இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் பயண நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக குறிப்புக்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள இப்பயண நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கள் பற்றி எந்த குறிப்புக்களும் இடம்பெறவில்லை எனவும் முதலாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவையே சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணா கொழும்பில் தங்கியிருக்கும் போது இலங்கையில் குறைந்தது ஆறு இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்னா இலங்கை அரசுடன் உறவுகளை மேம்படுத்தவே இலங்கை செல்வதாகக் குறிப்பிட்ட போதிலும் இந்திய சார்புக் கூட்டமைப்பு வட்டாரங்கள் இதனை மறுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தங்களைப் போட்டு சிறிலங்காவை மடக்கலாமென கிருஷ்ணா நினைக்கின்றார். ஆனால் சீனா, கோபுரம் கட்டி இந்தியாவை உளவு பார்க்கப்போகிறது.
அணைக்கிற கை அடிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. மேலாதிக்கவாதிகளின் மனோபாவம் அது.