ஐ.நா. மனித உமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை இலங்கையை கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல என ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சாம்பர்லெய்ன் டோனஹே தெரிவித் துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நிலையில் புலம் பெயர் தமிழின வாதிகளும் “தேசிய வியாபாரிகளும்” அமரிக்கா இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டது, இலங்கை பதற்றத்தில் உள்ளது போன்ற சுலோகங்களுடன் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அண்டிப் பிழைக்கும் மனோபாவம் கொண்ட இவர்கள் இலங்கை இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அமரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் அடியாட்களாக, தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். தமிழ் மக்களின் நலன் மீது உணமையாகவே அக்கறை கொண்ட அழுத்தம் வழங்கவல்ல குழுக்களையும் மக்கள் அபிபிராயத்தை ஏற்படுத்தவல்ல ஜனநாயக அமைப்புக்களையும் நிராகரித்து இலங்கை இந்திய அமரிக்க கொலைகார அரசுகளின் உதவி உளவாளிகளாக உலா வருகின்றனர். இதற்காக தேசியம், பிரபாகரன், புலிகள் போன்ற சுலோகங்களை மந்திரம் போன்று உச்சரிக்கின்றனர்.
இன்னொரு புறத்தில் இலங்கை அரசு பெருகிவரும் பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்காக அமரிக்க அரசிற்கு எதிரான கதாநாயகனாக மகிந்தவையும் அவரின் பரிவரங்களையும் உருவாக்க முற்படுகிறது. புலி எதிர்ப்புக் கும்பல்களும் கூட மகிந்தவை அமரிக்க அரசு சார் கதாநாயகனாக உருவமைக்க முற்படுகிறது.
எலின் சம்பர்லெயின் மேலும் குறிப்பிடுகையில்,
பிரதிபலிப்புகள் குறித்து கவனமாக ஆராயப்பட்ட பின்னர் நீண்ட கலந்துரையாடல்களை அடுத்து அமெக்க அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பொறுப்புக் கூறுவதற்குமான ஒன்றுபட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்க அரசாங்கம் மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்கியது. இந்த நோக்கத்தை அடைய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மேலதிக உதவிகளை வழங்க முடியும் என நம்புகின்றோம்.