை இருப்பின் பதில் சொல்ல கடமை உண்டு.
உமா என்றால் உமா வரதராசனா?
ஆஹ்ஹ…………….
இதுவல்லவோ மாநாட்டின் க்ளைமார்க்ஸ்ஸ்
முருகபூபதி வறிய மாணவர்களுக்கு உதவி அளிக்கும் நல் மனதை யார் குற்றம் கண்டது?
இவர் இலக்கியத்துக்கும் பயன் இல்லாத தமிழ் மக்களின் துயரங்களையும் முஉடி மறைக்கும்
வகையில் மக்களின் அழிவுகளை கண்டும் காணாது போல் இலங்கை அரசுக்கு சாதகமான மாநாட்டை நடத்தியதேய் அவர் விமர்சிக்கப்பட காரணமாகும்.
இன்னும் இப்படி பலரும் உதவி செய்பவேர்களாக இருந்தால் அவர்களும் விமர்சிக்கப்பட முடியாதவர்களா?
போக, சீறிதர் சிங் அழுதா அவர் பெரிய புனிதர் ஆகி விடுவாரா?
இந்தியாவிலிருந்து புத்தகம்இறக்கி மூணரை மடங்கு விலைக்கு விற்று கொள்ளை அடிப்பவன் உமக்கு பெரிய மனிதபாமணி.
இவர்களுடன் சேர்ந்து மாநாடு நடத்திய அஸ்ரபு சியாபுதின் விமான நிலையத்தில் இலங்கை புலனாய்வு
பிரிவுடன் சேர்ந்து பணம் பிடுங்கிய வரலாறு உமக்கு தெரயுமா? கொள்ளையடித்துசேர்த்த சொத்தின் சொந்தகாரர்கள் வெளிநாடுகளில் இருந்து சென்ற தமிழ் மக்கள் என்பது தெரயுமா?
புடிபட்டு மஹிந்தவின் தயவில் கம்பி எண்ணாமல் வெளியதிரிவது எப்படி? இதட்கு என்ன பதில் பெஸ்கோ?
அகஸ்தியன்
இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதற்காக அங்கே எழுத்தாளர் மாநாடு நடத்தியிருக்க கூடாது என்று பலபேர் இங்கே கொக்கரக்கோ கூவியிருக்கிறார்கள். அதற்காக இலங்கை தமிழ் மக்கள் தினமும் வீட்டிலே குந்தியிருந்து இழவு பாட்டுப்பாடவேண்டும். லோலோ என்று மார்பிலே அடித்துக்கொண்டு அழவேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? யோவ்!..பெரிய மனுஷன் மனுஷிமார்களே! அவர்களும் மனிதர்கள். என்ன தான் துக்கங்கள், பிரச்னைகள் இருந்தாலும் அவர்களுக்கும் இலக்கிய ஆர்வம் இருக்கிறது. மாநாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள எழுத்தாளர்கள் கலந்துகொண்டு ஏதோ அவர்களால் முடிந்த அடித்தளம் போட்டிருக்கிறார்களே ! ஒரு நல்ல விஷயத்தை பாராட்டுவதை விட்டு…ஆ! ….பதிலாய், நீங்கள் எல்லாரும் சேர்ந்து அங்கே மேல் நாட்டு ரோடுகளில் கூக்குரல் போட்டபடி, (மறக்காமல்) வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஊர்வலம் வாருங்கள். ரசிக்கிறோம். உங்கள் துயரத்தையும் இலக்கியமாய் வடிக்கிறோம். கவிதையாய் இழைக்கிறோம். சம்மதமா?
மகாநாடு நடத்திய இவர்கள் அங்கு மக்களை நன்கு குஷி படுத்திவிட்டுத்தான் வந்துள்ளார்கள். தமிழ் மக்கள் தினமும் வீட்டிலே குந்தியிருந்து இழவு பாட்டுப்பாடாது வேறு என்ன செய்கிறார்கள்? தமிழ் மக்கள் இழந்ததை மறந்து இருப்பதைக்கொண்டு சந்தோசமாக இருக்கத்தான் விரும்புகிறார்கள், ஆனால் விடுகிறான்களா இந்தக் கொலைகாரக் கூட்டம்.
கூட்டத்தில் நடந்த விடயங்கள் கவலை தருவன. ஆனால் இனப்படுகொலை பற்றிப் பேசாத சகல மாநாடுகளும் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்று கூறுவது தவறானது. இலங்கையிள் இனறைய சூழலில் இந்த மாநாடு வெறும் ஆரம்பம் மட்டுமே. அடுத்த கூட்டத்தில் ஒருவர் இறந்த மக்களிற்கு அஞ்கலி செலுத்த கோருவார். கொஞ்சம் கொஞ்சமாக பேசும் ஆற்றலை மக்கள் (புலம் பெயர்ந்தவர்களை இங்கு குறிப்பிடவில்லை) பெறுவர்.
