போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப் புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து இலங்கை நல்லிணக்க ஆணைக் குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளது என்று அனைத்துலக மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலகக் குழு கண்டித்துள்ளது.
இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டமையை வரவேற்றுள்ள இந்த அமைப்பு, சிறு பான்மையினரின் உரிமைகள் குறித்த முக்கியமான சில விவகாரங்களில் ஆணைக்குழு அளித்துள்ள பரிந்துரைகளையும் வரவேற்றுள்ளது.
மொழி, காணி உரிமைகள், மீள்குடியமர்வு, காணாமற்போனவர்கள், பெண்களின் பாது காப்பு, முஸ்லிம்களின் இடப் பெயர்வு போன்ற விடயங்களில் ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை இந்த அமைப்பு வரவேற்றுள்ளது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை, ஆணைக்குழு வினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.
“போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட் டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவது பற்றி ஆணைக் குழு எந்தக் கருத்தையும் முன் வைக்கவில்லை.
“இலங்கை அரசு மற்றும் இராணுவத் தரப்பின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை பக்கச்சார்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
“சித்திரவதைகள் மற்றும் வன்புணர்வு உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை.
“போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் இலங்கையில் ஆள்கள் காணாமற்போகும் சம்பவங்களும், சித்திரவதைகள் மற்றும் சட்டத்துக்குப் புறம் பான கொலைகளும் தொடர்கின்றன.
“நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நீதியையும், பெறுப்புக் கூறுவதையும் உறு திப்படுத்துவதற்கு இலங்கை அரசு தவறியுள்ளது” என்று சிறுபான்மையினர் உரிமைக ளுக்கான அனைத்துலககுழு மேலும் தெரிவித்துள்ளத