இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும் எனப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,
சம்பந்தனின் பேச்சு மீண்டும் சிங்களவர்களை சண்டைக்கு இழுப்பதாக உள்ளது. அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பேசுவது தொடர்ந்தால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்று சம்பிக ரணவக்க பேசியுள்ளார்.
அவரின் இந்த பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவுகள்:
அமளிதுமளியான தலையங்கம். பொருத்தமான படம். பூனைகளுக்கு விளையாட்டு சுண்டெலிகளுக்கு உயிர் போகுது. தமிழன் அருமை பெருமையாக பாதுகாத்து வந்தவற்றுள் அரசியல் நாகரீகமும் அடக்கம். இந்த அரசியல் நாகரீகம் பிரபாகரனிடம் இல்லாது போயிருந்தால் இன்று இலட்சக்கணக்கான சிங்களவர் உயிரும் இல்லாதுபோயிருக்கும்.
We should not take both these guys seriously. Colombo is as busy as New Delhi in terms of international diplomacy. Soon they are going to talk about the Geneva Conventions that came into being in 1939. It is time to release all those who surrendered unconditionally as the war ended in 2009.