என்ன மக்கள் இறந்தார்களா? மகிந்தரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தாத மக்கள் மீட்புப்போரில் எங்கே மக்கள் இறந்தார்கள்? சுனாமியில் இறந்த மக்களிற்கு அஞஞலி செலுத்தினார்களாம்.
தென் ஆபிரிக்காவை தொடர்ந்து உலகநாடுகள் பகிஷகரிகாது விட்டிருந்தால் இன்றும் நெல்சன் மன்டேலா சிறையில் கம்பிதான் எண்ணிக்கொண்டிருப்பார்.
பொறுத்தார் பூமி ஆழ்வார்?
எதற்காக எல்லோரும் களருகினம்? முதலில் ஜெயபாலன்.இப்போ உமா.ஜெயபாலனாவது தன்னைக் கேட்டுத்தான் சோபாசக்தி தன்பெயரைச் சேர்த்தார் என்கிறார்.உமாவோ அது தனது சம்மதத்துடன் வரவில்லை என்கிறார்…இத்தனை நாட்களின்பின் உமா ஏன் இப்படி ஒரு பால்டி அடிக்கிறா??
முள்ளிவாய்க்கால் மறுப்புவாதிகள் அதிகமாக மகாநாட்டில் கலந்து கொண்டதினால்தான் இவரின் இந்த முடிவு என எண்ணிவிடாதீர்கள். அடுத்த் மாதம் பரீஸில் இன்னும் ஒரு மகாநாடு நடக்கபோகிறது. அதில் பல கொலை கொள்ளை பாலியல் பலாத்கார்ங்களுடன் தொடர்புடைய பிள்ளையன் குழுவின் உறுப்பினர்களும் ,கடத்தல் கப்பம் மன்னன் கீரனும் மற்றும் சில துணைக் குழு அங்கத்தவரும் இதில் கலந்து கொள்கிறார்களாம்.இம் மகாநாட்டின் வரவெற்புரையை இந்த உமாத்தான் (?)நடத்துகிறர்.
சிரஞ்சீவி,விட்டாத் தோரணங்கட்டி விழா எடுத்துப்போடுவதில் ஆர்வமாக இருக்கிறீர்கள்.உங்களது பின்னூட்டங்கள் இனியொரு ஆசிரியர்கள் குழுவினருக்கு உரைப்பது என்ன-உறைப்பது என்ன?
அவர்களும் கம்மண்டு இருக்கிறதில் உங்கள் வாயோ சுண்ணாம்புண்ட பொழுதில் கரைவதுபோன்று கரைவதில் இன்றையவுலக அரசியலும் புரிந்தமாதிரித்தாம்.நீங்கள் உலக மூலதனத்துக்குப் பல்லக்குத் தூக்கப் பின்னூட்டுவதுபோல் இப்போது இந்த மாநாட்டுக்குக் காவடியெடுக்கிறீர்களென்பதைச் சொல்வதில் அங்குள்ள மக்களை ஏன் வீணாக இழுத்துப்போட்டுக் கும்ம வெளிக்கிடுகிறீர்கள்?
அரசியலையும்,அதன் உள்ளார்ந்த கெடுதிகளையும் திட்டமிட்டுத் தமிழ் மக்கள் பெயரால் எவருக்கு மீளச் சங்கூதுவதற்கு முயற்சி?
இனவாதச் சிங்கள அரசு தொடர்ந்து நகர்த்தும் “லொபி”அரசியலில் நீங்கள் அவிழ்த்துவிடும் அரசியலே மிகக் கெடுதியானது.
ஒவ்வொரு பொழுதிலும்,உலகை வேட்டையாடும் ஆதிக்கத்தின் பக்கம் நியாயவாதத்தை அடுக்குவதற்கு நீங்கள் அவசரப்படும்போதும்-உங்கள் கடவாயில் குருதிதோய்ந்து போகிறது.
உலகைப் பிளந்து வேட்டையாடும் உலக மூலதனத்தின் குந்தில் அமர்ந்தபடி சொந்த நாட்டு மக்களுக்குச் சுவரொழுப்பிக்கொள்ளி வைக்கும் இலங்கைபோன்ற மாபியாக்களது அரசுக்கு எந்த மொழியில் பதில் சொல்லப் போகிறீர்கள்?
நீங்கள் எடுத்துப் போடுவது மக்களின் தலையில் நெருப்பென்பதைச் சுட்டுவதற்கு இங்கு பலருக்குக் கூச்சம்.
மார்க்சியங் குறித்த உங்களது அலம்பலுக்கே நாவலன் மௌனமாக இருக்கிறார்-அசோக் கம்!
