ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இலங்கைக்கான இந்தியாவின் இராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர், நடிகைகள் எதிர்வரும் 1ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தவுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளும் பங்கேற்கவுள்ளனர் எனவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள கிளிநொச்சியைப் பிடிக்க அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அப்பகுதியிலிருந்தே வெளியேறி வருகிற இலங்கை இராணுவம். ஏராளமான தமிழர்கள் இதில் பலியாகி வருகின்றனர்.
இது தவிரஇ இந்திய இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் தாக்கி வருகிறது இலங்கை கடற்படை. இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையிலும் இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவின் இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழ் திரையுலகம் சார்பில் இராமேஸ்வரத்தில் எதிர்வரும் 19ஆம் திகதியன்று கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இயக்குநர் பாரதிராஜா, ராமநாராயணன், நடிகர் சரத்குமார் தலைமையில் தமிழ் இன உணர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் திரையுலகின் அனைத்துப் பிரிவு சங்கங்களும் பங்கேற்றாலும் நடிகர் சங்கம் பங்கேற்பதில் உள்ள கஷ்டம் குறித்து சரத்குமார் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திரையுலகம் நடத்தும் போராட்டத்துக்கு எங்கள் தார்மீக ஆதரவு உண்டு. ஆனால்இ இராமேஸ்வரம் வரை போய் பங்கேற்க முடியாது. நாங்கள் சந்திக்கவிருக்கும் நடைமுறை சிக்கல்கள்தான் இதற்குக் காரணம்.
எனவேஇ நடிகர் சங்கம் சார்பில் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நவம்பர் 1ஆம் திகதி தனி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இது திரையுலகம் நடத்தும் போராட்டத்துக்கு எதிரானதல்ல. அவர்கள் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு. அதேநேரம் சென்னையிலேயே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.
இந்தப் போராட்டத்தில் முன்னணி நடிகர்கள் ரஜினிஇ கமல் உட்பட அனைவரும் பங்கேற்பார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காலை 8 மணிக்கு துவங்கும் இந்த உண்ணாவிரதம் மாலை 4 மணிக்கு முடியும்.
போராட்ட முடிவில் இலங்கைத் தமிழருக்கு உடனடியாக அனைத்துவித அடிப்படை உதவிகள் செய்யக் கோரியுஞுஞூ இலங்கை இராணுவத்துக்கு தரப்படும் இந்திய உதவிகளை நிறுத்தக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.