இப்போது,சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு மக்களுக்குச் “சந்தோசம்-மகிழ்வு” கொணர்வதாகச் சொல்வதில் உங்களது அரசியல் புரிகிறது.இதை இப்படியே தொடருங்கள்-அப்போது,உங்கள் உண்மையான முகத்தை இனியொரு வாசகர்கள் புரிந்துவிடப் போகிறார்கள்.
இழவை வைச்சு மாநாடு நடத்திற மட்டுமன்றி,மேலும் இலக்கியம் வடிக்கவும்,கவிதை இழைக்கவும்,ரசிக்கவும் மற்றவரின் துன்பந்தான் தேவைப்படுகின்ற நீங்கள், உண்மையில் சிரஞ்சீவிதான்.
ஸ்ரீரங்கன், நெருஞ்சி
நீங்கள் தான் இழவை சுமந்து குமைகிறீர்கள். அவர்கள் அல்ல. அரிசி, தேங்காய், சீனி மற்றும் அடிப்படை உணவுப்பண்டங்கள் இலங்கையில் விற்கப்படுகிற விலை என்ன? எப்படி இந்த மனிதர்கள் வாழ்கிறார்கள்? என்று ஒரு கணம் நீங்கள் சிந்திக்கவேண்டும். ஒரு நாள் வாழ்க்கையே பெரும் சோதனை. தமிழ் மக்கள் மட்டுமல்ல, சராசரி சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் துவண்டுபோய் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை, அரசுக்கெதிராய் கலகம் பண்ணுங்கள், போராட வாருங்கள் என்று உதார் காட்டுவதெல்லாம் ஜின்ஜினாகடி கூத்து என்பது என் கருத்து. இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு தினமும் ஆர்ப்பாட்டம் பண்ணிகொண்டிருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு யார் சோறு போடுவது? கஞ்சியாவது கிடைக்குமா? மேல்நாடுகளில் இருக்கும் அநேகமான நம் தம்பிரான்களுக்கு இது புரியவில்லையா? அல்லது நடிக்கிறார்களா?
பிடிக்கவில்லை என்றால் அடுத்த 5 வருஷத்தில் மகிந்த அரசை அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் அது வரை?
அவர்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் இலக்கியத்தையும் மதியுங்கள். அத்தனை பிரச்னைகளிலும் அவர்களும் இலக்கியம் படைக்கட்டுமே! இந்த சாதாரண எளிய மக்களால், இந்தியாவுக்கோ, மேல்நாடுகளுக்கோ பறந்து வந்து அரங்கேற்றம் செய்ய முடியாது. இவர்களுக்காய் இலங்கையிலேயே ஒரு வாய்ப்பு அமையும் என்றால் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி. அரசு பேயாய் இருந்தால் என்ன? நாயாய் இருந்தால் என்ன? இன்று சாப்பாடு கிடைக்குமா என்று நாம் கவலைப்பட, என்ன சாப்பாடு இன்று சாப்பிடுவது என்று யோசிக்கிற ஆட்களை என்ன சொல்ல? (இதே இணையத்தில் சாரதியின் மாநாட்டு கட்டுரைக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.)
பின்னூட்டம் போட்டு கிழியலும் வாங்கியிருக்கிறீர்கள்.
“ஒரு நாள் வாழ்க்கையே பெரும் சோதனை. தமிழ் மக்கள் மட்டுமல்ல, சராசரி சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் துவண்டுபோய் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை, அரசுக்கெதிராய் கலகம் பண்ணுங்கள், போராட வாருங்கள் என்று உதார் காட்டுவதெல்லாம் ஜின்ஜினாகடி கூத்து என்பது என் கருத்து.”
மேற்கொண்டு சிந்திக்க அறிவிருக்கா? சும்மா இருந்தா சோறு போடுமா உங்களின் சிங்கள அரசு? மக்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? புலிகளா? கையைக் கட்டி தலையைக் குனிந்து அரசு செய்வதை செய்யட்டும் எமக்கு சோறு போட்டால் போதும் என்பதா உங்களின் வாதம்? 5 வருடமில்லை 5நாட்களில் கொலைவெறியரை வீட்டுகில்லை சிறைக்கு அனுப்பவேண்டிய அவசரம் தற்போது மக்களுக்கு இருக்கிறது. இப்படியே சரணாகதி அரசியல் செய்தால் ஒருநேரக் கஞ்சியும் கிடைக்காது.
“அரசு பேயாய் இருந்தால் என்ன? நாயாய் இருந்தால் என்ன?” நீ என்னப்பா மனிதபிறவியா இல்லை …… ஒப்பிட ஒன்றுமே இல்லை.
எனது பார்வையில் சர்வதேசத் எழுத்தாளார் மாநாடு
ஜனவரி மாதம் 7ம் திகதியிலிருந்து 9ம் திகதி கொழும்பில் இடம் பெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் பொறுத்த வரையில் மிகவூம் ஆடம்பரமான முறையிலும் சம்பிரதாயங்களின் அடிப்படையிலும் நடைபெற்று முடிந்த மாநாடு என்பதே என் கருத்து. தமிழர்களின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதே தமது நோக்கமெனத் தலைவர் தன் தலைமையூரையில் தெரிவித்திருந்தார். தமிழர் பாரம்பரியம் எனும் போது தமிழ்ச் சமூகத்தில் பிரதிபலிக்கப்படும் அனைத்து பிற்போக்கு அம்சங்களும், அதனுடாகக் காப்பற்றப்படுமென்பது தெட்டத் தௌpவூ. தமிழ் சமூகமானது, சாதீயம், பெண்ணொடுக்குமுறை என்ற கூறுகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு ஜனநாயகமற்ற சமூக அமைப்புமுறையைக் கொண்டது இச்சமூகத்தை மறுதலிக்காமல் , எந்த கட்டுடைப்புகளுமற்ற முறையில் நடைபெறும் விடயமொன்றில் நாம் முற்போக்கு அம்சங்களை எதிர்பார்ப்பதும் முட்டாளதனம். அரசியல் அல்லாத இலக்கியம் படைப்பாதாக நினைக்கும் ஒரு அரசியலைத் தான் இம்மாநாடும் நிகழ்த்தி காட்டியிருக்கிறது.
இம்மாநாட்டைப் ஆதரிப்பது, நிராகரிப்பது என்ற விடயங்களைப் பார்ப்போமானால் நாம் மாநாடு நடப்பதை நிரகரிப்பதா அல்லது நடந்த முறையை நிராகரிப்பதா என்பன இரண்டு வெவ்வேறான விடயங்கள. ஒரு சுயாதீனமான மாநாடு ஒன்று நடப்பதை நிராகரிக்கும் ஒரு ஜனநாயகமற்ற அரசியலை நான் நிராகரிக்கிறேன். மற்றைய மனிதர்களின் கருத்துச் சுதந்திரத்தைத் தடை செய்யூம் சர்வாதிகாரப் போக்கை நான் வெறுக்கிறேன். நீ செய். . ஆனால் நீ செய்வது பிழையென்பதை நான் விமர்சனமாக வைப்பேன். 30 வருட காலங்களிற்கும் மேலாக, இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு சாவூ மணி அடிக்கப்பட்டு, இலங்கை அரசினாலும், விடுதலைப் புலிகளினாலும், மற்றையக் குழுக்களினாலும் ஜனநாயமற்ற, காத்திரமற்ற ஒரு அரசியல்ச்சுழலை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறௌம். எந்த ஒரு அமைப்பிற்கு சாராது எனது சுயாதீனக் கருத்தை வெளிப்படையாகக் கூறக்ககூடிய தார்மீகமான உரிமையூம் அற்ற நிலையில தான் நாம் இருக்கிறௌம். உனது கருத்திற்கு பதில் assassination அல்லது character assassination என்பதே எமது ஜனநாயகத்தை மதிக்கும் கருத்துக்களை எதிர் கொள்ளும் பண்பாக மாறியூள்ளது.
குற்றம் சாட்டப்படுவது போல் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையூடன் இம்மாநாடு நடைபெற்றால், இந்த நடவடிக்கை இலங்கை அரசின் தமிழர்கள் மீது கரிசனை காட்டுவதாக செய்யப்படும் பாசாங்கின் ஒரு கட்டமாக இருக்கலாம். ஒரு புறத்தில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, ஒரு தேசத்தில் வாழும் மக்களின் மொழியான தமிழில் தேசீய கீதம் பாடுவதைக் கூட அனுமதிக்காது, மறுபுறத்தில் தமிழை வளர்க்க விழா எடுப்பது வேடிக்கையானது.
இலங்கையில் யூத்தம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டதன் பின், இன்னும் யூத்த அனரத்;தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக மீளகுடியமர்தப்படாத நிலையிலும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் அரசினால் நிவர்த்தி செய்யப்படாத நிலையிலுமே இருக்கின்றார்கள். யூத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு சிறுபான்மை இனத்தவரின் சுயநிர்ணய உரிமைகளைப் பாதுகாக்கும் முகமாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, இலங்கை அரசு தமிழ் மக்களிற்கு தம் மொழி மீதான உரிமையை மறுத்து ,தமிழ்பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தியூம்,தமிழர்களின் பாராம்பரிய பிரதேசங்களில் இராணுவமயப்படுத்தலை உருவாக்கி ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இனவாதத்தை இன்னும் பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. நாட்டில் நிலவக்கூடிய எழுத்தாளர்; ஊடகவியாளர்களின் சுதந்திரமான கருத்தோட்டத்தை முடக்கி தடைசெய்து, எழுத்தாளர்களையூம், ஊடகவியலாளர்களையூம் கொலை செய்தும், கடத்தியூம் வருவதோடு, ஒரு ஜனநாயகமான சுதந்திரமான கருத்துச் சுதந்திரத்தை மிரட்டலிற்குட்படுத்தியூள்ளது. இத்தகைய ஒரு அபாயச் சு+ழலில் நடைபெற்ற ஒரு சர்வதேச எழுத்தாளர் மாநாடனது, இந்த சுயாதீனமான கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒடுக்குதலிற்கு தன் கண்டனத்தை தெரிவிப்பதைப் பிரதான நோக்கமாக் கொண்டு நடாத்தப்பட்டிருந்தால் வரவேற்ககூடியதாக இருந்திருக்கும். தற்போது இலங்கையில் நிலவூம் அச்சம் தரும் சு+ழலில் நாட்டின் கருத்துச்சுதந்திரத்தை வேண்டி போராடும் தென்னிலங்கையைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாள ர்களுடன் இணைந்து செயற்படுவதே ஒவ்வொரு எழுத்தாளர்களின் தார்மீகக் கடமையென்பதே என் கருத்து.
சர்வதேச எழுத்தாள ர் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களைப் பார்க்கிலும், இம்மாநாட்டை ஆதரித்து அறிக்கை விட்டவர்கள் மீதான தனிப்பட்டட தாக்குதல்களே அதிகமாகவூள்ளது. அவர்கள் மீது முக்கியமாக இலங்கை அரசின் கைக்கூலிகள் என்ற விமர்சனமே அதிகம் வைக்கப்படுகின்றது. இலங்கை அரசின் அராஜகங்களை உலகத்திற்கு வெளிகாட்டவூம், யூத்தத்தின் போது நடாத்தப்பட்ட போர்க் குற்றங்களிற்கு எதிராக வெளிப்படையாக செயற்பட்டுக் கொண்டிருப்பதால், இலங்கைக்கு செல்லமுடியாமல் உள்ளவர்களும் இதில் இடம் பெறுகிறா ர்கள் என்று சொல்லியாகவேண்டும்.
அடுத்த குறியாக இருப்பவர்கள் தலித்திய செயற்பாட்டாளர்களும் பெண்களும். எமது சமூக அமைப்பின் மேலாதிக்கவாதச் சிந்தனைவட்டத்திற்குள் உட்பட்டவாகள், தொடர்ந்தும் தலித்திய ,பெண்ணிய போராட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண் கூடு. இவர்கள் மேலாதிக்க, ஆணாதிக்க சமூக விழுமியங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான எத்தனங்களில் ஈடுபடுவதால், இவர்கள் தலித்திய, பெண்ணிய போராட்டங்கள் மீதான எதிர்ப்பை தனிநபர்கள் மிதான எதிர்ப்பாகக் காட்ட முனைகின்றனர். ஒரு தனிப்பட்ட நபரை விமர்சிக்கும் போது , இவங்களும் இவங்கட தலித்தியமும் என்று பேசப்படுவதை நான் பலமுறை என் காதால் கேட்டிருக்கிறேன். இங்கே வெறுப்பு தனிநபர் மீதல்ல தலித்தியம் மீதே.
இறுதியாக என் மீது வைக்கப்படும் விமர்சனங்களிற்கு என் பதிலைத் தரலாமென்று நினைக்கிறேன். எனக்கு polemicsல் அவ்வளவூ நாட்டம் கிடையாது. இருந்தும் பதிலலிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் பதிலளிக்கிறேன். நான் இவ்வறிக்கையில் கையொப்பமிடாதது தான் உண்மை. அது என் சுயமுடிவூ. இவ்வறிக்கையை நான் காணவில்லையென்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை. நான் இதிலிருந்து கழறவோ, பால்டி அடிக்க வேண்டிய அவசியமோ எனக்கில்லை. எனது நேர்மையை கேள்விற்குட்படுத்துபவ ர்கள் பின்னிற்கு நின்று முதுகில் குத்தாமல் சொந்தப் பெயரில் வந்து முகத்திற்க்கு நேராக விமர்சனத்தை வைக்கலாம். நான் எப்போதும் அராஜகங்களிற்கெதிரான விமரசனத்தை எனது சொந்தப் பெயரில் வைத்துக் கொண்டுவருகிறேன்.
இலக்கியச்சந்திப்பில் நான் வரவேற்புரையை நிகழ்த்துவது பற்றி சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன இலக்கியச்சந்திப்பிற்கு காத்திரமான பாரம்பரியமொன்று உண்டு. 22 வருட காலமாக புகலிடத்தில் மாற்றுக்கருத்துக்களை கருத்துகளாக எதிர் கொள்ளும் தளமாகவூம், இலக்கியச்சந்திப்பு இயங்கி வருகிறது. இலங்கையில் ஜனநாயகத்திற்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டநிலையில் இலக்கியச்சந்திப்பு, அங்கு அரசினாலும், விடுதலைப்புலிகளினாலும், ஏனேய இயக்கங்களினாலும் நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறைகளிற்கு எதிரான தன் கண்டனக்குரலை எழுப்பியது. மாற்றுக்கருத்தாளர்களுடன் விவாதிக்கலாம் பின் அவர்களுடன் நட்பையூம் பாராட்டலாம் என்பதை இலக்கியச்சந்திப்பு கற்றுத்தந்தது. இலக்கியச்சந்திப்பில் வைக்கப்படும் எந்தவொரு கருத்தையூம் கருத்தால் விமர்சிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உலகில் எந்த மூலையிலாவது ஜனநாயகம் எஞ்சியிருந்தால் அதனுடன் என்னை இனங்காட்டிக்கொள்ள நான் பெருமைப்படுவேன். இலக்கியச்சந்திப்பு என்றும் அநீதிகளை காப்பாற்றியதில்லை, மாறாக அநீதிகளிற்கு முகம் கொடுத்தவரகளிற்காக குரல் கொடுத்தது என்பது தான் உன்மை.
இந்த வஞ்சகத்தனமான சேறடிப்புகளில், எம்மோடு இணைந்து செயற்பட்ட தோழ தோழிகள் இருப்பது எனக்கு மிக வேதனையையூம் அருவருப்பையம் தருகிறது.
உமா “இரட்டை நாக்கு வல்லமை” பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீhகளா? அதாவது அநீதிகளுக்கும் ஆதரவு கொடுப்பது நீதிக்கும் ஆதரவு கொடுப்பது. இதில் நீங்கள் திறமைசாலியாக உள்ளீர்கள். உங்கள் எழுத்து அதற்கு சான்று. பாலியல் பலாத்காரம் கொலை கொள்ளை ஆள்கடத்தல் கப்பம் என்று இலங்கைத் தீவை வன்முறை நாடாக்கிய மகிந்த அரசோடு சேர்ந்தியங்கும் குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நீங்கள் தலைமை தாங்க இருப்பதை என்ன அழகாய் வார்த்தை யாலங்கள் கொண்டு நியாயப்படுத்துகிறீர்கள். இதைத்தான் உங்கள் மொழியில் வஞ்சகத்தனமானது என்பது.இதில் ஜனநாயகம் பற்றி நீங்கள் கதைப்பது கசாப்பு கடைக்காறன் காரூண்னியம் கதைப்பதுபோல் உள்ளது. பிராபகரன் பேசிய ஜனநாயகமும் உங்களைப்போல் இப்பபிடித்தான் இருந்தது.மொத்தத்தில் நீங்களெல்லாம் அதிகார மற்றும் சலுகைகளுக்காக விலைபோகும் அற்ப மனிதர்களாகிவிட்டீர்கள். உங்களோடு இணைந்து செயல்பட்ட தோழிகள் வஞ்சகத்தனமான சேறடிப்புக்களில் இருப்பதாக குறைபடுகின்றீர்கள்.உங்கள் தோழிகள் உங்களைப்போல் வன்முறை கும்பல்களோடு கைகோர்த்துக் கொண்டு ஜனநாயகம் பேசவில்லையே. அவர்கள் செயல்பாடுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கிறதை காணக்கூடிதாக உள்ளது.
Latha, இலங்கையில் ஜனநாயகத்தின் அவசியங் குறித்துப் பரப்புரை செய்யுங் கயமைக்கு, ஜனநாயகங் குறித்தவுணர்வு-புரிதலெல்லாம் அதிகம்போனால் தமது அரசியல் நோக்கம் நிறைவுபெறும் தளத்தில் அது மிக நேர்த்தியானதெனச் சொல்லும் கபடம் கருப்பொருளாகவிருக்கிறது.
அந்தத்திசையிற்றாம் அரசியலைச் செய்யும் பெரும்பகுதியான புலம்பெயர் „மாற்று(சுத்தல்)க் கருத்து“வட்டம்நடந்துமுடிந்த „சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு“புதிய விளக்கங்கொடுத்தது.
பாசிசச் சூழலிலுள்ள இலங்கையில் இத்தகைய மாநாடுகள் குடிசார் அமைப்புகளது விசும்பு நிலைக்கு ஏதுவானதாகவும்,எழுத்தாளர்களது குரல் சர்வ தேசச் சூழலில் இலங்கையினது இன்றைய சூழலைச் சொல்லும் ஒரு அரியவாய்பாகவும்,மக்களது ஒடுங்கிய-அழுத்தமான வாழ்வில் இலக்கியவாதிகளது இணைவு அவர்களது குரலை உயர்த்தும் களமாக அமையுமெனவுஞ் சொல்லப்பட்டது.இது,ஜனநாயகத்தை இலங்கைக்கு வெளியில் புரிந்ததென்னவே வளர்ச்சியடைந்த நாடுகளது நவலிபரல்தன்மையிலான சமூக நகர்வையாகவேயெனப் புரிந்துகொள்வதில் நமக்குச் சிக்கல் இல்லை!
இந்தப் புரிதலுக்கு வெளியில் நமது மக்களது அரசியலைச் சிதைக்கும் லொபி அரசியலானது அதன் வர்க்கத் தன்மைக்கேற்ற அதீத முனைப்புடைய புறக் காரணிகளை(மாநாடு,சங்கம்,சமயக்கூட்டம்-சொற் பொழிவு,இலக்கியவுரையாடல்,நிலவும் அமைப்புக்கிசைவான பரப்புரை,குறிப்பாகக் கருத்தியற்றிசையமைவு) தமது நலன்களுக்குட்பட்ட வகையில் பேச முற்படுகிறது.
இது,மக்களது வாழ்வதாரத்தைக் குதறிய அரசினது இன்றைய நகர்வைக் குறித்துப் „பாசிசப் புலிகளது“அரசியலோடிணைப்பதில் அரசுக்கும்,போராடுங் குறுங் குழுவுக்குமிடையிலான வித்தயாசம் என்னவென்பதை மறைத்து ஆளும் அரச-ஆளும் வர்க்கத் திமிரை மக்களது உரிமையுடன் ஒப்பிட்டுத் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கே வேட்டு வைத்திருக்கிறது.இந்தப் புரிதல் வகைப்பட்ட அரசியலானதின் இன்றைய வகிபாகமானது தமிழ்ச் சூழலில் மகிந்தாவினது அரச எடுபிடிகளாக்குச் சிலரை மேலும் வென்றெடுப்பதில் குறிவைத்து மையங்கொள்ளும்.இது வெளிப்படுத்தம் அரசியல் பரந்துபட்ட இலங்கையின் முழுமொத்த மக்கட்டொகைக்கும் எதிராதென்பதில் காலங்கடந்துதாம் புரிந்துகொள்ளத் தக்க வினைக் கூறுகள் அடங்கியுள்ளது.
மக்களது பெயரில் அவர்களை அண்மிக்கும் இத்தகைய அரசியல் உரையாடலானது மீளமீளத் தகவமைக்கும் கருத்துவெளியானது தமிழ்பேசும் மக்களது அரசியலுரிமையைச் சோற்றுக்கு விற்பதென்பதைக் கடந்தியங்கமுடியாதென்பதை அவர்கள் தினமும் சொல்வதில் கவனமாகவிருக்கிறார்கள்.
இதுவே,இலங்கைக்கு ஆதரவான லொபிக் குழுக்களான இலங்கை ஜன நாயக ஒன்றியம்,இலங்கையர் சங்கம்,தலித் சமூக மேம்பாட்டு முன்னணி போன்ற குழுக்களது பெரும்பான்மைப் பலத்துடன் கவிஞர் ஜெயபாலன் ,சோபாசக்திபோன்ற இலக்கியச் „செம்மல்“களையும் கையெழுத்திட்டு ஆதரிக்கத் தூண்டியது.
இந்தவிடத்தில் சோசலிசம்-மார்க்சியம்பேசும் இரயாகரனது தாந்தோன்றித்தனமான விசம அரசியலை என்னவென்பது!
இத்தகைய சர்வ தேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஆதரித்து அறிகைவிட்ட இரயாகரனது பினாமி அரசியல் செயற்பாடோ அப்பட்டமான ஒடுக்குமுறையாளர்களது நலனை ஒடுக்கப்பட்ட மக்களது அரசியல்வழியாகச் சொல்வதில் இதுவரை புலிக்கு வேவு பார்த்த சூழலெல்லாம் இன்னொரு தரப்புக்கு விசுவாசஞ் செய்வதில் அழிக்கப்பட்ட புலிக்கு மாற்றீடு காண்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
இவர்கள் கூறுவதன் சாரம்தாம் இன்றைய இலங்கைக்கான „ஜனநாயகம்“ என்பதைப் புரிந்துகொண்டால் இந்தச் சூத்திரத்துள் மையமுறும் நலன்கள் மக்களுக்கானதுதானவென்று புரிந்துவிடாதோ?
“””இலங்கை அரசினாலும், விடுதலைப் புலிகளினாலும், மற்றையக் குழுக்களினாலும் ஜனநாயமற்ற, காத்திரமற்ற ஒரு அரசியல்ச்சுழலை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறௌம்”’ அப்படியாயின் ஏன் வாழ்த்துரை?????
அநீதிக்கும் ஆதரவு நீதிக்கும் ஆதரவு????
மாடுகளின் மாநாடு..!
எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…
நடப்பன ஊர்வன
நடிப்பன பறப்பன
விலங்குகள் சிலவும்
விழாவுக்கு வந்தன…
காணிகளை
களவாக மேய்வதில்
‘கலாநிதி’ முடித்த
கிழட்டுக் கிடாக்கள்தான்
கிரீடத்தை சூட்டுகின்றன…
இலவம் பழத்துக்காய்
இலவுகாத்த
மூளையே இல்லாத
முட்டாள் கிளிகள்;
கீச்சுக் குரலில்
மூச்சு விடாமல்
சிறுநீரை பற்றி
சிலாகித்து பேசின…
ஒலிவாங்கியை
எலி வாங்கி
எருமைகள் பற்றியே
எடுத்துவிட்டன…
பாவம் பசுக்கள்…!
பாலைப் பலருக்கும்
பருகக் கொடுத்துவிட்டு
குட்டிகளோடு
குமுறிக் கொண்டிருந்தன
குளக்கரையில்.
பசுக்களை
கொசுக்கள் கூட
கணக்கில் எடுக்கவில்லை….
பாம்புகள்
பாலுக்காய்
படப்பிடிப்பிலிருந்தன…
வெட்கமில்லாத
வெண்பசுக்கள்
முலைகளை
மூடிமறைக்காததால்
முள்ளம் பன்றிகள் பார்த்து
மூச்சிரைத்தன…
பார்க்கு மிடமெங்கும்
பாலே ஓடியது…
பூனைகள் எலிகளோடு
புன்னகைத்தவாறு
முயல்களை
முழங்குவது போல் பார்ப்பதில்
மும்முரமாய் இருந்தன…
எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…
வாழ்த்துப் பாடின
வால் பிடித்தே
வயிறு வளர்க்கும்
வாலான் தவளைகள்….
கால் பிடித்தே
காரியம் முடிக்கும்
காகங்களும்
கழிசரைக் கழுதைகளும்
காளைகளுக்கு மாறி மாறி
கவரிவீசின…
மாக்கள் கூடிய
மாநாடு அல்லவா…?
பூக்களுக் கங்கே
புகழாரமில்லை
அழுக்குத்தான் அன்று
அரியணையில் இருந்ததால்
சாணமே அங்கு
சந்தனமாயிருந்தது…
தயிர்ச் சட்டிளாலும்
நெய் முட்டிகளாலும்
இவ்வருடத்திற்கான விருதுகள்
இழைக்கப்பட்டிருப்பதாகவும்
பருந்துகளுக்கு
விருந்து வழங்கினால்தான்
அடுத்த வருடத்திற்கான
‘ஆளுநர்’ தெரிவாவரென்றும்
அதிலும்@
முதுகு சொரிவதில்
‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே
முன்னுரிமை இருப்பதாகவும்
முதலைகள்
முணுமுணுத்தன…
எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…
நாக்கிலுப்புழு ஒன்றே
நடுவராக இருந்ததால்
மான்களுக்கும்
மயில்களுக்கும்
மரியாதை அங்கில்லை.
வான் கோழிகளுக்குத்தான்
வரபேற்பிருந்தது.
பரிகளும் வரவில்லை
நரிகளும்
நாய்களுமே
நாற்காலியை நிறைத்திருந்தது.
மாநாட்டின் ஈற்றில்
எருமைகள் பற்றி
பெருமையாய்
சாக்கடை ஈக்கள்
சங்கீத மிசைத்தன….
மரம்விட்டு
மரம்தாவும்
மந்தி
மந்திரிகள்
கையடித்தன
கைலாகு கொடுத்தன…
எதுவுமே தெரியாத
எருமைகளுக்கு
பன்னாடைகளால
பொன்னாடை போர்த்தி
பொற்கிழி வழங்கின…
மாடுகளின் மாநாட்டில்
விருதுகள் பெற்ற
எருதுகளின்
வீர பிரதாபங்களும்
பல்லிளிப்புடன் கூடிய
படங்களும்
விளம்பரமாய்
நாளை வரலாம்
நாய்களின் பத்திரிகையில்